PDA

View Full Version : பருவநட்சத்திரங்கள்....! - பாகம் 1

பூமகள்
15-10-2007, 06:58 PM
'கலா குட்டி...!! எங்கடா இருக்கே??' என்று தன் மனைவியை கூப்பிட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் காமேஷ்.

அடுப்படியில் தம் பிரிய கணவருக்காக கேசரி செய்து இறக்கிய கலா, 'இதோ வர்றேங்க..!!' என்று கூறிய வண்ணமே முகப்பு அறைக்கு வந்து நின்றாள்.

'இந்தா..!! நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு பாரு டா...?!!'

'எதுக்குங்க இப்ப பட்டுபுடவை எல்லாம்? அதான் வீட்ல நிறைய இருக்கே! நாம ஏற்கனவே முடிவு செஞ்சதை மறந்துட்டீங்களா?'

'என்ன முடிவு???' என்று புருவத்தை உயர்த்தி யோசிக்கலானான் காமேஷ்.

'ரொம்ப யோசிக்காதீங்க...அப்புறம்... தலைவலிக்குதுடா கலான்னு... டீ போட்டு தான்னு இரவு எந்திரிச்சி உக்காந்துட்டு தொல்லை பண்ணுவீங்க.. நானே சொல்றேன்.
நம்ம முதல் வெட்டிங்க் டே அன்னிக்கி அனாதை இல்லதில் இருக்கும் முதியோர்களைக் கண்டு ஒரு நாள் முழுக்க அவங்களோட இருந்து உணவு கொடுத்து ஆசி வாங்கிட்டு வரனும்னு முடிவு பண்ணினோமே?? மறந்துபோச்சா??'

'ஓ...... அதுவா?? அதை எப்படிடா மறப்பேன்...! நல்லா ஞாபகம் இருக்கு. இருந்தாலும் உனக்கு ஏதாவது ஆசையா வாங்கி கொடுக்கனும்னு தோனிச்சி... அதான் வாங்கிட்டு வந்திட்டேன்.
உனக்கு புடவை பிடிச்சிருக்கா??'

வெளிர் ஊதா நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்து பட்டுப்புடவை நேர்த்தியாய் ஜொலித்தது. பிரித்துப் பார்த்த வண்ணமே கலா, 'ரொம்ப பிடிச்ச்சிருக்குங்க...!! உங்கள மாதிரியே இருக்கு...!!' சொல்லிவிட்டு வெட்கப்பட்டு சமையல் அறை நோக்கி சட்டென்று ஓடிச் சென்றாள்.

'கலா...கலா....!!' என்று கூப்பிட்டவாறே காமேஷ் பின்னாலேயே ஓடினான்.

'கலா! நாளைக்கு நம்மலோட ஃபஸ்ட் வெட்டிங் ஆனிவெர்சரி. அதனால ஆபிஸ்ல லீவ் போட்டிருக்கேன் டா... நீயும் நானும் நேர கோயிலுக்கு போயிட்டு அப்படியே "அன்பு முதியோர் இல்லம்" போகலாம்! அங்கு ஒரு முக்கியமான ஒருவரை உனக்கு அறிமுகப்படுத்தப் போறேன்.'

'என்னங்க...!! யாருங்க அது??' அழகான பெரிய ப்ரவுன் நிற கண்கள் விரிய ஆவலாய் கேட்டாள் கலா.

'பொறுடா.. கலா..! நாளைக்கு தான் பார்க்க போறியே... அப்போ சொல்றேன்..' சஸ்பென்ஸ் வைத்தான் காமேஷ் நகைத்தபடி..!!

'சரி.... ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க! உங்களுக்குப் பிடிச்ச கேசரி செய்து வைத்திருக்கிறேன்.. சூடா சாப்பிடலாம்..! சீக்கிரம் வாங்க..!!'

ஆதவன் மெதுவாக நீல நிற கடலின் பின்னால் ஒளியத்துவங்கினான்.. நட்சத்திரக்கூட்டம் ஆதவனைத் தேடி... அங்கும் இங்கும் கண்கள் சிமிட்டி தேடிப் பார்க்க துவங்கியிருந்தன..

இரவு உணவைப் பரிமாறி, அடுப்படி வேலை முடித்து கலா கண்ணயர 10.30 மணி ஆனது.

காலையில் சீக்கிரமே எழுந்து கிளம்ப, அதிகாலை 4 மணிக்கே அலாரம் வைத்து உறங்கியிருந்தான் காமேஷ்.

விடியக்காலை... வேகமாக எழுந்து பல் துலக்கி, வாசல் பெருக்கி கோலம் போட வெளிப்பட்டால் கலா. அவர்கள் இருக்கும் வீடு சிட்டியை விட்டு கொஞ்சம் உள்ளே...அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி.

அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த நகரத்தின் ஆக்கிரமிப்புகளிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரு நகரத்தின் மிச்சப்பகுதி.

ஆங்காங்கே தெரியும்.... வீடுகள்..!!

வாசலுக்கு முகம் கழுவி, கோலம் போட கோலப்பொடியை துலாவியபடியே சின்ன விரல்களால் வானத்து நட்சத்திரங்களை தரையில் தற்காலிகமாக இறக்கிவைத்தவண்ணம் இருந்தாள்.

