PDA

View Full Version : பருவநட்சத்திரங்கள்...!! - பாகம் 2

பூமகள்
17-10-2007, 08:49 AM
முந்தைய பாகம்:
பருவநட்சத்திரங்கள் - பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12812)

பருவநட்சத்திரங்கள்....! - பாகம் 2

கோயிலுக்குள் நுழைந்த கலா பயத்துடனே பிரகாரத்தைப் பார்த்தாள். இருபுறமும் ஆல மரத்தாலும் வேப்ப மரத்தாலும் சூழப்பட்டு கீழே இலைகளின் காய்ந்த சருகுகள் மண்டி மண்ணோடு மண்ணாக மட்க எத்தனித்துக் கிடந்தன. அரண்ட கலாவின் கண்களுக்கு சருகுகளும் அரவமாய் தெரிந்தன. மெல்ல திரும்பி பின்னால் பார்த்தாள் கலா. துரத்திய பாம்பு வாயிற்படியைத் தாண்டி நுழைந்து ஆக்ரோசமாய் சீறியபடி அவள் நோக்கிவந்து கொண்டிருந்தது.

கோயிலில் கற்ப கிரகம் பூட்டி யாருமில்லாமல் இருந்ததால்... கோயிலில் பின் பக்கம் நோக்கி அதிகரிக்கும் இதயத்துடிப்புடனே வேர்க்க விருவிருக்க ஓடத்துவங்கினாள் கலா. அங்கே எதிரில் அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலாவின் முன்னாலும் இரண்டு கரு நாகங்கள் நாக்கை துருத்தியபடி ஆவேசமாய் வர, பின்னாலும் துரத்திய கட்டுவிரியன் கிட்ட நெருங்க.... செய்வதறியாது....

கலா பயத்தின் உச்சத்திற்கே சென்று "வீல்" என்று கத்தியபடி பதறி கண்விழிக்கவும், "ட்ரிங்!!!!" என்ற அலரலுடன் அலாரம் அடித்து காலை 4 மணியை அறிவிக்கவும் சரியாய் இருந்தது.

அலாரத்தின் ஓசையை விட கலாவின் கூவல் தான் பெரிதாக விழுந்தது காமேஷின் காதில். திடுக்கிட்டு எழுந்தான் காமேஷ்.

பயமும் வியர்வையும் வழிய மலங்க மலங்க விழிக்கும் கலாவைப் பார்த்து, கெட்ட கனவு ஏதும் கண்டிருப்பாள் என்று ஊகித்து, அருகில் இருக்கும் சொம்பிலிருந்து தண்ணீர் எடுத்து டம்ளரில் ஊற்றி, "ஒன்னுமில்ல டா... கனவு கண்டிருப்பே.. இந்தா தண்ணிய குடி கலா!!"

"என்னங்க... பாம்பு வந்திச்சிங்க.. என்னை துரத்தி துரத்தி கடிக்க வந்திச்சிங்க...!" கனவின் தாக்கத்திலிருந்து முழுதும் விடுபடாமல் நடுங்கும் குரலில் சொன்னாள் கலா.

அவளை அப்படியே தோளில் சாய்த்து, ஆறுதலாய் தலை கோதி, "ஒன்னுமில்லைடா.. நேத்து நைட் டிஸ்கவரில பாம்பு பத்தின டாக்குமெண்ட்ரி பார்த்தோமே...!! அதான்..கனவில வந்திருக்கு...!! பயப்பட ஒன்னுமில்லை கலா. எல்லாம் பிரமை தான்.. அதான் இரவு நல்ல விசயங்களை பார்த்துட்டு தூங்கனும்னு சொல்வேனே அடிக்கடி... நீ தான் கேக்கவேமாட்ட..."

"சரிங்க.. இனி அப்படியே செய்யறேன்.." என்று கலா நடுக்கம் குறைந்து நார்மல் அடைந்தாள்.

எழுந்து கிளம்பி, கலா வெளிர் ஊதா நிற பட்டுப்புடவையிலும் காமேஷ் மெருன் கலர் சட்டை மற்றும் சந்தன கலர் பட்டு வேட்டியுமாக காலை 6 மணிக்கே இருவரும் முதலில் மருதமலைக்கு சென்றார்கள். அவர்கள் இருந்த வடவள்ளிக்கு மிக அருகில் இருந்தது மருதமலை முருகன் கோயில். கோவையின் விசேசமான சுற்றுலா தளங்களில் முதன்மையானது.

மருதமலையின் அழகிய வனப்பில் முருகனின் அருளை விசேச வழியில் சென்று தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு அங்குள்ள திட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டனர் கலாவும் காமேஷும்.

மலையின் அழகை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்த காமேஷின் மௌனத்தைக் கலைக்க முயன்றால் கலா. "என்னங்க...என்னங்க... இங்க பாருங்க... இந்த புடவை எனக்கு எப்படியிருக்கு? நீங்க நேத்து வாங்கி கொடுத்தது தான்.. ஆனால் ஒன்னுமே சொல்லாம இருக்கீங்களே??" செல்ல கோபத்தில் சிணுங்கினாள் கலா.

"அடடா... அதை சொல்லாம விட்டுட்டேனா?? என் கலாகுட்டி இந்த பட்டு புடவைல சும்மா தேவதை மாதிரி இருக்கே.. என் கண்ணே பட்டுடும்... வீட்டுக்கு போனதும் திருஷ்டி சுத்தி போடனும்.." என்று காமேஷ் ஐஸாய் உருகினான்.

கலா, "போங்க... ரொம்ப ஓவரா தான் பொய் சொல்றீங்க...இன்னிக்கி...!" வெட்கப்பட்டு, சிவந்தது மேலும் கலாவின் ரோஸ் நிற கன்னங்கள்.

"இப்படி பேசி... கேட்கவந்ததையே மறக்க வச்சிட்டீங்களே?? சரி.... இப்பவே மணி 8.. எப்ப போயி அன்பு முதியோர் இல்லத்தை பார்த்து உணவு வழங்கறது??"

"ஒன்னும் பிரச்சனை இல்ல கலா... நான் நேத்தே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்...அன்னாபூர்ணாவிலிருந்து காலை டிபன், மதிய சாதம், இரவு டிபன் எல்லாம் ரெடியா டைமுக்கு அன்பு முதியோர் இல்லத்துக்கு போயிடும். நாம் அங்கு போயி சேருவதற்குள் அங்கு காலை உணவு ரெடியா இருக்கும். சரி.. 10 மணிக்குள்ள வரேன்னு சொல்லியிருக்கேன். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும் கலா.. கிளம்புவோமா??"

"சரிங்க...கிளம்புவோம்..!" எழுந்து கையில் கொண்டு வந்த டிஜிடல் கேமிராவில் அரசமரத்து பிள்ளையாரின் அருகில் நின்று இருவரும் வேறு ஒருவரை புகைப்படம் எடுக்கச் சொல்லி கிளம்பினர்.

படியிறங்கிய படியே கலா, "இப்ப தாங்க.. மனசு நிம்மதியா இருக்கு.. நம்ம கல்யாண நாளும் அதுவுமா... அரவத்தை கனவில் பார்த்து ரொம்பவே அப்சட் ஆயிட்டேன். இங்கு முருகரிடம் எல்லாம் சொல்லி முறையிட்டு மனசு நிம்மதியா இருக்கு."

"நீ மனச போட்டு வீணா குழப்பிக்கற..! நான் தான் குத்துக் கல்லு மாதிரி கூடவே இருக்கேனே?? என்னை நினைக்காம கனவில வந்ததையே நினைக்கிறயே...?? உண்மைய சொல்லுடா.. கனவுல வந்தது நடிகர் ப்ரித்விராஜ் தானே??" என்று சீண்டி வம்புக்கிழுத்தான் காமேஷ்.

"ச்சீ போங்க...கனவில ப்ரித்வி வந்தா.... பயந்தா எழுவேன்.." என்று கண்ணடித்தாள் கலா....!

"அடிப்பாவி.... இரு இரு உன்னை வீட்டில் போயி கவனிச்சிக்கிறேன்" என்று செல்ல கோபத்தோடு கீழே இறங்கியபடி இருந்தான் காமேஷ்.

காரில் ஏறி நேரே "அன்பு இல்லம்" நோக்கி பயணித்தனர் கலா-காமேஷ் தம்பதிகள்.

