PDA

View Full Version : உன் நினைவே மாயம்...!



யாழ்_அகத்தியன்
16-10-2007, 11:24 AM
உன் மீது நான் கொண்ட காதலை
இறைவனிடம் கொண்டிருந்தால் எப்போதோ
எனக்கு மோச்சம் கிடைத்திருக்கும்

உனக்காய் எழுதிய கவிதைகளை
அச்சடித்திருந்தால் புதிய காவியம்
ஒன்று கிடைத்திருக்கும்

நீயோ....
காதலால் எனக்கு
அழகானாய்
கவிதையால் எனக்கு
நிலவானாய்

ஆனாலும்
நீ நினைத்த மாதிரியே என்
இதயத்தை ஒத்திகை மேடையாக்கி
உன் காதல் அபிநயங்களை அழகாய்
பழகிச் சென்று விட்டாய்

இதில் என்ன ஆச்சரியம் என்றால்
கொஞ்ச காலமெடுத்தாலும் ஆசிரியர்
இல்லமாலே நீ நீயாவே நடன
ஆசிரியையானதுதான்

திருவிழா நெரிசல்களில்
தொலைத்துவிட்டாலும் தேரில்
பவனி வந்து எனக்குத் தரிசனம்
தருவது உன் நினைவு மட்டும்தான்

மறப்பதா..?
உன்னையா...?
நானா..?
பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி
இருக்கலாம்

நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?

உன் மொழி எனக்குள்
மெளனமானாலும்
நீ
பிரியாமாய் பேசியதையும்
நீ
பிரியமின்றி பிரிந்ததையும்
கவிதையாய் கிறுக்கவைத்தே
என்னைக் கவிஞனாக்கிறது

உன் நினைவுகளில்
நீந்துவதற்கும்
மூழ்குவதற்கும்
என் கண்ணீர்தான்
கற்றுத்தந்தது.

ம்ம்ம்....
எனக்கான உலகமாய் நீயிருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பிருந்தது
உண்மைதான்

அதுசரி...
உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியும்


-யாழ்_அகத்தியன்

அக்னி
16-10-2007, 11:33 AM
உன் நினைவுகளில்,
தவிப்புக்கள் எனக்கு...
உன் நினைவிலோ,
நான் எதற்கு..?

பாராட்டுக்கள் யாழ்_அகத்தியன் அவர்களே...

உண்மையான காதலால் மட்டும்தானே
நினைப்புகளையும் நினைக்க வைக்கமுடியும்

அழகிய வரிகள்...
காதலின் வேதனை கவிதைகளில் அதிகம் இருந்தாலும்,
உங்கள் கவிதையிலும் வேதனை அதிகமே...

ஜெயாஸ்தா
16-10-2007, 11:39 AM
வரிக்குவரி காதலை இப்படி பிழிந்து கொடுத்திருக்கிறீர்களே யாழ்....!:music-smiley-019:


நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?


அதற்காக இதெல்லாம் கொஞ்சம் ஓவர் யாழ்..!:food-smiley-022:

யாழ்_அகத்தியன்
16-10-2007, 12:40 PM
எதோ கிறுக்கிப் பார்க்கிறேன்
எல்லாமே காதலாகவே வருகிறது

உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

iniya
17-10-2007, 04:16 PM
நாயகியின் பிரிவினால் தான் கவிஞனாகினீர்களா?
அப்போ காதலினால் கிடைத்த பரிசு கவிஞனானது தானா?
எதுவானாலும் அழகாக கவி வடிக்கிறியள் பாராட்டுக்கள்

யாழ்_அகத்தியன்
17-10-2007, 04:59 PM
நாயகியின் பிரிவினால் தான் கவிஞனாகினீர்களா?
அப்போ காதலினால் கிடைத்த பரிசு கவிஞனானது தானா?
எதுவானாலும் அழகாக கவி வடிக்கிறியள் பாராட்டுக்கள்


இங்கதான் பரிசு என்று சரியா எழுதி இருகிங்க
iniya (வெண்ணிலா) உங்க வாழ்த்துக்கு நன்றி

iniya
17-10-2007, 05:00 PM
இங்கதான் பரிசு என்று சரியா எழுதி இருகிங்க
iniyaval (வெண்ணிலா) உங்க வாழ்த்துக்கு நன்றி


என்ன சொல்லுரீங்கள்
வேற எங்க பிழையா எழுதினன்?
யாரு வெண்ணிலா

யாழ்_அகத்தியன்
17-10-2007, 05:13 PM
நாயகியின் பிரிவினால் தான் அகத்தியா கவிஞனாகினீர்களா? அப்போ காதலினால் கிடைத்த படிசு கவிஞனானதுதானா?
எதுவானாலும் அழகாக கவி வடிக்கிறியள் பாராட்டுக்கள் ***வெண்ணிலா***

இப்படி இதே கவிதைக்கு வாழ்த்துசொல்லி இருந்தாங்க
அவங்கதான் நீங்களோ என்று நினைத்துவிட்டேன்
மன்னித்துக் கொள்ளுங்கள் என்னில் தவறு இல்லை இருவருமே
ஒரே மாதிரி வாழ்த்தியதால்தான் குழம்பிவிட்டேன்

iniya
17-10-2007, 05:16 PM
[

இப்படி இதே கவிதைக்கு வாழ்த்துசொல்லி இருந்தாங்க
அவங்கதான் நீங்களோ என்று நினைத்துவிட்டேன்
மன்னித்துக் கொள்ளுங்கள் என்னில் தவறு இல்லை இருவருமே
ஒரே மாதிரி வாழ்த்தியதால்தான் குழம்பிவிட்டேன்



ஓகோ சரி பறவாயில்லை யாழ் அகத்தியன் உங்கள் வலைத்தளம் சென்று கவிதை படித்தேன் எல்லக்கவிதைகளுமே அருமை பாராட்டுக்கள்

சுகந்தப்ரீதன்
21-10-2007, 09:47 AM
ம்ம்ம்....
எனக்கான உலகமாய் நீயிருந்தாய்
உன்னை சுற்றியே என் நினைப்பிருந்தது
உண்மைதான்

-யாழ்_அகத்தியன்

உங்களின் கவிதை வரிகள் சில நினைவுகளை மறுபடியும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது எனக்கு... வாழ்த்துக்கள் மேலும் படைத்தளிக்க...!

யாழ்_அகத்தியன்
21-10-2007, 01:36 PM
உங்களின் கவிதை வரிகள் சில நினைவுகளை மறுபடியும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது எனக்கு... வாழ்த்துக்கள் மேலும் படைத்தளிக்க...!

ம்ம்...
மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு