PDA

View Full Version : பூமித்தாய்..!



சிவா.ஜி
17-10-2007, 12:16 PM
முட்டி முட்டி பால்குடிக்கும்
குட்டிக் குழந்தைகளாய் உன்னை
வெட்டி வெட்டி நீர் எடுக்கும்
புத்திரர்களையும்
பத்திரமாய் தாங்கும்
பூமித் தாயே.....இனி
முட்டினாலும்
முலை சுரக்கா
நிலை வருமோ உனக்கு...?


'மாசு'களாய் புறஞ்சொல்லி
மழைக் கணவன் உன்னை
இணைய மறுத்தால்
எங்கணம் நீ சூலுறுவாய்
எங்கணம் நீ பாலூறுவாய்..?

பெற்ற பிள்ளைகளே
உன் மடி காய விட்டால்
மற்று வரும் மழலைகள்
நா நனைக்க நீயூறுவாயா...?

vaseegaran
17-10-2007, 02:13 PM
மிகச்சிறந்த ஒரு உன்னத கருத்தை கவிவடிவில்
அழகுற படைத்திருக்கும்.... பாங்கு வியக்க வைக்கிறது ஜி...
ரசித்தேன்... கவியின் கருததும் வீரியமும்....
உடன் வாழ்வின் உண்மையை உரைத்தன...

பாராட்டுகள் ஜி..

வசீகரன்

சிவா.ஜி
17-10-2007, 02:22 PM
மிக்க நன்றி வசீகரன்.உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.உங்களின் வசீகரமான எழுத்துக்களை காண ஆவலாய் இருக்கிறேன்

ஜெயாஸ்தா
17-10-2007, 02:43 PM
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் மனிதவிலங்குகள் தங்களுக்குத் தாங்களே குழிவெட்டுகின்றனர் அறிந்தும் அறியாமலும்.....


இனி
முட்டினாலும்
முலை சுரக்கா
நிலை வருமோ உனக்கு...?


உணர்சியுள்ள வரிகள் சிவா.

சிவா.ஜி
17-10-2007, 02:47 PM
நன்றி ஜே.எம்.இப்போதே சில பகுதிகளில் 1000 அடிக்கு ஆழ்துளையிட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. வருங்காலத்தை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

ஜெயாஸ்தா
17-10-2007, 02:51 PM
இதே கருத்தை நகைச்சுவையாய் ஒரு படத்தில் சித்தரித்திருந்தார்கள்.

விவேக் நகைச்சுவையில் வந்த படம் என்று நினைக்கிறேன். மிக ஆழமாய் 'போர்' (ஆழ்துளைகுழாய்) போட்டுக்கொண்டிருப்பார்கள். மிக அதிகநேரம் போட்டும் தண்ணீர் வராது. அதற்குப் பதில் திடீரென அந்த குழாய்க்குள் இருந்து ஒரு வெள்ளைக்காரன் வெளிவருவான்.

'யாருடா நீ.... எங்கேயிருந்து வர....?' என்று விவேக் கேட்க அதற்கு அவன் 'ஐ யாம் ப்ரம் அமெரிக்கா' என்பான். நகைச்சுவையாய் இருந்தாலும் சிந்திக்கவேண்டிய கருத்தல்லவா இது.

சிவா.ஜி
17-10-2007, 02:55 PM
ஆமாம்...மெக்ஸிகோவிலிருந்து வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே வருவான்.நல்ல கருத்தை நயமான நகைச்சுவையாக சொல்லியிருந்தார்கள்.

சூரியன்
17-10-2007, 03:54 PM
இன்றைய நிலையை அப்படியே கவிதையாய் வடித்திருக்கிறீர் சிவாஜி..

நேசம்
17-10-2007, 08:29 PM
நல்ல கவிதை சிவாஜிஜி. மக்கள் மனதில் மாற்றம் வந்தால் ஒழிய செய்வதற்கு ஒன்றுமில்லை

அக்னி
17-10-2007, 08:49 PM
மனிதன்
உன்னை... கொத்திக் குதறி,
நீர் உறிஞ்சியதாலோ,
அழிவு தந்து,
அழுகை தந்து,
கத்திக் கதறவைத்து,
மீள உறிஞ்சுகின்றாய்...
பூமித்தாயே...???

பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
18-10-2007, 04:22 AM
மிக்க நன்றி சூரியன் மற்றும் நேசம்.மனிதன் உணரவேண்டும். பார்ப்போம்.

சிவா.ஜி
18-10-2007, 04:23 AM
மிக அருமையான உங்கள் பதில் கவிதை உண்மையை சொல்கிறது. வாழ்த்துக்கள் அக்னி.மிக்க நன்றி.

பூமகள்
18-10-2007, 05:20 AM
மாசு'களாய் புறஞ்சொல்லி
மழைக் கணவன் உன்னை
இணைய மறுத்தால்
எங்கணம் நீ சூலுறுவாய்
எங்கணம் நீ பாலூறுவாய்..?
நான் மிகவும் ரசித்த வரிகள்..!!
ரொம்ப நல்ல கவிதை சிவா அண்ணா. பூமித்தாயின் மடி வற்றிக் கொண்டே வருகிறது. இதற்கு கட்டாயம் முயற்சி எடுத்து நிலத்தடி நீரை காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை.
அழகான கருத்துள்ள கவிதை..!
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் சிவா அண்ணா.

சிவா.ஜி
18-10-2007, 07:16 AM
கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்டாலே பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.நிலத்தடி நீரைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல்,அதனை சேமிக்கவும் செய்யவேண்டும்.மிக்க நன்றி தங்கையே.

சுகந்தப்ரீதன்
18-10-2007, 07:29 AM
அண்ணா பலைவனத்தில் வசிப்பதாலோ என்னவோ பக்குவமாய் பகிர்ந்து உள்ளீர்கள் நீரின் அவசியத்தையும் மாசு கேட்டையும் அற்புதமாய் கவிதை வடிவில்.. மிகவும் ரசித்தேன் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!

சிவா.ஜி
18-10-2007, 07:34 AM
நன்றி சுகந்தா...நம் பூமி முழுவதுமே பாலையாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.குடிநீருக்காக உறிஞ்சுவது ஒருபக்கம் என்றால்,இந்த குளிர்பானக் கம்பெனிகள் ராட்சசதனமாக உறிஞ்சுகிறார்கள்.

அமரன்
18-10-2007, 07:44 AM
சூலுற்றமகவு உலகைத்தொட்டு சில வருடங்களின் பின்னர் பால் சுரப்பதில்லை மனிததாய்க்கு. ஆனால் ஏவ்வளவு காலமும் குழந்தைகள் நாம் அள்ளிப்பருகினாலும் வற்றாது சரக்கும் வரம்பெற்றவள் பூமித்தாய். ஆனால் எப்போது சில "மலைவாழ் அட்டைகள் உறிஞ்சுவதற்கு உறிஞ்ச துவங்கினவோ அப்போதே விழித்துக்கொண்டாள் நிலவன்னை. ஒழித்துக்கொண்டாள் தண்ணீரை.

அப்படியும் நாம் விழிக்கவில்லை. கண்மூடித்தனமாக மழைக்கணவன் தோன்றுவதை வெட்டியும், படுத்தியும் தடுக்கின்றோம். அவனாலும் எத்தனை நாட்கள்தான் தாக்குப்பிடிக்க முடியும் மனிதபசாசுகளில் அகோர இம்சைகளை. அதனால் அவ்வப்போது கண்ணீர் விட்டுக் கதறுகிறான். பல நாட்கள் மௌனமாகவும், விசும்பலுடனும் இருக்கிறான். நாம் விழித்தாம் முழி பிதுங்கி நிறகவேண்டிய தேவை இராது.

குடி ஆட்சியிக்காலத்தில் மும்மாரி பொழியவில்லை என்று காரணம் காட்டி முடியைகவிழ்க்க காத்திருக்கும் குடிமன்னர்கள் இருக்கும்வரையும், கண்ணைமூடிக்கொண்டு பாலென நினைத்து குடிக்கும் குடிமக்கள் இருக்கும் வரைக்கும் இது தொடரும். நானைக்க நீரூறுகிறதோ இல்லையோ நானின்னைக்க தீயூறுகிறது.

