PDA

View Full Version : ஓவியம்



இலக்கியன்
14-10-2007, 05:39 PM
http://img296.imageshack.us/img296/5784/sandartiu6.jpg (http://imageshack.us)

ஓவியங்கள் செந்-தமிழ்
ஓலைக்காவியங்கள்
உள்ளத்து உணர்வுகளின்
உன்னதக் கோலங்கள்

கண்கண்ட இரசனைகளை
கவர்ந்திடும் வண்ணமிட்டு
கலை நயம் கலந்து
காட்சியாக விரியவிடும்

எண்ணற்ற சிந்தனையை-மன
எண்ணத்தில் தீட்டி விடும்
மாசற்ற புதுமை மொழி
மண்ணுலகில் மகிமை வரி

பட்டறிந்த பண்டிதனும்
பாரறியா பாமரனும்
பார்த்து அறியும்-இனிய
பன்னாட்டு தொடர்பு மொழி

எதுகை மோனையில்லை
எடுகோள் எதுவுமில்லை
தூரிகை தூவிவிடும்
தூய்மையான கவிதை

சாம்பவி
14-10-2007, 06:14 PM
உலகம் பேசும் ஒருமொழி...
பிக்காஸோக்களின் வரைமொழி... !

.

பூமகள்
15-10-2007, 01:09 PM
ஓவியத்திற்காக அழகு கவி மொழி..!!

பட்டறிந்த பண்டிதனும்
பாரறியா பாமரனும்
பார்த்து அறியும்-இனிய
பன்னாட்டு தொடர்பு மொழி
இந்த வரிகள் நிதர்சனம்.
மொழி உண்டாகும் முன் ஓவியங்கள் தான் மொழியாக மனிதரில் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
நன்றிகள் இலக்கியரே..!!

ஜெயாஸ்தா
15-10-2007, 02:14 PM
ஓவியர்கள் கூட பிரம்மாக்கள்தான்..
படைப்பதால்...!
அருமையான கவிதை. பாராட்டுக்கள் இலக்கியன்.

அமரன்
15-10-2007, 02:20 PM
ஓவியத்திற்கு ஒரு கவியோவியம். அருமை.