PDA

View Full Version : காதல்!!!



aren
15-10-2007, 05:48 PM
காதல் என்ற தலைப்பில் கொஞ்சம் நகைச்சுவையுடன் உங்களுக்குத் தெரிந்த கவிதைகளை எழுதுங்கள். நான்கு வரிகளுக்கு குறைவாக இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் அவசியம் நகைச்சுவை தேவை.

aren
15-10-2007, 05:48 PM
காதல் என்ற
முதல் அடியின்
பிரதிபலிப்பு
வீங்கிய கண்ணம்!!!

aren
15-10-2007, 05:51 PM
காதல் செய்
கலங்கிவிடாதே
ஒரு கண்ணத்தில் விழுந்தால்
மறுகண்ணத்தில் விழாமல் பார்த்துக்கொள்!!!

aren
15-10-2007, 05:52 PM
காதலுக்கு கண்ணில்லை
எனக்கு கொடுக்கவேண்டிய
காதல் கடிதம் அடுத்தவீட்டில்
இன்று என் காதலி, அடுத்தவீட்டின் மருமகள்!!!

aren
15-10-2007, 05:53 PM
காதல் செய்
கல்யாணம் செய்துகொள்ளாதே
காதலித்தவளே
மனைவியாக வருவதாக இருந்தால்!!!

aren
15-10-2007, 05:54 PM
காதல் செய்
பிரம்மச்சாரியாகவே இரு
உன் சம்பளம் கவர்
உன்னிடமே இருக்கும்!!!

சாம்பவி
15-10-2007, 06:51 PM
"காதலா... ! காதலா... ! " இலக்கண வரையறுக... !
ஈறு கெட்ட ;) எதிர் மறை ;) பெயரெச்சம். ;). ! :aetsch013:
நொந்த காதலியின் .......
சொந்த இலக்கணம்... ! :rolleyes:
.

பூமகள்
15-10-2007, 07:18 PM
காதல் செய்
பிரம்மச்சாரியாகவே இரு
உன் சம்பளம் கவர்
உன்னிடமே இருக்கும்!!!
மிச்சப்படுவது சம்பளம் மட்டுமல்ல...!! வாழ்க்கையும் தான்..!!
நல்ல கவி.. வாழ்த்துகள் ஆரென் அண்ணா. :icon_b:

அக்னி
16-10-2007, 04:35 PM
நான் உன் காதலா என்றேன்,
ஏற்றளில்லை என்னை...
நான் அவளைக் காதலி என்றேன்,
ஏற்றுக்கொண்டாள் என்னையல்ல...

இனியவள்
16-10-2007, 04:45 PM
கால் வலிக்க காத்திருந்து
டிக்கெட் வாங்கினேன் - நானும்
காதலியும் படம் பார்க்கவல்ல
என் காதலியும் தோழிகளும்
பார்க்க :D:D

ஓவியன்
16-10-2007, 04:49 PM
காதல் என்ன
கத்தரிக்காயா
ஒன்று பழுதானால்
இன்னொன்று வாங்க...?

அண்ணா இந்த திரியினை தொடர் கவிதைகள் பகுதிக்கு மாற்றினால் என்ன?

சூரியன்
16-10-2007, 04:50 PM
அட இதுவும் நல்லாதானே இருக்கு..
விரைவில் கவிதையோடு வருகிறேன்..

aren
16-10-2007, 04:53 PM
எங்கே வேண்டுமானாலும் மாற்றுங்கள் ஓவியன். என்னை கேட்கவேண்டுமா இதற்கு

aren
16-10-2007, 04:55 PM
காதல் படுத்தும்பாடு
கால் வலிக்க நின்று
ரேஷன் கடையில் அரிசி வாங்கினேன்
காதலியின் குடும்பத்திற்கு!!!

இனியவள்
16-10-2007, 04:55 PM
காதல் என்ன
கத்தரிக்காயா
ஒன்று பழுதானால்
இன்னொன்று வாங்க...?

அண்ணா இந்த திரியினை தொடர் கவிதைகள் பகுதிக்கு மாற்றினால் என்ன?