அப்போது, அவள் அருகில் மிகக் கொடிய நாகம் ஒன்று மிக அருகில் வந்து காலருகே நின்றது. புள்ளி வைத்துவிட்டு திரும்பிய அவள், அதனைக் கண்டு அஞ்சி திரும்பி ஓடத் துவங்கினாள்.

வீட்டிற்குள் செல்ல இயலாமல் கதவருகே அது இருந்ததால்...வெளியில் ஓடுவது தவிர வேறு வழியே இல்லை கலாவிற்கு.... பின்னாலேயே பாம்பும் துரத்தியது. அதிகாலை நேரமாதலால் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது.

கலா கலங்கும் நெஞ்சுடன், ஓடிக்கொண்டே இருந்தாள்... ஒரு ஒற்றையடிப்பாதையில் உயிரைப் பணயம் வைத்து...தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை ஒரு கோயிலில் போய் முடிந்தது. ஒரு பழைய கோபுத்தை பார்த்தாள் கலா..
கலா.... கோயிலின் முகப்பினை நெருங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே, பிரகதீஸ்வரர் உருவில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

பின்னால் பாம்பும் விடாமல் துரத்தி வருகிறது. செய்வதறியாது கோயிலுக்குள் நுழைகிறாள் கலா...!!

(ஓட்டம் தொடரும்)

பருவநட்சத்திரங்கள் - பாகம் 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12841)

நேசம்
15-10-2007, 07:44 PM
அடுத்த பாகம் எப்போ வரும் என்று ஆவலை தூண்டிவிட்டது.

மலர்
15-10-2007, 07:44 PM
கவிதாயினி பூமகளே.....
கதையிலும் பிச்சி உதறுரீங்களே.....
ம்...வாழ்த்துக்கள் அக்கா.....

பாம்பும் விடாமல் துரத்தி வருகிறது. செய்வதறியாது கோயிலுக்குள் நுழைகிறாள் கலா...!!

என்னக்கா இது கல்யாண நாள் அதுவுமா....
கலா பாவம் இல்ல....

அப்புறம் என்ன ஆச்சி.........??? ஆர்வமுடன்

அன்புரசிகன்
15-10-2007, 07:51 PM
தொடக்கமே பாம்பாக இருக்கிறது... அது கனவு கினவு இல்லியே... :D :D :D...

அப்புறம் என்னாச்சு???

பூந்தோட்டம்
15-10-2007, 08:32 PM
அடுத்த தொடர் எப்போது? கதை எழுதுவது பற்றி எங்களுக்கும் சொல்லித்தரலாமே..மன்றத்தில் ஏதும் திரி இருந்தால் தாருங்கள் நண்பர்களே

பூமகள்
16-10-2007, 04:55 AM
அடுத்த பாகம் எப்போ வரும் என்று ஆவலை தூண்டிவிட்டது.
மிக்க நன்றிகள் சகோதரர் நேசம். உங்களது உடன் ஊக்கமே என்னை மீண்டும் எழுத வைக்கிறது.
எனது இரண்டாவது கதை இது. நீங்கள் ஆர்வமாக படிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.

கவிதாயினி பூமகளே.....
கதையிலும் பிச்சி உதறுரீங்களே.....
ம்...வாழ்த்துக்கள் அக்கா.....
அப்புறம் என்ன ஆச்சி.........??? ஆர்வமுடன்[/COLOR]
மிகுந்த நன்றிகள் மலரு...!!
எனது இரண்டாவது கதை பயத்துடன் தான் எழுதினேன். உங்களின் ஆர்வத்தைத் தூண்டும் படி இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
அப்படியே குறைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் மன்ற உறவுகளே..!!

பூமகள்
16-10-2007, 04:58 AM
தொடக்கமே பாம்பாக இருக்கிறது... அது கனவு கினவு இல்லியே... :D :D :D...
அப்புறம் என்னாச்சு???
அடுத்த பாகம் எழுதவில்லை இன்னும்.... விரைவில் தர முயல்கிறேன் அன்பு அண்ணா.
அப்புறம் என்னாச்சின்னு சொல்ல மாட்டேனே...!!:icon_rollout: காத்திருங்கள்..!!

அடுத்த தொடர் எப்போது? கதை எழுதுவது பற்றி எங்களுக்கும் சொல்லித்தரலாமே..மன்றத்தில் ஏதும் திரி இருந்தால் தாருங்கள் நண்பர்களே
அடுத்த பாகத்தை விரைவில் தர முயல்கிறேன் பூந்தோட்டம். கதை எழுதுவதில் நானும் கத்துக் குட்டி தான். எனது இரண்டாவது கதை தான் இது.
மன்றத்தில் சிறுகதை, தொடர்கதை ஜாம்பவான்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்...
அவர்கள் நிச்சயம் அம்மாதிரி திரி ஆரம்பிப்பார்கள்..! பொறுப்பாளர்கள் கவனத்திற்கு நான் கொண்டு செல்கிறேன்.
உங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் பூந்தோட்டம்.