கார் சக்தி ரோட்டை அடைந்தது. மிகுந்த ஜன நெருக்கடி அதிகம் உள்ள கணபதியின் பிரதான பேருந்து நிறுத்தத்தை தாண்டி மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.

சிவானந்த மில்லுக்கு அடுத்து சில மைல் தொலைவில் இருந்தது "அன்பு முதியோர் இல்லம்".

வாசலில் காரை நிறுத்தி, இருவரும் இறங்கி உள்ளே சென்றனர். அன்புடன், அங்கிருக்கும் கதவுக்காவலர் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். உள்ளே நுழைந்து வலது புறத்தில் இருக்கும் அலுவலக அறை நோக்கி நடந்தனர்.

"வாங்க வாங்க.. உட்காருங்க!! உங்களுக்கு தான் போன் செய்யலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். நிறைய பேரு... வேலை பிசில இங்கு சொன்னதையே மறந்திடுவாங்க.. அவங்களுக்கு ரிமைன் பண்ணுவது வழக்கம். பரவாயில்லை.. நியாபகமா வந்திட்டீங்க..!! ரொம்ப சந்தோசம்" என்று கூறினார் அன்பு இல்லத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்மணி.

"காலையில் டிபன் வந்திடுச்சாங்க மேடம்??" இது காமேஷ்.

"எல்லாம் கொஞ்ச முன்னாடி தான் வந்துதுங்க.. நீங்க வெயிட் பண்ணுங்க... பெரியவங்க... குளிச்சி பிரேயர் பண்ணிட்டு இருக்காங்க.. இன்னும் 10 நிமிசத்தில் நீங்களே உங்க கையால அவங்களுக்கு உணவு பரிமாறலாம். நீங்க விரும்பினா..!" என்று சொல்லி முடித்து எழுந்து முதியோர் இருக்கும் பிரேயர் ஹாலுக்குச் சென்றாள்.

கலா சுற்றியிருக்கும் சுவர்களில் சிரிக்கும் முதியவர்களின் குரூப் புகைப்படங்களைப் பார்த்த வண்ணமே இருந்தவள், ஒரு படத்தைப் பார்த்ததும், "என்னங்க...!! இங்க பாருங்க... நம்ம அப்துல் கலாம் வந்து இங்கு அடிக்கல் நாட்டி கட்டிடம் எழுப்ப உதவியிருக்கார்" என்று சொல்லி வியந்தாள் கலா.
காமேஷ் பார்த்து, "ஆமாம் கலா.. எனக்கு இந்த இல்லம் பல வருடமாய் தெரியும். என் நண்பர் தான் இந்த இல்லத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒருவர்." என்று சொல்லி காமேஷ் முடிக்கவும், அந்த பெண்மணி அவர்களை ப்ரேயர் ஹாலுக்கு அழைக்கவும் சரியாய் இருந்தது.

இவர்கள் சென்றதும், அந்த பெண்மணி எல்லார் முன்னிலையிலும் மைக்கில் இவர்களைப் பற்றியும், இன்று இவர்கள் தான் முதியவர்களுக்கு உணவு வழங்கப்போவதையும் சொல்லி இவர்களின் சுகமான நீண்ட வாழ்வுக்கு பிராத்தனை செய்யச் சொன்னார். அனைவரும் கண்களில் கண்ணீர் மல்க இறைவனை வேண்டி அவர்களுக்கான பாடலை பாடுவதைப் பார்த்து கலா - காமேஷ் கண்களிலிருந்து கண்ணீரும் வந்து எட்டிப் பார்த்துச் சென்றது.

ஒரு மடைதிறந்து புது வெள்ளம் பாயும் காய்ந்த பூமி போல, மனமெல்லாம் புது மின்சாரம் பாய்ந்தது இருவருக்கும்.. இதுவரை புரிந்திராத ஒரு உணர்வு அவர்களை ஆட்கொண்டு கண்கள் கலங்கி அமர்ந்திருந்தனர் முன்னால் இருக்கும் பெரியவர்களைப் பார்த்த படியே..!!

30 முதிய பாட்டிகளும், 35 முதிய பெரியவர்களும் நாற்காலிகளில் அமர்ந்து கண்கள் மூடி கைகள் கூப்பி பிராத்தனை செய்யும் காட்சி மனத்தை உருக வைத்தது.

பிராத்தனை முடிந்ததும், காமேஷை பேச அழைத்தார் இல்லத்தின் பொறுப்பாளரான அந்த பெண்மணி. உள்ளம் முழுக்க சுனாமி மென்மையாய் தாக்க, கண்களில் மழைச்சாரல் வர.. எப்படி வார்த்தை வரும் நீந்தி அதில்?? வார்த்தை வர இயலாமல்... பேசவில்லை என்று தலையசைத்து சொல்லி எழுந்து காலை உணவு பரிமாற விழைந்தார்கள்.

முதியவர்களுக்கு ஆப்பிள் பழத்தைத் துண்டுகளாக்கி, அதையும் மிச்சரையும் கலாவும் காமேஷும் வரிசையாய் கொடுத்த படியே வந்தனர்.

உணவு பரிமாற ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் ஏற்கனவே..! மிச்சரையும் பழங்கள் கொடுத்து, இருவரும் ஒவ்வொரு முதியவரிடத்தும் ஆசி வாங்கினர்.

வரிசையாய் கொடுத்துவருகையில், ஒருவரைப் பார்த்து கலா அதிர்ந்து சிலையானாள்.

(தொடரும்)

அன்புரசிகன்
17-10-2007, 09:05 AM
கனவில் பாம்புவாறது நல்ல கனவு என்று எனது அம்மம்மா சொல்லுவா... அதுவும் கன பாம்புகள்.... சூப்பர்....

அத்தனை பெரியவர்கள் நலனுக்காக பிரார்த்திக்கும் போது கண்ணீர்தான் வரும். வார்த்தைக்கேது இடம்....

அவுங்க பார்த்தது யாரை,? அவரது தாயார்? தந்தை??? ஆசான்???
தொடருங்க பூ...

ஷீ-நிசி
17-10-2007, 09:07 AM
மிக அழகாக பயணிக்கிறது கதை....

இடையிடையே செல்ல சீண்டல்கள் ரசிக்க வைக்கின்றன..

முதியோர் இல்லத்தில் உணவு பரிமாறும் உணர்வு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை... ஆனால் அனாதை குழந்தைகள் இல்லத்தில் ஒரு நாள் உணவு பரிமாற எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. மனம் அந்த சில மணி நேரங்கள் புதிதாய் மாறியது போல ஒரு சமாதானம் உள்ளத்தில் ஏற்பட்டது. நம் பிறந்த நாள் விழாக்களை, திருமண விழாக்களை இவர்களுடன் சிறப்பிப்பது நம் உள்ளத்தில் என்றுமே அமைதியை தரும்.

வாழ்த்துக்கள் பூமகள்!

praveen
17-10-2007, 09:09 AM
ஒவ்வொரு பாகத்திலும் சஸ்பென்ஸ் வைத்து, அடுத்த பாகம் எப்போ என்று படிக்க தூண்டுகிறீர்களாக்கும்.

ம் பார்ப்போம். அடுத்த பாகத்தில் என்னவென்று.

யவனிகா
17-10-2007, 09:52 AM
பூவு புண்ணியத்தில மருதமலை முருகன் தரிசனமா? விபூதிய அப்பிடியே பார்சல் பண்ணு...சரி எந்த பிரிதிவி ராஜ்...அரசி பிரிதிவியா?
பாம்பு கனவில வந்தா கடிக்கனுமாம்...துரத்திச்சின்னா எதிரிகள் நமக்கு அதிகமாகிறார்கள்னு கனவு சாஸ்திரம் சொல்லுது, கலாவுக்கு அதிர்ச்சி குடுத்தவர் யார்? நிற்க...அட்டென்சனில்..
பூவு...உன் முந்தைய கதைகளை விட இதில் நல்ல முதிர்ச்சி தெரியுது...அப்படியே பிக் அப் பண்ணி அடிச்சு தூள் பண்ணு. பாராட்டுகளுடன்
யவனிகா.