ஏனுங்க ஓவியன்

காதல் என்ன டீயுப் லைட்டா
ஒன்று உடைஞ்சால் இன்னொன்றை
மாற்ற

இது எப்படி இருக்கு :D

aren
16-10-2007, 04:56 PM
அட இதுவும் நல்லாதானே இருக்கு..
விரைவில் கவிதையோடு வருகிறேன்..


வாங்க சூரியன். உங்களை இங்கே கவிதையுடன் எதிர்பார்க்கிறேன்.

ஓவியன்
16-10-2007, 04:59 PM
எங்கே வேண்டுமானாலும் மாற்றுங்கள் ஓவியன். என்னை கேட்கவேண்டுமா இதற்கு
மிக்க நன்றி அண்ணா!

என் மனங்கவர்
கள்ளியே!
நாயாக உன்
மடி தவழ
பிறப்பெடுப்பேன்
நான்
மறு பிறவி....

அப்போது தானே
உன் காதலனையும்
கடிக்கலாம்......!!! :D

aren
16-10-2007, 05:02 PM
அருமை ஓவியன். இதுதான் கிரேட் டென் ரகசியமா.

ஓவியன்
16-10-2007, 05:02 PM
ஏனுங்க ஓவியன்

காதல் என்ன டீயுப் லைட்டா
ஒன்று உடைஞ்சால் இன்னொன்றை
மாற்ற

இது எப்படி இருக்கு :D

காதலென்ன
டியூப் லைட்டா
இன்னும் உனக்கு
பற்றவில்லையே..?

இது எப்படி இருக்கு :D

aren
16-10-2007, 05:03 PM
ஏனுங்க ஓவியன்

காதல் என்ன டீயுப் லைட்டா
ஒன்று உடைஞ்சால் இன்னொன்றை
மாற்ற

இது எப்படி இருக்கு :D

காதல் என்ன டீயூப் லைட்டா
இத்தனை காலம் எடுக்கிறாய்
புரிந்துகொள்ள!!!

இது எப்படி இருக்கு.

ஓவியன்
16-10-2007, 05:03 PM
அருமை ஓவியன். இதுதான் கிரேட் டென் ரகசியமா.

ஹீ,ஹீ!!

காதலிச்சா ஓவியன்
கடிச்சா
கிரேட் டேன்...!! :D

iniya
16-10-2007, 05:04 PM
காதல் !!

காதல் சிரிப்பில் தொடங்கும்
அழுகையில் முடியும்!

காதல்
சிலருக்கு மட்டுமே
சித்திரம் போன்ற தாஜ்மகால்
பலருக்கு????
தன்னம் தனியனாய்.......
ஒற்றைப்போர்வைக்குள்
முகம் புதைத்து
ஓவென்று அழுது
உலகம் அறியாமல்...
தனக்குத்தானே கல்லறை கட்டி
தன்னை அதனுள் புதைத்து
மண்ணை மூடும்
சிறகொடிந்த சிட்டுக்குருவி!

ஓவியன்
16-10-2007, 05:05 PM
காதலென்ன
டியூப் லைட்டா
இன்னும் உனக்கு
பற்றவில்லையே..?

இது எப்படி இருக்கு :D


காதல் என்ன டீயூப் லைட்டா
இத்தனை காலம் எடுக்கிறாய்
புரிந்துகொள்ள!!!

இது எப்படி இருக்கு.

ஆகா ஆரென் அண்ணா.....!
எப்படி இப்படி.......?
ஷேம் திங்கிங்.....!!! :)

பூமகள்
16-10-2007, 05:05 PM
காதலென்ன
டியூப் லைட்டா
இன்னும் உனக்கு
பற்றவில்லையே..?

இது எப்படி இருக்கு :D
காதலென்ன
டியூப் லைட்டா? -அது
எப்போ கண்ணில் சிவிச் தட்டுதோ
இதயத்தில் எரியும் - டார்ச் லைட்...!!

