PDA

View Full Version : YOUTUBE படத்தொகுப்பை மன்றத்தில் பதியும் போது



அன்புரசிகன்
17-10-2007, 07:03 PM
நண்பர்களே...

சமீப காலமாக மன்றத்தில் youtube ஒளிப்படத்தொகுப்பை பதியும் போது [ youtube]<சுட்டி>[ /youtube] என்பதன் மூலம் பதியும் போது பிழைச்செய்தி வருகிறது.

ஆகவே அவ்வாறு பதியாது நீங்கள் youtube ஒளித்தொகுப்பை பதியும் போது [ media]<சுட்டி>[ /media] என பதியவும்....

விரைவில் இந்த பிழைச்செய்திக்கான பிரச்சனை நிவர்த்திசெய்யப்படும்...

உங்கள் ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகள்.

சாம்பவி
17-10-2007, 07:51 PM
இவ்வகை ஒலி/ஒளி திரிகள், ஒரே நேரத்தில் பலரால், திறக்கப் படும் போது, நமது தளத்தின் செயல்பாடுகள்(performance, response time, latency ), ஆகியன தடுமாறுகின்றன.. (ஐந்து நிமிடத்திற்கு முன்பு, தளத்தினுள் நுழையவே முடியவில்லை.. !)
இவ்வகை பிற தள ஒலி/ஓளி சுட்டிகளை.. ஹைப்பர் லிங்க்குகளாகவே தரலாமே... ! விருப்பமுள்ளவர்கள் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.
தளத்தின் வேகமும் கெடாது.. !

suraj
18-10-2007, 02:28 PM
என் மதிக்கு எட்டியது

<object width="425" height="350"><embed src="http://www.youtube.com/link" type="application/x-shockwave-flash" width="425" height="350"></embed></object>

இதன் சுருக்கமே
[youtube]<சுட்டி>[ /youtube] அல்லது [ media]<சுட்டி>[ /media](default in vbulletin hack)

அந்த ஒளிப்படத்தின் சுட்டி embed செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு தான் இது நம் தளத்தின் நினைவகத்தில்(dB+பிளாஸ் பிளேயர்) சேமிக்க சிறிது இடம் தான் தேவை. நம் தளம் திறக்காததிற்கு இது பொறுப்பல்ல என்பது என் கருத்து.


ஹைப்பர் லிங்க்குகளாகவே தரலாமே... ! விருப்பமுள்ளவர்கள் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்.
நல்ல யோசனைதான் இது அவர்கள் ஒளிப்படத்தை பல விதத்தில் விளம்பரப்படுத்துவதற்கு சமம்.
எ.கா:
கூகிள் பேஸ் ராங் அவர்களுக்கு கூடும். இன்னும் பல...

நன்றி

அன்புரசிகன்
18-10-2007, 06:33 PM
சுராஜ். நீங்கள் கூறவந்தது சரி. ஆனால் அது youtube tag பாவிக்கும் போது வரும் பிழைச்செய்தியானது source code ல் இருந்து வருகிறது. நாம் forum ல் youtube இற்கான செயலியை நிறுவும் போது source code ல் மாற்றம் செய்யவேண்டி வரும். முதலில் பதிந்தவை சரியாகவே இயங்குகிறது. இப்போது புதிதாக பதியும் போது தான் பிழைச்செய்தி வருகிறது. Forum board ல் பதியும் போது தான் பிரச்சனை...

தனிமடலில் youtube tag பாவிக்கும் போது சரியாக வருகிறது.

தவிர இவ்வகையான tag பாவிப்பதன் மூலம் yotube லிருந்துதான் அது பதிவிறக்கப்படுமே தவிர மன்றத்திலிருந்தல்ல. இதனால் மன்றத்திற்கோ மன்றத்தின் bandwidth ற்கோ எந்த வித பிரச்சனையும் வராது என்பது எனது எண்ணம்...

suraj
19-10-2007, 08:59 AM
தவிர இவ்வகையான tag பாவிப்பதன் மூலம் yotube லிருந்துதான் அது பதிவிறக்கப்படுமே தவிர மன்றத்திலிருந்தல்ல. இதனால் மன்றத்திற்கோ மன்றத்தின் bandwidth ற்கோ எந்த வித பிரச்சனையும் வராது என்பது எனது எண்ணம்...
மிகச் சரி நண்பரே!

தளத்தின் PHP யில் allow_url_fopen - தேர்வு செய்யப்பட்டுள்ளதா என சோதிக்கவும். இல்லை எனில் தேர்வு செய்யவும்.

நன்றி

--------------------------------------------------------------
vBlletin-ல் நான் தேர்ந்தவன் அல்ல ..ஏதோ எனக்கு தெரிந்தது.