PDA

View Full Version : உண்மை சொல்வாயா..?



யாழ்_அகத்தியன்
17-10-2007, 11:55 AM
உன்னோடு ஓடிக்கொண்டிருந்த
நதியாக நான் இருந்த போது
ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது

ஏனோ
குளமாக தேங்கிவிட்டேன்
ஆனாலும் என்னைச் சுற்றி உன்
நினைவென்னும் குளக்கட்டுகளே

உன்னோடு ஓடியதும்
நானே
உன்னோடு உருண்டதும்
நானே
உன்னோடு விழுந்ததும்
நானே
உன்னோடு கலந்ததும்
நானே

ஆனாலும் நீ
நானில்லாமலே சேர்ந்துவிட்டாய்
வாழ்க்கை எனும் கடலில்

நான்தான் உன்னை நினைத்தே
தேங்விட்டேன் குளமாய்

இருந்தாலும்
யார் வீட்டு குழம்பிலாவது
நீயும் ஒரு நாள் உப்பாகலாம்
நானும் ஒரு நாள் நீராகலாம்

அப்போதாவது
உண்மை சொல்வாயா..?
ஏன் என்னை விட்டு
சென்றாயென்று

-யாழ்_அகத்தியன்

அக்னி
17-10-2007, 12:03 PM
விட்டுப் பிரிந்தபின்,
உப்பும் நீருமாய்,
மீண்டும் சந்திக்கும் கணங்கள்...
கொதிநிலையில்...
அதுவரை,
தேங்கிய மனநிலை,
உறைநிலையில்...

உங்கள் சிந்தனாசக்தி வித்தியாசமான கவிதையை பிரசவித்துள்ளது...
பாராட்டுக்கள் யாழ்_அகத்தியன்...

யாழ்_அகத்தியன்
17-10-2007, 02:18 PM
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி

சிவா.ஜி
17-10-2007, 02:43 PM
இருந்தாலும்
யார் வீட்டு குழம்பிலாவது
நீயும் ஒரு நாள் உப்பாகலாம்
நானும் ஒரு நாள் நீராகலாம்....

மிக அருமையான வரிகள்.சிறந்த சிந்தனை.விட்டுப் பிரிதலை பலரும் பலவிதமாய் எழுதினாலும் இப்படி புதுவிதமாய் எழுதப்படும்போது...மிகவும் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள் யாழ்-அகத்தியன்.

ஜெயாஸ்தா
17-10-2007, 02:45 PM
தற்போது முடிந்தாலும் என்றாவது ஒரு நாள் தொடரும் உன் பந்தம் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

யவனிகா
17-10-2007, 03:05 PM
நல்ல கவிதை அகத்தியன்.

நாம் இருவரும் பிரியக்கூடாது என்று தான் ஒன்றாயிருக்கும் போதே நம்மைப் பார்த்து வியந்த மனிதரின் கண்களுக்குள் குடியேறிவிட்டோம்...ஒவ்வொரு முறை அவர்கள் கண்ணீர் சிந்தும் போதும் நீராயும்,உப்பாயும் நாம் தானே வெளிப்படுகிறோம்.

யாழ்_அகத்தியன்
17-10-2007, 04:07 PM
நல்ல கவிதை அகத்தியன்.

நாம் இருவரும் பிரியக்கூடாது
என்று தான் ஒன்றாயிருக்கும் போதே
நம்மைப் பார்த்து வியந்த மனிதரின்
கண்களுக்குள் குடியேறிவிட்டோம்...
ஒவ்வொரு முறை அவர்கள்
கண்ணீர் சிந்தும் போதும்
நீராயும்,உப்பாயும் நாம் தானே
வெளிப்படுகிறோம்.


உங்க வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்

யுவனிகா நல்லாஇருக்கு உங்க கவிதை