(இது எப்படியிருக்கு ஓவியன் அண்ணா?? :D:D:D:D)

இனியவள்
16-10-2007, 05:06 PM
காதலென்ன
டியூப் லைட்டா
இன்னும் உனக்கு
பற்றவில்லையே..?

இது எப்படி இருக்கு :D

நீ ஓரு டீயுப் லைட்
நான் உன்னை எரிய வைக்கும்
மின்சாரம் வைச்சுக்காதே என்
கூட பைட் பண்ணிடுவேன்
பவர் கட் :D:D:D:D:D


இது எப்படி இருக்கு :icon_rollout:

aren
16-10-2007, 05:06 PM
புதிதாக காதலிக்க ஆரம்பித்த இளைஞன் ஹெல்மெட்டுடன்
பார்த்த இன்னொருவன் கன்னத்தைத் தடவிக்கொண்டே
இந்த ஐடியா முன்பே தெரியவில்லையே!!!

ஓவியன்
16-10-2007, 05:07 PM
[COLOR="Red"](இது எப்படியிருக்கு ஓவியன் அண்ணா?? :D:D:D:D)

இப்போது எனக்கு பவர் கட்.........!!! :D

aren
16-10-2007, 05:09 PM
பவர்கட் செய்தாலும்
பாட்டரியுடன் வருவேன்
பளிச்சென்று காதலைச் சொல்ல!!!

ஓவியன்
16-10-2007, 05:09 PM
நீ ஓரு டீயுப் லைட்
நான் உன்னை எரிய வைக்கும்
மின்சாரம் வைச்சுக்காதே என்
கூட பைட் பண்ணிடுவேன்
பவர் கட் :D:D:D:D:D


இது எப்படி இருக்கு :icon_rollout:

காதலென்ன
கம்மர் கட்டா
கடித்து துப்ப...

காதலென்ன
பவர் கட்டா
காலை வார..

அக்னி
16-10-2007, 05:10 PM
காதல்...
காணாமல் போகாமலே
தேடவைக்கும்,
தேடல்...

அக்னி
16-10-2007, 05:11 PM
காதல்
ஒரு டாய்லட் மாதிரி...
அதுக்குள்ள
நுழையாதவங்களே கிடையாது...

பூமகள்
16-10-2007, 05:12 PM
காதல்
ஒரு டாய்லட் மாதிரி...
அதுக்குள்ள
நுழையாதவங்களே கிடையாது...
அக்னி அண்ணா.... இது ஓவரு.......................!!

ஓவியன்
16-10-2007, 05:12 PM
புதிதாக காதலிக்க ஆரம்பித்த இளைஞன் ஹெல்மெட்டுடன்
பார்த்த இன்னொருவன் கன்னத்தைத் தடவிக்கொண்டே
இந்த ஐடியா முன்பே தெரியவில்லையே!!!

தலையை மூட
ஹெல்மெட்டு
ஊர் வாயை மூட
காதலா......??? :redface:

aren
16-10-2007, 05:12 PM
தேடல் இருந்தாலே ஏக்கம் வரும்
ஏக்கம் இருந்தால் அதுவே காதலாக மாறும்
அடி வாங்கினால் ஒருதலை
ஏற்றுக்கொண்டால் ஒருயிர்!!!

அமரன்
16-10-2007, 05:12 PM
காதல்
ஒரு டாய்லட் மாதிரி...
அதுக்குள்ள
நுழையாதவங்களே கிடையாது...
கொஞ்சி விளையாடும்
சலனம் மிகுந்த
கிராமத்துக் காதல்
கணடதில்லையோ நீவிர்.

ஓவியன்
16-10-2007, 05:13 PM
காதல்
ஒரு டாய்லட் மாதிரி...
அதுக்குள்ள
நுழையாதவங்களே கிடையாது...

அப்போ நுளைந்தவங்க எல்லாம் வெளியே வந்துடுவாங்க, அதற்குள்ளேயே இருக்க மாட்டாங்க என்று சொல்லுறீங்களா...??? :icon_rollout:

aren
16-10-2007, 05:13 PM
காதல்
ஒரு டாய்லட் மாதிரி...
அதுக்குள்ள
நுழையாதவங்களே கிடையாது...