யவனிகா
16-10-2007, 06:33 AM
நானும் முதலில் அது கனவாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன்...ஆனால் என்ன செய்வது? பூமகள் கனவல்ல நிஜம்...ன்னு சொல்லியாச்சே...கதையின் இடை இடை வரும் வர்ணணைகள் நன்றாக உள்ளது. கணவன் மனைவியின் அன்யோன்யம் கவிதை போல உள்ளது...பருவ ராகம்...பல்லவியே அரோகணத்தில் அடித்து தூள் கிளப்புது...சரணத்திற்காக யவனிகா வெயிட்டிங்...வாழ்த்துக்களுடன்
யவனிகா.

மதி
16-10-2007, 07:19 AM
ஆரம்பமே அசத்தல்...
கலக்குங்க பூமகள்.. எதிர்பார்ப்பை தூண்டி விட்டுவிட்டீர்.
அடுத்த பாகம் எதிர்நோக்கி...

lolluvathiyar
16-10-2007, 08:33 AM
கனவன் மனைவி சந்தோசமாக களிக்கும் சில உரை நடை காட்சிகளுடன் ஆரம்பிகிறது (புதுமன தம்பதிகளோ)
கதை நடை அருமையாக இருகிறது. வர்னனைகளும் அருமை. கடைசியில் சஸ்பன்ஸ் வைத்து விட்டீர்கள்.

ஒரு சிறு குறிப்பு : பாம்பு தீடிரென தான் தீண்டும். தப்பி ஓடிய இரையை கூட துரத்தாது, அதுவும் அதை கண்டவுடன் ஓடும் மனிதனை கண்டால் பாம்பு வேறு திசையில் தான் ஓடும், துரத்தாது.

பூமகள்
16-10-2007, 09:59 AM
கதையின் இடை இடை வரும் வர்ணணைகள் நன்றாக உள்ளது. பருவ ராகம்...பல்லவியே அரோகணத்தில் அடித்து தூள் கிளப்புது...சரணத்திற்காக யவனிகா வெயிட்டிங்...வாழ்த்துக்களுடன்
யவனிகா.
நன்றிகள் யவனி அக்கா... உங்களின் வாழ்த்துக்களுடன் அடுத்த பகுதியை எழுத ஆரம்பிக்கிறேன்...

(என்ன எழுதறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்...!! :icon_ush:)

பூமகள்
16-10-2007, 10:11 AM
ஆரம்பமே அசத்தல்...
கலக்குங்க பூமகள்.. எதிர்பார்ப்பை தூண்டி விட்டுவிட்டீர்.
அடுத்த பாகம் எதிர்நோக்கி...
நன்றிகள் மதி அண்ணா..
அடுத்த பாகம் விரைவில் தருகிறேன்.
பொறுத்தருளுங்கள்..!!

பூமகள்
16-10-2007, 10:18 AM
கனவன் மனைவி சந்தோசமாக களிக்கும் சில உரை நடை காட்சிகளுடன் ஆரம்பிகிறது (புதுமன தம்பதிகளோ)
கதை நடை அருமையாக இருகிறது. வர்னனைகளும் அருமை. கடைசியில் சஸ்பன்ஸ் வைத்து விட்டீர்கள்.

ஒரு சிறு குறிப்பு : பாம்பு தீடிரென தான் தீண்டும். தப்பி ஓடிய இரையை கூட துரத்தாது, அதுவும் அதை கண்டவுடன் ஓடும் மனிதனை கண்டால் பாம்பு வேறு திசையில் தான் ஓடும், துரத்தாது.
நன்றிகள் வாத்தியார் அண்ணா....!!
திருமணமாகி முதல் வருட மணநாள் கொண்டாடும் தம்பதிகள் என்று கதையில் குறிப்பிட்டிருந்தேனே...!!
பாம்பு பற்றி நான் அறியா விசயத்தைச் சொன்னதற்கு நன்றிகள்..!!
வாத்தியார் நிஜமாவே பாடம் புகட்டிவிட்டார்...!!
நன்றிகள் அண்ணா.

அக்னி
16-10-2007, 12:01 PM
புது மணத் தம்பதியரின், மங்களகரமான உரையாடலோடு,
பூமகளின் கதை மொட்டவிழ்க்கின்றது.
சரளமான நடையில், தளர்ச்சியில்லாத பாங்கு...
ஆனால்,
குடும்பக்கதையா? விறுவிறுப்பான திகில் கதையா? பக்திக்கதையா?
அல்லது எல்லாம் சேர்ந்த புதுக் கலவையா என்று ஊகிக்க முடியவில்லை.

வாசலுக்கு முகம் கழுவி, கோலம் போட கோலப்பொடியை துலாவியபடியே சின்ன விரல்களால் வானத்து நட்சத்திரங்களை தரையில் தற்காலிகமாக இறக்கிவைத்தவண்ணம் இருந்தாள்.

அழகிய உவமானம்...

தகுந்த இடத்தில், வர்ணிப்புக்கள், தொய்வில்லாத நேர்த்தியாக கதை நகருகின்றது...
பாராட்டுக்கள்...

நம்ம முதல் வெட்டிங்க் டே அன்னிக்கி அனாதை இல்லதில் இருக்கும் முதியோர்களைக் கண்டு ஒரு நாள் முழுக்க அவங்களோட இருந்து உணவு கொடுத்து ஆசி வாங்கிட்டு வரனும்னு முடிவு பண்ணினோமே??
முதியவர்கள் பராமரிக்கப்படும் இல்லங்கள் பொதுவாக முதியோர் இல்லம் என்றே அழைக்கப்படுவதுண்டு. அதுவே மிகவும் பொருத்தமானதும் கூட என்று நினைக்கின்றேன்.

