PDA

View Full Version : மண்மீன்கள்..!அமரன்
16-10-2007, 10:35 AM
பகலன்னை அணைப்பில்
சுகத்தூக்கம் துய்ப்போம்.
இரவுத்துணை அருகாமையில்
உறக்கம் துறப்போம்..!

புயல்களடிக்கும் புழுதிகளை
மயக்கமின்றி போர்த்துவோம்.
மேகமலை அருவிகளில்
மோகமின்றியே குளிப்போம்..!

நிலக்கீழ் குழாய்களின்
ஆதி நுகர்வோர் நாம்
நடைபாதை பயணிகளின்
இடைஞ்சல்களும் நாம்...!

தரைதொட்டு முத்தமிடும்
இலைகள் சிலவற்றின்
முதல் ஸ்பரிசமும் நாம்...!

எங்கிருந்து வந்தோம்?
எங்கே தொடங்கினோம்?

விபரம் அறிந்தும்
விபரம் அறிந்ததில்லை.
திரட்ட முனைந்தபோது
திட்டாதோர் யாருமில்லை..!

சிதைத்து விதைத்தவர்களும்
புதைகுழியில் சிக்கியவர்களும்
ஊர்ச்சங்குகளால் ஊமையாக
'பிழை'த்தவர்களா நாம்..!

இச்சைக்கு இணங்கியோரையும்
எச்சமிட்டு களித்தோரையும்
காலவெள்ளம் கவர்ந்துவிட
தப்பிய நாணல்களா நாம்..!

நீண்ட தேடலின் பின்
அறிவுக்கு எட்டியது.
விண்மீன்களுக்கு எதற்கு
நதிமூலமும் ரிஷிமூலம்.

டுவிங்கிள் டுவிங்கிள்
பாடாத ஸ்டார்கள்நாம்
கரும்பால் வீதிகளில்
மின்னும் மண்மீன்களன்றோ...!

பூமகள்
16-10-2007, 10:55 AM
அற்புதக்கவிதை..!! மீண்டும் அமர் அண்ணாவிடமிருந்து..!!

மண்மீன்கள்..
தனியே விடப்பட்ட
மைந்தர்களோ??
புரிந்தது பிழையில்லை
எனில்
அனாதையாகாது
எனது கருத்தும்...!!

விவரமான பின்னூட்டம் பின்பு தருகிறேன் அண்ணா.
கலக்கிட்டீங்க...!!

சுகந்தப்ரீதன்
16-10-2007, 11:13 AM
அண்ணா.. வரவர உங்க கவிதையின் கரு என்னோட சின்ன மூளைக்கு எட்டவே மாட்டேங்குது எத்தன வாட்டி எட்டி எட்டி குதிச்சாலும்..? எனக்காக கொஞ்சம் விளக்கம் அளிக்க முடியுமா?

ஜெயாஸ்தா
16-10-2007, 11:20 AM
புயல்களடிக்கும் புழுதிகளை
மயக்கமின்றி போர்த்துவோம்.
மேகமலை அருவிகளில்
மோகமின்றியே குளிப்போம்..!
கிழிந்த ஆடைகளால் மானம் மறைத்தவர்கள், வானநீரில் மட்டும்தானே குளிக்க அவர்களின் வசதி ஒத்துழைக்கும்.நிலக்கீழ் குழாய்களின்
ஆதி நுகர்வோர் நாம்
நடைபாதை பயணிகளின்
இடைஞ்சல்களும் நாம்...!
உண்மைதான். நடைபாதை பயணிகளுக்கு இடைஞ்சலானர்கள்தான். நடைபாதையிலேயே குடும்பம் நடத்தி குழந்தை பெற்று வாழ்ந்து மரணிக்கும் இவர்களை இப்படி ஆக்கியது யார் குற்றம்?


தரைதொட்டு முத்தமிடும்
இலைகள் சிலவற்றின்
முதல் ஸ்பரிசமும் நாம்...!

எங்கிருந்து வந்தோம்?
எங்கே தொடங்கினோம்?

மரத்தடி வீடு, வானம் கூரை. சொந்தமாய் கொஞ்சம் பக்கத்தில் சருகுகள், குப்பைகள். இவர்கள் தான் யாரென்று தனக்கே தெரியாமல், சருகோடு சருகாய் வாழ்பவர்கள்.


விபரம் அறிந்தும்
விபரம் அறிந்ததில்லை.
திரட்ட முனைந்தபோது
திட்டாதோர் யாருமில்லை..!


