PDA

View Full Version : மானிட மகத்துவம்!!!



aren
15-10-2007, 12:25 AM
மானிட மகத்துவம்
காதல் தோல்விக்காக
தற்கொலை செய்துகொள்ளுதல்!!!

மிருகங்கள்
காதல் தோல்வியினால்
தற்கொலை செய்துகொள்வதில்லையே!!!

ஆறு அறிவு இருக்கிறது
என்று தெரிந்தும்
ஒர் அறிவையும் மனிதன்
உபயோகிக்காதது ஏன்!!!

இதுதான் மானிட மகத்துவமா!!!

அமரன்
15-10-2007, 08:05 AM
அண்ணா காலில்விழுதல்.கால்வாரல்.ஜால்ராபோடல்,மூட நம்பிக்கைகள், பதவி ஆசை என பல பரிணாம வளர்ச்சிப் படிகளை மிருகங்கள் இன்னும் தொடவில்லை. அவற்றைத் தொடும் மறுகணம் தற்கொலையும் அங்கே தொடங்கலாம். (யாருக்குத் தெரியும்? காட்டில் சில மிருகங்கள் தற்கொலை செய்கிறனவோ.. அல்லது நாய் பூனை ஆடு போன்ற வீட்டு மிருகங்கள் வாகனங்களின் முன்னால் விழுந்துதான் சாகின்றனவோ.)

அக்னி
15-10-2007, 08:13 AM
மனிதரில் மேவிய ஓரறிவின்
அழிவுத்திறன்...
மற்றறிவையெலாம் மேவி நிற்க...

நிற்க...
மிருகமிடத்தில் பாசம் உண்டு,
காதல் உண்டா?

ஏற்க..
அமரன் கருத்து உகந்ததே...

யதார்த்தம் விடுத்து, கவிதையாக நோக்குமிடத்து,
பாராட்டுக்கள் ஆரென் அவர்களே...

நேசம்
15-10-2007, 10:48 AM
அந்த ஆறாவது அறிவை அரைகுறையா பயன் படுத்துவதால் தான் இந்த மாதிரி செயல்கள்

இனியவள்
16-10-2007, 06:07 PM
ஆறறிவை அளவுக்கு மீறி
சிந்தித்ததால் வந்ததன் விளைவோ

வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா..

iniya
16-10-2007, 06:10 PM
மானிட மகத்துவம் ம்ம் இதுதான் ஆறறிவு இருந்து மனிதன்
விடுற பிழை ஆனால் அமரன் சொன்ன கருத்தும் சிந்திக்கப்பட
வேண்டிய விடயம்.