சிவா.ஜி
17-10-2007, 10:03 AM
அடடா...பூ....ரொம்ப நல்லா கதையைக் கொண்டுபோற. அந்த கோவிலுக்குள் இருந்தது ஆழ மரமில்ல 'ஆல' மரம்.
அப்புறம்..பாம்பு கனவுல வந்து கடிச்சா நல்லதுன்னு சொல்வாங்க...நீ என்னடான்னா அதுக்குள்ள கலாவை எழுப்பிட்டியே....
இருந்தாலும் யவனிகாவுக்கு இந்த லொள்ள்ளு ஆகாது.அரசி பிருத்வியான்னு கேக்கறாங்க பாரு....சத்தம் போடாத பிருத்விதானே...?
ஷீ-நிசி சொன்ன மாதிரி நானும் இரண்டுமுறை அனாதை இல்லத்துக்குப் போய் உணவு பரிமாறியிருக்கேன். மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கும்.
காட்சிகளை விவரிப்பதில் நல்ல தேர்ச்சி வந்துவிட்டது.வாழ்த்துகள்.

பூந்தோட்டம்
17-10-2007, 10:16 AM
முதல் பாகத்தின் இறுதியில் அது கனவு என்று ஊகித்தேன்.இதில் முதியோர் இல்லம் என்று குறிப்பிடும் போதே நினைத்தேன்..இங்கு கலாவுக்கு தெரிந்த யாராவது இருப்பாங்க வில்லங்கம் தான் என்று...
பூமகளின் எழுத்தாற்றல் பாராட்டத்தக்கது.தொடருங்கள்.வாழ்த்துக்கள்

அக்னி
17-10-2007, 10:40 AM
ஏம்மா பூ...
வாத்தியார் பாம்பு பற்றி விளக்கம் தந்ததும், பிளான மாத்திட்டீங்களா...
அல்லது, பிளான் பண்ணித்தான் தொடருறீங்களா..?
கனவென்றால் பாம்பு துரத்தவும் செய்யும், டூயட்டும் பாடும்... சாமர்த்தியமா எழுதி தப்பிச்சுட்டீங்க...

கதை நன்றாக நகருகின்றது... எதிர்பார்ப்புக்களைத் தரும் பகுதியில் "தொடரும்" போடுவது, தொடர்கதைகளின் சிறப்பம்சம்.
நன்றாகவே கையாளுகின்றீர்கள்...

பாராட்டுக்கள்...

ஆடிப்பாடி, சந்தோஷிக்கும் கணங்களில், அநாதரவானவர்களுக்கு, சிறு மதிப்பளித்து, ஆசி பெறுவது, மிகவும் பெறுமதி மிக்க செய்லாகும்.
இயலுமானவரையில், வாழ்வில் கைக்கொள்ள முயற்சிப்பேன்.
இதுபோல, நல்ல செய்திகள், உங்கள் எழுத்துக்களில் தொடரட்டும்...

நேசம்
17-10-2007, 11:10 AM
முதல் பாகத்தை சஸ்பென்ஸா நிறுத்தி அப்புறம் ரொமண்டிக்கா கொண்டு போய் மிண்டும் தொடரா. கலக்கிறிங்க. முதல் கதைக்கும் இதுக்கும் காட்சி விவரிப்பில் கவனம் செலுத்தியது தெரிகிறது. வாழ்த்துக்கள் பூமகள்

பூமகள்
17-10-2007, 01:37 PM
கனவில் பாம்புவாறது நல்ல கனவு என்று எனது அம்மம்மா சொல்லுவா... அதுவும் கன பாம்புகள்.... சூப்பர்....

உண்மையாவா அண்ணா?? :confused::confused:
எல்லாரும் கெடுதல்னு சொல்லி என்னை பயமுறுத்துறாங்க...எனக்கு இப்படியான கனவு முதலெல்லாம் அடிக்கடி வரும்... தொரத்திட்டே போகும்.. கொத்தாது... அதுக்குள்ள விடிஞ்சிடும்.....:traurig001:

அவுங்க பார்த்தது யாரை,? அவரது தாயார்? தந்தை??? ஆசான்??? தொடருங்க பூ...
அது தானே தெரியலை.... எனக்கே...!! :rolleyes: :p :cool:
அடுத்த பகுதியில் பாருங்க...!!
உங்க பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி..
ரொம்ப நன்றிகள் அன்பு அண்ணா.

பூமகள்
17-10-2007, 01:44 PM
மிக அழகாக பயணிக்கிறது கதை....
இடையிடையே செல்ல சீண்டல்கள் ரசிக்க வைக்கின்றன..
வாழ்த்துக்கள் பூமகள்!
மிக்க நன்றிகள் ஷீ.
உங்களின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது.

அனாதை குழந்தைகள் இல்லத்தில் ஒரு நாள் உணவு பரிமாற எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. மனம் அந்த சில மணி நேரங்கள் புதிதாய் மாறியது போல ஒரு சமாதானம் உள்ளத்தில் ஏற்பட்டது. நம் பிறந்த நாள் விழாக்களை, திருமண விழாக்களை இவர்களுடன் சிறப்பிப்பது நம் உள்ளத்தில் என்றுமே அமைதியை தரும்.
உண்மை தான். அந்த மாதிரியான அனுபவம் எனக்கும் உண்டு. அதைப்பற்றி பின்னர் எழுதுகிறேன் சுவையான சம்பவங்கள் பகுதியில்.
அற்புதமான செயல். ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய செயல்.

பூமகள்
17-10-2007, 01:54 PM
ஒவ்வொரு பாகத்திலும் சஸ்பென்ஸ் வைத்து, அடுத்த பாகம் எப்போ என்று படிக்க தூண்டுகிறீர்களாக்கும்.
ம் பார்ப்போம். அடுத்த பாகத்தில் என்னவென்று.
மிக்க நன்றிகள் பிரவீன் அண்ணா.
உங்களுக்கு சஸ்பென்ஸ் பிடிச்சிருக்கா? பிடிக்கலையா? புரியலையே??
ஹி ஹி..!!
அடுத்த பகுதியில் பாருங்க..!!

சரி எந்த பிரிதிவி ராஜ்...அரசி பிரிதிவியா?

ஏங்கா.. 'மொழி', 'சத்தம் போடாதே' படத்தின் நாயகர் ப்ரித்விராஜ் தானே இப்ப தமிழ் திரையுலகில் ஹாட் ஆவ் தி டாப்பிக் இளம் பெண்கள் மத்தியில்...!! ;) :p :icon_rollout:
இங்க இப்படி அரசி அப்படி இப்படின்னுட்டு....!! :frown:

பூவு...உன் முந்தைய கதைகளை விட இதில் நல்ல முதிர்ச்சி தெரியுது...அப்படியே பிக் அப் பண்ணி அடிச்சு தூள் பண்ணு. பாராட்டுகளுடன்
யவனிகா.
உங்க கையால பாராட்டு பெறுவது மோதிரக் கையால் குட்டு வாங்குவதைப் போல இருக்கு.:icon_rollout:
சந்தோசம்.. எல்லா உங்க ஆசிங்கக்கா..!! :D:D

பூமகள்
17-10-2007, 04:59 PM
அடடா...பூ....ரொம்ப நல்லா கதையைக் கொண்டுபோற. அந்த கோவிலுக்குள் இருந்தது ஆழ மரமில்ல 'ஆல' மரம்.
அப்புறம்..பாம்பு கனவுல வந்து கடிச்சா நல்லதுன்னு சொல்வாங்க...நீ என்னடான்னா அதுக்குள்ள கலாவை எழுப்பிட்டியே....
ஷீ-நிசி சொன்ன மாதிரி நானும் இரண்டுமுறை அனாதை இல்லத்துக்குப் போய் உணவு பரிமாறியிருக்கேன். மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கும்.
காட்சிகளை விவரிப்பதில் நல்ல தேர்ச்சி வந்துவிட்டது.வாழ்த்துகள்.
அன்பு சிவா அண்ணா,
எனக்கும் அதே போல் அனுபவம் இருக்கு.... ரொம்ப அழகான நினைவு.. அடிக்கடி செய்யனும் இதை..!!
விரிவாக சுவையான பதிவுகளில் தருகிறேன் விரைவில்.
உங்க பாராட்டு எனக்கு இன்னும் ஊக்கம் தருகிறது அண்ணா.

