PDA

View Full Version : நடிப்பு விதேசிகள்..



rambal
03-04-2003, 07:40 AM
இனம் விட்டுப் பிரிந்து
மொழி களைந்து
கடல் கடந்து
புது மொழி பயின்று
புது உறவு கண்டு வியந்து
பழையது பற்றி
அவதூறாக பேசி பொழுதைக்
கிழித்திடும் வேடிக்கை மனிதன்
போலும் வேஷம் போடும்..

காலை முதல் மாலை வரை
இந்தியக் கல்வியை
அயலானுக்கு
தவணை முறையில் விற்று
மாலை வீடு வந்து
தொலைக்காட்சி செய்தி
கண்டு வெட்டியாய்
வியாக்கியானமும் பண்ணும்..

ஒன்றுமே இல்லை
என்றும் எல்லாம்
தாய் நாடுதானென்றும்
பணப் பொறியில் அகப்பட்ட
எலியாய் வாழ்வாதாயும்
மற்ற படி நிம்மதி
இங்கில்லையென்றும்
ஒப்பாரியும் வைக்கும்..

பார்வை விசாலனம்
ஏதுமற்ற இருண்ட
தனிமையில்
இருப்பது போலவும்
உலகமே கைக்குள்
அடக்கம் என்பது
போலவும்
நரம்பில்லா நாவை
மாற்றியும் பேசும்..

நத்தை வாழ்வு
வாழ்ந்து கொண்டு
ஊர்க்குருவி
வாழ்வு வாழ்வதாய்
புறம் பேசித் திரியும்..

என்ன செய்வது
மாயமான் வேட்டைக்குப் போன
இந்த நடிப்பு விதேசிகளை?
பாவப்பட்டவர் கணக்கில்தான்
சேர்க்க வேண்டும்..

இளசு
03-04-2003, 07:58 AM
ஏக்கம், இயலாமை, துக்கம், அது தீர தேடும் மார்க்கம்
எல்லாம் ஒருங்கே எழுப்பும் கவிதை.ராமுக்கு வாழ்த்துகள்.

anushajasmin
03-04-2003, 01:26 PM
சரியான கம்யூனிஸ ஏக்கங்களை வாரி வழங்கியிருக்கிறது உங்கள் கவிதை...
எல்லா உணார்வுகளும் வெளிப்பட்ட விதம் அருமை

rambal
04-04-2003, 07:34 AM
நான் கம்யூனிஸ்ட்லாம் இல்லை..
நான் பாட்டுக்கு ஏதோ எழுதிட்டுப் போய்கிட்டிருக்கிறேன்..
அதுக்கு சிவப்பு சாயம் பூசிடாதீங்க..

poo
04-04-2003, 01:01 PM
ராம்... பாராட்டுக்கள்... மழையாய் பொழிகிறாய்.. நனையத்தான் நேரமில்லை!!!

Narathar
05-04-2003, 04:19 AM
என்ன செய்வது
மாயமான் வேட்டைக்குப் போன
இந்த நடிப்பு விதேசிகளை?
பாவப்பட்டவர் கணக்கில்தான்
சேர்க்க வேண்டும்..

யூ.எஸ் இல் இருப்பவர்களை சொல்கிறீர்களா இல்லை யுனைடட் அரப் எமிரேட்ஸில் உள்ளவர்களை சொல்கிறீர்களா..... நாராயனா!!!

rambal
05-04-2003, 05:52 AM
இது ஏதோ வம்பில் மாட்டிவிடும் கேள்வி போல் உள்ளது..
இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை..

aren
05-04-2003, 08:13 AM
என்ன செய்வது
மாயமான் வேட்டைக்குப் போன
இந்த நடிப்பு விதேசிகளை?
பாவப்பட்டவர் கணக்கில்தான்
சேர்க்க வேண்டும்..

யூ.எஸ் இல் இருப்பவர்களை சொல்கிறீர்களா இல்லை யுனைடட் அரப் எமிரேட்ஸில் உள்ளவர்களை சொல்கிறீர்களா..... நாராயனா!!!


நாரதரே, இது குசும்புதானே. மற்றவர்களை வம்புக்கு இழுத்து மாட்டிவிடுவதில் அவ்வளவு ஆனந்தமா. சரியாகத்தான் பெயரை தேர்தெடுத்து இருக்கிறீர்கள். உங்களை பாராட்டத்தான் வேண்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

Narathar
07-04-2003, 05:33 AM
நான் யாரையும் மாட்டிவிட நினைக்கவில்லை.....
யதார்த்தமாகக்கேட்டேன்................???
இதைப்போய்???..... நாராயனா

rambal
07-04-2003, 03:34 PM
நானும் எதார்த்தமாகத்தான் சொன்னேன்..
அதைப் போய் நாராயணா..!நாராயணா..!

poo
07-04-2003, 03:46 PM
நாரதர் அபாயகரமான ஆளாய்த்தான் தெரிகிறார்..

Narathar
11-04-2003, 11:46 AM
நான் கழுத்தில் மாட்டியிருப்பது "லேப்-டொப்"பே அன்றி
அணுஆயுதம் அல்ல. அதுக்கப்பறமேன் சதாமைப்பார்த்த
புஷ் போல இந்த அபாண்ட பழிசுமத்தல்.......... நாராயனா!!!

Nanban
11-04-2003, 02:57 PM
நாரதர் பங்கேற்கும் தளத்திலெல்லாம் சுவையான உரையாடல்கள். கவிதையைப் படித்துவிட்டு, Horror movie effect என்கிறார். உடனே பதில் சொல்லவில்லையென்றால், பேயோட்டி ரேஞ்சில் இறக்கி விட்டுவிடுவார் போலிருக்கிறதே? விடுமுறையில் போவோர், நாரதரிடமும் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கள் - இல்லையென்றால், நீங்கள் திரும்புமுன்னே பல வம்புகளை உண்டாக்கி வைத்து விடுவார், பாருங்கள்.....

karikaalan
11-04-2003, 03:34 PM
கவிதையை மறந்துவிட்டு, ஏதேதோ பேசத் துவங்கிவிட்டீர்களே ஐயாமார்களே!

ராம்பால்ஜி!

நல்லாத்தான் இருக்குது உங்கள் விசனம். இந்திய விதேசிகளைப் பற்றி இங்கேயும் பொதுவாக ஒரு மாதிரியான கருத்துக்கள் உலவுகின்றன.

இருந்தாலும், அவர்கள்தான் மிக அதிகமாக அன்னியச் செலாவணி இந்தியாவுக்கு அனுப்பி இருக்கிறார்கள். $75 பில்லியனில், $10 பில்லியனுக்கு மேல் அவர்கள் உழைத்து சம்பாதித்து, நேரான வழியில் அனுப்பிய பணம். அவர்களுக்கு எனது கும்பிடுகள் உரித்தாகுக.

===கரிகாலன்

Tamil_Selvi
21-07-2003, 10:22 PM
வாழ்க்கையின் இன்னோர் பக்கம்.

இனிமையிலும் இனிமை!

- தமிழ்ச்செல்வி