PDA

View Full Version : ♔. 'பஞ்ச்' கவிதை..!Pages : [1] 2 3

ராஜா
15-10-2007, 07:33 AM
வணக்கம் நண்பர்களே..!

நம் மன்றத்தில் கவிஞர்கள் அதிகமென்று தெரியும்..

அவர்களைக் குறிவைத்து இதோ ஒரு புதிய திரி..

தினம் [?] ஒரு வேடிக்கைப் படத்தை நான் இங்கு இடுகிறேன்.. அதற்கு நம் கவிச்செல்வங்கள் ஒவ்வொருவரும் தம் கற்பனைக்கேற்றபடி கலக்கலா, கலாட்டாவா, கச்சிதமா நான்கே வரிகளில் ஒரு பஞ்ச் கவிதை எழுதி அசத்தணும்..!

கவிதை நகைச்சுவையா, கிண்டலா, குறும்புத்தனமா இருந்தா நல்லா இருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும்தானே..?

தயாரா..? படம் போடட்டுமா..?

அமரன்
15-10-2007, 07:37 AM
போடுங்கள்..போடுங்கள்... கரும்பு தின்னக் கசக்குமா...

kavitha
15-10-2007, 07:42 AM
விளையாட்டுக்கு நானும் தயார்.

பூமகள்
15-10-2007, 07:49 AM
அருமையான சிந்தையுள்ள விளையாட்டு..!!
இன்னுமொரு படக்கவிச்சமர் ஆரம்பம்...!!
இனிதே துவங்குவோம்...
கவிஞர்கள் தயார்...!!
படம் தயாரா அண்ணா??

ராஜா
15-10-2007, 07:51 AM
http://www.gii.in/fun/images/nasa_sponsor.JPG

__________________________________________________________

ஸ்பான்சர் அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போயிருச்சு..!

அக்னி
15-10-2007, 07:53 AM
அட இன்னுமோர் வெற்றித்திரியா?
பலே... நானும் முயற்சிக்கின்றேன்...

கரும்பு தின்னக் கசக்குமா...
இல்லை அமரரே (ஆவியாய் அலைவதால்)...
கரும்பு என்பது இனிப்பானது. இதனிலிருந்தும் சீனி (சர்க்கரை) தயாரிப்பார்கள். தவிர கரும்பை அப்படியே சாப்பிட முடியாது. சப்பி சாறை விழுங்கி, பின்னர் சக்கையைத் துப்பி விட வேண்டும். கரும்புச்சாறு மிகவும் இனிக்கும்.
இது கூடத் தெரியாம இருக்காரு அமரன்... புரிஞ்சுதா..???:mini023:

ராஜா
15-10-2007, 07:56 AM
அருமையான சிந்தையுள்ள விளையாட்டு..!!
இன்னுமொரு படக்கவிச்சமர் ஆரம்பம்...!!
இனிதே துவங்குவோம்...
கவிஞர்கள் தயார்...!!
படம் தயாரா அண்ணா??

அடடா..!

இதுபோல ஏற்கனவே ஒரு திரி இருக்கா..?

மன்னியுங்கள்.. அப்படி இருப்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது..

மேற்பார்வையாளர்களே.. அறிவுரை வழங்குங்கள்..

இந்தத் திரியை முற்றுப்பெறச் செய்து ஏற்கனவே இருக்கும் திரியுடன் இணைத்துவிடலாமா..? அல்லது இப்படியே தொடரலாமா..?

அக்னி
15-10-2007, 07:57 AM
ஸ்பான்சர் அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போயிருச்சு..!

செவ்வாய்க்கு விண்கலம்
புறப்படத் தயார்...
தின்பண்டம் முடிந்துவிட்டதாம்...
அங்கு "மக்டொனால்ட்ஸ்" இல்...

பூமகள்
15-10-2007, 08:01 AM
அடடா..!

இதுபோல ஏற்கனவே ஒரு திரி இருக்கா..?

மன்னியுங்கள்.. அப்படி இருப்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது..

மேற்பார்வையாளர்களே.. அறிவுரை வழங்குங்கள்..

இந்தத் திரியை முற்றுப்பெறச் செய்து ஏற்கனவே இருக்கும் திரியுடன் இணைத்துவிடலாமா..? அல்லது இப்படியே தொடரலாமா..?
ராஜா அண்ணா....
மன்னியுங்கள்..!
கவிச்சமர் தான் ஏற்கனவே உள்ளது. அதைத்தான் குறிப்பிட வந்தேன்.
இது புதுமையாக படத்தை வைத்து கவிச்சமர் என்று சொல்ல வந்தேன்..!!
இது போல் ஏற்கனவே இல்லையென்று கருதுகிறேன்.
பொறுப்பாளர்கள் உதவுவார்கள் அண்ணா.

அக்னி
15-10-2007, 08:03 AM
ஆமா பூமகள் சொல்வதுபோல்...
படம் சார்ந்த இன்னுமொரு கவிச்சமர்தான்...
வெற்றிபெற வாழ்த்துகின்றேன்...

பூமகள்
15-10-2007, 08:11 AM
"இண்டல் இன்சைட்
மெண்டல் அவுட்சைட்"

"பாவையர் மட்டும் உள்ளே..!!
பரானநாதர்கள் வெளியே..!!
செவ்வாயில் சேலை
வாங்க.....!!-தீபாவளி வருதே..!!"

அமரன்
15-10-2007, 08:20 AM
"ராக்கெட் வேகத்தில்
எமது தரவுயர்ச்சி"
மின் தடை சதியால்
"வீழ்ச்சி உங்களுக்கு"

ராஜா
15-10-2007, 08:22 AM
"இண்டல் இன்சைட்
மெண்டல் அவுட்சைட்"

"பாவையர் மட்டும் உள்ளே..!!
பரனானநாதர்கள் வெளியே..!!
செவ்வாயில் சேலை
வாங்க.....!!-தீபாவளி வருதே..!!"


முதல் இன்னிசை எங்கள் "செல்லக்குயிலி"டமிருந்தா..? மகிழ்ச்சி..!

அடடா.. இப்போதான் நினைவுக்கு வருது.. தீபாவளி வருதில்லே..?

அக்னி
15-10-2007, 08:23 AM
"இண்டல் இன்சைட்
மெண்டல் அவுட்சைட்"

"பாவையர் மட்டும் உள்ளே..!!
பரனானநாதர்கள் வெளியே..!!
செவ்வாயில் சேலை
வாங்க.....!!-தீபாவளி வருதே..!!"
ஏம்மா... இது நல்லாருக்கா...
கவிதை சரி... அதுக்குமேலே ஒரு அடைமொழி தேவையா..?

பாவையர் உள்ளே...
பாவியர் வெளியே...
தீபாவளிக்காய் சேலை வாங்க
சென்றவளைக் காணவில்லை...
பிரபஞ்சம் முழுதும் தேடிச்செல்கின்றேன்...
விண் ஓடத்தில்... ஒட்டாண்டியாக...

அக்னி
15-10-2007, 08:24 AM
முதல் இன்னிசை எங்கள் "செல்லக்குயிலி"டமிருந்தா..? மகிழ்ச்சி..!

அடடா.. இப்போதான் நினைவுக்கு வருது.. தீபாவளி வருதில்லே..?
நான் தான் முதல்ல போட்டேன்... (பதிவு #8 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=285660&postcount=8))
இது சரியில்லை ராஜா அண்ணா...

ராஜா
15-10-2007, 08:24 AM
"ராக்கெட் யுகத்தில்
ராக்கெட் வேகத்தில்
எமது தரவுயர்ச்சி"

ஆளில்லா வெளியில்
அட்டகாச சந்திரர்கள்.

"உரிஞ்சும் எங்களால்
வீழ்ச்சி உங்களுக்கு"

நேரம் பார்த்து-கழுத்
தறுத்த "மின்சாரம்".

புரிந்தும் புரியாமலும்
மன்னவர்கள்
தொலைக்காட்சி முன்...

அமரரே[றே]..

அதிகபட்சம் 4 வரிகள் மட்டுமே.. கவனிக்க மறந்தீரோ..?

பூமகள்
15-10-2007, 08:27 AM
நான் தான் முதல்ல போட்டேன்... (பதிவு #8 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=285660&postcount=8))
இது சரியில்லை ராஜா அண்ணா...
:D:D:D:D:D:D:D:D:D

ராஜா
15-10-2007, 08:28 AM
செவ்வாய்க்கு விண்கலம்
புறப்படத் தயார்...
தின்பண்டம் முடிந்துவிட்டதாம்...
அங்கு "மக்டொனால்ட்ஸ்" இல்...

ஓ.. மக்டொனால்ட்ஸ் ஊர்தியா அது..?

நல்ல கற்பனை.. எதிர்காலத்தில் உண்மையாகக் கூடும்.. !

விண்கலம் வேகமாய்க் கிளம்ப முதலில் வெளிப்பட்டு உதவிய அக்னியைக் கவனிக்க மறந்தேனே..! விண்கலம் கிளம்பிய மகிழ்வில்..!!

நன்றி அக்னியாரே..!

அமரன்
15-10-2007, 08:30 AM
இன்னொன்று...

ஆக்கிரமிப்பாளர்கள்
படை எடுக்கின்றனர்
விண்வெளி நோக்கி....

kavitha
15-10-2007, 08:34 AM
"இண்டல் இன்சைட்
மெண்டல் அவுட்சைட்"

"பாவையர் மட்டும் உள்ளே..!!
பரனானநாதர்கள் வெளியே..!!
செவ்வாயில் சேலை
வாங்க.....!!-தீபாவளி வருதே..!!"

பாவையர் உள்ளே...
பாவியர் வெளியே...
தீபாவளிக்காய் சேலை வாங்க
சென்றவளைக் காணவில்லை...
பிரபஞ்சம் முழுதும் தேடிச்செல்கின்றேன்...
விண் ஓடத்தில்... ஒட்டாண்டியாக...

சபாஷ்! சரியான நகைச்சுவைப்போட்டி!
ஏம்மா பூமகள்.. சேலை வாங்க இங்கே இருக்கிற கூட்டம் போதாதா?

ராஜா
15-10-2007, 08:39 AM
ஏம்மா... இது நல்லாருக்கா...
கவிதை சரி... அதுக்குமேலே ஒரு அடைமொழி தேவையா..?

பாவையர் உள்ளே...
பாவியர் வெளியே...
தீபாவளிக்காய் சேலை வாங்க
சென்றவளைக் காணவில்லை...
பிரபஞ்சம் முழுதும் தேடிச்செல்கின்றேன்...
விண் ஓடத்தில்... ஒட்டாண்டியாக...

விண்கலத்தில் எந்த ஓட்டாண்டி போக முடியும் அக்னியாரே..?

:lachen001::aetsch013::lachen001::aetsch013::lachen001::aetsch013:

ராஜா
15-10-2007, 08:42 AM
இன்னொன்று...

ஆக்கிரமிப்பாளர்கள்
படை எடுக்கின்றனர்
விண்வெளி நோக்கி....

சூப்பர்..!

டி.வி. நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பாளர்கள்... விளம்பரதாரர்கள்தானே..?

அங்கேயும் படையெடுக்கிறார்கள் என்பது வித்தியாசமான சிந்தனைதான் அமர்..!

அக்னி
15-10-2007, 08:45 AM
விண்கலத்தில் எந்த ஓட்டாண்டி போக முடியும் அக்னியாரே..?