இருந்தாலும் யவனிகாவுக்கு இந்த லொள்ள்ளு ஆகாது.அரசி பிருத்வியான்னு கேக்கறாங்க பாரு....சத்தம் போடாத பிருத்விதானே...?
ஆமா கரக்டா புரிஞ்சிட்டீங்க...சிவா அண்ணா. நான் சொன்னது சத்தம் போடாதே ஹீரோ பிருத்விராஜ் தான்..!! :cool:
யவனி அக்காவுக்கு கோவை குசும்பு ரொம்ப ஜாஸ்தி தான்...
தனிமடலில் அவங்கள கவனிச்சிக்கிறேன்...!! :rolleyes:
ஹி ஹி...!! :lachen001:

பூமகள்
17-10-2007, 05:41 PM
முதல் பாகத்தின் இறுதியில் அது கனவு என்று ஊகித்தேன்.இதில் முதியோர் இல்லம் என்று குறிப்பிடும் போதே நினைத்தேன்..இங்கு கலாவுக்கு தெரிந்த யாராவது இருப்பாங்க வில்லங்கம் தான் என்று...
பூமகளின் எழுத்தாற்றல் பாராட்டத்தக்கது.தொடருங்கள்.வாழ்த்துக்கள்
நன்றிகள் பூந்தோட்டம்.
காத்திருங்கள்.. அடுத்த பாகத்தில் விடை கிடைக்கலாம். :icon_rollout:

பூமகள்
17-10-2007, 05:52 PM
ஏம்மா பூ...
வாத்தியார் பாம்பு பற்றி விளக்கம் தந்ததும், பிளான மாத்திட்டீங்களா...
அல்லது, பிளான் பண்ணித்தான் தொடருறீங்களா..?
கனவென்றால் பாம்பு துரத்தவும் செய்யும், டூயட்டும் பாடும்... சாமர்த்தியமா எழுதி தப்பிச்சுட்டீங்க...

இல்ல அண்ணா... நான் யோசித்த படிதான் எழுதியிருக்கேன். பிளான மாத்துல... வாத்தியார் சொன்னதுக்காக பாம்ப பாதி வழியில திரும்பி போகச் சொல்ல முடியுமா?? சொல்லுங்க.... அது பாட்டுக்கு துரத்திட்டுதான் வரும்... ஹி ஹி..!! :icon_rollout:

கதை நன்றாக நகருகின்றது... எதிர்பார்ப்புக்களைத் தரும் பகுதியில் "தொடரும்" போடுவது, தொடர்கதைகளின் சிறப்பம்சம்.
நன்றாகவே கையாளுகின்றீர்கள்...
பாராட்டுக்கள்...
ஆடிப்பாடி, சந்தோஷிக்கும் கணங்களில், அநாதரவானவர்களுக்கு, சிறு மதிப்பளித்து, ஆசி பெறுவது, மிகவும் பெறுமதி மிக்க செய்லாகும்.
இயலுமானவரையில், வாழ்வில் கைக்கொள்ள முயற்சிப்பேன்.
இதுபோல, நல்ல செய்திகள், உங்கள் எழுத்துக்களில் தொடரட்டும்...
என் முதல் கதை சிறுகதை.. அடுத்த கதையே தைரியமா தொடர்கதையாக்கி எழுதிட்டேனு உள்ள சின்ன பயம் இருந்தது. தொடர்கதை பத்தின எந்த விசய ஞானமும் இல்லை என்னிடம். ஆனா... ஓரளவு உங்கள மகிழ்விச்சிருக்கு என் கதைன்னு மட்டும் எடுத்துக்கிட்டு சின்னதா சந்தோசப்படறேன்.
ரொம்ப நன்றிகள் அண்ணா.

பூமகள்
17-10-2007, 05:55 PM
முதல் பாகத்தை சஸ்பென்ஸா நிறுத்தி அப்புறம் ரொமண்டிக்கா கொண்டு போய் மிண்டும் தொடரா. கலக்கிறிங்க. முதல் கதைக்கும் இதுக்கும் காட்சி விவரிப்பில் கவனம் செலுத்தியது தெரிகிறது. வாழ்த்துக்கள் பூமகள்
என் எழுத்து முயற்சி வளருதுன்னு சொல்றீங்க.. கேட்க மகிழ்ச்சியாவும் இருக்கு.. ஒரு பக்கம் பயமாவும் இருக்கு....அடுத்தடுத்து இதைவிட நல்ல படைப்பு கொடுக்கனும்னு பொறுப்பு கூடுது.
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் நேசம்.

அக்னி
17-10-2007, 05:56 PM
ஓரளவு உங்கள மகிழ்விச்சிருக்கு என் கதைன்னு மட்டும் எடுத்துக்கிட்டு சின்னதா சந்தோசப்படறேன்.
ரொம்ப சந்தோசம் அண்ணா.
ஏன் இந்த முரண்பாடு..
பெரிதாகவே சந்தோஷப்படுங்கள்...
அப்போதுதான் புத்துணர்ச்சியோடு எழுதுவீர்கள்...

பூமகள்
17-10-2007, 06:02 PM
ஆஹா...சைக்கிள் கேப்பில மிஸ்டேக் கண்டுபிடிச்சி ஆஃப் பண்றீங்களே அக்னி அண்ணா....????
'ரொம்ப நன்றிகள்' அப்படிங்கறத வாய் தவறி இல்ல....இல்லா... கை தவறி 'ரொம்ப சந்தோசம்' அப்படின்னு எழுதிட்டேன்...
இதுக்கு ஒரு பஞ்சாயத்தா....?? ஹி ஹி..!!

நீங்க சொன்ன மாதிரி பெரிதாவே சந்தோசப்படறேன் அண்ணா.
போதுமா??:D:D:D:D
ஹி ஹி...!!

மலர்
17-10-2007, 07:01 PM
யக்கோவ் வரவர
கதையை சஸ்பென்சாவே கொண்டு போறியே...

நல்லா கதை எழுத ஆரம்பிட்டிட்ட...
ரொமான்ஸ்+சஸ்பென்ஸ்ன்னு வேற சும்மா கலக்குற.....
அதுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

ஆமா கலா பாத்து ஷாக்கானது யாரை..........???
எனக்கு மட்டும் தனியா சொல்லுவியாம் சரியா..

பூமகள்
17-10-2007, 07:07 PM
மலரு...
உனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சி போச்சா?? எனக்கு மெடல் வாங்கின மாதிரி சந்தோசமா இருக்குமா தங்கச்சி...!!

ஆமா கலா பாத்து ஷாக்கானது யாரை..........???
அது எனக்கே தெரியாதே...!! ;)
நீ தான் சொல்லேன் யாரா இருக்கும்??? :D:D:D

ஓவியன்
18-10-2007, 06:44 AM
அடடா கனவிலே தான் இராம நாராயணன் கதையை இயக்கினாரே சரி, சரி நான் தான் நிரம்பவே குழம்பிப் போயிட்டேன்.

பின்னாலும் துரத்திய கட்டுவிரியன் கிட்ட நெருங்க....
உங்களுக்கு ஒன்று தெரியுமா பூமகள்...?
எனது ஊரிலே பாம்புகள் மிக அதிகம், ஈழத்தில் எனது வீட்டின் மிக அருகிலே "பாம்புக் கமம்" என்றொரு கமம் (காணி, வயல் என்பதை கமம் என்றும் சொல்லுவோம்) இருக்கிறது. அதனால் பாம்புகளை அதிகமாக சந்தித்துள்ளேன், அந்த அனுபவத்திலே கூறுகிறேன். இந்த "Viper" என்ற "விரியன்"(ஈழத்திலே விரியன் என்று நாம் கூறுவதில்லை "புடையன் பாம்பு" என்றுதான் கூறுவோம்) வகைப் பாம்புகள் நாகப் பாம்புகள் போன்று வேகமானவையல்ல, மிக சோம்பேறித்தனமானவை, நாகப் பாம்புகள் போல் பாயமாட்டாதவை, துரத்த மாட்டாதவை. ஒருவரது காலிலே விரியன் கடித்திருந்தால் அந்த காயம் காலின் அடிப்பகுதியிலேயே எப்போதும் காணப்படும், ஏனென்றால் விரியங்கள் தான் பாய்ந்து கடிக்காதே..., அத்துடன் காயம் மிக மோசமாக நாய் கடித்தது போன்று காணப்படுவது வழமை. நாகம் தீண்டினால் இரண்டு பற் தடங்களே காணப்படும். ஆனால் விரியன் தீண்டினால் பெரிய காயம் ஏற்படுவது வழமை, விரியன் தீண்டி பெரிய காயம் ஏற்படா விட்டால் அவருக்கு விரியனின் விஷம் ஏறும் வாய்ப்பு மிகக் குறைவு. ஏனென்றால் விரியன் பாம்புகள் கடித்து விட்டு ஒரு தடவை தன் தலையை புரட்டினால் மட்டுமே விஷம் கடித்தவரிடம் ஏறுமாம். அப்படி தலையை விரியன் பாம்புகள் புரட்டும் போது தான் கடித்த இடத்தில் உள்ள சதைகளெல்லாம் பிய்ந்து கிட்டத்தட்ட நாய் கடித்தது போலாகிவிடும். இந்த சோம்பேறி புடையன் பாம்புகள் அல்லது விரியன் பாம்புகளின் விஷமும் மிக மெதுவாகவே உடலில் பாயும் (நாகப் பாம்பின் விஷம் மிக வேகமாக பரவும்), அது போலவே மிக மெதுவாகவே விஷமும் இறங்கும். நாகப் பாம்பு கடித்து ஒருவர் ஒரு நாள் உயிருடனிருந்தால் அவர் உயிர் தப்பி விட்டாரெனக் கொள்ளலாம். ஆனால் விரியன் பாம்பு கடித்து 40 நாட்களின் பின்னர் உயிர் துறந்தவரைக் கூட நான் பார்த்துள்ளேன். ஏனென்றால் விரியன் பாம்பின் விஷம் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தவல்லது.

