PDA

View Full Version : இறுதியாய் ஒரு தேடல்



இனியவள்
16-10-2007, 07:53 AM
http://img523.imageshack.us/img523/6487/69395927bs7.jpg

தண்ணீரால் அழித்தால்
அழியாது என்று
கண்ணீரால் அழிக்கின்றேன்...!!!

இருந்தும்
அழிய மறுக்கின்றனவே
உன் நினைவுகள்...!!!!

வாழ்வில் நினைப்பதற்கு
சில மட்டுமே....
ஆனால்
மறப்பதற்கோ பல....

உன் விழியா....!!
உன் முகமா....!!
உன் குரலா....!!

எதையென்று மறப்பேன்
ஓற்றை மனதை
வைத்துக் கொண்டு...

இறுதியாய் ஒரு தேடல்
உன் மனதிற்காய்...

சேர்ந்து வாழ்வதற்கு
அல்ல
சேர்ந்து மறப்பதற்கு..

அமரன்
16-10-2007, 08:46 AM
கண்ணீரில் காரம் அதிகம்தான் இனியவள்.
அழுதால் பாரம் குறைகிறது என்பார்கள். அழிவதால்த்தான் குறைகிறதோ!? ஆக்க கூட்டணி அமைப்பது வழக்கம். நீங்கள் அழிக்க கூட்டணி அமைக்க தேடுகிறீர்கள். வித்தியாசம்தான். அந்த அழித்தல் கூட்டணி ஆக்கபூர்வமான விடயங்களுக்கு வழிகோலுமானால் வரவேற்போம்.

இனியவள்
16-10-2007, 05:49 PM
ஹீ ஹீ என்ன செய்வது அமர்

ஆக்கியது சரி இல்லை என்றால் அதனை
உருவாக்கியவர்களே அழிப்பார்கள்

ஆக்க ஓரு கூட்டம் அழிக்க ஓரு கூட்டம்

யாழ்_அகத்தியன்
17-10-2007, 11:58 AM
வாழ்த்துக்கள் இனியவள்
கவிதை நன்றாக இருக்கிறது
தொடர்ந்தும் எழுதுங்கள்

சிவா.ஜி
17-10-2007, 12:35 PM
விழிகளின் ஓரத்தில் வழியக்காத்திருக்கும் ஒற்றைச் சொட்டுக் கண்ணீரையும்,வழிந்துவிடாமல் தடுத்து,வலியைச் சுமந்த புன்னகை இதழோரம் மலர்வதைப்போல உணர்கிறேன் உங்கள் கவிதையை.மறக்க நினைக்கும் நினைவுகளே..நீங்கள் அழைக்கும் உறவால் மீண்டும் மலர்ந்தால் நலம்தானே.வாழ்த்துகள் இனியவள்.