PDA

View Full Version : நிவாரணம் கொடு!lenram80
18-10-2007, 12:59 AM
என் கன்னத்தில் முத்தப் போர்களை இரக்கமே இல்லாமல் நடத்திய ஜான்சி ராணியே!
என் உடலை தின்று, வரும் விக்கலின் போது என் உயிர் குடிக்கும் ராட்சசியே!
அன்புகுண்டுகளை புதைத்து வைத்து அவ்வப்போது வெடிக்க வைத்து
என் இதயத்தை பொக்ரானாக்கிய போக்கிரியே!

சுண்டி இழுக்க - ஒரு துளி விஷப் பார்வை!
சுற்றி வளைக்க - ஒரு பிடி சில்மிஷ சிரிப்பு!
அப்படியே அடித்து நொறுக்க - ஒரு டன் கரும்புக் குரல்!
அடிமை சாசனம் வாங்க - சாந்த முகம்!
அமைதியாக இருப்பது போல் இருந்து கொண்டு
இத்தனை அட்டகாசம் செய்யும் என் அட்சயப் பாத்திரமே!
என் பேனா எழுதுவது உனக்கு மாத்திரமே!

உன் தாகம் போக்க - அமேசான்
உனக்கு பாடம் நடத்த - மான்கள்
உன்னை குளிப்பாட்ட - குயில்கள்
உன்னை குளிரவைக்க - இமயமலை
உன்னை நனைக்க - மழை
உன்னை தாலாட்ட - நிலவு
உன்னை தூங்க வைக்க - தென்றல்
நன்றி பிரம்மனே நன்றி!
அதற்காக அவளை உரிமை கொண்டாட உனக்கு எந்த உரிமையும் இல்லை!
நீ இவைகளை படைக்காமலிருந்திருந்தால் நான் படைத்திருப்பேன், அவ்வளவுதான்!
கைமாறாக,
உனக்கு பதவி உயர்வு கிடைக்க ஏதாவது சிபாரிசு கடிதம் வேண்டுமானால் தருகிறேன்!
வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி விடு!
இதயம் இல்லாதவன் - என்று என்னை திட்டாதே!
இருந்ததை அவளிடம் ஏற்கனவே கொடுத்து விட்டேன்!

உன் கலகல சிரிப்பைக் கேட்டுத் தான்
நதி தேவன், காவிரியில் தான் நீர் ஒடிகிறது என நினைத்து பங்களிப்பை நிறுத்தி விட்டானோ?
காவிரியில் வரட்சி செய்து விட்டு
காதல் வெறியில் புரட்சி செய்பவளே!

உன் சின்ன மூக்கு தும்மியதால் - ஜப்பானில் சூறாவளி!
உன் உடல் உலுக்கும் விக்கலால் - இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!
நீ நாற்காலியில் இடித்துக் கொண்டதால், தரை மட்டமானது உலக வர்த்தக மையம்!
நீ கொண்ட தாகத்தால், பாலையாகிப் போனது சஹாரா!
உனக்கு சளி பிடித்ததால், *சிசிலி மௌண்ட் எட்னா-வில் இருமும் எரிமலை!
உனக்கு பூச்சி கடித்தால், தன்னை கிள்ளிக் கொண்டு சிவக்கும் மாலை வானம்!
நீ பரு கிள்ளினால், வானத்தில் எரிந்து விழும் நட்சத்திரம்!
நீ ஒரு மாதத்தில் படும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களுக்காக
வானமே கறுப்பு உடை உடுத்தி துக்கம் அனுசரிக்கும் அமாவாசை!
இப்படி,
நீ படும் சின்ன சின்ன உபாதைகளுக்கு
இயற்கை தன்னை தானே பெரிய பெரிய உபாதைகளுக்கு உட்படுத்திக் கொண்டு
நீ படும் சங்கடத்தை அதுவும் படுகிறதே!

இனிமேல் நீ சங்கடம் கெடு! சந்தோஷப் படு!
இந்த உலகத்துக்கு நிவாரணம் கொடு!

