PDA

View Full Version : சம்மதிப்பேன்



சுகந்தப்ரீதன்
16-10-2007, 12:53 PM
எதிர்பாராமல் இறந்துபோன
என் அக்காவை மறந்துவிட்டு
என்னை பெண் கேட்கிறாய்
இரண்டாம் தாரமாய்
இரண்டாம் தரமாய்!

எனக்கான கனவுகள்
எதிர்கால ஆசைகள்
அத்தனையும் விட்டுவிட்டு
இதற்கு நான் சம்மதிப்பேன்!

எதிர்காலத்தில் ஒருவேளை
நீ இறந்து விட்டால் என்னை
மணக்க இப்பொழுதே உன்
தம்பி ஒப்புகொண்டால்?!

ஜெயாஸ்தா
16-10-2007, 01:02 PM
பெண்ணுரிமைக் கவிதை அருமை தம்பி....கலக்குங்க...! (கொஞ்சம் ஆணுரிமை கவிதையும் எழுதுங்கள். பஸ்ஸில் போனால் பெண்களுக்கு தனி இருக்கை ஒதுக்கி, பெண் என்று எழுதி வைத்துள்ளார்கள். ஆண்களுக்கு அப்படியில்லை. தியேட்டரில் பெண்களுக்கு மட்டும் குறைந்த கட்டணம். ஆணுரிமையை காப்பாற்ற நானும் ஒரு சங்கம் ஆரம்பிக்கப் போகிறேன்.)

சுகந்தப்ரீதன்
16-10-2007, 01:13 PM
நன்றி அண்ணா..! அப்புறம் ஆணுரிமை பற்றி நாம பேசினாக்க ஆணாதிக்கமுன்னு சொல்லிடுவாங்க... அதை பற்றி நம்ப பெண் கவிஞர்கள் தான் பேசனும்...(கவனிப்பாங்களா நம்ப கோரிக்கைய..?)

ஜெயாஸ்தா
16-10-2007, 01:17 PM
என்ன கொடுமை சுகந்தா இது....? நம்ம உரிமையை நாமே கேட்கக்கூடாதா? அதற்கு கூட டப்பிங் கொடுக்கவேண்டுமா? துடிக்கிறது புஜம். அடக்கு அடக்கு என்கிறது (வீட்டில் மனைவியை நினைத்து)மனம்....!

சுகந்தப்ரீதன்
16-10-2007, 01:35 PM
என்ன கொடுமை சுகந்தா இது....? நம்ம உரிமையை நாமே கேட்கக்கூடாதா? அதற்கு கூட டப்பிங் கொடுக்கவேண்டுமா? துடிக்கிறது புஜம். அடக்கு அடக்கு என்கிறது (வீட்டில் மனைவியை நினைத்து)மனம்....!
அதுக்குதான் சொன்னேன் வேண்டாம் வம்பாயிடுமுன்னு...(ஒரிஜினல் வாய்ஸ விட ட்ப்பிங் வாய்சுலதான் எபக்டு அதிகம் அண்ணாச்சி..)

யாழ்_அகத்தியன்
16-10-2007, 01:38 PM
கவிதை நன்றாக இருக்கிறது
தொடர்ந்தும் எழுதுங்கள்

ஜெயாஸ்தா
16-10-2007, 01:45 PM
அதுக்குதான் சொன்னேன் வேண்டாம் வம்பாயிடுமுன்னு...(ஒரிஜினல் வாய்ஸ விட ட்ப்பிங் வாய்சுலதான் எபக்டு அதிகம் அண்ணாச்சி..)
ஏதேது....தம்பிக்கு ரொம்ப அனுபவம் மாதிரி இருக்கு..... (ஆமா சுகந்தா தலையில் என்ன வீங்கியிருக்கு..... நான் தான் சொல்லியிருக்கேன்ல வீட்ல மனைவியோட இருக்கும் போது ஒண்ணு தலையில ஹெல்மெட் மாட்டிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லைனா.... வாயில சூயிங்கம் போட்டு மென்றுகொண்டிருக்க வேண்டுமென்று...! இந்த அன்பு அண்ணன் சொல்லை தட்டினா இப்படித்தான்....)

சுகந்தப்ரீதன்
16-10-2007, 02:00 PM
ஏதேது....தம்பிக்கு ரொம்ப அனுபவம் மாதிரி இருக்கு..... )
அனுபவம்தான் அண்ணாச்சி.. அன்றாடம் அண்ணனுங்க பொலம்புறத கேட்குறதுல எனக்கு...! (இன்னும் தம்பிக்கு கல்யாணமே பண்ணி வைக்கல அதுக்குல்ல கட்டில் போட வந்துட்டாரு ஜெயஸ்தா அண்ணாச்சி..)