காதல்
செய்பவர்கள் அனைவரும்
தூய்மைப்படுத்தப் பட்டவர்களா
தூய்மைப்படுத்தப் படவேண்டியவர்களா!!!

அமரன்
16-10-2007, 05:14 PM
காதலென்ன
டியூப் லைட்டா
இன்னும் உனக்கு
பற்றவில்லையே..?

இது எப்படி இருக்கு :D
எப்படிப் பற்றும்
நீ தரும் சக்தி
பற்றாத வரை..!

ஓவியன்
16-10-2007, 05:14 PM
கொஞ்சி விளையாடும்
சலனம் மிகுந்த
கிராமத்துக் காதல்
கணடதில்லையோ நீவிர்.

அவங்களுக்கு
மாமரமும் ஆலமரமும்
டாய்லெட்டாகுமாம்.... :)

aren
16-10-2007, 05:16 PM
சக்தி பற்றவில்லையா
சக்தியை புரிந்துகொள்ளவில்லையா
புரிந்துகொண்டால் காதல்
புரிந்துகொள்ளவிட்டால் மோதல்!!!

அக்னி
16-10-2007, 05:16 PM
அக்னி அண்ணா.... இது ஓவரு.......................!!
டாய்லட்
அப்படீன்னா...
toy - விளையாட்டு
லட் - லட்டு
இனிமையான விளையாட்டு...
அந்த விளையாட்டில் ஈடுபடாதவர்களே கிடையாது என்று
அர்த்தப்படும்...

செருப்பூ வரமுதல் ஓடிடு அக்னி...

ஓவியன்
16-10-2007, 05:17 PM
எப்படிப் பற்றும்
நீ தரும் சக்தி
பற்றாத வரை..!

சக்தி
சத்தியானது
சக்தி!
உன் சக்தி
மிகு அடியால்...

அமரன்
16-10-2007, 05:18 PM
டாய்லட்
அப்படீன்னா...
toy - விளையாட்டு
லட் - லட்டு
இனிமையான விளையாட்டு...
அந்த விளையாட்டில் ஈடுபடாதவர்களே கிடையாது என்று
அர்த்தப்படும்...

செருப்பூ வரமுதல் ஓடிடு அக்னி...

டு விட்டுப் பேசினால்
காதல் உம்முடன் விடும்
டூ..
போடும் டூ லெட்.
கொஞ்சம் டூ மச்சோ

பூமகள்
16-10-2007, 05:20 PM
டாய்லட்
அப்படீன்னா...
toy - விளையாட்டு
லட் - லட்டு
இனிமையான விளையாட்டு...
அந்த விளையாட்டில் ஈடுபடாதவர்களே கிடையாது என்று
அர்த்தப்படும்...

நல்ல பிரசண்ட்ஸ் ஆஃப் மைண்ட் வச்சி சமாளிச்சிட்டீங்க அக்னி அண்ணா...!!:icon_b:
வாழ்த்துகள்...!! :D:D

செருப்பூ வரமுதல் ஓடிடு அக்னி...
வரும்... வரும்.... பூ........................வோடு தான் வரும்....!! தப்ப முடியாது...!! :sauer028:

ஓவியன்
16-10-2007, 05:20 PM
டு விட்டுப் பேசினால்
காதல் உம்முடன் விடும்
டூ..
கொஞசம் டூ மச்சோ!

டூ விட்டாலும்
கொஞ்சம் மச்சானால்
அது காதலே........!

அமரன்
16-10-2007, 05:22 PM
அவங்களுக்கு
மாமரமும் ஆலமரமும்
டாய்லெட்டாகுமாம்.... :)
ஆலும் மாவும்
காதலுக்கு உறுதி..
ஆனாலும்
லேட்டாகுமா "டாய்"
அப்பனிடமிருந்து....!

பூமகள்
16-10-2007, 05:22 PM
டு விட்டுப் பேசினால்
காதல் உம்முடன் விடும்
டூ..
போடும் டூ லெட்.
கொஞ்சம் டூ மச்சோ
ஊடலில் டூ விட்டாலும்
கூடலில் டும்டும்டும்
ஆகும்... காதல்
டூயட் பாடும்..!!

aren
16-10-2007, 05:22 PM
காதலனை
பிரம்மச்சாரிகள்
துரத்தி அனுப்பினார்கள்
அவர்கள் கிளப்பில் இடம் இல்லாததால்!!!

அக்னி
16-10-2007, 05:23 PM
கொஞ்சம் டூ மச்சோ
two மனம் match ஆனால்தானே,
காதலே...

aren
16-10-2007, 05:24 PM
ஊடலில் டூ விட்டாலும்
கூடலில் டும்டும்டும்
ஆகும்... காதல்
டூயட் பாடும்..!!

காதல் டூயட் பாடும்
காதலியின் அண்ணன்
கரகோஷம் இசைப்பான்
காதலனின் முதுகில்!!!

aren
16-10-2007, 05:25 PM
two மனம் match ஆனால்தானே,
காதலே...

two பணம் match ஆனால்தானே
காதலே!!!

ஓவியன்
16-10-2007, 05:26 PM
ஆலும் மாவும்
காதலுக்கு உறுதி..
ஆனாலும்
லேட்டாகுமா "டாய்"
அப்பனிடமிருந்து....!

கண்டவளையும்
காதலிக்காதே
"டாய்" போடா(த)
அப்பன் பொண்ணா
பார்த்துக் காதலி....! :)

aren
16-10-2007, 05:27 PM
கண்டவளையும்
காதலிக்காதே
"டாய்" போடா(த)
அப்பன் பொண்ணா
பார்த்துக் காதலி....! :)

காதலியின் அப்பா
டாய் சொல்லலாம்
காதலன் காதலியின்
அப்பாவை டாய் சொல்லமுடியுமா!!!

இனியவள்
16-10-2007, 05:27 PM
காதலன் மூதுகில்
ஓற்றைச் சாவாரி
செய்யும் கருங்குயில்
நீதானோ :icon_rollout:

அமரன்
16-10-2007, 05:28 PM
two மனம் match ஆனால்தானே,
காதலே...
கொஞ்சம் இருந்ததால்
too much
கொஞ்சும் இருந்திருந்தால்
two மனம் match
*******************************

two மனம் match
(காதல்..)
இருபக்க வெற்றி

அதுவே
too much ஆனால்
two மனம் match
(மோதல்...)
ஒருபக்க வெற்றி

ஓவியன்
16-10-2007, 05:28 PM
காதல் டூயட் பாடும்
காதலியின் அண்ணன்
கரகோஷம் இசைப்பான்
காதலனின் முதுகில்!!!

பின் காதலனும்
கரகோசமிடுவான்
தன் தங்கை
பின் தொடர்கையில்
அவன் முதுகிலும்....:D

இனியவள்
16-10-2007, 05:28 PM
காதலியின் அப்பா
டாய் சொல்லலாம்
காதலன் காதலியின்
அப்பாவை டாய் சொல்லமுடியுமா!!!

என் அப்பாவை நீ
டாய் சொன்னால் நான்
சொல்வேன் குட்பாய் :D

aren
16-10-2007, 05:29 PM
கருங்குயில்
நீயாக இருந்தாலும்
என்னை காதலிக்கும்
ஒரே ஜீவன் நீ!!!

(காதலிக்க ஆள் கிடைக்காமல் நொந்து போனவன்)

அமரன்
16-10-2007, 05:30 PM
கண்டவளையும்
காதலிக்காதே
"டாய்" போடா(த)
அப்பன் பொண்ணா
பார்த்துக் காதலி....! :)
அப்பதான் உனக்கு
வசதி
பாய் பாய் சொல்ல...!

