PDA

View Full Version : அத்தை பெண்கள் என்னும் அழகிகள்



umakarthick
16-10-2007, 08:57 AM
1.
ஒரு அழகிய மயிலிறகை இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கிறேன் என்றெனக்கு திருப்பி தருகிறாய்

நீ எனக்கு கிணற்றடியில் கொடுத்த முத்தத்தை
இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேனென
திருப்பித் தர முயன்ற போது ஓடி ஒளிகிறாய்
என்னடி நியாயம் இது??


2.நம் வீட்டில் நிகழும் திருமண விழாக்களில்
மாப்பிள்ளைத் தோழனாகவோ பெண்தோழியாகவோ
நிற்க நீயும் நானும் சண்டையிட்ட நாட்களை
நினைவுப் படுத்துகின்றன நம் திருமணத்தின் போது
என் அக்கா, அண்ணன் குழந்தைகள் சண்டையிட்டது..


3.எங்கே காதலிக்க வாய்ப்பில்லாமல் நமக்கு
திருமணம் செய்து வைத்து விடுவார்களோ
என்று பயந்து உன்னை வெறுப்பது போல
நானும் என்னை வெறுப்பது போல நீயும்
நடித்து யாருக்கும் தெரியாமல் காதலித்த
அந்த நாட்களை காதலுடன் நினைத்துக் கொள்கிறோம்
நாம் இப்போதும்!!

சுகந்தப்ரீதன்
16-10-2007, 09:29 AM
முதலில் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்..கார்த்திக் அண்ணா.. இந்த கவிதைகளை ஏற்கனவே நான் ஆர்குட்டில் படித்திருக்கிரேன்.. அருமையான கவிதை.. நீண்ட கவிதை என்று எனக்கு தெரியும்.. மிச்சத்தையும் தொடர்ந்து மன்ற நண்பர்களுக்கு வழ்ங்குங்கள்... கொடுத்து வைத்தவர்கள் உங்கள் அத்தை பெண்கள்..! (எங்க அத்த மக அடிக்க வர பாருங்க..?!)

umakarthick
17-10-2007, 09:40 AM
தம்பி நன்றாக பாருங்க இது இந்த வாரம் எழுதியவை, புதியவை

சுகந்தப்ரீதன்
21-10-2007, 09:54 AM
தம்பி நன்றாக பாருங்க இது இந்த வாரம் எழுதியவை, புதியவை
நான் இருக்குமிடத்தில் இப்போது ஆர்குட் இல்லை நண்பா.. அதான் பழ்சுடன் புதிதை என்னால் ஒப்பிட முடியவில்லை.. ஆனாலும் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்..!

alaguraj
21-10-2007, 01:19 PM
அத்தை பெண்கள் என்னும் அழகிகள்..
எத்தனை அத்தை பெண்கள்ன்னு சொன்னா நல்லருக்கும் மச்சக்காரரே...

கார்த்திக்கின் கவிதைகள் தபுசங்கரின் கவிதைபோல் நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள் உமது அத்தை பெண்களுக்கு...

அனுராகவன்
27-01-2008, 12:01 AM
நண்பரே காதலித்த நாட்கள் நினைவுபடுத்தி
கவிதை களழ்சியமாக தந்தற்கு என் நன்றிகள்!!
ம்ம் தொடர்ந்து நினைபடுத்தி எழுதுங்கள்..!!
என் வாழ்த்துக்கள்!!