சிதைத்து விதைத்தவர்களும்
புதைகுழியில் சிக்கியவர்களும்
ஊர்ச்சங்குகளால் ஊமையாக
'பிழை'த்தவர்களா நாம்..!
யாரோ சிலரின் உடற்பசிக்காக வஞ்சிக்பட்டவர்கள். சில கொடூர மிருகங்களின் எச்சங்களாய் இவர்கள். வாழ்க்கையின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

இச்சைக்கு இணங்கியோரையும்
எச்சமிட்டு களித்தோரையும்
காலவெள்ளம் கவர்ந்துவிட
தப்பிய நாணல்களா நாம்..!

தவறு செய்தவர்கள் தப்பித்துவிட பாதிக்கப்பட்டவருக்கே தண்டனை வழங்கும் இயற்கை நீதிபதியின் தவறிய நீதி இது...!

நீண்ட தேடலின் பின்
அறிவுக்கு எட்டியது.
விண்மீன்களுக்கு எதற்கு
நதிமூலமும் ரிஷிமூலம்.


பகலன்னை அணைப்பில்
சுகத்தூக்கம் துய்ப்போம்.
இரவுத்துணை அருகாமையில்
உறக்கம் துறப்போம்..!
இந்த பரிதாபத்திற்குரியவற்களை இதே போல் நானும் ஊன்றிக் கவனித்திருக்கிறேன். இரவில் உறங்கமால், பகலில் பெரும்பாலும் நன்றாக தூங்குவார்கள். அதற்கு காரணம் இரவு நேரத்தின் கொசுக்கடி மற்றும் குளிர்.

பகலில் விண்மீன்கள் தெரியாது. இரவில் கண்சிமிட்டும். அது போல் இந்த மண்மீன்களின் வாழ்க்கையும் என்று, இந்த பாரிதாப ஜீவன்களை விண்மீனுக்கு ஒப்பிட்டு கொஞ்சம் அவர்களின் மதிப்பை உயர்த்தி விட்டீர்கள் அமரன். பாராட்டுக்கள்.

யவனிகா
16-10-2007, 11:39 AM
ஊரெல்லாம் கட்டிடங்கள்− எங்களுக்கோ
ஒண்ட ஒரு குடிசை இல்லை...

படுத்திருக்கும் பிளாட்பாரத்திலேயே
பாடை கண்டோர் பலருண்டு...

பத்துமாதக் குழந்தை,
தூக்கத்தில் உருண்டு
சாக்கடையில் சவமான
சம்பவங்கள் பல உண்டு..

வருண பகவான் கண்திறந்து
வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவார்
அடிக்கடி...

இருந்தாலும்
எங்கள் பிள்ளைகளின்
தலை முடியைக்
காணிக்கை ஆக்குகிறோம்
சாமிக்கு!

சாமி எங்களுக்காக
ஒரு ம....ரும் பிடுங்காவிட்டாலும்...

சுகந்தப்ரீதன்
16-10-2007, 11:51 AM
விளக்கமளித்த ஜே.எம் அண்ணாவிற்க்கு என் நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்...! அடுத்து அருமையான பின்னூட்ட கவிதை தந்த யவனிகா அக்காவுக்கு எனது பாராட்டுக்கள்..! உங்களை போலவே எனக்கும் படைத்தவன்மீது பல இடங்களில் கோபம் வருவதுண்டு.. ஆனால் அதனால் என்ன பயன்..?

ஜெயாஸ்தா
16-10-2007, 12:10 PM
சாமி எங்களுக்காக
ஒரு ம....ரும் பிடுங்காவிட்டாலும்...
எதிர்கவித யவனிகா... ஏன் இப்படி ஆவேசப்படுறீங்க.... கூல்...கூல்...!

அமரன்
16-10-2007, 12:12 PM
இருந்தாலும்
எங்கள் பிள்ளைகளின்
தலை முடியைக்
காணிக்கை ஆக்குகிறோம்
சாமிக்கு!
சாமி எங்களுக்காக
ஒரு ம....ரும் பிடுங்காவிட்டாலும்


வேரைப் பிடுங்கினான்
விழுதைப் பிடுங்கினான்
மலரும் பிடுங்கினான்
வேறு என்ன வேண்டும்.

ஆனாலும் நாங்கள்
ரொம்ப நல்லவங்க..

மொட்டை அடித்தவனுக்கு
காணிக்கை செலுத்துகிறோமே
யாரோ ஈந்த காசில்
மொட்டை அடித்து....!