இதோ உங்களுக்காக ஒரு "வைபர்", இதனைப் போன்ற விரியனை ஈழத்தில் நாம் "முத்திரைப் புடையன்" என்று சொல்லுவோம்.

http://www.engin.umich.edu/~cre/web_mod/viper/pics/Viper1.jpg

சரி பூமகள் கதையில் தொடங்கி விரியன் பாம்பில் இறங்கிவிட்டேன், கதையின் போக்கு எனக்கு புரியத் தொடங்கிவிட்டதென நம்புகிறேன்..

முதியோர் இல்லங்களே இருக்க கூடாதென்ற கொள்கை உடையவன் நான், பிள்ளைகள் ஒழுங்காக பார்க்கததாலே தானே முதியோர் இல்லங்கள் உருவாகின்றன. முதியோர் இல்லங்களே இல்லாமல் போக, பிள்ளைகள் தம் பெற்றோரை தாங்கும் நிலை எங்கும் வர வேண்டும்.

ஆவலுடன் உங்கள் கதையின் அடுத்த பாகத்தை எதிர் நோக்கியிருக்கின்றேன்...

lolluvathiyar
18-10-2007, 07:03 AM
வெற்றிகரமாக இரண்டாம் பாகத்தை ரசிக்கும் படி கொடுத்திருகிறாய் பூமகள். வாழ்த்துகள். மனதில் கான்செப்டை முடிவு செய்து விட்டீர்கள், அதை கதை வடிவில் மெல்ல வந்து கொண்டு இருகிறது. கனவன் மனைவி சீன்கள் கொஞம் அனுபவமுள்ளவர்கள் எழுதியது போலவே இருக்கு.
கனவில் பாம்பு துரத்துவது நல்ல சகுனம் என்பார்கள்.

[B][CENTER]
மருதமலையின் அழகிய வனப்பில் முருகனின் அருளை விசேச வழியில் சென்று தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு அங்குள்ள திட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டனர் கலாவும் காமேஷும்.

மலரும் நினைவுகளை கிண்டி விட்டாய் பூமகள், நானும் என் மனைவியும், எங்கள் திருமன நாளில் மருத மலை தான் போவோம் (திருமனத்திற்க்கும் முன்பிருந்தே)

வாழ்த்துகள்

சிவா.ஜி
18-10-2007, 07:31 AM
அடடா...ஓவியனின் விரியனைப் பற்றிய தகவல் அருமை. இனி விரியணைக்கண்டால் வெலவெலத்து ஓடவேண்டாம்.
சென்னையிலுள்ள பாம்புப் பண்ணைக்கு போய் வந்ததிலிருந்து எனக்கு பாம்பைப் பற்றிய பயம் போய்விட்டது.ஏனென்றால் பாம்பைபற்றிய பல கதைகள் கட்டுக்கதைகள்தான்.கொம்பேறிமூக்கன் என்ற வகைப் பாம்பைப்பற்றி ஒரு கதை விடுவார்கள்..அவைக் கடித்தால் மோட்சம் நிச்சயமாம்...அவைக் கடித்துவிட்டு சுடுகாட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஏதோ ஒரு மரத்தின் மீது ஏறி தான் கடித்தவனின் பிணம் வருகிறதா என்று பார்ப்பதற்காகவாம். என்னா ரீலு...அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பதை அங்கு மிக அருமையாக விளக்கினார்கள்.
சின்ன வயதில் தண்ணிப்பாம்பைப் பிடித்து அதன் தலையில் கயிறுகட்டி அது ஓடும்போது நாங்களும் கூடவே ஓடியிருக்கிறோம்.

தென்னவன்
18-10-2007, 07:40 AM
பூமகளே.. கதையை அருமையாக நகர்த்துகிறீர்... பாராட்டுகள்...
கதை எதிர்பார்த்த மாதிரியே செல்கிறது..
பார்க்கலாம் வித்தியாசமாக ஏதாவது வருகிறதா என்று..!!!:eek::eek:

ஓவியன்
18-10-2007, 09:22 AM
கொம்பேறிமூக்கன் என்ற வகைப் பாம்பைப்பற்றி ஒரு கதை விடுவார்கள்..அவைக் கடித்தால் மோட்சம் நிச்சயமாம்...அவைக் கடித்துவிட்டு சுடுகாட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஏதோ ஒரு மரத்தின் மீது ஏறி தான் கடித்தவனின் பிணம் வருகிறதா என்று பார்ப்பதற்காகவாம். என்னா ரீலு...

"கொம்பேறி மூக்கன்" என்று ஒரு பாம்பைக் கூறுவதுண்டு. இது உண்மையிலே ஒரு தனிப்பட்ட வகைப் பாம்பு இனமல்ல, நாகப் பாம்பும் சாரைப் பாம்பும் அபூர்வமாக இனக் கலப்பிலே ஈடுபட்டால் பிறக்கும் பாம்பினை "கொம்பேறி மூக்கன்" என்று சொல்வார்கள். இந்த பாம்பில் சாரை பாம்பின் இயல்புகளும் நாக பாம்பின் இயல்புகளும் சேர்ந்தே இருக்கும். உண்மையில் இது கோவேறு கழுதையைப் போன்ற ஒரு உயிரினம். ஆனால் இது கடித்துவிட்டு மரமேறுவதென்பதெல்லாம் சும்மா ரீலுதான்....:)

அக்னி
18-10-2007, 11:14 AM
ஓவியன்... இப்படிப் பாம்பைக் காட்டி வெருட்டுகின்றீரே...
அதுதான் இந்தப் பக்கம் பூமகளைக் காணவில்லை போலிருக்கு...
தகவல் அருமை... நன்றி...

முத்திரைப் புடையன் போஸ்ட் ஆபிசில் கிடைக்குமா...:confused: :aetsch013: :smilie_abcfra:

ஓவியன்
18-10-2007, 11:31 AM
முத்திரைப் புடையன் போஸ்ட் ஆபிசில் கிடைக்குமா...:confused: :aetsch013: :smilie_abcfra:
முத்திரையில் புடையன் பாம்பின் படத்தை வெளியிட்டால் போஸ்ட் ஆபிசிலும் முத்திரைப் 'புடையன்" கிடைக்கும்...! :icon_wink1:

அக்னி
18-10-2007, 11:50 AM
முத்திரையில் புடையன் பாம்பின் படத்தை வெளியிட்டால் போஸ்ட் ஆபிசிலும் முத்திரைப் 'புடையன்" கிடைக்கும்...! :icon_wink1:
அட... இது எனக்குத் தெரியாம போச்சே... ரொம்ப நன்றி சாரே...:sauer028:

பூமகள்
18-10-2007, 03:47 PM
சரி பூமகள் கதையில் தொடங்கி விரியன் பாம்பில் இறங்கிவிட்டேன், கதையின் போக்கு எனக்கு புரியத் தொடங்கிவிட்டதென நம்புகிறேன்..

முதியோர் இல்லங்களே இருக்க கூடாதென்ற கொள்கை உடையவன் நான், பிள்ளைகள் ஒழுங்காக பார்க்கததாலே தானே முதியோர் இல்லங்கள் உருவாகின்றன. முதியோர் இல்லங்களே இல்லாமல் போக, பிள்ளைகள் தம் பெற்றோரை தாங்கும் நிலை எங்கும் வர வேண்டும்.