:lachen001::aetsch013::lachen001::aetsch013::lachen001::aetsch013:
தேடித் தேடி ஒட்டாண்டி ஆக போகின்றேன்....
அதுதான் இந்த
ஒட்டாண்டியாக...

ராஜா
15-10-2007, 08:47 AM
கவியாரே... எங்கே உங்கள் பஞ்ச் கவிதை..?

சுகந்தப்ரீதன்
15-10-2007, 10:39 AM
ராக்கெட் போகுது
செவ்வாய்க்கு...!
ஈகூட்டம் போகுது
உன் வாய்க்கு...?!

ஷீ-நிசி
15-10-2007, 10:51 AM
ராஜா சார்,,, வாழ்த்துக்கள்!

அருமையான திரி... நாங்களும் கலந்துப்போம்ல...

ஷீ-நிசி
15-10-2007, 10:54 AM
விஞ்ஞானிங்க செஞ்சாங்க ராக்கெட்டு
அதுக்குனு வச்சாங்க ஒரு டார்கெட்டு..
ஆனாலும் ஓடுது பாரு அது தறிகெட்டு..
சந்தேகமேயில்ல.. இது அப்பீட்டு!! அப்பீட்டு!!

ராஜா
15-10-2007, 11:08 AM
ராக்கெட் போகுது
செவ்வாய்க்கு...!
ஈகூட்டம் போகுது
உன் வாய்க்கு...?!

நச்...........!

ராஜா
15-10-2007, 11:14 AM
விஞ்ஞானிங்க செஞ்சாங்க ராக்கெட்டு
அதுக்குனு வச்சாங்க ஒரு டார்கெட்டு..
ஆனாலும் ஓடுது பாரு அது தறிகெட்டு..
சந்தேகமேயில்ல.. இது அப்பீட்டு!! அப்பீட்டு!!

வாங்க.. வாங்க.. நீங்க இல்லாம ஒரு திரியா..?

ஹி..ஹி.. அப்பீட்டு ஏன் ரிப்பீட்டு..?

அக்னி
15-10-2007, 11:20 AM
ராக்கெட் போகுது
செவ்வாய்க்கு...!
ஈகூட்டம் போகுது
உன் வாய்க்கு...?!
சூப்பருங்கோ...
:icon_b:

மீனாகுமார்
15-10-2007, 11:37 AM
சூப்பர் திரி ராஜாண்ணே...

இதோ என் முயற்சி -


இந்திய கூட்டணி ஆட்சியைப் பார்த்து
அமெரிக்காவிலும் ஆரம்பித்து விட்டார்கள்
இதோ கூட்டணி ராக்கட்
இங்கும் இந்தியன் தான் முதல்வனோ ?

மீனாகுமார்
15-10-2007, 11:42 AM
இன்னொன்று -

இந்தியன் ராக்கட் செய்தாலும் - அதற்கு
அமெரிக்க பெயர்தான் இடுவான்.
இவன் என்று தான் தனக்கென்றோர்
பெயரிடுவான் சொல் ?

ராஜா
15-10-2007, 11:44 AM
சூப்பர் திரி ராஜாண்ணே...

இதோ என் முயற்சி -


இந்திய கூட்டணி ஆட்சியைப் பார்த்து
அமெரிக்காவிலும் ஆரம்பித்து விட்டார்கள்
இதோ கூட்டணி ராக்கட்
இங்கும் இந்தியன் தான் முதல்வனோ ?


சாப்பாட்டுக்கடை [மெக்டொனால்ட்ஸ் ] வீளம்பரம் முதல்ல இருக்கறதுக்கும் உங்க கமெண்டுக்கும் தொடர்பு இருக்காதுன்னு நம்பறேன்..!

நன்றி மீனா குமார்...!

மீனாகுமார்
15-10-2007, 11:48 AM
இன்னொன்று...

ஆக்கிரமிப்பாளர்கள்
படை எடுக்கின்றனர்
விண்வெளி நோக்கி....


வெகு அற்புதம்... சும்மா 'நச்' சுன்னு இருக்கு அமரன்.. மிகவும் ரசித்தேன்... வாழ்த்துகள்.

மீனாகுமார்
15-10-2007, 11:51 AM
சாப்பாட்டுக்கடை [மெக்டொனால்ட்ஸ் ] வீளம்பரம் முதல்ல இருக்கறதுக்கும் உங்க கமெண்டுக்கும் தொடர்பு இருக்காதுன்னு நம்பறேன்..!

நன்றி மீனா குமார்...!

ஹா.. ஹா.. முதலில் உங்கள் கமெண்ட் புரியவில்லை.. புரிந்த பின் சிரித்தேன்..... :D:D:D :icon_b:

சுகந்தப்ரீதன்
15-10-2007, 12:02 PM
ராஜா அண்ணாவுகும் அக்னியாருக்கும் எந்து நன்றிகளை நச்சுன்னு தெரிவிகிறேன் ஒரு இச்சோட..!

சிவா.ஜி
15-10-2007, 02:17 PM
ராகெட்டுக்கே மாட்டுனாங்க
ஜாக்கெட்டு..அதுல அவங்க*
மார்க்கெட்டுக்கு போடுற*
பிராக்கெட்டு....!

ராஜா
15-10-2007, 03:55 PM
ராகெட்டுக்கே மாட்டுனாங்க
ஜாக்கெட்டு..அதுல அவங்க*
மார்க்கெட்டுக்கு போடுற*
பிராக்கெட்டு....!

எப்படியோ ரொம்பிடும் அவங்க பாக்கெட்டு..
அதுக்கு இளிச்சவாய் மக்களே டார்கெட்டு..!

சூப்பர் சிவாஜி..!

அன்புரசிகன்
15-10-2007, 04:26 PM
நீங்க காட்டுறது ராக்கெட்டு
நாம போடுறது கட்லட்டு
உங்களுக்கு தேவை மக்டொனால்டு
நம்மளுக்கு தேவை கல்பேட்டு

உங்களோடத மக்டொனால்ட் ராக்கட்டு
எங்க பாக்கட்டில் இருப்பத ராக்கட் கட்டரு...

(கல்பேட்: நம் ஊரில் ஊர்க்கோழியை கல் பேட் என்பர்... கட்டர் என்று கூறவந்தது பென்சிலை கூர்மையாக்குகும் உபகரணம் :D :D)

ராஜா
15-10-2007, 05:06 PM
நீங்க காட்டுறது ராக்கெட்டு
நாம போடுறது கட்லட்டு
உங்களுக்கு தேவை மக்டொனால்டு
நம்மளுக்கு தேவை கல்பேட்டு

உங்களோடத மக்டொனால்ட் ராக்கட்டு
எங்க பாக்கட்டில் இருப்பத ராக்கட் கட்டரு...

(கல்பேட்: நம் ஊரில் ஊர்க்கோழியை கல் பேட் என்பர்... கட்டர் என்று கூறவந்தது பென்சிலை கூர்மையாக்குகும் உபகரணம் :D :D)


அட.. மாம்ஸ் வந்தாச்சா..?

என்ன மாம்ஸ்.. டப்பிங் படத்துல வர்ற டூயட் பாட்டு மாதிரி சம்பந்தமில்லாம இருக்கு..?

aren
15-10-2007, 05:33 PM
விண்வெளியில்
நிரந்தர வாசம்
ஷாப்பிங்க் மால்
மானேஜராக!!!

aren
15-10-2007, 05:38 PM
விண்வெளிப் பயணம்
ஸ்பான்ஸர்களுக்கு இலவச டிக்கெட்
இடமில்லை ராக்கெட்டில் பெயரிட
இருக்காங்க வெயிட்டிங் லிஸ்டல!!!

ராஜா
15-10-2007, 05:47 PM
விண்வெளிப் பயணம்
ஸ்பான்ஸர்களுக்கு இலவச டிக்கெட்
இடமில்லை ராக்கெட்டில் பெயரிட
இருக்காங்க வெயிட்டிங் லிஸ்டல!!!

ஹி..ஹி.. வாங்க மாட்டிரிக்ஸ்..!

அப்ப ரெண்டு மூணு ட்ரிப் அடிக்கணும்ன்னு சொல்லுங்க..!

பூமகள்
15-10-2007, 07:14 PM
ஏம்மா... இது நல்லாருக்கா...
கவிதை சரி... அதுக்குமேலே ஒரு அடைமொழி தேவையா..?


இண்டல் இன்சைட்
மெண்டல் அவுட்சைட்
அதாவது....
ராக்கட்டில் செல்லும் மனைவிகள் தான் அறிவு இண்டல் ப்ராசசர்கள்..!!
வெளியில் நிற்கும் கணவர்கள்................................ என்று சொல்லாமல் சொன்னேன்...:D:D:D:D:D
இது கூட புரியலையா அண்ணா உங்களுக்கு?? சின்ன புள்ள :icon_rollout: தனமா இல்ல இருக்கு...!!:lachen001::lachen001:

அன்புரசிகன்
15-10-2007, 07:53 PM
அட.. மாம்ஸ் வந்தாச்சா..?

என்ன மாம்ஸ்.. டப்பிங் படத்துல வர்ற டூயட் பாட்டு மாதிரி சம்பந்தமில்லாம இருக்கு..?

உங்களுக்கு புரியல இல்ல,,???

அப்போ எனக்கு சக்ஸஸ்...

ராஜா
16-10-2007, 03:59 AM
உங்களுக்கு புரியல இல்ல,,???

அப்போ எனக்கு சக்ஸஸ்...

உங்களுக்கு சக்ஸஸ்...

எங்களுக்கு சர்க்கஸ்...!

ஓவியன்
16-10-2007, 04:25 AM
என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கணும் :) , இல்லைனா "அறிஞர்" அண்ணாவிடம் கம்ளைண்ட் பண்ணுவேன்.........!!! :D:D:D

பூமகள்
16-10-2007, 04:49 AM
என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கணும் :) , இல்லைனா "அறிஞர்" அண்ணாவிடம் கம்ளைண்ட் பண்ணுவேன்.........!!! :D:D:D
யாருங்க அது என்ர ஓவியன் அண்ணாவை விளையாட்டுக்கு சேர்த்துக்கலன்னு சொல்றது??:music-smiley-012: எங்க சுத்துப்பட்டி பதினெட்டு கிராமத்திலிருந்தும் அருவாவோட ஆட்கல கூட்டியாந்து விட்ருவோம்.......!!:violent-smiley-010:
ஓவியன் அண்ணா இல்லாம விளையாட்டா?? :sport-smiley-013: கவிச்சமரா???:sport-smiley-018:
நெவர்....!! :icon_b:

ராஜா
16-10-2007, 04:50 AM
என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கணும் :) , இல்லைனா "அறிஞர்" அண்ணாவிடம் கம்ளைண்ட் பண்ணுவேன்.........!!! :D:D:D

வாங்கப்பு.. வாங்க.. நீங்க இல்லாமலா..?

ராஜா
16-10-2007, 04:53 AM
என்ன மக்களே...

இன்றைய படத்தை வெளியிடலாமா..?

அசத்தப்போவது யாரு..?

சுகந்தப்ரீதன்
16-10-2007, 05:27 AM
என்ன மக்களே...

இன்றைய படத்தை வெளியிடலாமா..?