மலர்
16-10-2007, 02:03 PM
இதெல்லாம் நல்லாயில்லை...
குறுங் கவிதைகள் பகுதியில அரட்டை...
அதுவும் மகளிருக்கு எதிரா.......

சுகந்தப்ரீதன்
16-10-2007, 02:08 PM
நீ ஏம்மா மலரு கோவபடுற...? அண்ணனுங்க எப்படா வாய்ப்பு கிடைக்கும்ன்னு காத்திகிட்டு இருந்துருக்காங்க... கிடைச்ச்தும் கக்குறாங்க...(ஜே.எம் அண்ணா கவனிங்க மகளிரணியோட எதிர்ப்ப..?)

ஜெயாஸ்தா
16-10-2007, 02:15 PM
இதெல்லாம் நல்லாயில்லை...
குறுங் கவிதைகள் பகுதியில அரட்டை...
அதுவும் மகளிருக்கு எதிரா.......

ஐயோ... நான் ஒன்னும்பண்ணவில்லை.... எல்லாம் என் தம்பி சுகந்தன்தான்....! (அண்ணன் எப்படி தப்பிச்சேன் பாத்தீங்களா தம்பி.... ஆபத்து வரும்போது இப்படித்தான் தப்பிக்கனும்...!)

சுகந்தப்ரீதன்
16-10-2007, 02:18 PM
ஏற்கனவே மலரு சொல்லிச்சு.. யார நம்புனாலும் அண்ணனுவுல மட்டும் நம்பாதன்னு... சரியாதான் இருக்கும் போலிருக்கு..!(இங்க தப்பிக்கலாம் அண்ணாச்சி வீட்டுல என்ன பண்ணுவீங்க..?)

அமரன்
20-10-2007, 07:20 PM
பெண்ணுரிமை என்பது...

எதிர்க்காற்றில் எச்சில் உமிழ்வதெனில்
மிகக் கடுமையாக எதிர்க்கின்றேன்..!
எதிர்த்து நின்று வெல்வதென்றால்
எனது எதிர்ப்பைக் கொல்கின்றேன்..!

நாளைய நாளை இன்றே வாழ்வொம்
எனக்கேட்கும் ஆணின எச்சங்கள்
இன்னும் எஞ்சி இருக்கின்றன மேதினியில்..!

ஓவியன்
21-10-2007, 02:31 AM
நச் வரிகள் சுகந்தா.....

நடைமுறைக்கு சாத்தியமாகுமா தெரியவில்லை, ஆனால் நல்ல நடைமுறையை வளர்க்க உதவும்....

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

சுகந்தப்ரீதன்
21-10-2007, 04:17 AM
மிக்க நன்றி அமர் மற்றும் ஓவிய அண்ணா அவர்களுக்கு..!

சிவா.ஜி
21-10-2007, 04:52 AM
சும்மா நச்சுன்னு..ஓங்கி உச்சி மண்டையில கொட்டினமாதிரி இருக்கு சுகந்தன்.சூப்பர்.இப்படி நாலு பொண்ணுங்க கேட்டா...மனைவி இறந்த மறுவாரமே அடுத்த தாலி கட்ட அலையுற கேவலப்பிறவிகள் திருந்துவாங்க. பாராட்டுக்கள் தம்பி.

அமரன்
21-10-2007, 07:00 AM
சும்மா நச்சுன்னு..ஓங்கி உச்சி மண்டையில கொட்டினமாதிரி இருக்கு சுகந்தன்.சூப்பர்.இப்படி நாலு பொண்ணுங்க கேட்டா...மனைவி இறந்த மறுவாரமே அடுத்த தாலி கட்ட அலையுற கேவலப்பிறவிகள் திருந்துவாங்க. பாராட்டுக்கள் தம்பி.
இப்பவே நான் செத்திட்டேன்னு நினைச்சுக்கோன்னு வக்ரகண்டர்கள் சொன்னால்.......

சுகந்தப்ரீதன்
21-10-2007, 07:28 AM
சும்மா நச்சுன்னு..ஓங்கி உச்சி மண்டையில கொட்டினமாதிரி இருக்கு சுகந்தன்.சூப்பர்.இப்படி நாலு பொண்ணுங்க கேட்டா...மனைவி இறந்த மறுவாரமே அடுத்த தாலி கட்ட அலையுற கேவலப்பிறவிகள் திருந்துவாங்க. பாராட்டுக்கள் தம்பி.
மிக்க நன்றி அண்ணா... பாராட்டியமைக்கு..!

