PDA

View Full Version : நீ



இனியவள்
16-10-2007, 04:58 PM
நீ
நான் கீறிய நீர்ச்
சித்திரமல்ல....

என் உயிருக்குள்
செதுக்கிய உயிர்
சிற்பம்...

இதயத்தைக் காயப்படுத்துகிறாயடா
அதில் இருப்பது நீ என்று
தெரியாமல்.....

விதி என்னைப் பார்த்துச்
சிரிக்கிறது....

வேதனைகள் மனம் முழூவதும்
கோலம் போடுகின்றது.....

காத்திருக்கும் காலங்கள்
மெளனம் சாதிக்கின்றன -உன்
வரவுக்காக அல்ல என்
ஏமாற்றத்தை எண்ணி.....

aren
16-10-2007, 05:01 PM
அழகான கவிதை இனியவள்.

நீங்கள் அவரை இதயத்திற்குள் பூட்டி வைத்துவிட்டதால் வெளியே வர இதயத்தை காயப்படுத்துகிறாரோ.

பாராட்டுக்கள் இனியவள். தொடருங்கள்.

சூரியன்
16-10-2007, 05:02 PM
அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள் இனியவள்..

அக்னி
16-10-2007, 05:02 PM
நீ...
நீங்கிப் போகாத,
உயிர் தாங்கி,
நடமாடும் உயிர்க்கூடு..,
நான்...

வலிகள் சுமக்கும் வரிகள் மீண்டும்...
பாராட்டுக்கள் இனியவள்...

அமரன்
16-10-2007, 05:08 PM
ஏ..மாற்றமே
என்னை நீ
ஏமாற்றாதே...!

தயவு செய்து அவனை
மாற்றிவிடு
கலைஞனிலிருந்து.....!

சித்திரமும் சிற்பமும்
நுண்கலைகளே...!
தப்பாய்ப் புரிந்ததால்
இதயத்தில்
நுண் துளைகளே..!

ஒப்புமைத்தது
கவினுக்கே அன்றி
வேதனையை
குவிக்க அன்று
என்பதை அவனுக்கு
புகட்டி விடு...!

அக்னி
16-10-2007, 05:20 PM
சித்திரமும் சிற்பமும்
நுண்கலைகளே...!
தப்பாய்ப் புரிந்ததால்
இதயத்தில்
நுண் துளைகளே..!
மிகவும் ரசித்தேன் அமரன்...

சிந்தை நொந்தழுதாலும்,
சந்தமிசைக்கும் பிரிவு,
பிரியமானவர்களின் பிரிவுதான் இல்லையா..?

iniya
16-10-2007, 05:51 PM
iஇனியவள் உங்கள் பெயருக்கு ஏற்றாப் போல்
இனிமையா கவி படைக்கிறீர்கள் பாராட்டுக்கள்
தொடரட்டும் உம் கவிப்பயணம்