சிவா.ஜி
18-10-2007, 07:48 AM
வெகு அருமையான விமர்சனம் அமரன்.அழகு தமிழில் அற்புதமாக கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.இப்படிப்பட்ட பின்னூட்டம் பார்த்து மனம் மகிழ்ச்சியடைகிறது.அதே சமயம்...அந்த எழுத்திலுள்ள ஆதங்கத்தை நினைத்து வேதனைப் படுகிறது.நிலை மாற நாம்தான் முயலவேண்டும்.மனமார்ந்த நன்றி அமரன்.

lolluvathiyar
18-10-2007, 08:27 AM
அருமையான கவிதை, மிக சிறந்த கரு.
உங்கள் கவிதையின் கரு என் மனதில் நீண்ட நாட்கள் உருத்தி கொண்டே இருக்கு கரு. (ஆனால் எனக்கு அவைகளை கவிதையாய் வடிக்க தெரியவில்லை)
எப்படியோ பூமி தாயிடம் பால் ஊறுகிறது ஆனால் அவற்றில் நாம் விசத்தை கலந்து விடுகிறோம்

சிவா.ஜி
18-10-2007, 08:48 AM
நன்றி வாத்தியாரே...நீங்கள் தொடர்ந்து உங்களின் பல பின்னூட்டங்களில் இதைப்பற்றி எழுதிக்கொண்டுதான் வருகிறீர்கள்.அதைப் படித்துக்கொண்டே வந்ததும் ஒரு காரணம் நான் இந்த கவிதை எழுதுவதற்கு.எனவே இரட்டை நன்றிகள்.

சாராகுமார்
28-10-2007, 02:41 PM
அருமையான கரு கவிதைக்கு.வாழ்த்துக்கள் அன்பர் சிவா.ஜிக்கு.

நிலத்தடி நீர்
அது
பூமித்தாயின் உயிர்...
நீரை உறிஞ்சி உறிஞ்சி
தாயின் உயிரை
பறிக்கிறோம்.

சிவா.ஜி
31-10-2007, 06:04 AM
மிக்க நன்றி சாராகுமார். தாமதமான நன்றிக்கு பொறுத்துக்கொள்ளவும்..

கஜினி
31-10-2007, 06:50 AM
எழுச்சிக் கவிதை அருமையாக அமைந்திருக்கிறது. பூமித்தாய்மீது அளவுகடந்த பாசமோ? பெற்றதாயிடம் கேட்டதுபோல் ஆழமான வரிகள். அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

இயற்கையை சீராக பயன்படுத்தினாலே தண்ணீருக்கு பஞ்சம் இருக்காது.

ஷீ-நிசி
31-10-2007, 07:13 AM
இயற்கை வளங்களை சுரண்டி சுருட்டி செல்லும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கவிதை!

மனம் கணக்கிறது! சிவா!

சிவா.ஜி
02-11-2007, 07:42 AM
மிக்க நன்றி கஜினி. பூமித்தாயிடம் பாசமிருந்தால்தானே நன்பரே அவள் மனம் குளிர நம்மை வாழ வைப்பாள். பாராட்டுக்கு நன்றி.


மிக்க நன்றி ஷீ-நிசி. குடிநீரில்லா நிலை வருமுன்...திருந்த வேண்டியவர்கள் திருந்தினால் நலமே.

யவனிகா
02-11-2007, 09:51 AM
அருமையான கவிதை அண்ணா!நறுக்கென்று உறைக்க வைக்கும் வரிகள்...பொருள் பொதிந்த வினாக்கள்.வாழ்த்துக்கள் அண்ணா... பால் வற்றிப்போனால் விடுவார்களா? கயவர்கள் ரத்தத்தைக் கூட உறிஞ்ச ஆரம்பித்து விடுவார்கள்...தாயானாலும் பொறுக்கும் வரை தான் பொறுமை..அவள் பொறுமை எல்லை கடந்தால் நமக்குப் போதாத காலம்தான்.

