PDA

View Full Version : எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்..?- 2இதயம்
17-10-2007, 05:16 AM
கிசுகிசு என்பது நண்பர்களை பற்றி தான் எழுத வேண்டுமா..? தோழிகளை பற்றி எழுதக்கூடாதா..? இதோ சூடான, சுவையான தற்போதைய கிசு, கிசு..! படித்து விட்டு யாராய் இருக்கும் என்று ஊகித்து பின்னூட்டமிடுங்கள் மக்களே..!!

நம் மன்றத்தில் இருக்கும் மிகவும் "மென்மை"யான இந்த தோழிக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம். கவி படைப்பதிலும் கை தேர்ந்தவராக அறியப்படுகிறார். அவர் அழகை காணும் பெரும்பாலான ஆண்கள் காதல் வயப்பட்டாலும், இவரின் அதிரடி குணம் தெரிந்து அவர் மேல் "அன்பான"வர்கள் அடக்கியே வைப்பார்கள். இப்படிப்பட்ட இந்த "இனிய" நண்பி சமீப காலமாக ஒருவர் விட்ட "மன்மத" பானத்தால் பாதிக்கப்பட்டு அவர் விரித்த காதல் வலையில் கச்சிதமாய் விழுந்து விட்டார். புதிதாக "மலர்"ந்திருக்கும் இந்த காதல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக எஸ்.எம்.எஸ் மற்றும் ஃபோன் கால்கள் மூலம் அசுரமாய் வளர்ந்து வருகிறது. இவருக்கு காதல் வலை விரித்த அந்த காளை இவரின் அன்பில் கட்டுண்டு மயங்கி, கா(ஓ)வியங்கள் படைத்து கன்னிக்கு சமர்ப்பணம் செய்வதாக அதிகாரபூர்வமான இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த விஷயத்தையும் என்னிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் இந்த தோழி சமீபகாலமாக என்னிடம் பேசும் போது பம்மிய போது எனக்கு குழப்பமே மிஞ்சியது. ஏறக்குறைய மிரட்டும் பாணியில் "உண்மைய சொல்லுங்க.. இல்லாட்டி பிச்சிடுவேன் "பிச்சி"..!" என்று கேட்ட பிறகே தன் காதல் "சாம்பவ"த்தை.. மன்னிக்க... காதல் சம்பவத்தை போட்டு உடைத்தார். "இந்த பூனையும் பால் குடிக்குமா..?" என்பது உணர்வையே இவருடைய காதல் நமக்கு ஏற்படுத்துகிறது.

எப்படியோ இந்த "அமர" காதல் இறுதியில் இனிய திருமணத்தில் முடியவேண்டும் என்று அனைவரும் அவர்களை வாழ்த்துவோம்.!!

நேசம்
17-10-2007, 05:22 AM
நானும் வாழ்த்துகிறேன்.வேற என்ன செய்ய முடியும். புரிஞ்சுக்கிற அளவுக்கு நம்ம இல்ல ! நம்ம அந்த அளவுக்கு அப்பாவியாக்கும் !!

அன்புரசிகன்
17-10-2007, 05:43 AM
நான் ரொம்ப டியூப்லைட்.... இன்னமும் பத்தல.... என்தனிமடலுக்கு விளக்கி அனுப்புங்கள். :D :D :D

ஓவியன்
17-10-2007, 06:09 AM
எப்படி இருந்த இதயம் கிசு, கிசு எழுதி,,கிசு, கிசு எழுதி இப்படியாகிட்டாரே....!!! :D:D:D

பூமகள்
17-10-2007, 06:42 AM
எப்படி இருந்த இதயம் கிசு, கிசு எழுதி,,கிசு, கிசு எழுதி இப்படியாகிட்டாரே....!!! :D:D:D
ரொம்ப சரியா சொன்னீங்க ஓவியன் அண்ணா..:icon_b:
இப்ப பெண்களையும் இழுத்து மாட்டிவிட்டு உங்க எல்லார் மண்டையிலும் முடி இருக்கக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு சுத்தறாரு இதயம்....!!:icon_rollout:
பாவம்... இப்படி மண்டையை பிச்சிக்கிர கிசுகிசு எழுதி அவர் தலையில் அரைக்கிலோ முடி கீழே விழுந்துட்டுதுன்னு அதிகாரப்பூர்வ செய்திகள் தெர்விக்கின்றன.:cool:
இப்போ.... இதயம் அண்ணா, டிரைக்காலஜி நிபுணர்களை அடிக்கடி சந்தித்த வண்ணம் இருக்கிறாராம்...!! :D:D:D:D