தொடரும் பாகங்கள் கண்டு தொடருகின்றேன்...

மீண்டும் பாராட்டுக்கள்...
மென்மேலும் வளர்ச்சியுற வாழ்த்துக்கள்...

யவனிகா
16-10-2007, 12:08 PM
.

ஒரு சிறு குறிப்பு : பாம்பு தீடிரென தான் தீண்டும். தப்பி ஓடிய இரையை கூட துரத்தாது, அதுவும் அதை கண்டவுடன் ஓடும் மனிதனை கண்டால் பாம்பு வேறு திசையில் தான் ஓடும், துரத்தாது.

அண்ணா ஆனாலும் இது ரொம்ப ஓவர், இதே ராம நாராயணன் படத்தில பாம்பு துரத்திட்டு வந்து பழி வாங்கின்னா...நம்புவீங்க..ஏதோ தங்கச்சி பாம்பு ட்விஸ்ட் எல்லாம் வெச்சு கதை எழுதறாளேன்னு பெருமைப் படாம சிறு குறிப்பா எழுதறீங்க...இருங்க உங்கள பாம்பு தொரத்திர மாதிரி கதை எழுதச் சொல்றேன் பூவ*

ஜெயாஸ்தா
16-10-2007, 12:15 PM
அடுத்த பாகத்தையும் சேர்த்து படித்துவிட்டு மொத்தமாக பின்னூட்டம் தர்றேன்....அடுத்த பாகம் எப்போ?

அமரன்
16-10-2007, 12:19 PM
அண்ணா ஆனாலும் இது ரொம்ப ஓவர், இதே ராம நாராயணன் படத்தில பாம்பு துரத்திட்டு வந்து பழி வாங்கின்னா...நம்புவீங்க..ஏதோ தங்கச்சி பாம்பு ட்விஸ்ட் எல்லாம் வெச்சு கதை எழுதறாளேன்னு பெருமைப் படாம சிறு குறிப்பா எழுதறீங்க...இருங்க உங்கள பாம்பு தொரத்திர மாதிரி கதை எழுதச் சொல்றேன் பூவ*
அப்போ பூ கதை விடுதுன்னு சொல்றீங்க...
ஏம்மா பூவு உங்க அக்காவைக் கொஞ்சம் கவனிம்மா..

பூமகள்
16-10-2007, 12:22 PM
குடும்பக்கதையா? விறுவிறுப்பான திகில் கதையா? பக்திக்கதையா?
அல்லது எல்லாம் சேர்ந்த புதுக் கலவையா என்று ஊகிக்க முடியவில்லை.
மீண்டும் பாராட்டுக்கள்...
மென்மேலும் வளர்ச்சியுற வாழ்த்துக்கள்...
எனக்கே இன்னும் புலப்படவில்லை..எப்படி கதையை எடுத்துச் செல்வதென்று..... ஹி ஹி ஹி..!!
உங்களின் வாழ்த்து எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்து அடுத்த பகுதியை இன்னும் அழகாய் தரனும்னு பொறுப்புக் கூட்டுகிறது..!!

மிகுந்த நன்றிகள் அக்னி அண்ணா..!!

பூமகள்
16-10-2007, 12:28 PM
ஏதோ தங்கச்சி பாம்பு ட்விஸ்ட் எல்லாம் வெச்சு கதை எழுதறாளேன்னு பெருமைப் படாம சிறு குறிப்பா எழுதறீங்க...
அப்படி சொல்லுங்க என் யவனி அக்கா....:icon_b: திக்கித்தெணறி.. ஒரு கதை கஸ்டப்பட்டு வேர்வை சிந்தி எழுதியிருக்கேன்.. இதில் பாம்பு துரத்தாது... பல்லி துரத்தான்னு சொல்லிட்டு... வாத்தியாருக்கு வேறு திரியில் வச்சிக்கிறேன் ஆப்பு....!!:icon_rollout: ஹி ஹி..!! :D:D:D:D:D:D

அடுத்த பாகத்தையும் சேர்த்து படித்துவிட்டு மொத்தமாக பின்னூட்டம் தர்றேன்....அடுத்த பாகம் எப்போ?
எனக்கே தெரியலை அன்பரே..!!
விரைவில் தரவிழைகிறேன். :icon_rollout:
உங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள்.

(என்னடா..பார்த்துட்டு சும்மா போயிட்டாங்களே... பின்னூட்டம் இல்லையேன்னு வருத்தப்பட்டேன்.... உங்க பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி... :D)

பூமகள்
16-10-2007, 12:33 PM
அப்போ பூ கதை விடுதுன்னு சொல்றீங்க...
ஏம்மா பூவு உங்க அக்காவைக் கொஞ்சம் கவனிம்மா..
எங்கக்காவுக்கும் எனக்கும் சண்டை மூட்டிவிடலாம்னு அமர் அண்ணா திட்டம் போடறீங்கன்னு தெரியுது..:icon_p: அது நடக்காது....:D:D ஹி ஹி ஹி..!!:D:D:D:D

எங்க அக்கா எது சொன்னாலும் சரியா தான் இருக்கும்...!! :icon_b:
இது எப்படியிருக்கு.......???:rolleyes: ஹா...ஹா.... ஹா..............!! :lachen001::lachen001::lachen001:

யவனிகா
16-10-2007, 12:35 PM
அப்போ பூ கதை விடுதுன்னு சொல்றீங்க...
ஏம்மா பூவு உங்க அக்காவைக் கொஞ்சம் கவனிம்மா..