யவனிகா
16-10-2007, 12:20 PM
எதிர்கவித யவனிகா... ஏன் இப்படி ஆவேசப்படுறீங்க.... கூல்...கூல்...!

கூல்..கூல்... என்று கூலாய் சொல்லிவிட்டீர்கள் ஜேஎம்...கூழுக்குக் கூட வழியில்லாதவர்களைப் பார்த்த பின்பும் கூலாக கோலா குடிக்க முடியுமா சொல்லுங்கள்...எதிர் கவித யவனிகாவா? உங்களுக்கு நானே எடுத்துக் குடுத்தேன் பாருங்க...ஓட்ட வாயி எனக்கு.

ஜெயாஸ்தா
16-10-2007, 12:35 PM
எதிர் கவித யவனிகாவா? உங்களுக்கு நானே எடுத்துக் குடுத்தேன் பாருங்க...ஓட்ட வாயி எனக்கு.

:lachen001: :lachen001: :lachen001: :lachen001:

நேசம்
16-10-2007, 06:58 PM
கூல்..கூல்... என்று கூலாய் சொல்லிவிட்டீர்கள் ஜேஎம்...கூழுக்குக் கூட வழியில்லாதவர்களைப் பார்த்த பின்பும் கூலாக கோலா குடிக்க முடியுமா சொல்லுங்கள்....

இது ஆண்டவன் மக்களுக்கு வைத்த சோதனை.கூலாகவும் − கோபமாகவும் இருக்க வேண்டாம். ஆக்கப்பூர்வமாக இருங்கள்

iniya
16-10-2007, 07:01 PM
காலத்திற்கு ஏற்ற யதார்த்தமான கவிதை
புனைந்த அமரனுக்கு பாராட்டுக்கள்

யவனிகா
16-10-2007, 07:14 PM
இது ஆண்டவன் மக்களுக்கு வைத்த சோதனை.கூலாகவும் − கோபமாகவும் இருக்க வேண்டாம். ஆக்கப்பூர்வமாக இருங்கள்

எதுவரை ஆண்டவன் சோதிப்பான்...ஆண்டிகளை மட்டுமேவா சோதிப்பான் ஆண்டவன்...கல்லறையிலிருந்து எழுப்பி சொர்க்கம் கொடுக்க வேண்டாம் ஆண்டவன்...இப்போது பசிக்கு ஒருவாய் சோறு குடுக்கச் சொல்லுங்கள் ஆண்டவனை...
ஆண்டவனின் சோதனை முயற்சிக்கு அவற்களென்ன எலிகளா முயல்களா?
இல்லை அப்படியென்ன சோதனை செய்கிறார் ஆண்டவர்? எத்தனை நாள்கள் பட்டினி இருந்தால் சாவார்கள் என்றா?
ஆராய்ச்சியாளர் ஆண்டவனை பசியே வராமலிருக்க மருந்து கண்டுபிடிக்கச் சொல்லுங்கள், புண்ணியமாய் போகும்.

நேசம்
17-10-2007, 03:53 AM
இந்த உலகத்தில் ஊனமுற்றொரும் இருக்கிறார்கள். அதனால் ஆன்டவனை என்ன்வென்று சொல்விர்கள். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கு உணவு கொடுப்பான்.(கல்லுக்குள் இருக்கும் தேரைக்கெ கொடுக்கிறான்)

அமரன்
17-10-2007, 07:15 AM
சந்தேகம் கேட்டு, விளக்கம் கேட்டு, எதிர்கவி படித்து, பாராட்டி என எல்லாவிதத்திலும் என்னை வளர்க்க உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. இக்கவி பற்றி இனி அதிகமான விளக்கம் என் சார்பில் தேவை இல்லை என நினைக்கின்றேன். மீண்டும் ஒரு முறை நன்றி நவில்கிறேன்.

அமரன்
17-10-2007, 07:31 AM
இந்த உலகத்தில் ஊனமுற்றொரும் இருக்கிறார்கள். அதனால் ஆன்டவனை என்ன்வென்று சொல்விர்கள். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கு உணவு கொடுப்பான்.(கல்லுக்குள் இருக்கும் தேரைக்கெ கொடுக்கிறான்)
அப்போ பட்டிணியால் இறப்போருக்கு உங்கள் பதிலென்ன நேசம். எல்லாவற்றுக்கும் ஆண்டவன் இருக்கான் என்று சொல்லி கூலாக இருந்தால் கூழ்கூடக் கிடைக்காது. ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தால்தான் நமக்கு நன்மை கிடைக்கும். அரிசில் உன்பெயர் எழுதி வைத்திருக்கு என்று சொன்னால் அந்த அரிசியே உங்கள் முன் வந்து என்னை சாப்பிடு என்று கேட்காது. நீங்கதான் அரிசியைத் தேடிப்பிடிக்கவேண்டும். முடியாதவங்களுக்கு உதவவேண்டும்.