ஆவலுடன் உங்கள் கதையின் அடுத்த பாகத்தை எதிர் நோக்கியிருக்கின்றேன்...[/FONT][/COLOR]
ஓவியர் அண்ணா,
இப்படி பாம்பு காட்டி முதன்முதலில் வந்து கதை எழுத வந்த என்னை பயமுறுத்திவிட்டுட்டீங்களே???? :icon_ush::icon_ush::icon_ush:
எத்தனை நாளா திட்டம் போட்டிட்டு இருந்தீங்க??? என்னை பயமுறுத்த??? :sprachlos020: :eek: :rolleyes:
ஆனா.. ஒன்னு மட்டும் புரிஞ்சுது..என் கதையால பாம்பு பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டோம்....!!
உங்க பாம்பு பற்றிய பகிர்தல் அருமை ஓவியன் அண்ணா.
தனித்திரியில் இன்னும் நிறைய கொடுங்க... ஹிஹி..!! :lachen001:(அப்ப தான் எல்லாத்தையும் பயமுறுத்த முடியும் அடுத்த கதையில்...டெக்னிகல் பாள்ட் இல்லாம...!! ஹிஹி..!!:D:D:D)
உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோசம்..!! நன்றிகள் ஓவியன் அண்ணா.

பூமகள்
18-10-2007, 04:15 PM
வெற்றிகரமாக இரண்டாம் பாகத்தை ரசிக்கும் படி கொடுத்திருகிறாய் பூமகள். வாழ்த்துகள்.மனதில் கான்செப்டை முடிவு செய்து விட்டீர்கள், அதை கதை வடிவில் மெல்ல வந்து கொண்டு இருகிறது.
ரொம்ப நன்றிகள் வாத்தியார் அண்ணா. உங்களின் கையால் பாராட்டு கிடைப்பது நூற்றுக்கு நூறு வாங்கிய மாணவி போல் சந்தோசம் அடைகிறேன். :D

கனவன் மனைவி சீன்கள் கொஞம் அனுபவமுள்ளவர்கள் எழுதியது போலவே இருக்கு.
அண்ணா, அப்படியென்றால் எனது கற்பனை மிக எதார்த்தமாக உள்ளது என்று சொல்கிறீர்கள். அப்போ, உங்க பரிச்சையில் நான் தேர்ச்சி அடைந்துவிட்டேன்..!! :icon_b: :icon_rollout:

மலரும் நினைவுகளை கிண்டி விட்டாய் பூமகள், நானும் என் மனைவியும், எங்கள் திருமன நாளில் மருத மலை தான் போவோம் (திருமனத்திற்க்கும் முன்பிருந்தே)
ஓகோ... அப்படியா செய்தி?? அண்ணி ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் தான்..!! என் கற்பனையை அன்றே நிஜமாக்கி காட்டியிருக்கிறீர்கள்...!!
சந்தோசமா இருக்கு அண்ணா..!! :D:D

பூமகள்
18-10-2007, 04:33 PM
பூமகளே.. கதையை அருமையாக நகர்த்துகிறீர்... பாராட்டுகள்...
கதை எதிர்பார்த்த மாதிரியே செல்கிறது..
பார்க்கலாம் வித்தியாசமாக ஏதாவது வருகிறதா என்று..!!!:eek::eek:
நன்றிகள் தென்னவன்..!
அப்படியா?? சரி.. உங்களின் எதிர்பார்ப்பைச் சொல்லுங்கள்.. நான் வித்தியாசமா கொடுக்கிறேன்..!! :icon_ush::icon_ush:

(அப்படியாவது அடுத்த பாகத்துக்கு ஐடியா கிடைக்குதான்னு பார்ப்போம்...ஹி ஹி..!! :D:D:D:D)

அறிஞர்
18-10-2007, 07:25 PM
பல படங்கள்.. கதைகள் படித்ததின் விளைவு.. கதையில் அருமையாக தெரிகிறது...

நம்மூர் வார பத்திரிக்கை பாணியில்.. முடித்தல்.. சிறப்பாக இருக்கிறது...

புதிய எழுத்தாளரின்.. படைப்புக்கள்.. இன்னும் சிறப்பாக தொடரட்டும்.

தொடருங்கள்.. அடுத்த பாகத்தை..

பென்ஸ்
19-10-2007, 09:09 AM
பருவநட்சத்திரங்கள்...!! அழகான தலைப்பு.... ஆனால் இதுவரை தலைப்பை கதையில் பொருத்த முடியவில்லை.... பூ...

அழகாக எழுத வருது.... ஆனால் இன்னும் "சூப்பர்" என்று சொல்லும் அளவுக்கு எழுத்து நயம் இல்லை... ஒரு துவக்க நிலை எழுத்தாளரிடம் இந்த அளவு நான் எதிர்பார்ப்பது தவறுஇதான்... இருப்பினும் நீங்கள் எழுதிய கதையை நீங்களே பதிக்கும் மும் ஒருமுறை படித்து இருந்தால் கதையின் நடையில் பல மாற்றங்கள் இருந்திருக்கும்...

இங்கு உண்மை சம்பவங்கள் அழகாய் எழுதுவதில் "பாரதி"
கதையை ஊர் பேச்சு வாக்கு, புதிய கருத்து கொடுப்பதில் "ராகவன்"
உவமைகள் கொட்டுவதில் "மயூ"
மடியில் உக்கார வைத்து கதை சொல்லுவது போல் "பரம்ஸ்"
இவர்கள் எழுதியதை பாருங்கள்... உங்களுக்கு அது துனையாய் இருக்கும்....

முதல் பாகத்தின் முடிவில் பாம்பு விரட்டும் முடிவு சுவரிசியமாக இல்லை... எல்லோராலும் கணிக்க குடிய முடிவு.. ஆனால் பாகம் 2 ஒரு ஆர்வத்தை தூண்டும் முடிவை கொடுத்து "தொடரும் " என்று முடிந்து இருக்கிறது....

நான் படிக்க துவங்கி முடிக்காமல் போன விசயங்களில் "டிரீம் இன்டர்பிரிட்டேசன்" ஒன்று... படிக்க படிக்க புது விசயங்கள்.. பாம்பு கனவில் வருவது உங்கள் ஒருவரது நிலை, கனவின் ஆளம் இதை எல்லாம் பொறுத்து ஆராயலாம்.... மீண்டும் மீண்டும் வரும் கனவுகளை உள்ளாக ஆராய "லூசிட் கனவு" முறை பயன் படுத்தலாம்....

தொப்டருங்கள்...

பூமகள்
19-10-2007, 07:27 PM
மிக நீண்ட நேர்த்தியான விமர்சனத்துக்கு நன்றிகள் பென்ஸ் அண்ணா.

உங்களின் அறிவுரைகள் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும்.
நான் வாசகியாய் இருந்து வாசித்துப் பார்த்து திருத்தி தான் பதிகிறேன். ஆனாலும் கதை பற்றிய அனுபவம் மிகக் குறைவு என்பதால் என்னால் தாங்கள் சொன்ன விடயங்களைத் தவிர்க்க இயலாது போய்விட்டது.
இனி வரும் கதைகளில் அதனை தவிர்க்கப்பார்க்கிறேன்.

பூமகள்
19-10-2007, 07:30 PM
புதிய எழுத்தாளரின்.. படைப்புக்கள்.. இன்னும் சிறப்பாக தொடரட்டும்.
தொடருங்கள்.. அடுத்த பாகத்தை..
மிகுந்த நன்றிகள் அறிஞர் அண்ணா. :icon_rollout:

ஓவியன்
20-10-2007, 02:53 AM
இங்கு உண்மை சம்பவங்கள் அழகாய் எழுதுவதில் "பாரதி"
கதையை ஊர் பேச்சு வாக்கு, புதிய கருத்து கொடுப்பதில் "ராகவன்"
உவமைகள் கொட்டுவதில் "மயூ"
மடியில் உக்கார வைத்து கதை சொல்லுவது போல் "பரம்ஸ்"
இவர்கள் எழுதியதை பாருங்கள்... உங்களுக்கு அது துனையாய் இருக்கும்....

உண்மைதான் அண்ணா!!

இதுவரை கதைப் பகுதியில் முழுமையாக காலூன்றாய்த எனக்கும் துணை புரியும் அறிவுரை.