நீங்க ஏன் அமர்...போட்டுக் குடுக்கறீங்க...கதைன்னா கதை தான் விட முடியும்...இல்லைன்னா அதை உண்மை சம்பவம் பகுதிக்கு மாத்திடுவார்
அன்பு ரசிகன்...

இந்த மாதிரி பேசறவங்கெல்லாம் மூக்கு மேல விரலை வெக்கற மாதிரி அடுத்த பாகத்தை குடுமா பூவு...

தென்னவன்
16-10-2007, 12:35 PM
காத்திருக்கிறேன் மிகுந்த ஆவலுடன் பூமகளே...
அடுத்த பகுதி எப்போது...???

அமரன்
16-10-2007, 03:09 PM
நல்ல ஆரம்பம். அமைதியான வீதியில் திடீரென் முளைத்த வாகனம் புயலென பாய்வது போல முடிச்சு இருக்கீஙக. அடுத்த பாகத்துக்காக ஏக்கத்துடன் காத்திருக்க வைத்து விட்டீர்கள். தொடருங்கள்..பாத்திரப்படைப்பு கவர்ந்துள்ளது. என்னை வம்பிக்கு இழுப்பது போலவும் இருக்கே..

அக்னி
16-10-2007, 03:19 PM
என்னை வம்பிக்கு இழுப்பது போலவும் இருக்கே..
கலகலப்பாய் கதை தொடங்கியபோதே மனதில் நினைத்தேன்,
அமரனைக் கலாய்க்கப்போகின்றாரோ பூமகள் என்று...

பூமகள்
16-10-2007, 03:35 PM
எனக்கு எதுவுமே புரியலையே.....!!:confused::confused:

யாராச்சும் விளக்கமா சொல்லுங்கப்பா......!!:traurig001::traurig001:

பூமகள்
16-10-2007, 03:39 PM
புரிந்துவிட்டது.................
'திரிகோணம்' சென்று வந்தேன்....................எல்லா கலகலப்பும் விளங்கிவிட்டது....!!
இது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று........................!!
அமர் அண்ணாவைக் கலாய்க்க வேண்டுமென்ற திட்டமில்லை...!! இயற்கையே கலாய்க்கச் சொல்லிவிட்டது போலும்...
அக்னி அண்ணா, இனி ஜமாய்க்க வேண்டியது தான்... என்ன சொல்றீங்க????!!! ;)

அறிஞர்
16-10-2007, 05:36 PM
வாழ்த்துக்கள் மேடம்....
இரண்டாம் கதையும் அருமையாக இருக்கிறது.... விரைவில் அடுத்த பாகம் கொடுங்க...

இனியவள்
16-10-2007, 05:58 PM
பூ கதை பயணிக்கும் விதம் அருமை வாழ்த்துக்கள்...

புத்துணர்ச்சியோடு ஆரம்பித்த ஆரம்பம் திகிலோடு
பயணிக்கிறது அடுத்த பாகத்தை ஆவலோடு
எதிர்பார்க்க வைத்திருக்கிறது

சீக்கிரம் தாருங்கள்:)

iniya
16-10-2007, 06:15 PM
நல்ல ஆரம்பத்துடன் நல்ல அர்ணானை பூமகள் பாவம் பாம்பு இப்படி துரத்துகிறதே
அடுத்த பாகத்தை எதிர்பார்த்தபடி.

பூமகள்
16-10-2007, 06:27 PM
வாழ்த்துக்கள் மேடம்....
இரண்டாம் கதையும் அருமையாக இருக்கிறது.... விரைவில் அடுத்த பாகம் கொடுங்க...
மிகுந்த நன்றிகள் அறிஞர் சார்..!!
அடுத்த பாகம் அடுப்பில் இருக்கு.. இறக்கி சுடச்சுட தாரேன் அண்ணா.
இலை போட்டு காத்திருங்கள்... ஹி ஹி...!! :D:D:D:D

பூமகள்
16-10-2007, 06:34 PM
பூ கதை பயணிக்கும் விதம் அருமை வாழ்த்துக்கள்...
சீக்கிரம் தாருங்கள்:)
மிகுந்த நன்றிகள் இனி..!!
உங்களின் அன்பான பின்னூட்டங்கள் என்னை இன்னும் எழுத தூண்டி உற்சாகம் கொடுக்கின்றன.
இதோ விரைவில் பதிக்கிறேன்.

பூமகள்
16-10-2007, 06:35 PM
நல்ல ஆரம்பத்துடன் நல்ல அர்ணானை பூமகள் பாவம் பாம்பு இப்படி துரத்துகிறதே
அடுத்த பாகத்தை எதிர்பார்த்தபடி.
நன்றிகள் iniyaval. உங்களுக்கு பிடித்துப் போனது கண்டு மகிழ்ச்சி.
அடுத்த பாகத்தையும் இதே மெருகோடு கொடுக்க முயல்கிறேன்.