அசத்தப்போவது யாரு..?
தாராளாமக வெளியிடுங்கள்.. கூடவே முதல்பட போட்டியில் வென்றவரை அறிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்..அண்ணா..?!(நாந்தான் ஜெயிப்பேன்னு எனக்கொரு நப்பாசை.. பாப்போம் அண்ணா யாரை சொல்லுராருன்னு..)

ராஜா
16-10-2007, 05:32 AM
தாராளாமக வெளியிடுங்கள்.. கூடவே முதல்பட போட்டியில் வென்றவரை அறிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்..அண்ணா..?!(நாந்தான் ஜெயிப்பேன்னு எனக்கொரு நப்பாசை.. பாப்போம் அண்ணா யாரை சொல்லுராருன்னு..)

இது போட்டியல்ல சுகந்தா..!

ஒரு ஜனரஞ்சகமான முயற்சி..!

இதில் கலந்துகொண்டவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்..!

சுகந்தப்ரீதன்
16-10-2007, 05:36 AM
நினைச்சேன் நீங்க இப்படிதான் பதில் சொல்லுவீங்கன்னு... அப்படியே சொல்லிட்டீங்க... ரொம்ப சந்தோசம் அண்ணா..!

ராஜா
16-10-2007, 05:38 AM
பஞ்ச் கவிதை - 2


http://www.visualjokes.com/pics/titancar.jpg


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பேரு சரியில்லே... பார்த்து ஓட்டுன்னு அப்போவே சொன்னேனே.. கேட்டியா..?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுகந்தப்ரீதன்
16-10-2007, 05:47 AM
பார்க் பண்ணும்போது
திங்காதட பட்டாணி..!
அப்புறம் ஆயிடும்
உன்காரும் டைட்டானி..க்!

ராஜா
16-10-2007, 06:04 AM
வாங்க கவிஞர்களே...!

உங்க திறமையைக் காட்டுங்க..!

ராஜா
16-10-2007, 06:04 AM
ஹா..ஹா.. சுகந்தா..!

டைட்டானிக் முழுகினது பட்டாணியால்தானா..?

சூப்பர்..!

இனியவள்
16-10-2007, 07:48 AM
சைட் அடிச்சுக் கொண்டு
ஓட்டாதையடா காரை
கடலுக்குள்ளை பார்க்
பண்ணிடுவாய் உன் காரை.....

அமரன்
16-10-2007, 07:51 AM
வண்டி ஓட்டுபோது
உனக்கேன் 'டானிக்!'
ஆயிடுச்சு பாத்தியா
வண்டி 'டைட்டானிக்...!'

மலர்
16-10-2007, 07:52 AM
என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கணும் :) , இல்லைனா "அறிஞர்" அண்ணாவிடம் கம்ளைண்ட் பண்ணுவேன்.........!!! :D:D:D

அடேங்கப்பா......
பாவம் புள்ளையையும் சேத்துக்கோங்கப்பா.....

ராஜா
16-10-2007, 07:55 AM
சைட் அடிச்சுக் கொண்டு
ஓட்டாதையடா காரை
கடலுக்குள்ளை பார்க்
பண்ணிடுவாய் உன் காரை.....

டைட்டானிக் என்று பேர் வச்சுகிட்டு சைட் அடிக்கலேன்னா எப்படி..?

பிள்ளை.. கொஞ்சம் பார்த்து போடம்மா..!

இனியவள்
16-10-2007, 07:57 AM
டைட்டானிக் என்று பேர் வச்சுகிட்டு சைட் அடிக்கலேன்னா எப்படி..?

பிள்ளை.. கொஞ்சம் பார்த்து போடம்மா..!

டைட்டானிக்கும் சைட்டுக்கும் என்ன சம்பந்தம் :confused:

அண்ணோய் ரொம்ப குழப்பிறியள் :D

ராஜா
16-10-2007, 08:06 AM
வண்டி ஓட்டுபோது
உனக்கேன் 'டானிக்!'
ஆயிடுச்சு பாத்தியா
வண்டி 'டைட்டானிக்...!'


நச்.......!

ராஜா
16-10-2007, 08:08 AM
டைட்டானிக்கும் சைட்டுக்கும் என்ன சம்பந்தம் :confused:

அண்ணோய் ரொம்ப குழப்பிறியள் :D

டைட்டானிக் திரைப்படம் ஒரு காதல் ஜோடியைப் பற்றியதுதானே..?

சைட் தானே காதலுக்கு முன்னுரை..?

இப்போ வடிவா வெளங்கிட்டுதுதானே..?

ராஜா
16-10-2007, 08:10 AM
அடேங்கப்பா......
பாவம் புள்ளையையும் சேத்துக்கோங்கப்பா.....


அப்போ வந்த புள்ளையை இன்னும் காணலியேம்மா..?

இனியவள்
16-10-2007, 08:12 AM
ராஜா அண்ணா சைட் அடிச்சால்
கன்னம் ஒரு வீங்காதா இப்ப எல்லாம் :D :D:D:D

மலர்
16-10-2007, 08:15 AM
அப்போ வந்த புள்ளையை இன்னும் காணலியேம்மா..?

தூங்குமூஞ்சி ஓவியன்
இன்னும் தூங்கிட்டு இருக்காராம்
ஒற்றர் படை தகவல் இப்போது தான் கிடைத்தது அண்ணா..

ராஜா
16-10-2007, 08:19 AM
தூங்குமூஞ்சி ஓவியன்
இன்னும் தூங்கிட்டு இருக்காராம்
ஒற்றர் படை தகவல் இப்போது தான் கிடைத்தது அண்ணா..

ஹா..ஹா.. !

ஒற்றர் படை என்னென்ன தகவல் தருதுப்பா..!

ராஜா
16-10-2007, 08:22 AM
ராஜா அண்ணா சைட் அடிச்சால்
கன்னம் ஒரு வீங்காதா இப்ப எல்லாம் :D :D:D:D

புது ட்ரெண்ட் உனக்கு புரியலியேம்மா..

இப்போல்லாம் சைட் அடிக்காமப் போனாதான் கன்னத்துல அடிக்குதுக..!

சுகந்தப்ரீதன்
16-10-2007, 09:53 AM
புது ட்ரெண்ட் உனக்கு புரியலியேம்மா..

இப்போல்லாம் சைட் அடிக்காமப் போனாதான் கன்னத்துல அடிக்குதுக..!
இப்பதான புரியுது ராஜா அண்ணா கன்னம் பெருத்த காரணம்..!(அவங்க அடிக்கனும்னே அடிக்கடி கண்டுக்காம போவீங்கதானே..?)

ஓவியன்
16-10-2007, 11:47 AM
பேரு சரியில்லையாம்
பேரு, எவன் சொன்னான்......??
"அப்பலோ" என்று வைச்சிருந்தா மட்டும்
மூழ்கியிருக்காதோ.......??? :)

யவனிகா
16-10-2007, 11:47 AM
இந்தத் திரி என் கண்ணில படாம எப்படி தப்பிச்சது? கொஞ்சம் கதை எழுதலாம்னு போனா அந்த கேப்ல திரி ஆரம்பிச்சு தீப்பொறியும் பறக்குதே?

ஓவியன்
16-10-2007, 11:48 AM
இப்போல்லாம் சைட் அடிக்காமப் போனாதான் கன்னத்துல அடிக்குதுக..!

அடி ஆத்தாடி!!, கலி முத்திப் போயிக் கிடக்குது....!!! :)

ஓவியன்
16-10-2007, 11:50 AM
தூங்குமூஞ்சி ஓவியன்
இன்னும் தூங்கிட்டு இருக்காராம்
ஒற்றர் படை தகவல் இப்போது தான் கிடைத்தது அண்ணா..

ஒற்றர் படை தகவல் சேகரிக்குமளவுக்கு, ஓவியன் ரொம்ப பெரிய மனுஷன் தெரிஞ்சுக்குங்க எல்லோரும்.....!!! :)

யவனிகா
16-10-2007, 11:52 AM
கப்பலுக்குள்ள இருக்கான்
எங்கிட்ட கடன் வாங்கின
கடங்காரன்...
அவனை மட்டுமாவது
அலேக்கா தூக்கி விடுங்க மேலே...
அப்புறமா கப்பலு கவுந்தா எனக்கென்ன?
கருவாடு நாறுனா எனக்கென்ன?

அமரன்
16-10-2007, 12:03 PM
யவனிக்கா
கொஞ்சம் கவனிங்க
நாலு வரிகளில்
நச்சென்று சொல்லுங்க..

தென்னவன்
16-10-2007, 12:09 PM
ராக்கெட் போகுது
செவ்வாய்க்கு...!
ஈகூட்டம் போகுது
உன் வாய்க்கு...?!


என்ன இருந்தாலும் சுகந்தப்ரீதன் நீங்கள் ராஜாவை பார்த்து இப்படி சொல்லலாமா....???
கொஞ்சம் தாமதமாகி விட்டது....

யவனிகா
16-10-2007, 12:13 PM
இம்மாம் பெரிய கப்பலு...
கூட நாலு வரி போட்டா தப்பா?
எட்டு வரினா
ஏத்துக்க மாட்டீங்களா அமரன்...

அமரன்
16-10-2007, 12:16 PM
நானுந்தான் போட்டேன்
எட்டா உயரம் போகும் ராக்கெட்டுக்கு
பன்னிரு அடுக்கில்...
உயரத்தை குறைக்கச்சொல்லி
'சுருக்'கிட்டார்களே...!

ராஜா
16-10-2007, 12:26 PM
பேரு சரியில்லையாம்
பேரு, எவன் சொன்னான்......??
"அப்பலோ" என்று வைச்சிருந்தா மட்டும்
மூழ்கியிருக்காதோ.......??? :)

அதானே..?

என்னாப்பா கதை விடறீங்க..?

எங்க ஓவியர் முழிச்சுகிட்டுதான் இருக்காரு.. தெரிஞ்சுக்கங்க..!

யவனிகா
16-10-2007, 12:28 PM
கண்ணுக்குக் கண்...
பல்லுக்குப் பல்...
பழிக்குப் பழி...
இப்ப சந்தோசமா? அமரன்?

ராஜா
16-10-2007, 12:31 PM
கப்பலுக்குள்ள இருக்கான்
எங்கிட்ட கடன் வாங்கின
கடங்காரன்...
அவனை மட்டுமாவது
அலேக்கா தூக்கி விடுங்க மேலே...
அப்புறமா கப்பலு கவுந்தா எனக்கென்ன?
கருவாடு நாறுனா எனக்கென்ன?

யவனி... யவனி..
விதியைக் கொஞ்சம கவனி..
நாலு வரியில் சொல்லி
நச்சுன்னு அடிக்கணும் கில்லி..!

ஓவியன்
16-10-2007, 12:35 PM
எங்க ஓவியர் முழிச்சுகிட்டுதான் இருக்காரு.. தெரிஞ்சுக்கங்க..!

ஆமா அண்ணா!!

முழிச்சுக்கிட்டுதானிருக்கேன், அப்பப்போ கண் சிமிட்டுற கேப்புல லைட்டா தூங்கிடுறேன் - அவ்வளவுதான்!!. :D:D:D

யவனிகா
16-10-2007, 12:42 PM
யவனி... யவனி..
விதியைக் கொஞ்சம கவனி..
நாலு வரியில் சொல்லி
நச்சுன்னு அடிக்கணும் கில்லி..!

ஊருக்கே ராஜா நீங்க*
நீங்க சொன்னா தட்டுமா
இந்த ரோஜா?
யெஸ் பாஸ்...ஒ.கே பாஸ்.