ஜெயாஸ்தா
17-10-2007, 06:45 AM
இதயம் கிசுகிசுன்னா யாராவது இருவரை மட்டும் சம்பந்தபடுத்தி எழுதணும். நீங்க எழுதி கிசுகிசுவில் மன்றம் முழுவதுமே அடிபட்டுவிட்டது. பாருங்க எல்லாரும் கட்டுடன் அலையுறதை (கிசுகிசு முதல் பாகத்தில் தப்பித்த நான் இராண்டாம் பாகத்தில் வந்து மாட்டிக்கிட்டேன்..... ஒண்ணுமே புரியவில்லை ச்சீ... ச்சீ... இந்த கிசுகிசு புளிக்கும்.)

praveen
17-10-2007, 08:08 AM
எனக்கு முழுதும் படித்தவுடன் புரிந்து போச்சு, மேட்டர் அப்படி போகுதா?

சரி, வாழ்த்து சொல்லிவிட வேண்டியது தான். எனது இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் மன்றம் மூலம் இனைந்தவர்கள் வாழிய பல்லாண்டு.

lolluvathiyar
17-10-2007, 08:19 AM
என்ன மன்றத்துல கிசு கிசு வா. ஒன்னும் தெரியாத அப்பாவிகள இப்படியா மாட்டி விடரது.

மலர்
17-10-2007, 08:21 AM
கிசுகிசு என்பது நண்பர்களை பற்றி தான் எழுத வேண்டுமா..? தோழிகளை பற்றி எழுதக்கூடாதா..?.!!

கூடவே கூடாது.......

இதயம்
17-10-2007, 08:29 AM
கூடவே கூடாது.......

ஆட்டோவிற்கு அஞ்சுபவன் நானல்ல..!

இதயம்
17-10-2007, 08:30 AM
எனக்கு முழுதும் படித்தவுடன் புரிந்து போச்சு, மேட்டர் அப்படி போகுதா?

சரி, வாழ்த்து சொல்லிவிட வேண்டியது தான். எனது இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் மன்றம் மூலம் இனைந்தவர்கள் வாழிய பல்லாண்டு.

கொஞ்சம் உங்க தனிமடல் அஞ்சல் பெட்டியை காலி செஞ்சி வைங்க.. விளக்கம் கேட்டு நிறைய போவுது..!!

மலர்
17-10-2007, 08:32 AM
ஆட்டோவிற்கு அஞ்சுபவன் நானல்ல..!

இதயம் அண்ணா.....
நீங்கள் தைரியசாலி தான் ஒத்துக்கொள்கிறேன்...
ஆனால்..........
இது ஏதோ நடுங்கி கொண்டே வந்த குரல் போல தெரியுதே

இதயம்
17-10-2007, 08:34 AM
இதயம் அண்ணா.....
நீங்கள் தைரியசாலி தான் ஒத்துக்கொள்கிறேன்...
ஆனால்..........
இது ஏதோ நடுங்கி கொண்டே வந்த குரல் போல தெரியுதே

வீரம்-கிறதே பயத்தை வெளியில தெரியாம மறைக்கிறது தானே..? ஹி..ஹி...!

நன்றி: யாரோ

மலர்
17-10-2007, 08:36 AM
வீரம்-கிறதே பயத்தை வெளியில தெரியாம மறைக்கிறது தானே..? ஹி..ஹி...!

நன்றி: யாரோ

ஹீ...ஹீ,...
அதான் இப்படி மறைந்திருந்து தாக்குகிறீர்களா....