மிக்க நன்றிகள்!. :)

மனோஜ்
31-10-2007, 05:08 PM
முதல் பகுதி நடைமுறையாக மெதுவாக சொல்கிறது பூ.....மா
அடுத்த பகுதி பார்போம்

பூமகள்
31-10-2007, 05:32 PM
முதல் பகுதி நடைமுறையாக மெதுவாக சொல்கிறது பூ.....மா
அடுத்த பகுதி பார்போம்
உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றிகள் மனோஜ் அண்ணா..!!
இந்த பதிவு பருவநட்சத்திரங்கள் - பாகம் 2.

முந்தைய பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12812) படித்தீர்களா??

விரைவில் மூன்றாம் பாகம் தர முயல்கிறேன்.

அமரன்
01-11-2007, 05:39 PM
முதல்பாகத்தில் செல்லச்சிணுங்கல்களுடன் கதை நகர்ந்தது. பாம்புப் பாத்திரம் கனவு என்று ஊகிக்க முடிந்தது. இப்படித்தான் பாம்பின் முடிவு இருக்கும் என மனதில் வரித்துக்கொண்டவர்களுக்கு, அவர்களின் வரிப்பு அழிக்கப்படுபோது திடீர் திருப்பமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடரும் கதை நகர்வுதான் பாம்பு தொடர்பான காட்சிகள் திணிப்பு இல்லை என்பதை சொல்லப்போகின்றன. அதற்கு தொடர்ந்த பின்னூட்டப்பதிவுகள் கதாசிரியருக்கு உதவலாம். அல்லது காதாசிரியர் ஏதாவது யோசித்து வைத்திருப்பார். மற்றப்படி இப்பாகத்தில் கதைநடை தொய்வில்லை. நவரசங்களில் சிலகொண்டு சுவையாகவே உள்ளது. தொடருங்கள்.

பூமகள்
01-11-2007, 06:35 PM

நன்றிகள் அமரன் அண்ணா.
உங்களின் கூற்றிலிருந்து கனவு தொடர்பான நிகழ்வுகள் எதிர்வரும் கதையோட்டத்தில் பிரதிபளிக்க வேண்டும் என்பது புரிகிறது. என் எண்ணவோட்டத்துக்கு தக்கபடி எழுதுகிறேன் அமரன் அண்ணா. தொடர்கதையில் எனது முதல் முயற்சி என்பதால் தடுமாற்றங்கள் ஏற்படலாம். பொறுத்தருள்க அண்ணா.

ஆதவா
14-11-2007, 04:30 AM
முந்தைய பதிவிலேயே கதை மெதுவாக பயணித்து வேகமாக சென்றது.. இந்தப் பதிவில் வேகத் தடைகள் உள்ளன.... வசனநடையாக.

வர்ணிப்புகள் சரியே! அதை வேகமாக கதை செல்வதைப் போல வர்ணித்து விட்டீர்களோ என்ற ஐயம்.. மற்றபடி கதை ஒரு நல்ல பாதையை நோக்கிச் செல்வதாகவே நான் உணருகிறேன். சில வசனநடைகள் ஏறி இறங்கியதைப் போல, யதார்த்தப் பேச்சுக்களா இல்லை எழுத்தாளப் பேச்சுக்களா என்று அறியாமல் இருக்கின்றன. சற்றே கவனிக்கவும்.
கனவை சொன்ன விதத்தில் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். தொடரும்" போட்டு நிறுத்தி விட்டபடியால், கதையின் போக்கு அப்படித்தான் செல்கிறது போல என்று எண்ணியே இந்த பாகமும் படிக்கவேண்டியிருக்கிறது.

மீதி அடுத்த பாகம் சந்திக்கும் போது,...

தொடர்கதை எழுதவும் திறமை வேண்டும்.. அது நன்றாக வாய்த்திருக்கிறது உங்களுக்கு.... வாழ்த்துகள்

யவனிகா
14-11-2007, 04:57 AM
நானும் மூன்றாவது பாகம் வரும் வரும்னு காத்திருக்கிறேன். பூவு இந்த யோசி யோசிக்கறதப் பாத்தா அமோகமா வரும் போல இருக்குதே!

ஜெயாஸ்தா
16-11-2007, 01:18 PM
என்னாச்சு இரண்டாம் எழுதி ரொம்ப நாளாச்சு.... மூன்றாம் பாகத்தை தரப்போகிறீர்களா? இல்லை ஆட்டோவில் வீட்டுக்கு ஆள் அனுப்பவா?:icon_b:

அமரன்
16-11-2007, 01:19 PM
என்னாச்சு இரண்டாம் எழுதி ரொம்ப நாளாச்சு.... மூன்றாம் பாகத்தை தரப்போகிறீர்களா? இல்லை ஆட்டோவில் வீட்டுக்கு ஆள் அனுப்பவா?:icon_b:
ஆளோடு பொருளும் அனுப்புங்க ஜெயாஸ்தா..

பூமகள்
16-11-2007, 01:39 PM
நானும் மூன்றாவது பாகம் வரும் வரும்னு காத்திருக்கிறேன். பூவு இந்த யோசி யோசிக்கறதப் பாத்தா அமோகமா வரும் போல இருக்குதே!
யவனி அக்கா...!
மன்னித்தருள்க..! இன்னும் எழுதவில்லை..! அடிக்க வந்துடாதீங்க..!
வித்தியாசமா யோசிக்கனும்னு யோசிச்சி யோசிச்சி பார்க்கிறேன்... கடைசியில் உங்களுக்கு வித்தியாசமே இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்கு..!
விரைவில் அடுத்த வார இறுதிக்குள் தந்துவிடுகிறேன் அக்கா..!

என்னாச்சு இரண்டாம் எழுதி ரொம்ப நாளாச்சு.... மூன்றாம் பாகத்தை தரப்போகிறீர்களா? இல்லை ஆட்டோவில் வீட்டுக்கு ஆள் அனுப்பவா?:icon_b:
ஜெயாஸ்தா அன்பரே..! நீங்க எப்ப ஆட்டோ தாதா ஆனீங்க?? :sprachlos020::eek:
சொல்லவேயில்ல......! :icon_ush::icon_ush:
கொஞ்சம் சொந்த காரணங்களுக்காக பிசியா இருக்கேன்... சீக்கிரம் தந்துடறேன்...! :icon_rollout:
உங்க எல்லாருடைய ஆர்வத்தைப் பார்த்தா சந்தோசமாவும் இருக்கு... பயமாவும் இருக்கு..! :confused:
கடவுளே காப்பாத்துபா...! :icon_ush::icon_ush:

ஆளோடு பொருளும் அனுப்புங்க ஜெயாஸ்தா..
பதில் 1: எதுக்கு...!:D:D பச்ச சட்டை காரங்க கொள்ளை அடிக்கவா அண்ணா?? :lachen001::lachen001:
பதில் 2: பொருள்னா.. நீங்க சொல்ல வருவது அருவா... உருட்டு கட்டை, சங்கிலி... இப்படியான ஆயுதங்களையா?? :eek::sprachlos020: :fragend005:
பூவை அடிக்க இப்படி தூண்டி விடுறீங்களே அமரன் அண்ணா? இது நியாயமா? :frown: :sauer028:

நேசம்
16-11-2007, 01:40 PM
ஆளோடு பொருளும் அனுப்புங்க ஜெயாஸ்தா..
ஆட்டோவில் ஆள அனுப்பும்போது பொருளோடு தான் போவங்கா!