ராஜா
16-10-2007, 12:47 PM
ஊருக்கே ராஜா நீங்க*
நீங்க சொன்னா தட்டுமா
இந்த ரோஜா?
யெஸ் பாஸ்...ஒ.கே பாஸ்.


அம்பேல்.. ஆளை விடும்மா[ப்பா]..!

200 பதிவுல 7000 இ-காசு அடிச்ச பார்ட்டியாச்சே..!

யவனிகா
16-10-2007, 12:56 PM
அம்பேல்.. ஆளை விடும்மா[ப்பா]..அதென்ன ப்பா கூடப் போட்டிருக்கீங்க...எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்

அக்னி
16-10-2007, 01:04 PM
டைட்டானிக்கா
dieடானிக்கா
tightடா நிக்குதில்லையே...
பேர வச்சாலே கவிழுதில்ல...

ராஜா
16-10-2007, 01:05 PM
அதென்ன ப்பா கூடப் போட்டிருக்கீங்க...எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்

எனக்கொரு உண்மை தெரியாததன் விளைவு அது..!

நீங்க ஆணா.. பெண்ணா ..?

ராஜா
16-10-2007, 01:11 PM
டைட்டானிக்கா
dieடானிக்கா
tightடா நிக்குதில்லையே...
பேர வச்சாலே கவிழுதில்ல...

அது..!

அக்னிக்கு டெக்னிக்கு தெரிஞ்சுருக்கு..!

ராஜா
17-10-2007, 04:09 AM
என்ன மக்கா..?

இன்றைய படத்தை வெளியிடலாமா..? தயாரா..?

ராஜா
17-10-2007, 05:16 AM
பஞ்ச் கவிதை 3.


http://www.visualjokes.com/pics/ballf.jpg


LLLLLLLLLLLLLLLLLL

கா[ல்]பந்து.

LLLLLLLLLLLLLLLLLL

அமரன்
17-10-2007, 06:35 AM
கிரிக்கட் குட்டி பந்துக்கு கெல்மெட்டு.
இம்மாம் பெரிய பந்துக்கு போட்டாக்கா
சொல்றாங்க கெட் அவுட்டு
இப்போ ஆச்சுப் பாருங்க நோஸ் கட்டு.

ராஜா
17-10-2007, 06:59 AM
கிரிக்கட் குட்டி பந்துக்கு கெல்மெட்டு.
இம்மாம் பெரிய பந்துக்கு போட்டாக்கா
சொல்றாங்க கெட் அவுட்டு
இப்போ ஆச்சுப் பாருங்க நோஸ் கட்டு.

கரிக்கிட்டு... கரிக்கிட்டு.. உங்க
கற்பனை ஓடுது பிச்சுகிட்டு..

நல்லா இருக்கு அமர்..!

பூமகள்
17-10-2007, 07:30 AM
ஊருக்கே ராஜா நீங்க*
நீங்க சொன்னா தட்டுமா
இந்த ரோஜா?
யெஸ் பாஸ்...ஒ.கே பாஸ்.
ரோஜான்னு சொல்லிட்டாங்களே ராஜா அண்ணா... இதிலிருந்தே தெரியல...
யவனி அக்கா ஒரு பெண்ணுன்னு....!!

ராஜா
17-10-2007, 07:36 AM
ரோஜான்னு சொல்லிட்டாங்களே ராஜா அண்ணா... இதிலிருந்தே தெரியல...
யவனி அக்கா ஒரு பெண்ணுன்னு....!!

இந்தப் பஞ்சாயத்து பண்ணதான் வந்தியாம்மா..?

உன் பேரைப் பார்த்துட்டு ஆசையா கவிதை பார்க்க வந்தேன்..!

யவனிகா
17-10-2007, 07:39 AM
என்ன ராஜாண்ணா தங்கச்சிய கோவிக்கிறீங்க...எனக்காக ஆஜராகும் தங்கச்சிக்காக நான் சொல்றேன் கவிதை...

கால்பந்துன்னா
காலால தான உதைக்கணும்...
இவரு ஏன்
மூக்கால முட்டித் தள்ளுறாரு?

பூமகள்
17-10-2007, 07:41 AM
இந்தப் பஞ்சாயத்து பண்ணதான் வந்தியாம்மா..?
உன் பேரைப் பார்த்துட்டு ஆசையா கவிதை பார்க்க வந்தேன்..!
அடடா... ராஜா அண்ணா இதோ பஞ்ச் கவிதை..!!

"பந்து அடிச்சா நீ பஞ்சரு
பூந்தி கலந்தா மிச்சரு - வண்டில
பிந்தி வந்தா சூப்பரு - வேகமா
முந்தி போன ஸ்டெர்சரு"

ஓவியன்
17-10-2007, 07:46 AM
"பந்து அடிச்சா நீ பஞ்சரு
பூந்தி கலந்தா மிச்சரு - வண்டில
பிந்தி வந்தா சூப்பரு - வேகமா
முந்தி போன ஸ்டெர்சரு"

பலே பூமகள்!

பந்தை வைச்சு நீங்க அடிச்ச சிக்சரு,
மெய்யாலுமே சூப்பரு.......!!! :)

பூமகள்
17-10-2007, 07:55 AM
பலே பூமகள்!

பந்தை வைச்சு நீங்க அடிச்ச சிக்சரு,
மெய்யாலுமே சூப்பரு.......!!! :)
அண்ணா..
நீங்க சொன்னதே சிக்சரு அடிச்சாப்பல் தான் இருக்கு..
ரொம்ப நன்றிகள் அண்ணா.

ராஜா
17-10-2007, 07:57 AM
என்ன ராஜாண்ணா தங்கச்சிய கோவிக்கிறீங்க...எனக்காக ஆஜராகும் தங்கச்சிக்காக நான் சொல்றேன் கவிதை...

கால்பந்துன்னா
காலால தான உதைக்கணும்...
இவரு ஏன்
மூக்கால முட்டித் தள்ளுறாரு?


விட்டுக் கொடுக்கமாட்டீங்களே..!

கவிதை நல்லா இருக்கும்மா..!

விளையாட்டில் "பூப்பந்து"ன்னு ஒரு வகை இருக்கு..!

ராஜா
17-10-2007, 07:59 AM
"பந்து அடிச்சா நீ பஞ்சரு
பூந்தி கலந்தா மிச்சரு - வண்டில
பிந்தி வந்தா சூப்பரு - வேகமா
முந்தி போன ஸ்டெர்சரு"


நச்.........!

சுகந்தப்ரீதன்
17-10-2007, 08:04 AM
பாத்து அடிக்கனும்
பந்து..! இல்லன்னா
இப்படிதான் போகும்
மூஞ்சி நொந்து...!

ஓவியன்
17-10-2007, 08:13 AM
அப்பவே சொன்னேன் கேட்டாத்தானே...? :mad:
கிரிக்கட்டில் சிக்ஷர்
அடிக்கிறவனெல்லாம்
காற் பந்துக்கு லாயக்கில்லையென்று....!. :D

ஓவியன்
17-10-2007, 08:17 AM
பாத்து அடிக்கனும்
பந்து..! இல்லன்னா
இப்படிதான் போகும்
மூஞ்சி நொந்து...!

பார்த்து அடிச்சோம்னா
பந்து, சுகந்தா...!
வீட்டே போகணுப்பா
தோல்வியுடன் நொந்து...! :)

சிவா.ஜி
17-10-2007, 08:22 AM
கால்ல வெக்க வேண்டியதை
தலையில வெச்சா...
மூக்கு மட்டுமில்ல...
முச்சூடும் பஞ்சர்தான்...!

யவனிகா
17-10-2007, 08:44 AM
கோலு அடிக்கிற ஸ்பீடில*
பாலு ஊத்தப் போறான் உனக்கு...
மூஞ்சில அடிச்ச பந்தானாலும்
நல்லாவே முத்தம் குடுக்கிற நீ...

மன்மதன்
17-10-2007, 09:05 AM
அருமையான திரி ராஜா அண்ணா..

ஓவியன்
17-10-2007, 09:07 AM
அருமையான திரி ராஜா அண்ணா..

நீங்களும் உங்க பஞ் கவிதைகளைத் தாருங்களேன்...! :)

ராஜா
17-10-2007, 09:28 AM
பாத்து அடிக்கனும்
பந்து..! இல்லன்னா
இப்படிதான் போகும்
மூஞ்சி நொந்து...!

வாப்பா இப்படி குந்து..
வசமா பாடினே சிந்து..!

சூப்பர் சுகந்தா.. உன் கவிதை சுகந்தான்..!

ராஜா
17-10-2007, 10:02 AM
அப்பவே சொன்னேன் கேட்டாத்தானே...? :mad:
கிரிக்கட்டில் சிக்ஷர்
அடிக்கிறவனெல்லாம்
காற் பந்துக்கு லாயக்கில்லையென்று....!. :D

ஹி..ஹி..

சிக்சரா.. கிஸ்ஸரா..?

முகத்தில் முத்தம் கொடுக்குதே..!

சுகந்தப்ரீதன்
17-10-2007, 10:08 AM
வாப்பா இப்படி குந்து..
வசமா பாடினே சிந்து..!

சூப்பர் சுகந்தா.. உன் கவிதை சுகந்தான்..!
மிக்க நன்றி அண்ணா..!

ராஜா
17-10-2007, 10:28 AM
கால்ல வெக்க வேண்டியதை
தலையில வெச்சா...
மூக்கு மட்டுமில்ல...
முச்சூடும் பஞ்சர்தான்...!

காத்து பந்திலே..

பஞ்சர் முகத்திலா..?

நல்ல சிந்தனை சிவா..!

ராஜா
17-10-2007, 10:32 AM
கோலு அடிக்கிற ஸ்பீடில*
பாலு ஊத்தப் போறான் உனக்கு...
மூஞ்சில அடிச்ச பந்தானாலும்
நல்லாவே முத்தம் குடுக்கிற நீ...

பால் ஊற்றும் BALL..!

நல்ல பஞ்ச்..!

ராஜா
17-10-2007, 10:34 AM
அருமையான திரி ராஜா அண்ணா..

நன்றி மன்மதன்..!

சிவா.ஜி
17-10-2007, 10:37 AM
எனக்கு நீங்கள் இட்ட படம் தெரியவில்லை ராஜா சார். வந்திருக்கும் கவிதைகளையும்,பின்னூட்டங்களையும் வைத்து ஒரு குத்துமதிப்பாத்தான் எழுதுனேன்.நன்றி.

ராஜா
17-10-2007, 10:49 AM
எனக்கு நீங்கள் இட்ட படம் தெரியவில்லை ராஜா சார். வந்திருக்கும் கவிதைகளையும்,பின்னூட்டங்களையும் வைத்து ஒரு குத்துமதிப்பாத்தான் எழுதுனேன்.நன்றி.

அப்படியா..?

ஆனால் உங்கள் கவிதை மிகச்சரியாக படத்துடன் பொருந்துகிறது..!

அக்னி
17-10-2007, 10:58 AM
இப்படி மொத்துகின்றதே...
இது,
ballஆ... அல்லது,
girlஆ...

முன்னெச்சரிக்கை:
அனுபவம் இல்லீங்கோ... யாராவது பிளேட்ட மாத்திப் போட்டிடாதீங்கோ...