ஜெயாஸ்தா
17-10-2007, 07:54 AM
எதுவரை ஆண்டவன் சோதிப்பான்...ஆண்டிகளை மட்டுமேவா சோதிப்பான் ஆண்டவன்...கல்லறையிலிருந்து எழுப்பி சொர்க்கம் கொடுக்க வேண்டாம் ஆண்டவன்...இப்போது பசிக்கு ஒருவாய் சோறு குடுக்கச் சொல்லுங்கள் ஆண்டவனை...
ஆண்டவனின் சோதனை முயற்சிக்கு அவற்களென்ன எலிகளா முயல்களா?
இல்லை அப்படியென்ன சோதனை செய்கிறார் ஆண்டவர்? எத்தனை நாள்கள் பட்டினி இருந்தால் சாவார்கள் என்றா?
ஆராய்ச்சியாளர் ஆண்டவனை பசியே வராமலிருக்க மருந்து கண்டுபிடிக்கச் சொல்லுங்கள், புண்ணியமாய் போகும்.
பசி என்று ஒன்று இல்லாவிடில் உலகின் இயக்கமே இல்லாமல் போய்விடும். ஊருவிட்டு. நாடுவிட்டு, கண்டம் விட்டு போய் சம்பாதிப்பது எதற்காக..... ஒரு சாண் வயிற்றுக்காகத்தானே.....! உலகின்பிரதானமே பசிதான். வயிறு நிறைந்தால் தான் கவிதையை ரசிக்கமுடியும். சொந்தங்களோடு பழக முடியும். இயற்கையை அனுபவிக்க முடியும்.

பெரும்பாலான அனாதை பிச்சைக்காரர்கள் மிகப் பெரிய சோம்பேறிகளாகத்தான் உள்ளனர். அவர்கள் உடல்வருத்தி உழைகக்க தயாராய் இல்லை. அப்படி உடல்வருத்தி கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் பெறும் கூலியை விட இந்த பிச்சைக்காரர்கள் அதிகம் சம்பாதித்துவிடுகின்றனர்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு டீன் ஏஜ் பெண் கைகளில் சில கோரிக்கைஅட்டைகளுடன் வந்தாள். அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் அந்தஅட்டையை கொடுத்தாள். அதில் வழக்கம்போல் ஒரு பொய்க்கதை. அந்தப்பெண் குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டதாகவும் உதவி செய்யுமாறும் கேட்டிருந்தாள். இரக்கப்பட்ட ஏமாளிகள் பிச்சையளித்தனர். பல நாட்கள் கழித்து அதே பேருந்து நிலையத்தில் ஒரு உணவுவிடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அந்த பிச்சைக்கார பெண் அந்த விடுதியின் டீமாஸ்டரிடம் பேசிக்கொண்டிருந்ததை ஏதோச்சையாக காது கொடுத்துக்கேட்டன். '

டீமாஸ்டர் : 'ஏம்மா தொழில் எப்படியிருக்கு?'
பிச்சைக்காரி: 'பரவாயில்லைண்ணே..... இப்போது தினமும் 400 ரூபாய் கிடைக்குது...... ஒரு நளைக்கு 600 ரூபாயாவது சம்பாதிக்கணும்'

அதிர்ந்து விட்டேன். அந்தப்பெண் சென்ற பிறகு டீமாஸ்டர் என்னிடம் சொன்னார் 'சார் நான் 10 மணி நேரம் டீ அடிச்சாத்தான் எனக்கு 150 ரூபாய் சம்பளம்....!' -என்றார்.

