PDA

View Full Version : விமானத்தில் பறவை மோதியது



mgandhi
16-10-2007, 06:37 PM
விமானத்தில் பறவை மோதியது: இந்தியா-ஆஸ்திரேலிய வீரர்கள் உயிர் தப்பினார்கள்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 6-வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்தது. அடுத்த போட்டி மும்பையில் 17-ந்தேதி நடக்கிறது.

இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று காலை நாக்பூரில் இருந்து தனியார் விமானம் மூலம் மும்பை புறப்பட்டனர். இந்திய வீரர்கள் டோனி, தினேஷ் கார்த்திக், உத்தப்பா, பத்ரிநாத் மற்றும் அதிகாரிகளும் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 10-வது நிமிடத்தில் அதன் மீது பறவை ஒன்று மோதியது. இதில் விமானத்தின் 2-வது என்ஜினுக்கு கீழ் உள்ள வெளிப்புற தகட்டில் சேதம் ஏற்பட்டது. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகும் நிலை உருவானது.

எனவே விமானத்தை பைலட் மறுபடியும் நாக்பூருக்கு திருப்பினார். அவசரமாக தரை இறக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

வீரர்களும், பயணிகளும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு அங்குள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை அழைத்து வருவதற்காக மாற்று விமானம் மும்பையில் இருந்து அனுப்பப்பட்டது. விபத்து குறித்து தமிழக வீரர் பத்ரிநாத் கூறும்போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சத்தம் கேட்டது. அப்போது விமானம் அதிர்வது போல இருந்தது. உடனே விமானி விமானத்தை நாக்பூர் திருப்பினார் என்றார்.

அன்புரசிகன்
16-10-2007, 06:48 PM
எப்படியெல்லாம் சோதனை வருகிறது....

தப்பினார்களே... அது போதும்...

அக்னி
17-10-2007, 12:58 AM
பறவையைக் கண்டு விமானம் படைத்ததாகச் சொல்வார்கள்...
இங்கு விமானத்தைக் கண்டு பறவை பொறமை கொண்டுவிடதோ?

விபத்துக்கள் நிகழாதிருக்க இறைவன்தான் கருணை கொள்ள வேண்டும்...

தகவலுக்கு நன்றி...

aren
17-10-2007, 01:20 AM
தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று.

ஓவியன்
17-10-2007, 01:35 AM
சிறுபறவையால் எப்பவளவு பெரிய ஆபத்தெல்லாம் வருகிறது....
கடவுள் புண்ணியத்தால் ஆபத்தில்லாது தப்பித்து விட்டனர்.
கடவுளுக்கு நன்றி!:)

அக்னி
17-10-2007, 01:37 AM
தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று.
கிரவுண்டில்தான் பவுன்சர் பந்துகளால் அவஸ்தை என்றால்,
ஆகாயத்திலும் பறவைகள் பவுன்சர் போடுகின்றனவே...
தலைக்கு வந்தது ஹெல்மெட்டுடன் போயிற்று...

அன்புரசிகன்
17-10-2007, 04:51 AM
அந்தப்பறவைக்கு என்ன ஆத்திரமோ.... யாருடன் பந்தயம் கட்டீச்சோ.... யாருகண்டா????

lolluvathiyar
17-10-2007, 06:45 AM
விமான நிலையத்திற்க்கு அருகில் குடியிருப்புகள் இருந்தால் அங்கு குப்பைகள் பெருகும். இதன் காரனமாக பறவைகளின் என்னிக்கையும் அதிகரிக்கும்.
இது தான் இந்த மாதிரி சம்பவங்கள் அடிகடி நிகழ காரனம்.