ராஜா
17-10-2007, 11:09 AM
இப்படி மொத்துகின்றதே...
இது,
ballஆ... அல்லது,
girlஆ...

முன்னெச்சரிக்கை:
அனுபவம் இல்லீங்கோ... யாராவது பிளேட்ட மாத்திப் போட்டிடாதீங்கோ...

இல்லே.. இல்லே.. கேட்க மாட்டோம்..

அனுபவம் இல்லே.. அர்ப்பணிப்பு உணர்வோட ஒரு இயக்கமா நடத்தறீங்கன்னு தெரியும்..:aetsch013::smilie_abcfra::aetsch013::smilie_abcfra::aetsch013::smilie_abcfra:

ஓவியன்
18-10-2007, 05:34 AM
ஹி..ஹி..
சிக்சரா.. கிஸ்ஸரா..?
முகத்தில் முத்தம் கொடுக்குதே..!

சிக்சரை முகத்தாலே தடுக்க முயற்சித்தால், "சிக்சர்" கிஸ்ஸராயிடும். :D:D:D

ராஜா
18-10-2007, 05:43 AM
என்ன நண்பர்களே..?

இன்றைய படம் ரிலீஸ் பண்ணட்டுமா..?

ஓவியன்
18-10-2007, 05:49 AM
ரிலீஸ் பண்ணலாம் ராஜா அண்ணா!!! :):):)

ராஜா
18-10-2007, 06:20 AM
பஞ்ச் கவிதை - 4


http://www.visualjokes.com/pics/parkovka.jpg

******************************************************

இருய்யா.. என்ன அவசரம்..? நாங்கல்லாம் நிக்கிறோமில்ல..?

******************************************************

அமரன்
18-10-2007, 08:02 AM
யாருக்கு வேண்டும்
நமீதாவுடன் நடிக்க சான்சு
கேட்டதும் நிற்குது-தா தான்னு
இரட்டைக்காலில் ஒருகாரு.

ராஜா
18-10-2007, 08:30 AM
ஹி..ஹி.. அவ்வளவு பிடிவாதமா..?

2 கால் மனுஷன்னா ஒத்தைக்கால்..

4 கால் காருன்னா ரெண்டு காலா..?

நல்ல கற்பனை அமர்.. ரசித்தேன்..

பூமகள்
18-10-2007, 08:33 AM
ராஜா அண்ணா...
இதோ இன்றைய பஞ்ச் கவிதை...
தாமதத்துக்கு மன்னிக்கவும்.. மின்சாரத்தடை... என்னை மன்றம் வர தடைசெய்துவிட்டது..!!

"சைக்கிள் கேப்ல நுழையுது காரு..!!
ரெட் லைட்டு எரியுது பாரு...!!
ஸ்பீடா போனே புடிப்பாரு சாரு...!!
கண்டுகாம போனே ஆயிடுவ நாரு...!!"

lolluvathiyar
18-10-2007, 08:43 AM
அப்படி என்ன அவசரமோ
திருடன பிடிக்க துரத்தனுமோ
போலிஸிடம் திருடன் தம்பிக்கனுமோ
காருகுள்ள் ஏதாவது பிரசவமோ
எதுவா இருந்தாலும் காருக்கே பிரசவமோ

நேசம்
18-10-2007, 09:36 AM
சைக்கிள் கேப்புல*
போறான் பாரு
போலிஸ் பார்த்த*
கிழித்திடும் வாரு

பென்ஸ்
18-10-2007, 09:58 AM
ராஜா அண்ணா...
இதோ இன்றைய பஞ்ச் கவிதை...
தாமதத்துக்கு மன்னிக்கவும்.. மின்சாரத்தடை... என்னை மன்றம் வர தடைசெய்துவிட்டது..!!

"சைக்கிள் கேப்ல நுழையுது காரு..!!
ரெட் லைட்டு எரியுது பாரு...!!
ஸ்பீடா போனே புடிப்பாரு சாரு...!!
கண்டுகாம போனே ஆயிடுவ நாரு...!!"

இது என்னடா... அடுத்த லேடி ராஜேந்தர்...

கஜினி
18-10-2007, 09:58 AM
இது எஜமான் படத்தின் ரீமேக்
காருக்குள்ள இருக்காரு விவேக்

பென்ஸ்
18-10-2007, 10:01 AM
ராஜா...
அடுத்தவர்கள் ஜொலிக்க திரி துவங்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுகள்...

aren
18-10-2007, 10:12 AM
காரை பெயரை
புல்டாக் என்றதால்
தன் புத்தியை
காண்பித்துவிட்டதோ!!!

அக்னி
18-10-2007, 10:14 AM
சோடி போட்டு நின்ற கார்...
கள்ளமாய் சில் போட்டது,
அடுத்த கார் மேல்...
காருக்கும் கள்ளக் காதலா???

aren
18-10-2007, 10:16 AM
அடுத்தவிட்டு அடுக்குமாடியில்
குடியிருக்கும் அம்புஜா என் கனவில்!!!

முழித்ததும் தெரிந்தது
நான் கார் ஓட்டிக்கொண்டிருப்பது!!!

ஓவியன்
18-10-2007, 10:39 AM
ஹீ,ஹீ நீங்களும் ஏமாந்துட்டீங்களா...?
நல்லா பாருங்க...!
அது காரு இல்லை, சைக்கிள்,
காரு வேஷம் போட்ட சைக்கிள்...!! :)

ஓவியன்
18-10-2007, 10:44 AM
சோடி போட்டு நின்ற கார்...
கள்ளமாய் சில் போட்டது,
அடுத்த கார் மேல்...
காருக்கும் கள்ளக் காதலா???

அக்னி!
இது கொஞ்சம் ஓவர்...! :icon_nono:

அக்னி
18-10-2007, 10:50 AM
அக்னி!
இது கொஞ்சம் ஓவர்...! :icon_nono:
அதிகமா இல்லத்தானே... அப்பச்சரி...

இன்னொண்ணு போடலாம்தானே...

எரிபொருள்... விலையேற்றம்...
மது... விலைக் குறைப்பு...
எரிபொருளில், மது கலப்படமா..?
மதுவில், சாரதி கலந்திட்டாரா..?

ஓவியன்
18-10-2007, 11:37 AM
சூப்பர் பஞ் கவிதை அக்னி!
பாராட்டுக்கள்...!!! :)

ராஜா
18-10-2007, 04:07 PM
ராஜா அண்ணா...
இதோ இன்றைய பஞ்ச் கவிதை...
தாமதத்துக்கு மன்னிக்கவும்.. மின்சாரத்தடை... என்னை மன்றம் வர தடைசெய்துவிட்டது..!!

"சைக்கிள் கேப்ல நுழையுது காரு..!!
ரெட் லைட்டு எரியுது பாரு...!!
ஸ்பீடா போனே புடிப்பாரு சாரு...!!
கண்டுகாம போனே ஆயிடுவ நாரு...!!"

நச்...........!

ராஜா
18-10-2007, 04:14 PM
அப்படி என்ன அவசரமோ
திருடன பிடிக்க துரத்தனுமோ
போலிஸிடம் திருடன் தம்பிக்கனுமோ
காருகுள்ள் ஏதாவது பிரசவமோ
எதுவா இருந்தாலும் காருக்கே பிரசவமோ

நல்ல பஞ்ச் வாத்தியாரே..

1 நம்பர்ல [வரியில] போயிருச்சு..!

ராஜா
18-10-2007, 04:16 PM
சைக்கிள் கேப்புல
போறான் பாரு
போலிஸ் பார்த்தா
கிழித்திடும் வாரு

சூப்பர்... !

டங்குவாரு கிழிக்க போலீஸ்கார அய்யா தொ-டங்குவாரு..?

நேசம் கவிதை வாசம்..!

ராஜா
18-10-2007, 04:18 PM
இது எஜமான் படத்தின் ரீமேக்
காருக்குள்ள இருக்காரு விவேக்


என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியலியே கஜினி..!

இன்னும் 2 வரி போட்டிருக்கலாம் இல்லையா..?

பூமகள்
18-10-2007, 04:22 PM
நச்...........!
ரொம்ப நன்றி ராஜா அண்ணா.
ரெண்டு தடவ "நச்.............!" னு உங்க மோதிர கையால் குட்டு வாங்கிட்டேன்...!! :lachen001:
மகிழ்ச்சியா இருக்கு..............!! :D:D:D:D:D:D

ராஜா
18-10-2007, 04:25 PM
ராஜா...
அடுத்தவர்கள் ஜொலிக்க திரி துவங்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுகள்...


நம்ம உறவுகளுக்கு கோடு போட்டா போதும்.. ரோடு போட்டுடுவாங்க..

அவங்களுக்குத் தேவை ஒரு துவக்கம்.. வல்லடியா புடிச்சு இழுத்துட்டுவந்து, நீ இதை செய்யணும்.. உன்னால் முடியும்ன்னு சொன்னாப் போதும்.. நாம் எதிர்பார்ப்பதற்கு மேலேயே அசத்துவாங்க..

சுடராகட்டும், ஆ! பத்து ஆகட்டும்..இந்தத் திரி ஆகட்டும்..! நமக்குச் சொல்லும், வெற்றிரகசியம் இதுதான்..!

நீங்க மிகச் சரியாகக் கணித்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள்..!

ராஜா
18-10-2007, 04:28 PM
காரை பெயரை
புல்டாக் என்றதால்
தன் புத்தியை
காண்பித்துவிட்டதோ!!!

மாட்டிரிக்ஸ்.. மாட்டிரிக்ஸ்.. நீங்க எங்க வரீங்கன்னு புரியுது..!

அடுத்த கார் என்ன லைட் போஸ்ட்டா..? ஹி..ஹி..

ராஜா
18-10-2007, 04:30 PM
சோடி போட்டு நின்ற கார்...
கள்ளமாய் சில் போட்டது,
அடுத்த கார் மேல்...
காருக்கும் கள்ளக் காதலா???

சில்..? புரியலையே அக்னி..

காருக்கு கள்ளக் காதல்.. நல்ல குறும்புத்தனமான கற்பனை.. பாராட்டுகள்..!

அக்னி
18-10-2007, 04:32 PM
சில்..? புரியலையே அக்னி..

காருக்கு கள்ளக் காதல்.. நல்ல குறும்புத்தனமான கற்பனை.. பாராட்டுகள்..!
சில் - சக்கரம்
மனுசனுக்கு கை என்றால், காருக்கு சில் தானே...

ராஜா
18-10-2007, 04:34 PM
அடுத்தவிட்டு அடுக்குமாடியில்
குடியிருக்கும் அம்புஜா என் கனவில்!!!

முழித்ததும் தெரிந்தது
நான் கார் ஓட்டிக்கொண்டிருப்பது!!!

ஹி..ஹி... அருமை..

நீங்க முழிச்சு எழுந்துட்டீங்க.. காரு ஒருக்களிச்சுப் படுத்துத் தூங்கிருச்சோ..?

நல்லாருக்கு..!

காரு கவுந்தததுக்கு காரணம்.. அம்புஜா வீட்டு சதியா இருக்குமோ..?

ராஜா
18-10-2007, 04:37 PM
ஹீ,ஹீ நீங்களும் ஏமாந்துட்டீங்களா...?
நல்லா பாருங்க...!
அது காரு இல்லை, சைக்கிள்,
காரு வேஷம் போட்ட சைக்கிள்...!! :)

நீங்க யாரு.. ஓவியன் வேஷம் போட்ட அமரனா..?

