PDA

View Full Version : தீபாவளிக்கு 2000 புதிய பட்டுப்புடவைகள்



சூரியன்
16-10-2007, 04:39 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் 2 ஆயிரம் ரகங்களில் புதிய பட்டுப்புடவைகளை அறிமுகம் செய்கிறது என்று கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.பி.சாமி கூறினார்.

மதுரையில் புதிய கோ ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தையும், வடிவமைப்பு மையத்தையும் திறந்து வைத்து அமைச்சர் பேசுகையில், சட்டைகள், புடவைகள் உட்பட 5 ஆயிரம் புதிய வகை கைத்தறி ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கைத்தறி மற்றும் பட்டுப்புடவை ரகங்களில் தற்போது 30 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படுகிறது என்றார்.

வானவில் வண்ணங்களில் கோ ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்திய நவரத்னா புடவைகள் மற்றும் தூய பட்டினால் செய்யப்பட்ட அழகு மயில் சேலைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக அமைச்சர் சா*மி கூறினார்.

இதே போல், மல்லிகை, ஸ்ட்ராபெரி மற்றும் ரோஜா நறுமணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டைகளுக்கும் மக்களிடையே வரவேற்பு கிட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சியம்மனுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புடவையை கோயில் நிர்வாகிகளிடம் அமைச்சர் ராஜா வழங்கினார்.

thanks: webdunia

அக்னி
16-10-2007, 04:44 PM
தகவலுக்கு நன்றி சூரியன்...
உங்களுக்கு தகவல் தந்த இணையத்திற்கும் நன்றி சொல்லுவது அழகல்லவா?
கவனிக்க வேண்டுகின்றேன்...

lolluvathiyar
17-10-2007, 06:40 AM
கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் நன்றாக வளர்ந்திருகிறது. ஆரம்பத்தில் சுமாரான டிசைன்களில் மட்டுமே வந்த உடைகள் இன்று நல்ல டிசைகளில் வருகிறது.
கைதறி நெசவாளர்களுக்கு இந்த நிறுவனம் நல்ல வருமான ஏற்படுத்தி தருகிறது.
அதே சமயம் மக்களுக்கு அதிக லாபம் வைக்காமல் குறைந்த விலையில் ஆடை கிடைக்க வழி செய்கிறது.

எனக்கு தெரிந்த அரசாங்க நிறுவனகங்களில் உருப்படியான ஒரே நிறுவனம் கோ ஆப் டெக்ஸாக தான் இருக்கும்