இதயம்
17-10-2007, 05:37 AM
மன்ற கவிமகளின் மற்றுமொரு மகத்தான படைப்பு இந்த மின்னும் "பருவ நட்சத்திரங்கள்..!" கதையின் தொடக்கத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கான அந்நியோன்யத்தை வார்த்தைகளில் வடித்த விதம் மிகவும் யதார்த்தம் (இன்னும் மணமாகாத என் தங்கைக்கு இத்தனை விஷயங்கள் எப்படி புரிந்தது என்று தெரியவில்லை..? அடுத்த முறை அவரிடம் பேசும் போது ஒட்டுக்கேட்கும் பழக்கம் நல்லதல்ல என்று சொல்ல வேண்டும்..!!). வழக்கமாக மனைவிமார்கள் கணவனுக்கு அல்வா தான் அதிகம் கொடுப்பார்கள். இதிலும் பூமகள் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இனி என் மைத்துனர் நிறைய கேசரி சாப்பிட வேண்டியிருக்கும்..!

கதையை அழகான வர்ணனைகளோடு எழுதிய விதம் பூமகளுக்குள் ஒரு கை தேர்ந்த கதாசிரியர் கமுக்கமாக இருப்பதை சொல்லாமல் சொல்லுகிறது. உதா. ஆதவன் ஒளிதல், (அட.. அவர் இல்லைங்க..!), நட்சத்திர கூட்டங்களின் தேடல், வாசலுக்கு முகம் கழுவுதல், வான நட்சத்திரங்கள் கோலப்புள்ளி ஆதல் என்று வர்ணனைகளில் வார்த்தை ஜாலம் காட்டுகிறார். அழகான குடும்ப கதை போல் தம்பதிகளின் அந்நியோன்ய கொஞ்சலோடு ஆரம்பித்த கதை, பாம்பின் படையெடுப்பில் பயப்படுத்தி, திகில் கதையோ என்று திக்குமுக்காட வைக்கிறது. திருப்பங்கள் என்பவை அழகானவை மட்டுமல்ல, பல நேரங்களில் ஆபத்தானவையும் கூட..! ஆபத்தில்லாத வாழ்க்கை இரசனையற்றது. அந்த வகையில் இந்த கதை என்னை மிகவும் இரசிக்க வைக்கிறது. அடுத்தடுத்த பாகங்களுக்காக ஏங்க வைக்கிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பூமகள் கதையை படிச்சா மன்றம் சும்மா அதிருதில்ல..?!!!!

சிவா.ஜி
17-10-2007, 07:02 AM
பூமகள் கதை விடுவதில்...மன்னிக்கவும்...எழுதுவதில் தேர்ந்துவிட்டார்.இயல்பான உரையாடல்கள்...நம்மை நிகழ்வு நடக்கும் வீட்டுக்குள்லேயே கொண்டு செல்கிறது.புதுமணத்தம்பதிகளின் அந்யோன்யம் அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அடுத்த பாகம் தொடர்வதற்கு முன்னால் வைக்கும் முடிச்சு அருமை.டெக்னிக்கில் பாஸாகிவிட்டார்.வாழ்த்துக்கள் தங்கையே.

பூமகள்
17-10-2007, 07:21 AM
நன்றிகள் இதயம் அண்ணா.
உங்களின் விமர்சனத்தினைக் கண்டு மேலும் எழுத தூண்டுகிறது,
மட்டற்ற மகிழ்ச்சி.

பூமகள்
17-10-2007, 07:24 AM
அடுத்த பாகம் தொடர்வதற்கு முன்னால் வைக்கும் முடிச்சு அருமை.டெக்னிக்கில் பாஸாகிவிட்டார். வாழ்த்துக்கள் தங்கையே.
அப்பாடா.... சிவா அண்ணாவிடம் பாஸ் ஆகிவிட்டேன். ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு கூவனும் போல இருக்கு.
ஆனால் இது காலாண்டு தேர்வு தானே... இனி அடுத்து அரையாண்டு உள்ளதே...!! :traurig001:
மீண்டும் பாஸாக முயல்கிறேன்.

praveen
17-10-2007, 09:07 AM
கனவு தான் என்று யூகித்தேன், இரண்டாம் பாகம் வந்துவிட்டதால் அதை பார்த்து பின் கருத்து பதியலாம் என்று பார்த்தால், அதே தான். நான் யூகித்தபடி கதை வருவதால் தொடர்ந்து படிப்பதென்று முடிவு செய்து விட்டேன்.

நல்லா கதை எழுதுகிறீர்கள், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை அனுகினால் ஒரு வாரத்திற்கு இந்த கதையை இழுத்து விடுவார்கள்.

ஓவியன்
18-10-2007, 06:03 AM
மிக நேர்த்தியான கதையோட்டம், கதைக் கருவினை லாவகமாக அந்த கதைக்காட்சி நடைபெறும் இடத்திலிருந்து எழுத முடிவது பாராட்டுக்குரியது. திருமணமான இளம் தம்பதியினரிடையேயான அன்னியோன்ய உறவை, சின்ன சின்ன அன்பு பரிமாறல்களென அதனை வெளிப்படுத்திய விதத்தையும்,
அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த நகரத்தின் ஆக்கிரமிப்புகளிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரு நகரத்தின் மிச்சப்பகுதி.