கார் கேப்புல போக முடியாம சைக்கிள் ஏன் கவுந்துச்சாம்..? :aetsch013::aetsch013:

ராஜா
18-10-2007, 04:40 PM
அதிகமா இல்லத்தானே... அப்பச்சரி...

இன்னொண்ணு போடலாம்தானே...

எரிபொருள்... விலையேற்றம்...
மது... விலைக் குறைப்பு...
எரிபொருளில் மது கலப்படமா..?
மதுவில், சாரதி கலந்திட்டாரா..?

கம்முன்னு இருங்க அக்னி.. எல்லா ஓட்டிகளும் கலப்படம் பண்ணி கவுந்துடப்போறாங்க..

கவிதையின் கருத்து ரொம்ப நல்லா இருக்கு.. சபாஷ்..!

ராஜா
18-10-2007, 04:44 PM
சுகந்தன், மலர், இனி, போன்றோரைக் காணோமே..?

ஓவியன்
18-10-2007, 05:28 PM
நீங்க யாரு.. ஓவியன் வேஷம் போட்ட அமரனா..?

கார் கேப்புல போக முடியாம சைக்கிள் ஏன் கவுந்துச்சாம்..? :aetsch013::aetsch013:

சைக்கிள் கார் வேஷம் போட்டா கார் மாதிரி தானே ஆயிடும், அதாவது எலி யானை வேசம் போட்டா, எலிப் பொந்துக்க எப்படி போகுமாம்...!!! :icon_rollout:

இங்கே பாயிண்ட் என்னென்னா கவிழுற மாதிரி இருந்தாலும் அது சைக்கிள் எங்கிறதாலே உண்மையிலே கவிழ மாட்டாது, கவிழுற மாதிரி நடிக்கும் அவ்வளவு தான். :)

ராஜா
18-10-2007, 05:40 PM
வெளங்கிருச்சப்போவ்..!

ராஜா
19-10-2007, 05:26 AM
அனைவருக்கும் நன்றி..!

ராஜா
19-10-2007, 05:26 AM
என் இனிய தமிழ் மக்களே..!

இன்றைய படம் ரிலீஸ் பண்ணலாமா..?

மலர்
19-10-2007, 05:29 AM
போடுங்கண்ணா....

இன்னைக்காவது எனக்கு கயிதை
உதிக்குதான்னு பாக்கலாம்

பூமகள்
19-10-2007, 05:46 AM
போடுங்கண்ணா....

இன்னைக்காவது எனக்கு கயிதை
உதிக்குதான்னு பாக்கலாம்
மலருக்கு..... கயி(ழு)தை உதைக்குமாம்... இல்ல இல்ல.. உதிக்குமாம்... சீக்கிரம் போடுங்க அண்ணா.....!! :D:D:D:D
கயிதை.... ச்சே... கவிதை அருவி மலருக்கு கொட்டட்டும்..!! :icon_rollout:

சிவா.ஜி
19-10-2007, 05:54 AM
எல்லோரும் அசத்துகிறார்கள்....அனைவருக்கும் பாராட்டுக்கள்.மலர்கூட கவிதை எழுத ஆர்வமா இருக்கே...ஆனா இந்த பூவுதான்...கயிதை அது இதுன்னு சொல்லி பயமுறுத்துது....அதெல்லாம் ஒண்ணும் ஆகாது மலர் தைரியமா வந்து பஞ்ச் குடு பாக்கலாம்..

ராஜா
19-10-2007, 06:19 AM
பஞ்ச் கவிதை - 5.


http://www.allfunnypictures.com/images3/phoneholder.jpg

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

ஹி.. ஹி.. எனக்கு காதலி அதிகம்.. போன் பண்ணிட்டே இருப்பாங்க..!
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

கஜினி
19-10-2007, 06:27 AM
தோடு தோடு காதோடு
ஜொலிக்குது பாருங்க
சின்னச் சின்ன செல்போனாய்
இருக்குது பாருங்க..!

பூமகள்
19-10-2007, 08:02 AM
"ஆப்பிரிக்காகாரரு காது'செல்லுல'
யாரு பாடுறா
காதோடு தான் நான்
பாடுவேன்னு??"

இது கவிதை இல்லிங்களா? சரி... அடுத்த பஞ்ச் யோசிக்கிறேன்...!! :icon_ush:

பூமகள்
19-10-2007, 08:06 AM
"சிரிக்கிறாரு டாவின்சி..!!
காதுல பாரு செல்பேசி..!!
கூப்பிடுறது யாரு ரோசி??
பேசினா ஆவாரு கிரேசி...!!"

ஹி ஹி..!! :D:D:D:D

நேசம்
19-10-2007, 08:11 AM
எல்லாம் சரி ! எனக்கு படம் தெரியலை. (ரொம்ப முக்கியம் − ணு கேட்கிறது காதுல விழுது)

ஓவியன்
19-10-2007, 08:27 AM
அடடே அமரனோட ஃபோட்டோ எப்படி ராஜா அண்ணா கிட்டே சிக்கிச்சுனு தெரியலையே...??? :D:D:D

அமரன்
19-10-2007, 08:35 AM
பேசிக்கொல்லும் ஓவியனின் காதலி
காது குத்துகிறான் என்ற சந்தேகத்தோடு
ஓவியன் காதில் செல் போட்டு
பொரிக்கிறாள் ஓவியனை கோபத்தோடு

சிவா.ஜி
19-10-2007, 08:43 AM
எனக்கும் படம் தெரியல..இருந்தாலும் மக்கள் எழுதுனதை வைத்து ஒரு பிட்டு போடலாம்..
சிம்பன்ஸி காதுல செல்லு
சில்பான்ஸி பண்ற லொள்ளு
கிட்டபோய் ஏதாச்சும் சொல்லு
எகிறிடும் உன் 32 பல்லு!

ராஜா
19-10-2007, 10:01 AM
அன்பின் அமர்..

நம் மக்கள் சிலர் படம் தெரியவில்லை என்கிறார்களே.. ஏன்..?

எல்லோருக்கும் படம் தெரிய நான் என்ன செய்யவேண்டும்..?

அமரன்
19-10-2007, 10:07 AM
அண்ணா. நீங்கள் படம் கொடுக்கும் தளம் சில பிரதேசங்களில் தடை செய்யப்பட்டு இருக்கலாம். இன்னும் சில உறவுகள் மாற்றுவழி மூலம் மன்றம் நுழைவதால் படம் தெரியாது இருக்கலாம். சில நாட்களில் எல்லாம் சரியாகும் அண்ணா. அதுவரை இப்படியே தொடரலாம். அதுவரை படம்பார்க்க விரும்பும் நண்பர்களுக்கு நானும் மற்றைய பொறுப்பாளர்களும் மின்னஞ்சல்மூலம் படம் அனுப்பி உதவுகிறோம்.

ராஜா
19-10-2007, 10:15 AM
நன்றி அமர்..!

ராஜா
19-10-2007, 10:17 AM
"சிரிக்கிறாரு டாவின்சி..!!
காதுல பாரு செல்பேசி..!!
கூப்பிடுறது யாரு ரோசி??
பேசினா ஆவாரு கிரேசி...!!"

ஹி ஹி..!! :D:D:D:D

நல்லாத்தான் இருக்கு..!

இருந்தாலும் டி.ஆர். பாவம்.. !

அமரன்
19-10-2007, 10:20 AM
செல்லும் இடமெல்லாம்
செல்லதோடு பேசிக்களிக்க
செல் கேட்டவனுக்கு-கிழித்து
சொருகினாள் செல்லத்தோடு...!

ராஜா
19-10-2007, 10:20 AM
பேசிக்கொல்லும் ஓவியனின் காதலி
காது குத்துகிறான் என்ற சந்தேகத்தோடு
ஓவியன் காதில் செல் போட்டு
பொரிக்கிறாள் ஓவியனை கோபத்தோடு


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்..!

என்றாலும் ஓவியன் கோபத்திலிருந்து தப்பிக்க "நச்"சிடப்படவில்லை..!

:)

அமரன்
19-10-2007, 10:24 AM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்..!

என்றாலும் ஓவியன் கோபத்திலிருந்து தப்பிக்க "நச்"சிடப்படவில்லை..!

:)

ஹி...ஹி... பாவம் ஓவியன்


காதுவரை வாய் கிழித்து
காது கிழியப்பேசும் ஓவியனுக்கு
காது கிழிந்தது-அமரன்
'செல்'லத்'தோடு' பேசியபோது...!

ராஜா
19-10-2007, 10:27 AM
சிம்பன்ஸி காதுல செல்லு
சில்பான்ஸி பண்ற லொள்ளு
கிட்டபோய் ஏதாச்சும் சொல்லு
எகிறிடும் உன் 32 பல்லு!

நச்.......!

[படம் பாராமலே பஞ்ச் கவிதை மிகப் பொருத்தமாகப் பாடியமைக்காக...]

ராஜா
19-10-2007, 10:33 AM
தோடு தோடு காதோடு
ஜொலிக்குது பாருங்க
சின்னச் சின்ன செல்போனாய்
இருக்குது பாருங்க..!

கஜினியின் கவிதை கவர்கிறது..!

இன்னும் முயலுங்கள் கஜினி..!

யவனிகா
19-10-2007, 10:35 AM
படம் தெரியல ராஜாண்ணா, எனக்கும் பஞ்ச் போட கையெல்லாம் பரபரக்குது தான்...என்ன செய்வது?

அமரன்
19-10-2007, 11:17 AM
இது தெரிகிறதா பாருங்கள் அன்பர்களே...!

http://img35.picoodle.com/img/img35/6/10/19/amaran/f_phoneholderm_8a243cc.jpg

யவனிகா
19-10-2007, 12:19 PM
ஐ,புது மாடல் தோடு..
போட்டு விட்டது யாரு?
போட்டுக்கிட்ட மாமாக்கோ
வாயெல்லாம் பல்லு...

ராஜா
19-10-2007, 12:38 PM
நன்றி அமர்..!

இனி போட்டோ பக்கெட்டில் தரவேற்றி போட முயல்கிறேன்..!

அதற்கு முன்...

சிவாஜி, நேசம்... சொல்லுங்க.. படம் தெரியுதா..?

ராஜா
20-10-2007, 05:18 AM
ஐ,புது மாடல் தோடு..
போட்டு விட்டது யாரு?
போட்டுக்கிட்ட மாமாக்கோ
வாயெல்லாம் பல்லு...


என்னம்மா.. கொஞ்சம் தாமதிச்சுட்டியே..!

நல்லா இருக்கும்மா..!

ராஜா
20-10-2007, 05:41 AM
அடுத்த படம் போடலாமா நண்பர்களே..?

சுகந்தப்ரீதன்
20-10-2007, 06:05 AM
செல் தோடோட நீ சிரிக்க
அதகாட்டி நான் ரசிக்க- எனக்கும்
வேனுமுன்னு என்செல்லம் அரிக்க
மொத்ததுல இப்ப நான் முழிக்கேன்?!

ராஜா
20-10-2007, 06:13 AM
பஞ்ச் கவிதை - 6.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/Alcoholic20Baby.jpg

___________________________________________________________

எதிர்காலத் தலைமுறை..!
___________________________________________________________

யவனிகா
20-10-2007, 06:21 AM
மால்ட் பெவெரேஜ் குடிச்சா
கும்முன்னு குண்டாகலாம்னு
அம்மாதான் சொன்னாங்க...
சொட்டு விடாமல் குடிப்பேன்
சுட்டிப் பிள்ளை நான்...