ஓவியன்
16-10-2007, 05:30 PM
என் அப்பாவை நீ
டாய் சொன்னால் நான்
சொல்வேன் குட்பாய் :D

நீ எனை
குட் போய் என்றதால்...
நான் குட்பாய் சொன்னேன்
என் மாஜிக் காதலிக்கு.....! :D

அக்னி
16-10-2007, 05:30 PM
அப்பதான் உனக்கு
வசதி
பாய் பாய் சொல்ல...!
அப்போ
கேர்ள் கேர்ள்
யார் சொல்வா..?

aren
16-10-2007, 05:31 PM
என் அப்பாவை நீ
டாய் சொன்னால் நான்
சொல்வேன் குட்பாய் :D

காதலி சொல்லலாம் குட்பாய்
அப்பா சொல்வார் பேட்பாய்
பின்னர் இருவரும் சொல்வார்கள்
குட்பை!!!

ஓவியன்
16-10-2007, 05:32 PM
அப்பதான் உனக்கு
வசதி
பாய் பாய் சொல்ல...!

நான் பாய் பாய் சொல்ல
அநியாயமாகக் பாய்ந்து
கலக்கி விட்டாயேயடா
என் வீட்டுக் கிணற்றை..

அமரன்
16-10-2007, 05:33 PM
அப்போ
கேர்ள் கேர்ள்
யார் சொல்வா..?
காதலில் கலக்கும்நணபனே..
தெரியவில்லையா உனக்கு
பாய்தான் சொல்வான்.
அவள் முடியை பார்த்து
அவள் முடிவைப் பார்த்து.

aren
16-10-2007, 05:33 PM
நீ எனை
குட் போய் என்றதால்...
நான் குட்பாய் சொன்னேன்
என் மாஜிக் காதலிக்கு.....! :D

நீ என்னை குட்பாய் என்றாய்
நான் குட்பை சொன்னேன் என் பழைய காதலிக்கு
நீ எனக்கு குட்பை என்று சொல்லப்போவது தெரியாமல்!!!

ஓவியன்
16-10-2007, 05:34 PM
அப்போ
கேர்ள் கேர்ள்
யார் சொல்வா..?

சொல்லிப் பாருங்கோ
விளைவுகள் விபரீதமாயிருக்கும்.......! :D

aren
16-10-2007, 05:35 PM
நான் பாய் பாய் சொல்ல
அநியாயமாகக் பாய்ந்து
கலக்கி விட்டாயேயடா
என் வீட்டுக் கிணற்றை..

கிணற்றை வெட்ட பூதம் கிளம்பியது என்பார்கள்
நான் என் காதலியின் கைப்பையை கிளற
கிடைத்தது என் காதலியின் கள்ளக்காதலன் கடிதம்!!!

அமரன்
16-10-2007, 05:35 PM
நான் பாய் பாய் சொல்ல
அநியாயமாகக் பாய்ந்து
கலக்கி விட்டாயேயடா
என் வீட்டுக் கிணற்றை..
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தைகள் இல்லயடி
பாழும் கிணற்றில் விழவிடாது
சத்தமாய் எச்சரித்தாயே..!

ஓவியன்
16-10-2007, 05:35 PM
நீ என்னை குட்பாய் என்றாய்
நான் குட்பை சொன்னேன் என் பழைய காதலிக்கு
நீ எனக்கு குட்பை என்று சொல்லப்போவது தெரியாமல்!!!

இப்போது இந்த திரிக்கு குட் பை...
ரொம்பவே பசிக்குது!. :)

aren
16-10-2007, 05:35 PM
சொல்லிப் பாருங்கோ
விளைவுகள் விபரீதமாயிருக்கும்.......! :D

ஏன், அவர்கள் கேர்ள் என்று அவர்களுக்கேத் தெரியாதா

aren
16-10-2007, 05:37 PM
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தைகள் இல்லயடி
பாழும் கிணற்றில் விழவிடாது
சத்தமாய் எச்சரித்தாயே..!

பாழும் கிணற்றில் விழுந்திருக்கலாம்
இப்பொழுது என்னை கல்யாணம் செய்ய
சம்மதமா என்கிறாயே!!!