------ *** --------


*சிசிலி மௌண்ட் எட்னா - உலகின் மிகப் பிரசித்தி பெற்ற எரிமலை!

அக்னி
18-10-2007, 01:00 PM
உண்மை உவமானங்கள்
பொங்கிப் பிரவாகிக்கும்
அழகுக் கவி நயாகரா...
தந்த கவி நாயகரே...


உனக்கு பதவி உயர்வு கிடைக்க ஏதாவது சிபாரிசு கடிதம் வேண்டுமானால் தருகிறேன்!
வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி விடு!
இதயம் இல்லாதவன் - என்று என்னை திட்டாதே!
இருந்ததை அவளிடம் ஏற்கனவே கொடுத்து விட்டேன்!

பிரம்மனைத் துரத்த சிபாரிசு கடிதம்...
இதயம் காதலி வசம் என்பதால்,
திட்டாதே என்ற எச்சரிக்கை...
இது பிரம்மனுக்கே புதிது...
சரியான இடத்தில், அழகாகப் பொருத்தப்பட்ட ஈபிள்டவர் வரிகள்...

பாராட்டுக்கள்...

உலகே உனக்குள் ஐக்கியம்...
உன் அசைவுகளோ பிரளயம்...
காதல் தந்ததோ கவிப்பிரசவம்...

மீண்டும் பாராட்டுக்கள் லெனின் அவர்களே...

மகிழவைத்த புதுமைக் கவிக்காக, 250 iCash.

யவனிகா
18-10-2007, 01:09 PM
காதலியை கவிதையால் கொண்டாடி விட்டீர்கள் போங்கள்...இனி உங்கள் முதல் வரி சீக்கிரத்தில் நிஜமாகும்.பாராட்டுகளுடன்
யவனிகா.

Narathar
18-10-2007, 01:11 PM
இனிமேல் நீ சங்கடம் கெடு! சந்தோஷப் படு!
இந்த உலகத்துக்கு நிவாரணம் கொடு!எது தேவையோ அதை வேண்டி நிற்கின்றீர்கள்
கட்டாயம் கிடைக்க பிரார்த்திப்போம்............

கவி வரிகள் அசத்துகின்றன்.. வாழ்த்துக்கள்

lenram80
18-10-2007, 02:27 PM
கவிதையை படித்து நிவாரணம் பெற்ற :P அக்னி-க்கும், யவனிகா-க்கும், நாரதர்-க்கும் நன்றி

பூமகள்
18-10-2007, 07:07 PM
ரொம்ப அழகான கவிதை..!!
நிறைய உலக பிரபலமான விடயங்களை உவமானமாக்கி அசத்திவிட்டீர்கள் லெனின்.
தொடர்ந்து அசத்துங்க..!!
நல்லதொரு கவி..!
எல்லா வரிகளும் அருமை.!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!

lenram80
19-10-2007, 12:58 AM
அடுத்த நிவாரணம் பெற்ற பூமகள்-க்கும் நன்றி

சுகந்தப்ரீதன்
21-10-2007, 09:40 AM
லெனின் அழகான வரிகள் கொண்டு அசத்தலாய் காதலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளீர்... தங்களின் வேண்டுதல் நிறைவேற எனது வாழ்த்துக்கள்...!

பூமகள்
29-10-2007, 02:39 PM
அடுத்த நிவாரணம் பெற்ற பூமகள்-க்கும் நன்றி
ஆஹா... உள்ளே வந்தாவே உடனே நிவாரணம் அளிப்பீங்களோ???:icon_ush:

தெரியாமல் தான் கேட்கிறேன்.. நோயில்லாமல் வந்தால் எப்படி நிவாரணம் கொடுப்பீங்க?? :sport-smiley-018:

மனோஜ்
29-10-2007, 03:27 PM
காதலுக்கு கண்ல்லை என்பார்கலே அது இந்த கவிதையில் அழகாக சொல்லியுள்ளீர்கள் நன்றி லெனின்