ராஜா
20-10-2007, 07:04 AM
மால்ட் பெவெரேஜ் குடிச்சா
கும்முன்னு குண்டாகலாம்னு
அம்மாதான் சொன்னாங்க...
சொட்டு விடாமல் குடிப்பேன்
சுட்டிப் பிள்ளை நான்...

5 வரிகள்...!

சுகந்தப்ரீதன்
20-10-2007, 07:26 AM
மம்மி எனக்கு கொடுக்க
மறுத்துட்டா தாய்பாலு..!
அதுக்குதான் கொடுத்தாரு
எங்கப்பா எனக்கு பீர்பாட்டுலு?!

ஓவியன்
20-10-2007, 07:29 AM
மம்மி எனக்கு கொடுக்க
மறுத்துட்டா தாய்பாலு..!
அதுக்குதான் கொடுத்தாரு
எங்கப்பா எனக்கு பீர்பாட்டுலு?!

ஹா,ஹா!!

அசத்தல் வரிகள் சுகந்தா, பாராட்டுக்கள்!.

சுகந்தப்ரீதன்
20-10-2007, 07:30 AM
ஹா,ஹா!!

அசத்தல் வரிகள் சுகந்தா, பாராட்டுக்கள்!.
நன்றி அண்ணா..!

ஓவியன்
20-10-2007, 07:32 AM
இதோ என் உல்டா வரிகள்...

குடிப்பேன்
குடிச்சுக்கிட்டே இருப்பேன்
கேட்கிறதுக்கு என்ன
அம்மாவா இருக்கா....???

ராஜா
20-10-2007, 07:35 AM
இதோ என் உல்டா வரிகள்...

குடிப்பேன்
குடிச்சுக்கிட்டே இருப்பேன்
கேட்கிறதுக்கு என்ன
அம்மாவா இருக்கா....???

இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணலாமே ஓவியன்..

உங்களால் முடியும்..

ராஜா
20-10-2007, 07:37 AM
மம்மி எனக்கு கொடுக்க
மறுத்துட்டா தாய்பாலு..!
அதுக்குதான் கொடுத்தாரு
எங்கப்பா எனக்கு பீர்பாட்டுலு?!


ம்ம்ம்ம்ம்ம்ம்

பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது சுகந்தா..!

:aetsch013::lachen001:

சுகந்தப்ரீதன்
20-10-2007, 07:43 AM
ம்ம்ம்ம்ம்ம்ம்

பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது சுகந்தா..!

:aetsch013::lachen001:
அண்ணா மறுபரிசீலணை பண்ணுங்க.. இல்லண்ணா கொடுத்துகிட்டு இருக்க கொஞ்ச பேரும் நிறுத்திடுவாங்க...?!:icon_rollout:

ஓவியன்
20-10-2007, 07:57 AM
உங்களால் முடியும்..

என்ன குடிக்கிறதா...?? :D:D:D

பி.கு - அண்ணா, அவை உல்டா வரிகள் மட்டுமே, உண்மையான கவி வரிகள் பின்னாலே வருகின்றன..

சுகந்தப்ரீதன்
20-10-2007, 08:02 AM
பின்னாலே வருகின்றன..
ஊத்திகிட்டு வரேன்னு சொல்லாம சொல்லுறீங்க...?:wuerg019::icon_rollout:

அமரன்
20-10-2007, 08:02 AM
சிவாவுக்கு படம் தெரிகிறதா...

பூமகள்
20-10-2007, 08:04 AM
வந்திட்டேன்.. படம் தெரிகிறது... பஞ்சுடன் வருகிறேன்..!!

ராஜா
20-10-2007, 08:05 AM
என்ன குடிக்கிறதா...?? :D:D:D

பி.கு - அண்ணா, அவை உல்டா வரிகள் மட்டுமே, உண்மையான கவி வரிகள் பின்னாலே வருகின்றன..


ஓ.. சரி.. சரி..

போட்டுத் தாக்குங்க..!

ஓவியன்
20-10-2007, 08:05 AM
அட போப்பா என்ன
உலகமிது, பீரு பாட்டிலே
மோரு.
குடிச்சாலும் பீரு எங்கிறாங்க...

ஓவியன்
20-10-2007, 08:07 AM
ஊத்திகிட்டு வரேன்னு சொல்லாம சொல்லுறீங்க...?:wuerg019::icon_rollout:

நான் என்ன ஊத்தப்பாவா முதல் பாலில் ஊத்திக்கிறதுக்கு... :D:D:D

ராஜா
20-10-2007, 08:08 AM
அண்ணா மறுபரிசீலணை பண்ணுங்க.. இல்லண்ணா கொடுத்துகிட்டு இருக்க கொஞ்ச பேரும் நிறுத்திடுவாங்க...?!:icon_rollout:

அவ்வாறே செய்கிறேன்..!

பூமகள்
20-10-2007, 08:12 AM
"எப்பவும் புட்டியில் குடிச்சி போரு
பாலு பாட்டில குடிச்சேன் பாரு
நீ சைசா என்னைப் பார்க்காம மாறு..
உள்ளே பாலு தாம்பா...வந்து பாரு..!!"

அமரன்
20-10-2007, 08:13 AM
பாட்டிலோடு அடித்தாலும்
பீர்பால் ஆக முடியலையே...!
காலால் நெம்பி அடிக்க-அப்பா
காலையும் விட்டு வைக்கலயே ...!

யாரோ ஒரு இந்தி நடிகர் காலால் நெம்பி பாட்டிலை வாயில் கவுத்து காமெடி பண்ண, அதைக்கண்ணுற்ற நம்ம விஜஜ் சாரும் அதேபோலக் காமெடி பண்ண பயபுள்ள இவனுக்கும் அந்த ஆசை வந்துட்டுதுக்கோ..அப்படின்னும் தோணுதுங்கோ... வெச்ச காலை அப்பா அப்படியே கவுத்திட்டாருன்னும் தோணுதுங்கோ

ஓவியன்
20-10-2007, 08:16 AM
எங்கிட்ட இருப்பது பீரு
உன் மோரு ரொம்ப போரு
பீரு தான் எப்பவும் ஜோரு
வேணும்னா நீயும் குடிச்சு பாரு..

சிவா.ஜி
20-10-2007, 08:17 AM
அமரன் படம் தெரியவில்லை..ஆனாலும் குன்ஸா...ஒரு ஐடியா கிடைச்சிருக்கு..குட்டிப் பையன் பியர் பாட்டில் குடிக்கிறானா...?

அமரன்
20-10-2007, 08:18 AM
மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் சிவா... கரு என்னமோ அதுதான். ஆனால் குடிக்கும் காட்சி தெரிந்தால் இன்னும் கலக்குவீர்கள்

கஜினி
20-10-2007, 08:22 AM
பீரும் பாலும்
கலந்து குடிக்கும்
இவர்தான்
பீர்பாலோ.!

கஜினி
20-10-2007, 08:26 AM
அமரன் படம் தெரியவில்லை..ஆனாலும் குன்ஸா...ஒரு ஐடியா கிடைச்சிருக்கு..குட்டிப் பையன் பியர் பாட்டில் குடிக்கிறானா...?http://i144.photobucket.com/albums/r163/arrajar/Alcoholic20Baby.jpg

இப்போ படம் தெரியுதுங்களா?

ஓவியன்
20-10-2007, 08:27 AM
ஹா,ஹா!!

அசத்திட்டீங்க ரஜனி போல, கஜனி!

ஓவியன்
20-10-2007, 08:31 AM
ஹீ,ஹீ!
நான் பீரு தான் குடிச்சேன்
சின்ன பய பாலு,
குடிக்கிறானு ஏமாந்துட்டாங்க...

சிவா.ஜி
20-10-2007, 08:47 AM
நீங்கல்லாம் லோக்கலு
குடிப்பீங்க தம்ஸ்-அப்
நாங்கெல்லாம் ஃபாரின்
அடிச்சா..பாட்டம்ஸ்-அப்..!

நேசம்
20-10-2007, 08:48 AM
டப்பா பீரு
விளையும் பயிரு
முளையிலே
தெரியும் பாரு

பூமகள்
20-10-2007, 08:56 AM
நீங்கல்லாம் லோக்கலு
குடிப்பீங்க தம்ஸ்-அப்
நாங்கெல்லாம் ஃபாரின்
அடிச்சா..பாட்டம்ஸ்-அப்..!
சூப்பரு சிவா அண்ணா... கலக்கிட்டீங்க..!!

(சிவா அண்ணா... அது பாட்டம்ஸ் அப்பா.. இல்ல பாட்டம்ஸ் சிப் ஆ??:confused:)

சிவா.ஜி
20-10-2007, 09:03 AM
மொத்தமா ஒரு சொட்டுகூட விடாமக் குடிக்கறதுக்குப் பேர்தான் Bottoms-UP
என்பது பூமகள்.

ஓவியன்
20-10-2007, 09:12 AM
மொத்தமா ஒரு சொட்டுகூட விடாமக் குடிக்கறதுக்குப் பேர்தான் Bottoms-UP
என்பது பூமகள்.

அப்படியா அப்ப சரி
நம்மளுக்கு இதிலே எல்லாம் அனுபவமில்லீங்கோ...!:icon_rollout::icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
20-10-2007, 09:16 AM
ஏனுங்க..மோரு கூடவா குடிக்க மாட்டீங்க....ரொம்ப பச்சபுள்ளயா இருக்கீங்களே....

கஜினி
20-10-2007, 09:17 AM
அது இருக்கட்டும் சிவா.ஜி. உங்களுக்கு இப்போ படம் தெரிகிறதா?

சிவா.ஜி
20-10-2007, 09:22 AM
இல்லை கஜினி. அமரன் எனக்கு என்னுடைய இணைய மெயிலுக்கு அனுப்பிவைத்தார்.அதனால்தான் பார்க்க முடிந்தது.

ஓவியன்
20-10-2007, 09:26 AM
ஏனுங்க..மோரு கூடவா குடிக்க மாட்டீங்க....ரொம்ப பச்சபுள்ளயா இருக்கீங்களே....

மோரு பாட்டிலிலா குடிக்கிறது, நாம டம்ளரிலே தான் குடிப்போம்...!:)

சிவா.ஜி
20-10-2007, 09:29 AM
அதாங்க.... லோக்கலு....டம்ப்ளரு....ஃபாரினு....பாட்டிலு...ஹி..ஹி...

யவனிகா
20-10-2007, 09:31 AM
5 வரிகள்...!

அவசரத்தில எண்ண மறந்திடேண்ணா...விடாக் கண்டர் அண்ணா நீங்கள்...நாளைக்கு நாலே நாலு வரி ரேசன்ல அளந்துதான் போடுவேன்,சரியா?

சிவா.ஜி
20-10-2007, 09:34 AM
ரேசன்ல அளந்தா நாலுவரிக்கு பதிலா மூன்றரை வரிதான் இருக்கும். அதுதான் "நியாய"விலைக் கடைங்கறது

யவனிகா
20-10-2007, 09:35 AM
நீங்கல்லாம் லோக்கலு
குடிப்பீங்க தம்ஸ்-அப்
நாங்கெல்லாம் ஃபாரின்
அடிச்சா..பாட்டம்ஸ்-அப்..!