இனியவள்
16-10-2007, 05:43 PM
உனக்கு சொன்னேன் ஹாய்
எனக்கு சொன்னாய் டேய்
போடி நீ ஓரு பேய்

இனியவள்
16-10-2007, 05:45 PM
பாழும் கிணற்றில் விழுந்திருக்கலாம்
இப்பொழுது என்னை கல்யாணம் செய்ய
சம்மதமா என்கிறாயே!!!

கிணற்றி விழ இருந்த
உன்னைக் காப்பாற்றியதற்காய்
உன் சமையல் சாப்பிட
வைத்தே கொள்கிறாயே என்னை
போதுமடி உன் தண்டணை

ஓவியன்
21-02-2008, 12:29 PM
மோதலும்
சாதலுமில்லை
காதல்,
வாழ்தலும்
வாழ வைத்தலுமே
காதல்........!!

மன்மதன்
21-02-2008, 01:38 PM
கிணற்றை வெட்ட பூதம் கிளம்பியது என்பார்கள்
நான் என் காதலியின் கைப்பையை கிளற
கிடைத்தது என் காதலியின் கள்ளக்காதலன் கடிதம்!!!

மனைவிக்குத்தானே கள்ளக்காதல்.. காதலிக்கு எப்படி கள்ளமாகும்..:D:D

ஓவியன்
21-02-2008, 09:57 PM
மனைவிக்குத்தானே கள்ளக்காதல்.. காதலிக்கு எப்படி கள்ளமாகும்..:D:D

ஆஹா, வந்திட்டார் விளக்கம் வீராச்சாமி.........!!!

அரென் அண்ணோவ், கேட்கிறாரில்லை பதில் சொல்லுங்கோவன்....!! :D

மன்மதன்
22-02-2008, 03:04 PM
ஒருத்தன் வாழ்க்கையிலே
யமன் வந்தா
அவன் உயிர் மட்டும்தான் போகும்..
ஆனால் வுமன் வந்தா ..
உயிர் மட்டும்தான் இருக்கும்..

மன்மதன்
22-02-2008, 03:14 PM
அவள் என்னைப்பார்த்து சிரித்தாள்
கன்னத்தில் குழி விழுந்தது.
நான் அவளைப்பார்த்து சிரித்தேன்.
கன்னத்தில் அடி விழுந்தது..


(என்ன கொடும சார் இது..!)

aren
22-02-2008, 03:56 PM
ஒருத்தன் வாழ்க்கையிலே
யமன் வந்தா
அவன் உயிர் மட்டும்தான் போகும்..
ஆனால் வுமன் வந்தா ..
உயிர் மட்டும்தான் இருக்கும்..

அடுத்த தடவை சென்னை வந்தால் உங்கள் வீட்டிற்கு வரவேண்டும்.

ஹிஹி, ஒன்னுமே சொல்லமாட்டேங்க.

aren
22-02-2008, 03:56 PM
அவள் என்னைப்பார்த்து சிரித்தாள்
கன்னத்தில் குழி விழுந்தது.
நான் அவளைப்பார்த்து சிரித்தேன்.
கன்னத்தில் அடி விழுந்தது..


(என்ன கொடும சார் இது..!)

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னை மாதிரியே சிலரும் இங்கே இருக்கிறார்களே.

அனுராகவன்
23-02-2008, 12:40 AM
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னை மாதிரியே சிலரும் இங்கே இருக்கிறார்களே.

அப்படியா..!!
அப்ப காதல் கனிந்ததா..!
சந்தோசம் உனக்கும் மட்டும்தானா.!
அப்ப அவங்களுக்கு இல்லையா.(காதலி)!

ஓவியன்
23-02-2008, 12:49 AM
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னை மாதிரியே சிலரும் இங்கே இருக்கிறார்களே.

உங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே, அடுத்த முறை வீட்டுக்கு வரும்போது அண்ணியிடம் முறையாகப் போட்டுக் கொடுக்கின்றேன் - கவலை வேண்டாம்...!! :D

அனுராகவன்
23-02-2008, 01:08 AM
நானும் அண்ணியிக்கிட்ட சொல்லுரேன்..
அப்ப உங்கள் விளையாட்டுக்கு ஒரு முடிவு வருமில்ல..