ஆதவா
06-11-2007, 05:22 AM
முற்றிலும் கவிதைத் தனமான கவிதை... :)

நாளை விஞ்ஞான வளர்ச்சியில் குழி தோண்டும் வேலை இல்லாமல் போகக் கடவ.

பூமியைப் புண்ணாக்கி, இரத்தம் குடித்தால்தான் மனிதனின் புண் ஆறும்... அது இயற்கை கொடுத்த சாபம்.

சாபத்தை வரமாக்கத் தெரியாத மனிதர்கள் நாம். கொடுத்து எடுக்கத் தெரியாத பரம்பரை, மனிதப்பரம்பரை.

எத்தனை பேரின் வீடு, மழை சேமிப்புத் தொட்டியோடு கட்டப்பட்டிருக்கிறது??

(பூமியின்)நெஞ்சில் கால் வைக்க அனுமதியுண்டு, குருதி பேய்த்தெடுக்க உரிமையுண்டு,... கவிதை போல எத்தனை நாளைக்குத்தான் அனுமதிகள், உரிமைகள்..??

கவிதை சொல்லவந்த கருத்து அபாரம், எதிர்காலம் இதற்கு பல சிந்திக்கவேண்டியிருக்கும்....

சிவா.ஜி
11-11-2007, 04:59 AM
அருமையான கவிதை அண்ணா!நறுக்கென்று உறைக்க வைக்கும் வரிகள்...பொருள் பொதிந்த வினாக்கள்.வாழ்த்துக்கள் அண்ணா... பால் வற்றிப்போனால் விடுவார்களா? கயவர்கள் ரத்தத்தைக் கூட உறிஞ்ச ஆரம்பித்து விடுவார்கள்...தாயானாலும் பொறுக்கும் வரை தான் பொறுமை..அவள் பொறுமை எல்லை கடந்தால் நமக்குப் போதாத காலம்தான்.

மிக்க நன்றி யவனிகா.சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.தாயாயிருந்தாலும் பொறுக்கும்வரைதான்.அவள் சீறினால்..சீண்டியவர்கள் கதி...? சிந்திக்கவேண்டியவர்கள் சிந்தித்தால் சரி.

சிவா.ஜி
11-11-2007, 05:01 AM
ஆதாவாவின் அசத்தலான இந்த பின்னூட்டம் எத்தனையோ சொல்கிறது.

\"கொடுத்து எடுக்கத் தெரியாத பரம்பரை, மனிதப்பரம்பரை\" அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.மிக்க நன்றி ஆதவா.

இளசு
11-11-2007, 08:53 AM
இயற்கை சில விதிகளுடன் நம்மை ஒட்டுண்ணியாக வாழ அனுமதி அளித்துள்ளது...

பால் உறிஞ்சும் வரை பொறுக்கலாம்..
உதிரம் வரும்படி குதறினால்?

சிவாவின் சூழல் ஆர்வலக்கவியும்
அமரன், ஆதவன் ,மற்ற நண்பர்கள் விமர்சனங்களும்
மிகச்சிறப்பு.. கால அவசியம்!

பாராட்டுகள்!

சிவா.ஜி
11-11-2007, 09:01 AM
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்பரின் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.கணிணி சரியாகிவிட்டதா இளசு?இனி அடிக்கடி உங்களை சந்திக்க முடியுமென்பதே பேருவகையாக இருக்கிறது.

இளசு
11-11-2007, 09:09 AM
ஊர்ப்பயணம் முடிந்து நீங்கள் வந்ததில் எங்களுக்கு மிக மகிழ்ச்சி சிவா?
நலந்தானே எல்லாரும்? எல்லாமும்? ..


கணினி சிகிச்சைக்குப்போய்வந்து இப்போது முழுநலம்.
அதனால் இனி மன்ற உலா தடையின்றி தொடரும் சிவா..

சிவா.ஜி
11-11-2007, 09:11 AM
ஊரில் எல்லோரும்..எல்லாமும் நலமே...மன்ற உறவுகளைச் சந்தித்தது...மிக்க மகிழ்ச்சியான தருணங்கள். விரைவில் கட்டுரை வரும்.