மன்மதன்
17-10-2007, 09:26 AM
ரொம்ப சரியா சொன்னீங்க ஓவியன் அண்ணா..:icon_b:
இப்ப பெண்களையும் இழுத்து மாட்டிவிட்டு உங்க எல்லார் மண்டையிலும் முடி இருக்கக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு சுத்தறாரு இதயம்....!!:icon_rollout:
பாவம்... இப்படி மண்டையை பிச்சிக்கிர கிசுகிசு எழுதி அவர் தலையில் அரைக்கிலோ முடி கீழே விழுந்துட்டுதுன்னு அதிகாரப்பூர்வ செய்திகள் தெர்விக்கின்றன.:cool:
இப்போ.... இதயம் அண்ணா, டிரைக்காலஜி நிபுணர்களை அடிக்கடி சந்தித்த வண்ணம் இருக்கிறாராம்...!! :D:D:D:D

இதுக்காகத்தான் இந்தப்பக்கமே வருவதில்லை...:D

நுரையீரல்
17-10-2007, 09:33 AM
வீரம்-கிறதே பயத்தை வெளியில தெரியாம மறைக்கிறது தானே..? ஹி..ஹி...!

நன்றி: யாரோ
கீழ்கண்ட திரியில் கொண்டாட்டம்... (http://tamilmantram.com/vb/showthread.php?t=12842) பாருங்க உங்க வீரத்தப் பத்தி விலாவாரியா சொல்லியிருக்கேன். :icon_rollout: :icon_rollout:

இதயம்
17-10-2007, 09:39 AM
இதுக்காகத்தான் இந்தப்பக்கமே வருவதில்லை...:D

பின்ன எந்த பக்கம் போறீங்கன்னு சொன்னா நாங்களும் கூட வருவம்ல..?!!

அக்னி
17-10-2007, 10:28 AM
மன்றத்தில் வீண் கல(க்)கத்தை, ஏற்படுத்தும், இதயம் அவர்களை,
வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
(அக்னி... றூட்ட மாத்து... சரி... சரி... இப்பிடிப் போட்டிடுவம்...)
இனிமேலாவது, சுயசரிதை எழுதுவதை நிறுத்துவாரா இதயம்..?

இதயம்
17-10-2007, 10:33 AM

உங்களைப்பத்தி கூட சமீபத்தில் ஒரு நியூஸ் காதில் விழுந்திச்சே..! உண்மையா..?!! என்னதான் இருந்தாலும் நீங்க இப்படி செஞ்சது ரொம்ப தப்பு... ஆமா..!!

பூமகள்
17-10-2007, 10:37 AM
பின்ன எந்த பக்கம் போறீங்கன்னு சொன்னா நாங்களும் கூட வருவம்ல..?!!
எதுக்குங்க அண்ணா
அடுத்த கிசுகிசு எழுதவா?:icon_ush::icon_ush:

அக்னி
17-10-2007, 10:46 AM
உங்களைப்பத்தி கூட சமீபத்தில் ஒரு நியூஸ் காதில் விழுந்திச்சே..! உண்மையா..?!! என்னதான் இருந்தாலும் நீங்க இப்படி செஞ்சது ரொம்ப தப்பு... ஆமா..!!
எது... :icon_hmm:
உங்க இல்லத்தரசி உங்கள துரத்தி துரத்தி பூரிக்கட்டையால அடிச்சத, நான் மறஞ்சிருந்து பார்த்ததையா சொல்றீங்க... :violent-smiley-010:
அதுக்குத்தான் மன்னிப்புக் கேட்டிட்டனே...
இனியும் அதப்போயி மன்றத்தில போட்டா... சேச்சே... நல்லாவே இல்ல... :aetsch013:

மலர்
18-10-2007, 05:54 AM
இதயம் அண்ணாவை காணோமே....

நேற்று அடி பலமோ..???

lolluvathiyar
18-10-2007, 09:18 AM
ஆமாம் ஆஸ்பத்திரியில் ஐசியூ வுல இருக்காராம் .

நுரையீரல்
18-10-2007, 11:02 AM
ஆனா கண்டிப்பா இதயத்தோட அடுத்த "கிசு கிசு"ல எனக்கு இடம் இருக்குணு நினைக்கிறேன். கோயமுத்தூரு காரங்க எது வாங்குனாலும் அதுக்கு வட்டியும், மொதலுமா சேர்த்தி திரும்பி கொடுப்போம்னு சொல்லுங்க வாத்தியாரே.

மலர்
20-10-2007, 12:44 PM
ரெண்டு நாளாக மன்றத்தில் எந்த கிசு கிசுவும் இல்லை.......