சுகந்தப்ரீதன்
21-10-2007, 07:29 AM
இப்பவே நான் செத்திட்டேன்னு நினைச்சுக்கோன்னு வக்ரகண்டர்கள் சொன்னால்.......
நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல அமர் அண்ணா...!:sprachlos020:

பூமகள்
19-07-2008, 01:24 PM
கவிதை 'நச்' ரகம் சுகு..

கொஞ்சம் ஜீரணிக்க நேரமெடுத்தது எனக்கு... காரணம்..
அண்ணனின் மனைவியான அண்ணி.. அண்ணனின் தம்பிக்கு அம்மாவுக்கு சமானம்...

கவிதைக்காக இப்படி கேட்டிருந்தாலும்.. எனக்கு ஏதோ நெருடுகிறது.

இப்பவே நான் செத்திட்டேன்னு நினைச்சுக்கோன்னு வக்ரகண்டர்கள் சொன்னால்.......

நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியல அமர் அண்ணா...!:sprachlos020:
ஒரே வீட்டில் இரு குடித்தனங்கள்..
இதைத்தானே அமரன் அண்ணா சொல்ல வருகிறீர்கள்?? :icon_ush:

வக்ரகண்டர்கள் எப்படியாகினும்... தனது தேவை தீர்ந்தால் போதுமென்ற நிலைப்பாட்டில் தான் இருப்பார்கள் சுகு..

இறுதியிலும் பாதிக்கப் படப்போவது பெண்களே...!!

கவிதையில் விழிப்புணர்வினை ஏற்படுத்த எழுதிய விதம் அருமை சுகந்தப்ரீதன்..

(கவிதைத் திரியை அரட்டைத் திரியாக்கியமைக்கு எனது கண்டனங்கள்.:rolleyes::redface:)

நாகரா
20-07-2008, 05:05 AM
ஆணவத்துக்குச் சாட்டையடி
பெண்ணுரிமை பேசுங்கவி
ஆணவ யானைக்கு
வாழைப்பழத்தில் ஊசியாய்க்
குத்துங் கூர் கவிதை

வாழ்த்துக்கள் சுகந்தத் தம்பி!

பென்ஸ்
20-07-2008, 05:22 AM
சரியான சாட்டையடி....
மிக சரியான வார்த்தைகள்...

சுபி.. எப்படியப்பா... !!!!
பாராட்டை தவிர வேறி எதையும் பதிக்க மனம் வரலை.


மக்களே, இதில் ஆணாதிக்கம் எங்கிருந்து வந்தது, வலியது வெல்லும், இதில் பெண் வலியவள்... அத்தனையே...

இளசு
20-07-2008, 06:58 AM
''சர்வைவல்'' - சந்ததி பெருக்கல்/காத்தல் என வரும்போது
அதீத அதிரடி முடிவுகள் எடுப்பது - பெண்ணினம்..!
-இது உயிரியல்....

வம்சவம்சமாய் பெண்ணினத்தை பல மாயக்கயிறுகளால் பிணைத்து
--இதை இதை ஆண் மட்டும் செய்யலாம் என வரையறுத்து
தன் பலவீனங்களையே அடக்குமுறைகளாய் மாற்றிக்கொண்டது ஆணினம்..
---இது சமூகவியல்!

அப்படிப்பட்ட சம்பிரதாயங்களில் ஒன்று -
சுகந்தன் கவிதையின் முதல் பத்தி!

நியூட்டனின் மூன்றாம் விதிபோல் கிளம்பியது - அடுத்த பத்தி!


ஆணுக்கு வலிக்கும்தான்..
உண்மைகள் வலிக்கத்தான் செய்யும்.

பாராட்டுகள் சுகந்தா!

சுகந்தப்ரீதன்
20-07-2008, 02:02 PM
(கவிதைத் திரியை அரட்டைத் திரியாக்கியமைக்கு எனது கண்டனங்கள்.:rolleyes::redface:)மன்னிக்கவும்... இனி இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்..போதுமா பூ..??:icon_rollout:

அடுத்து நாகரா அண்ணா, பென்ஸ் அண்ணா மற்றும் இளசு அண்ணா போன்ற பெரியோர்களின் பின்னூட்டம் பொருத்தமாய் வந்திருக்கிறது..!!

மிக்க நன்றி அன்பு அண்ணல்களே..!!