புற நகர்ப்பகுதி என்பதை கூறிய வார்த்தைப் பிரயோகத்தையும் மிகவும் இரசித்தேன் பூமகள் மனமார்ந்த பாராட்டுக்கள் தங்கைக்கு...!

மிக நேர்த்தியாக இளம் தம்பதியினரிடை, அழகாக பயணித்த கதை திடீரென ஒரு "யூ" வளைவு அடித்து இயக்குனர் ராம நாராயணனின் திரைப்பட ரேஞ்சிலே நாக சர்ப ஓட்டத்திலே முடிந்தது தான் ஏனென விளங்கவில்லை,:confused: எதற்கும் இரண்டாம் பாகத்தை படித்து முடிவெடுப்போம். :)

ஓவியன்
18-10-2007, 06:55 AM
ஒரு சிறு குறிப்பு : பாம்பு தீடிரென தான் தீண்டும். தப்பி ஓடிய இரையை கூட துரத்தாது, அதுவும் அதை கண்டவுடன் ஓடும் மனிதனை கண்டால் பாம்பு வேறு திசையில் தான் ஓடும், துரத்தாது.

எனது அண்ணன் ஒரு தடைவை, பெரிய, மொத்தமான ஒரு நைலோன் கயிறை கையிலே வைத்துக் கொண்டு ஒரு புல்லு நிறைந்த வயல் வரம்பிலே நடந்து வந்தார். கையிலே இருந்த கயிற்றினாலே தான் நடக்க இருக்கும் பாதையின் செறிந்திருந்த புல்களை அடித்துக் கொண்டு வந்தார் அப்போது திடீரென அந்த புல்களின் மறைவிலிருந்த ஒரு நாகப் பாம்புக்கு பட்டு விட அது சீறிக்கொண்டு என் அண்ணைன நோக்கிப் பாய்ந்து சில அடிகள் தூரம் அண்ணனைத் துரத்த அவர் ஒருவாறாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்தார். இது நான் நேரில் பார்த்த சம்பவம். இதற்கு என்ன சொல்கிறீர்கள் வாத்தியாரே...???

மலர்
18-10-2007, 06:57 AM

எனக்கு தெரிந்த அளவில் நாகப்பாம்பு,கருநாகம்,நல்ல பாம்பு இதெல்லாம் விரட்டும்...
தண்ணிப்பாம்பு சாரைப்பாம்பு இதெல்லாம் மனிதர்களை கண்டால் விலகி ஓடும்.....

ஓவியன்
18-10-2007, 07:11 AM
எனக்கு தெரிந்த அளவில் நாகப்பாம்பு,கருநாகம்,நல்ல பாம்பு இதெல்லாம் விரட்டும்...
தண்ணிப்பாம்பு சாரைப்பாம்பு இதெல்லாம் மனிதர்களை கண்டால் விலகி ஓடும்.....

நானும் அப்படித்தான் அறிந்துள்ளேன் மலர்..!

பூமகள்
19-10-2007, 05:36 AM
மிக நேர்த்தியான கதையோட்டம், கதைக் கருவினை லாவகமாக அந்த கதைக்காட்சி நடைபெறும் இடத்திலிருந்து எழுத முடிவது பாராட்டுக்குரியது. திருமணமான இளம் தம்பதியினரிடையேயான அன்னியோன்ய உறவை, சின்ன சின்ன அன்பு பரிமாறல்களென அதனை வெளிப்படுத்திய விதத்தையும்,

புற நகர்ப்பகுதி என்பதை கூறிய வார்த்தைப் பிரயோகத்தையும் மிகவும் இரசித்தேன் பூமகள் மனமார்ந்த பாராட்டுக்கள் தங்கைக்கு...!

மிக நேர்த்தியாக இளம் தம்பதியினரிடை, அழகாக பயணித்த கதை திடீரென ஒரு "யூ" வளைவு அடித்து இயக்குனர் ராம நாராயணனின் திரைப்பட ரேஞ்சிலே நாக சர்ப ஓட்டத்திலே முடிந்தது தான் ஏனென விளங்கவில்லை,:confused: எதற்கும் இரண்டாம் பாகத்தை படித்து முடிவெடுப்போம். :)
ரொம்ப நன்றிகள் ஓவியன் அண்ணா.
கதையடிப்பதில் ஓரளவு முன்னேறியிருப்பது உங்களின் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது.
தொடர்ந்து விமர்சியுங்கள்..!! குறைகளையும் சுட்டுங்களேன்..!! :icon_rollout:

praveen
19-10-2007, 05:50 AM
எனது அண்ணன் ஒரு தடைவை, பெரிய, மொத்தமான ஒரு நைலோன் கயிறை கையிலே வைத்துக் கொண்டு ஒரு புல்லு நிறைந்த வயல் வரம்பிலே நடந்து வந்தார். கையிலே இருந்த கயிற்றினாலே தான் நடக்க இருக்கும் பாதையின் செறிந்திருந்த புல்களை அடித்துக் கொண்டு வந்தார் அப்போது திடீரென அந்த புல்களின் மறைவிலிருந்த ஒரு நாகப் பாம்புக்கு பட்டு விட அது சீறிக்கொண்டு என் அண்ணைன நோக்கிப் பாய்ந்து சில அடிகள் தூரம் அண்ணனைத் துரத்த அவர் ஒருவாறாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து வந்தார். இது நான் நேரில் பார்த்த சம்பவம். இதற்கு என்ன சொல்கிறீர்கள் வாத்தியாரே...???