என்னைப் பொருத்த வரையில் பிச்சைக்காரர்களுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து ஊக்குவிக்காதீர்கள். உங்களால் முடிந்தால் அவர்களின் புனர் வாழ்வுக்கு உதவுங்கள். ஆனால் நீங்கள்வேலை கொடுக்கிறேன் என்று கூப்பிட்டால் வரமாட்டார்கள் என்பது வேறு விசயம். சில முதிந்தவர்களைப்பார்த்தால் நான் ஒரு நேர சாப்பாட்டிற்கான பணம் அல்லது சாப்பாடு வாங்கிக்கொடுப்பேன். என்னால்முடிந்தது அவ்வளவுதான். குழந்தையை காட்டி பிச்சயெடுக்கும் பெண்கள், சிறிதளவு ஊனத்தை பெரிதாய் காட்டி பிச்சையெடுப்பவர்கள், பிச்சையெடுக்க வைக்கப்படும் சிறார்கள் இவர்களுக்கு சில்லறைகாசு கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

ஆண்டவன் அனைவருக்குமே உணவைப் பூமியில் படைத்திருக்கிறான். அவரவர்குறியதை அவரவர்களே எடுத்துக்கொள்ளவேண்டும். கடலுக்கென்ன கதவாயிருக்கிறது? முயற்சி செய்தால் சம்பாதிக்கலாம். ரயிலில் இரு கால்களும் நடக்க முடியாத ஒரு இளைஞனர் 'உலகவரைபடம்' விற்றுக்கொண்டு வந்தான். அவனுடைய முயற்சியை நாம் பாராட்டலாம். தேவையே இல்லாவிடினும் கூட 10 ரூபாய் கொடுத்து ஒரு மேப் வாங்கிக்கொள்ளலாம்.


பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டும். தேவையில்லாதவர்களுக்கு பிச்சையிட்டு சமூகவிரோதிகளாய் நாம் அவர்களை மாற்றுவதை கைவிட வேண்டும். என்னுடைய இந்தக்கருத்து நம்மநாட்டு பிச்சைக்காரர்களுக்குமட்டும். சோமாலியா போன்ற இறைவனாலும், சகமனிதர்களாலும் வஞ்சிக்கப்பட்ட பரிதாபத்திற்குரியவர்களுக்கு இந்தக்க கருத்து பொருந்ததாது.

சிவா.ஜி
17-10-2007, 08:13 AM
நடைபாதையில் நலிந்துகொண்டும்,தினம் நசிந்துகொண்டும் வாழ்க்கையை வாழ போராடும் இந்த மண்மீன்களின் துக்கம் இறைவனின் காதுக்கு எட்டுவதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்....முதலில் அவர்களைக் கடந்துபோகும் நம் காதுகளுக்கு எட்டுகிறதா பார்ப்போம்.
ஜே.எம்-ன் பிரமாதமான விளக்கப் பின்னூட்டமும்.யவனிகாவின் அர்த்தமுள்ள ஆவேச எதிர்கவிதையும் மிக அருமை. பசிப்பவருக்கு ஒரு மீன் துண்டைத் தூக்கிப்போடாமல்..மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்போம்.
மீண்டும் ஒரு அற்புதமான சமூகச் சிந்தையுடன் வந்த அமரனின் அழகான வரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நேசம்
17-10-2007, 11:38 AM
அப்போ பட்டிணியால் இறப்போருக்கு உங்கள் பதிலென்ன நேசம். எல்லாவற்றுக்கும் ஆண்டவன் இருக்கான் என்று சொல்லி கூலாக இருந்தால் கூழ்கூடக் கிடைக்காது. ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தால்தான் நமக்கு நன்மை கிடைக்கும். அரிசில் உன்பெயர் எழுதி வைத்திருக்கு என்று சொன்னால் அந்த அரிசியே உங்கள் முன் வந்து என்னை சாப்பிடு என்று கேட்காது. நீங்கதான் அரிசியைத் தேடிப்பிடிக்கவேண்டும். முடியாதவங்களுக்கு உதவவேண்டும்.

நானும் அதைதான் சொல்கிறென்.எழுத்தாளர்களூக்குரிய கோபம் தான் (பாராட்டபடவேண்டிய)யவனிக்காவிடம் இருந்தது. நிங்கள் சொல்வது போல சோமலியா நாடுகளில் பட்டினியால் இருப்பவர்கள் ஒருபுறம் இருக்க, தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்று உணவு பொருட்களை கடலில் கொட்டும் நாடுகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளூங்கள்.நாம் அருகில் இருக்கும் ஒருவரின் பசியை(ஜே.எம் கருத்துப்படி சோம்பறிகளை ஊக்கம் கொடுக்கும் வகையில் இருக்க கூடாது) போக்க ஒவ்வொருத்தரும் ஆரம்பித்தால் அப்புறம் பட்டினி சாவு எங்கே இருக்க போகிறது.