மலர்
21-10-2007, 09:53 AM
ஆனா கண்டிப்பா இதயத்தோட அடுத்த "கிசு கிசு"ல எனக்கு இடம் இருக்குணு நினைக்கிறேன். கோயமுத்தூரு காரங்க எது வாங்குனாலும் அதுக்கு வட்டியும், மொதலுமா சேர்த்தி திரும்பி கொடுப்போம்னு சொல்லுங்க வாத்தியாரே.

அதையெல்லாம் எங்க இதயம் அண்ணா
தில்லா நின்னு சமாளிப்பாரு தெரியுமா.,,,,,,,,,,:D:D

நேசம்
21-10-2007, 10:10 AM
இதுக்கு எந்த ஜஸ் ?

மலர்
21-10-2007, 11:12 AM
இதுக்கு எந்த ஜஸ் ?

நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா.........:traurig001::traurig001:

நேசம்
21-10-2007, 12:54 PM
மலர் பூமராங் மாதிரி உன்னையே அட்டாக் செய்ய போகுது

மாதவர்
21-10-2007, 01:17 PM
தொடர்புடையவர்கள் பேசவேயில்லையே
மெய் தானா?
வாழ்த்துக்கள்

இதயம்
27-10-2007, 09:39 AM
தொடர்புடையவர்கள் பேசவேயில்லையே
மெய் தானா?
வாழ்த்துக்கள்

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.! தொடர்புடையவர்கள் இங்கே உண்மையை சொன்னால் ஏன் திரி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் வருது..? அவங்க கல்லுளிமங்கன், மங்கி(!)யா இருப்பதால் தான் நாம் போட்டு தோண்ட வேண்டியிருக்கு..!!

xavier_raja
27-10-2007, 11:42 AM
மிகவும் சுவாரஸ்யமான தகவல்தான்.. தோழியின் தெய்வீக காதல் திருமணத்தில் முடிய (ஆரம்பிக்க) வாழ்த்துக்கள்.

விகடன்
27-10-2007, 11:51 AM
நான் ரொம்ப டியூப்லைட்.... இன்னமும் பத்தல.... என்தனிமடலுக்கு விளக்கி அனுப்புங்கள். :D :D :D

நான் மட்டும் என்ன குறைச்சலா?
உம்மோடு ஒன்றாக குட்டியில் ஊறிய மட்டைகளில் ஒன்றுதானே...
எனக்கும் தனிமடலில்---------- இதயம்.

ஓவியன்
27-10-2007, 02:21 PM
நான் மட்டும் என்ன குறைச்சலா?
உம்மோடு ஒன்றாக குட்டியில் ஊறிய மட்டைகளில் ஒன்றுதானே...
எனக்கும் தனிமடலில்---------- இதயம்.
அப்போ அதே குட்டையில் ஊறிய இன்னுமொரு மட்டையான எனக்கு....??? :icon_rollout:

இதயம்
27-10-2007, 02:46 PM
அப்போ அதே குட்டையில் ஊறிய இன்னுமொரு மட்டையான எனக்கு....??? :icon_rollout:

ஊறிய மட்டைகளுக்கு ஓகே..! ஆனா நாறிய மட்டைகளுக்கு நோ..!!

சூரியன்
27-10-2007, 03:10 PM
யாரப்பா அது சொல்லிடுங்க இல்ல..

விகடன்
30-10-2007, 07:56 AM
ஊறிய மட்டைகளுக்கு ஓகே..! ஆனா நாறிய மட்டைகளுக்கு நோ..!!
நானும் ஆமோதிக்கின்றேன் !!!!

இதயத்திற்கு நோ..நோ..நோ.. :aetsch013:

இதயம்
30-10-2007, 08:18 AM
நானும் ஆமோதிக்கின்றேன் !!!!

இதயத்திற்கு நோ..நோ..நோ.. :aetsch013:

கிசு, கிசு திரி கொளுத்துன எனக்கே உண்மை எப்படி தெரியாமல் போகும்..?? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..!

எது எப்படியோ.. நாறிய மட்டைகளின் எண்ணிக்கையில் இப்போது ஒன்று கூடியிருப்பதை நண்பர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்..!!