பூமகள்
16-11-2007, 01:42 PM
ஆட்டோவில் ஆள அனுப்பும்போது பொருளோடு தான் போவங்கா!
நேசம் அண்ணா... யூ டூ...........................??? :frown::frown:
நேசம்னு பேரு வச்சிட்டு..... இப்படி கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம துவேசம் செய்யறீங்களே.... இது நியாயமா அண்ணா? :sauer028::sauer028:

நேசம்
16-11-2007, 01:48 PM
நேசம்னு பேரு வச்சிட்டு..... இப்படி கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம துவேசம் செய்யறீங்களே.... இது நியாயமா அண்ணா? :sauer028::sauer028:

அண்ணனை பார்த்து இப்படியெல்லாம் சொல்ல கூடாது.:icon_nono:
பாகம் 3 சிக்கிரத்தில் இல்லன்னா ஜே.எம் க்கு ரூட் போட்டு கொடுக்க வேண்டியதுதான்

ஜெயாஸ்தா
17-11-2007, 02:45 AM
ஜெயாஸ்தா அன்பரே..! நீங்க எப்ப ஆட்டோ தாதா ஆனீங்க?? :sprachlos020::eek:
சொல்லவேயில்ல......! :icon_ush::icon_ush:
கொஞ்சம் சொந்த காரணங்களுக்காக பிசியா இருக்கேன்... சீக்கிரம் தந்துடறேன்...! :icon_rollout:
உங்க எல்லாருடைய ஆர்வத்தைப் பார்த்தா சந்தோசமாவும் இருக்கு... பயமாவும் இருக்கு..! :confused:
கடவுளே காப்பாத்துபா...! :icon_ush::icon_ush:

என்ன பூமகள்.... நீங்க பெரிய தீவிரவாதியா இருப்பீங்க போலிருக்கே.... :lachen001: :lachen001: :lachen001: நான் ஆட்டோவில் ஆள் அனுப்புவேன் என்று சொன்னது உங்களுக்கு கதை எழுத உதவியாக இருப்பதற்காக....! அமரன் ஆளுடன் பொருளும் சேர்த்து அனுப்ப சொன்னது..... போனா...பென்சில்....பேப்பர்.....மற்றும் சுட்டெலி (மௌஸ்), விசைப்பலகை (கீபோர்டு) ஆகியவற்றைதான் கொடுத்து அனுப்பச்சொன்னார்.....அப்புறம் நம்ம நேசம் ''ரூட்'' போட்டுத் தருகிறேன் என்று சொன்னது..... இதையெல்லாம் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க தாமதமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான்...... :icon_b:

நேசம்
17-11-2007, 02:51 AM
அப்புறம் நம்ம நேசம் ''ரூட்'' போட்டுத் தருகிறேன் என்று சொன்னது..... இதையெல்லாம் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க தாமதமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான்...... :icon_b:

இதை புரியாம சின்னபுள்ள துவேசம் அது இதுன்னு!:traurig001:

பூமகள்
17-11-2007, 06:43 AM
என்ன பூமகள்.... நீங்க பெரிய தீவிரவாதியா இருப்பீங்க போலிருக்கே.... :lachen001: :lachen001: :lachen001: நான் ஆட்டோவில் ஆள் அனுப்புவேன் என்று சொன்னது உங்களுக்கு கதை எழுத உதவியாக இருப்பதற்காக....! அமரன் ஆளுடன் பொருளும் சேர்த்து அனுப்ப சொன்னது..... போனா...பென்சில்....பேப்பர்.....மற்றும் சுட்டெலி (மௌஸ்), விசைப்பலகை (கீபோர்டு) ஆகியவற்றைதான் கொடுத்து அனுப்பச்சொன்னார்.....அப்புறம் நம்ம நேசம் ''ரூட்'' போட்டுத் தருகிறேன் என்று சொன்னது..... இதையெல்லாம் உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க தாமதமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான்...... :icon_b:
ஓ................................! :sprachlos020: இது தானுங்களா சங்கதி..........!! :rolleyes::cool::D:D:D
ரொம்பவே சந்தோசமுங்க........! :grin:
அப்படின்னா...:icon_hmm::huepfen024: எனக்கு ஒரு மடிக்கணினி பார்சல் அனுப்புங்கண்ணோவ்.............!! :sport-smiley-018:

உங்களுக்கு அழகழகா கதை எழுதி பதிக்கிறேன்...........!! :icon_03::smartass::innocent0002:

பூமகள்
17-11-2007, 06:46 AM
இதை புரியாம சின்னபுள்ள துவேசம் அது இதுன்னு!:traurig001:
நேசம் அண்ணா...:food-smiley-011::icon_give_rose: குச்சி மிட்டாயும் கம்பர்கட்டும் வாங்கித்தாரேன்..! :sport-smiley-018:
சின்னப்பிள்ளையாட்டம் அழப்படாது....!! :icon_rollout:
இங்கே சிரிங்க.........! :icon_35:

ஜெயாஸ்தா
17-11-2007, 07:20 AM
ஓ................................! :sprachlos020: இது தானுங்களா சங்கதி..........!! :rolleyes::cool::D:D:D
ரொம்பவே சந்தோசமுங்க........! :grin:
அப்படின்னா...:icon_hmm::huepfen024: எனக்கு ஒரு மடிக்கணினி பார்சல் அனுப்புங்கண்ணோவ்.............!! :sport-smiley-018:

உங்களுக்கு அழகழகா கதை எழுதி பதிக்கிறேன்...........!! :icon_03::smartass::innocent0002:
என்னா...................து மடிக்கணிணியா? அது எப்படியிருக்கும்.....? சதுராமா.... பெரிசா...டிவி பெட்டி மாதிரியிருக்குமா?

அமரன் ஆளுடன் பொருளும் சேர்த்து அனுப்ப சொன்னது..... போனா...பென்சில்....பேப்பர்.....மற்றும் சுட்டெலி (மௌஸ்), விசைப்பலகை (கீபோர்டு) ஆகியவற்றைதான் கொடுத்து அனுப்பச்சொன்னார்..... :icon_b:

லிஸ்ட்டை இன்னொரு தடவை கவனமாக படிங்க...! நான் எங்க தலைவர் மாதிரி வாயைக்கொடுத்து மாட்டமாட்டேன்......

பூமகள்
17-11-2007, 07:42 AM
என்னா...................து மடிக்கணிணியா? அது எப்படியிருக்கும்.....? சதுராமா.... பெரிசா...டிவி பெட்டி மாதிரியிருக்குமா?
ஆஹா...! பச்சப்பிள்ளையாட்டமா இருக்கீங்களே...!
நம்ம அமரன் அண்ணாவே வாங்கி தரதா சொல்லியிருக்காரு...! கூடவே நேசம் அண்ணாவும் வாங்கித் தருவேன்னு அடம்பிடிக்கிறாராம்...! :lachen001::lachen001:
அவங்க கொடுத்து அனுப்புவாங்க...அப்ப உங்களுக்கு காட்டுறேன்..! :icon_b:

லிஸ்ட்டை இன்னொரு தடவை கவனமாக படிங்க...! நான் எங்க தலைவர் மாதிரி வாயைக்கொடுத்து மாட்டமாட்டேன்......
அப்போ லிஸ்டில் இருப்பதை நீங்க அனுப்புங்க.... அது போதும்....! (வரும் வரை லாபம்... ஹி ஹி..! :D:D)

நேசம்
17-11-2007, 07:52 AM
நம்ம அமரன் அண்ணாவே வாங்கி தரதா சொல்லியிருக்காரு...! கூடவே நேசம் அண்ணாவும் வாங்கித் தருவேன்னு அடம்பிடிக்கிறாராம்...! :lachen001::lachen001:
[/COLOR]

எங்க* ஊர்லே திருவிழா வ*ரும்.அப்போ வாங்கி த*ரேன்.ச*ரியா.அதுக்கு ஏன் இந்த* சிரிப்பு

பூமகள்
17-11-2007, 08:47 AM
எங்க ஊர்லே திருவிழா வரும்.அப்போ வாங்கி தரேன்.சரியா.அதுக்கு ஏன் இந்த சிரிப்பு
இனி வரும் காலங்களில் மடிக்கணினி திருவிழாவில் விற்கும் நிலை கூட வரும்.:icon_ush:
அப்போ அன்பு நேசம் அண்ணா கண்டிப்பா வாங்கித் தருவார் என்று எனக்குத் தான் தெரியுமே..! :icon_b: :icon_rollout:

யவனிகா
17-11-2007, 09:17 AM
இங்கே ஒரு கணிணி பார்த்தேன்...மஞ்ச கலர் மானிட்டர், பச்சை கலர் கீபோர்ட்...நீலக் கலர் சி.பி.யூ. ந்னு கலக்கலா இருக்கு. ஸ்டார்ட் பட்டன் ப்ரஸ் பண்ணா கலக்கலா ரைம்ஸ் சொல்லுது. என் மக*னுக்கு ஒண்ணு ஏற்கனவே வாங்கிக் குடுத்தாச்சு....விலை அதிக*மில்லை பத்து ரியால் தான் அதாவது நூறு ரூபா...வேணும்னா பார்சல் அனுப்பவா பூவு?

பூமகள்
17-11-2007, 09:26 AM

யவனி அக்காவின் பாசம் கண்டு புல்லறிச்சி போச்சு..! :icon_rollout:
உங்க பாசத்தால் கட்டிப் போட்டுட்டீங்களே..!:icon_ush::icon_ush:
தாராளமா அனுப்புங்க அக்கா...!(எதிர்காலத்துக்கு உதவியா இருக்கும்..!;))