வாத்தியாரோட சிஷ்யன் நான் சொல்றேன். (நகைச்சுவைக்காக).

பாம்பு நல்லவர்களை விரட்டாதாம்.

வாத்தியாரிடம் PMல் கேட்டதற்கு இவ்வாறு பதில் சொல்லி இதை நான் பதிலாக சொன்னால் ஓவியன் என் மீது கோவித்து கொள்வாரே என்றார்.

உங்களை விட்டு உங்கள் அண்ணனையும் கலாய்த்ததற்கு மண்ணிக்கவும்.

lolluvathiyar
19-10-2007, 07:20 AM
நாகப் பாம்புக்கு என் அண்ணைன நோக்கிப் பாய்ந்து சில அடிகள் தூரம் அண்ணனைத் துரத்த இதற்கு என்ன சொல்கிறீர்கள் வாத்தியாரே...???

பாம்பு தனக்கு ஆபத்து என்று அறியும் பட்சத்தில் எதிரியை நோக்கி சீறி வரும். அது எதிரிய மிரட்ட தான். அருகில் இருந்தால் தாக்கவும் செய்யும், மறுக்கவில்லை. அதன் இடத்திலிருந்து நம்மை தள்ளி போக வைக்க சில அடி தூரம் சீரி வரும். ஆனால் வீடு வரை துரத்தாது. அதன் அந்த இடத்தை விட்டு ஓட தான் பார்க்கும், அதை பார்த்து நாம் அது நம்மை துரத்துகிறதாக தவறாக நினைத்து கொள்வோம்.

ஓவியன் இலங்கையில் நாக பாம்பை யாரும் அடிக்க மாட்டார்களாமே. உன்மையா?

பாம்பு நல்லவர்களை விரட்டாதாம்.

[/COLOR]

என்ன பிரவீன் ஓவியனை விரட்டி இருந்தால் நீங்கள் இப்படி சொல்லலாம். ஆனால் அவருடைய அன்னனை விரட்டி இருப்பதால் இதில் ஏதோ ஓவியரின் சதி இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.

ஓவியன்
29-10-2007, 02:42 PM
ஓவியன் இலங்கையில் நாக பாம்பை யாரும் அடிக்க மாட்டார்களாமே. உன்மையா?. சில பகுதிகளில் அப்படித்தான், ஆனால் நம் பகுதியில் நிலமை தலை கீழ்...

பாம்பை அடித்து ஒழித்தால் தான் நாம் வாழ முடியும் என்ற நிலை...
அதனால் பாம்பென்றால் அடித்துவிட்டு தான் மறு வேலை பார்ப்போம்...!! :)

என்ன பிரவீன் ஓவியனை விரட்டி இருந்தால் நீங்கள் இப்படி சொல்லலாம். ஆனால் அவருடைய அன்னனை விரட்டி இருப்பதால் இதில் ஏதோ ஓவியரின் சதி இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.

ஆகா வாத்தியாரே குடும்பத்துக்குள் குண்டு வீசுறீங்களே...???
இது உங்களுக்கே நல்லா இருக்கா...??? :eek:

ஆதவா
14-11-2007, 04:13 AM
நல்ல தொடக்கம் பூமகள். கலர்புல்லாகவே இருக்கிறது... சிலசமயம், அந்த வர்ணக் கலவைகளே நம்மைக் குழப்பிவிடுகின்றன.

கதை எப்போதும் போல இடையில் ஆரம்பித்து சரியாக நகர்ந்தாலும் சின்ன சறுக்கல்....

////// 'கலா! நாளைக்கு நம்மலோட ஃபஸ்ட் வெட்டிங் ஆனிவெர்சரி. அதனால ஆபிஸ்ல லீவ் போட்டிருக்கேன் டா... நீயும் நானும் நேர கோயிலுக்கு போயிட்டு அப்படியே "அன்பு முதியோர் இல்லம்" போகலாம்! அங்கு ஒரு முக்கியமான ஒருவரை உனக்கு அறிமுகப்படுத்தப் போறேன்.' //////////

இந்த பாரா இங்கே தேவையற்றது. ஏற்கனவே கலாவுக்கு திருமண நாள் என்பதும், முதியோர் இல்லத்திற்குப் போவதும் தெரியும் என்பது உங்கள் முந்தைய வரிகள் சொன்னவை. (மறைமுகமாக) காமேஷ் ஆபீஸுக்கு விடுப்பு எடுப்பதும் கோவிலுக்குப் போவதும் தெரிந்திருக்கவேண்டும்...

வசனங்களுக்குப் பிந்தைய வரிகள் நல்ல வர்ணனை. அழகாக இருக்கிறது

மற்றது இனி அடுத்தடுத்த பாகங்களில் தெளிவாகும்..