கலக்கல் அண்ணா...எப்பிடி இப்பிடி?

ராஜா
20-10-2007, 09:37 AM
நீங்கல்லாம் லோக்கலு
குடிப்பீங்க தம்ஸ்-அப்
நாங்கெல்லாம் ஃபாரின்
அடிச்சா..பாட்டம்ஸ்-அப்..!


ஓட்டு நிறைய விழுந்துகிட்டு இருக்கே..!

ராஜா
20-10-2007, 09:48 AM
மம்மி எனக்கு கொடுக்க
மறுத்துட்டா தாய்பாலு..!
அதுக்குதான் கொடுத்தாரு
எங்கப்பா எனக்கு பீர்பாட்டுலு?!


"எப்பவும் புட்டியில் குடிச்சி போரு
பாலு பாட்டில குடிச்சேன் பாரு
நீ சைசா என்னைப் பார்க்காம மாறு..
உள்ளே பாலு தாம்பா...வந்து பாரு..!!"


பாட்டிலோடு அடித்தாலும்
பீர்பால் ஆக முடியலையே...!
காலால் நெம்பி அடிக்க-அப்பா
காலையும் விட்டு வைக்கலயே ...!எங்கிட்ட இருப்பது பீரு
உன் மோரு ரொம்ப போரு
பீரு தான் எப்பவும் ஜோரு
வேணும்னா நீயும் குடிச்சு பாரு..


பீரும் பாலும்
கலந்து குடிக்கும்
இவர்தான்
பீர்பாலோ.!நீங்கல்லாம் லோக்கலு
குடிப்பீங்க தம்ஸ்-அப்
நாங்கெல்லாம் ஃபாரின்
அடிச்சா..பாட்டம்ஸ்-அப்..!


டப்பா பீரு
விளையும் பயிரு
முளையிலே
தெரியும் பாரு

இன்னிக்கு எல்லாக் கவிதையுமே சூப்பர்..

ஆகவே... எல்லோருக்குமே...

நச்.........!

ஓவியன்
20-10-2007, 10:25 AM
இன்னுமோர் கவிதை.....:D:D

பாட்டிலைப் பிடிங்க ராஜா அண்ணே
ஃபோட்டோ நச்சுனு வந்திச்சா..?
சரி சரி, நான் வரட்டா..
லேட்டாயினா மம்மி திட்டுவாங்க...!

பூமகள்
20-10-2007, 10:30 AM
பாட்டிலைப் பிடிங்க ராஜா அண்ணே
ஃபோட்டோ நச்சுனு வந்திச்சா..?
சரி சரி, நான் வரட்டா..
லேட்டாயினா மம்மி திட்டுவாங்க...!
ஹி ஹி ஹி...!!:D:D:D சூப்பரு டைமிங்..............!! :icon_b:

பூமகள்
20-10-2007, 10:32 AM
மொத்தமா ஒரு சொட்டுகூட விடாமக் குடிக்கறதுக்குப் பேர்தான் Bottoms-UP
என்பது பூமகள்.
ஓ................!! அப்படியா சிவா அண்ணா....??? தெரியப்படுத்தியதற்கு நன்றி...!! :icon_rollout:
(எதிர்காலத்தில் யூஸ் பண்ணிக்கிறேன்... ஹி ஹி..!! :D:D:D:D)

ராஜா
20-10-2007, 10:36 AM
இன்னுமோர் கவிதை.....:D:D

பாட்டிலைப் பிடிங்க ராஜா அண்ணே
ஃபோட்டோ நச்சுனு வந்திச்சா..?
சரி சரி, நான் வரட்டா..
லேட்டாயினா மம்மி திட்டுவாங்க...!

புள்ள புல் கட்டு கட்டறதப் பார்த்தா இப்போதைக்கு பாட்டிலை தரமாட்டான் போல இருக்கே..!

உச்ச ஸ்தாயில நாதஸ்வரம் வாசிக்கிறானே..!

ஓவியன்
20-10-2007, 10:38 AM
புள்ள புல் கட்டு கட்டறதப் பார்த்தா இப்போதைக்கு பாட்டிலை தரமாட்டான் போல இருக்கே..!

உச்ச ஸ்தாயில நாதஸ்வரம் வாசிக்கிறானே..!

ஆமாங்க நீங்க குட்டிப் புள்ளைங்க எல்லாத்துக்கும் பாட்டிலைக் கொடுத்தா, பாவம் அதுங்க தான் என்ன செய்யும்...??:icon_rollout:

ராஜா
20-10-2007, 10:40 AM
அடப்பாவிகளா..!

நான் தான் குடிக்க சொல்லிக் கொடுத்தேன்னு சத்தியமே பண்ணுவீங்க போல இருக்கே..

டேஞ்சர் பார்ட்டிங்கோ..!

ஓவியன்
20-10-2007, 10:53 AM
டேஞ்சர் பார்ட்டிங்கோ..!

அட பாவமே!
அந்த குட்டிப் புள்ளைக்கு பார்ட்டி வேற வைச்சீங்களா...???? :D:D:D

ராஜா
20-10-2007, 11:11 AM
அட பாவமே!
அந்த குட்டிப் புள்ளைக்கு பார்ட்டி வேற வைச்சீங்களா...???? :D:D:D

வேற வைக்கலே..

இப்போ குடிச்சுட்டு இருக்கறதே பார்ட்டிதான்..!

ஓவியன்
20-10-2007, 11:15 AM
வேற வைக்கலே..
இப்போ குடிச்சுட்டு இருக்கறதே பார்ட்டிதான்..!

அடடா பாட்டிலைக்
கவுக்கிற குட்டியைக்
காட்டி என்னைக்
கவுத்திட்டீங்களே....!:)

அக்னி
20-10-2007, 12:11 PM
இன்றே வழிகாட்டுங்கள்...
உங்கள் குழந்தையும்,
சிறந்த குடிமகனாக..,
இலகு வழி.., குழந்தையில் குடி..!

ராஜா
20-10-2007, 12:35 PM
லேட்டா இருந்தாலும் லேட்டஸ்ட் பஞ்ச்..!

ஒருதடவை குங்குமம் விளம்பர பாணியில் சொல்லிப்பார்த்தேன்.. சூப்ப்ப்ப்பர்..!

நன்றி அக்னி..!

கஜினி
20-10-2007, 12:38 PM
இன்றே வழிகாட்டுங்கள்...
உங்கள் குழந்தையும்,
சிறந்த குடிமகனாக..,
இலகு வழி.., குழந்தையில் குடி..!

சூப்பர் அக்னி அவர்களே.

அக்னி
20-10-2007, 12:44 PM
ஒருதடவை குங்குமம் விளம்பர பாணியில் சொல்லிப்பார்த்தேன்.. சூப்ப்ப்ப்பர்..!

அட... இப்பிடி நான் சிந்திக்கலயே...

சூப்பர் அக்னி அவர்களே.
நன்றி கஜினி...

இன்னொண்ணு...

என்கிட்டயும் மாமூல் கேட்டிட்டாங்கன்னா...
அதான் ஓரமா வந்து,
ஒளிஞ்சு நின்னு குடிக்கிறேன்...
பால்புட்டி வாங்கித்தர அம்மாட்ட காசில்லை...

ராஜா
21-10-2007, 05:08 AM
மன்றத்து மக்களே..!

படம் காட்ட நான் ரெடி..

பஞ்ச் கவிதைக்கு நீங்க ரெடியா..?

ஓவியன்
21-10-2007, 05:12 AM
மன்றத்து மக்களே..!
படம் காட்ட நான் ரெடி..?
சரி காட்டுங்க, படம் கலர் "புல்"லா இருக்கணும்...:)

ராஜா
21-10-2007, 05:26 AM
சரி காட்டுங்க, படம் கலர் "புல்"லா இருக்கணும்...:)

நேற்று காட்டிய "ஃபுல்" போதாதா தம்பி..?

ஓவியன்
21-10-2007, 05:28 AM
நேற்று காட்டிய "ஃபுல்" போதாதா தம்பி..?சரி இன்னிக்கு ஃஆப் தாங்க...!! :)

ராஜா
21-10-2007, 05:34 AM
பஞ்ச் கவிதை - 7.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/fatgiraffe.jpg


"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எப்படி குண்டானேன்னு கேட்கறீங்களா ..? பூமகள் திரிதான் காரணம்..!

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

ஓவியன்
21-10-2007, 05:41 AM
ஹீ,ஹீ!!!

சூப்பர் படம் ராஜா அண்ணே!
அந்த படத்திலே இருப்பது நம்ம அமரன் தானே...! :)

ஓவியன்
21-10-2007, 05:44 AM
அளவுக்கு மிஞ்சின்
அமுதமும் நஞ்சு
அதிகமா உண்டால்
சிவிங்கியும் குண்டு..!

ராஜா
21-10-2007, 05:57 AM
அளவுக்கு மிஞ்சின்
அமுதமும் நஞ்சு
அதிகமா உண்டால்
சிவிங்கியும் குண்டு..!

நன்று.. நன்று..!

நேசம்
21-10-2007, 10:01 AM
பாப்பா(பூமகள்)
சொன்னதை கேட்டு
சிவிங்கி ஆகிவிட்டது
பீப்பா

ராஜா
21-10-2007, 10:03 AM
பாப்பா(பூமகள்)
சொன்னதை கேட்டு
சிவிங்கி ஆகிவிட்டது
பீப்பா

ஹா..ஹா..ஹா..

பாப்பா... பீப்பா... இருக்குதப்பா டாப்பா..!

நேசம்
21-10-2007, 10:05 AM
நன்றின்னா

அக்னி
21-10-2007, 01:02 PM
என்கிட்டயும் மாமூல் கேட்டிட்டாங்கன்னா...
அதான் ஓரமா வந்து,
ஒளிஞ்சு நின்னு குடிக்கிறேன்...
பால்புட்டி வாங்கித்தர அம்மாட்ட காசில்லை...
நேத்து நான் போட்ட இரண்டாவது, பிட்டை யாரும் கண்டுக்க மாட்டேன்கிறாங்களே... :frown:

சரி சரி இன்னிக்கு பிட்ட போடுவம்...

ஒட்டடை எல்லாம் வெளியே சுத்துது...
ஒட்டகச்சிவிங்கி இங்கே கத்துது...
"எனக்குமா குண்டர் சட்டம்..?
வேண்டாம்பா இப்படிச் சேர்ந்(த்)த மொத்தம்..."

ஒட்டகமும் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றே, என்று நினைத்து முதலில் எழுதிய பிட்டு கீழே...
பக்கத்து மாநிலம் தயவுகாட்டதால்..,
பாலைவன கப்பல் காவுகின்றதோ..?
தமிழ்நாடு கொண்டு செல்ல,
தண்ணீர் சேகரிப்பில் ஒட்டகம்...

ராஜா
21-10-2007, 01:50 PM
ஒட்டடை எல்லாம் வெளியே சுத்துது...?

புரியலியே..!

அக்னி
21-10-2007, 01:53 PM
ஒட்டடை எல்லாம் வெளியே சுத்துது...?

புரியலியே..!
ஒட்டடை... அகற்றப்படவேண்டிய தூசுக்கள், மாசுக்கள்...
தப்பு செய்தபடியே, வெளியே சுதந்திரமாய் வாழும் மனிதர்களைக் குறித்தேன்...