PDA

View Full Version : முதல் கடி !சர வெடி!! சிபானியாவின் குசும்பு!!sifania
14-10-2007, 09:05 AM
பெண்ணொருத்தி தன் வாகனத்தை சாலையில் சற்று ஓரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கிவந்தான்.காரின் முன்பக்கம் கொஞ்சம் நெளிந்திருந்தது. சாலையோ ஒற்றையடிப்பாதை. அந்திமறைந்து இரவு கவ்விக்கொண்டிருந்தது.ஒரு புறம் பயமும் அவளை ஆட்கொண்டிருந்தது!!!

சற்று நேரத்தில் எதிர் திசையில் ஒரு ஹீரோ ஹொண்டா மோட்டார் சைக்கிள் காற்றுவேகத்தில் வந்துகொண்டிருந்தது. அந்த நபரின் மோட்டாரிலோ விளக்கும் எரியவில்லை! அவன் தலையில் ஹெல்மட்டும் அணிந்திருக்க வில்லை!!.

சற்று யோசிக்காமல் அந்தப் பெண் அவனைப்பார்த்து "ஏய் பன்ன்ன்றிறிறி..... மெதுவா பார்த்துப்போடா" என்று அலறினாள்!! மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்தவனுக்கோ கோபம் தலைக்கேறியது! ஏண்டி நாயே? யாரைப்பாத்து பன்றின்னு சொன்னே? மூஞ்சி எகிறிவிடும்! ஜாக்கிரதை!!

சிறிது நேரத்தில் டமார் என்ற சத்தம் அங்கே அதிர்ந்தது!!. இந்தப்பெண்ணோ அந்த மோட்டார் சைக்கிள் சென்ற திசையை நோக்கி ஒடினாள்!. அங்கே அந்த நபர் புதருக்கே உள்ளே தூக்கி எறியப்பட்டு டிரம்மு போல உருண்டுகொண்டிருந்தான் .மோட்டார் சைக்கிளே நொறுங்கிக் கிடந்தது!!!

அந்தப்பெண்னோ மனதில் பேசிக்கொண்டாள்"நம் காரை மோதிவிட்டுச் சென்ற அதே பன்றியைத்தான் அவன் மோதியிருக்க வேண்டும்"!!!!

கதையின் நீதி: யாராவது உங்களைப்பார்த்து"ஏய் பன்றி, மெதுவா பார்த்து போடா"ன்னு சொன்னா .உங்களை திட்டுவதாக எண்ணாதீர்கள்.அங்கே பன்றி ஒன்று உருண்டுகொண்டிருக்கிறது என்பதை எச்சரிக்கை செய்வதாக கூட இருக்கலாம் இல்லையா?
என்ன பார்க்குறீங்க ! பேந்த பேந்த முழிக்காதீங்க!!:sprachlos020::sprachlos020:

அமரன்
14-10-2007, 09:13 AM
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா..சரியான நகைச்சுவை. இனிமே யாரும் திட்டினால் கூட ஆழ்ந்து யோசிக்க வேணும்போல. தொடருங்கள் தோழரே.
அப்படியே உங்கள் படைப்பை சீராக்கல், தணிக்கை செய்திருகிறேன். தொடரும் படைப்புகளில் அவற்றில் கவனம் செலுத்துங்கள் தோழரே!

சூரியன்
14-10-2007, 09:13 AM
இது நகைச்சுவை அல்ல..
உண்மைய சரியாக சொன்னிங்க..

சுகந்தப்ரீதன்
14-10-2007, 09:30 AM
சிபானியா புதுசுன்னு நினைச்சேன் நீங்க ரவுசுன்னு சொல்லுறீங்க..கூடவே பவுசா ஒரு கருத்து வேற..தொடரட்டும்..வாழ்த்துக்கள்!

தமிழ்நெஞ்சம்
14-10-2007, 10:42 AM
வித்தியாசம்- விருவிருப்பு.நன்றி

அக்னி
14-10-2007, 11:34 AM
ஒற்றையடிப் பாதையில் கார் எப்படி வந்தது?
ஒருவர் திட்டுகிறாரா இல்லை எச்சரிக்கின்றாரா என்று தெரிந்து கொள்வது எப்படி என்று ஒரு திரி கொளுத்தலாமே...
பாராட்டுக்கள் சிபானியா...
தொடர்ந்தும் உங்கள் கடிகளைத் தாருங்கள்... எங்கள் சரவெடி சிரிப்புக்களுக்காக...

lolluvathiyar
14-10-2007, 12:06 PM
சிபானியா வந்தவுடனே தன்னுடைய சர வெடியை கொளுத்தி விட்டார், பன்றி என்று திட்டினால் அதற்க்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பதால் யாரையாவது திட்டி வம்பை வளர்த்து கொள்ள வேண்டாம்

ஷீ-நிசி
14-10-2007, 12:46 PM
சிஃபானி நன்றிங்க.. :) பார்த்து போங்க....

தங்கவேல்
14-10-2007, 01:08 PM
என்னங்க சிபானி...வந்ததும் அசத்துரீங்க... ஈ பணம் பெற்றுக்கொள்ளுங்கள்...

ஆதவா
14-10-2007, 01:09 PM
அய்யோ அய்யோ!!

ஏற்கனவே கடிச்சு ரத்தம் வந்த காதை மறுபடியும் கடிக்கிறீங்களே!

யவனிகா
14-10-2007, 01:32 PM
ஆரம்பிச்சிட்டாங்கையா...ஆரம்பிச்சிட்டாங்க..

aren
14-10-2007, 02:31 PM
நல்ல சிரிப்பு.

நம்மையெல்லாம் அப்படி யாரும் பேர் சொல்லி கூப்பிடமாட்டார்கள்.

நேசம்
14-10-2007, 02:43 PM
நகைச்சுவையா அல்லது பெற்ற அனுபமா

அக்னி
14-10-2007, 02:52 PM
நல்ல சிரிப்பு.

நம்மையெல்லாம் அப்படி யாரும் பேர் சொல்லி கூப்பிடமாட்டார்கள்.
கெட்ட சிரிப்பு அப்படீன்னும் இருக்கா...
உங்கள்ள அவ்ளோ மரியாத வச்சிருக்காங்களே... அதான் பெயர் சொல்றதில்லையோ..:confused:

leomohan
14-10-2007, 03:03 PM
ஹா ஹா நல்ல துவக்கம் சிபானியா.

அன்புரசிகன்
14-10-2007, 03:14 PM
அப்டீன்னா பன்றி எல்லாம் மோதுமா.....

சூப்பருங்கோ...

மனோஜ்
14-10-2007, 03:54 PM
தொடக்கமே கலக்கல் அருமை வாழ்த்துக்கள்
நல்ல அறிவுறையும் தொடருங்கள்......

பூந்தோட்டம்
15-10-2007, 09:28 PM
நன்றாக இருக்கிறது- நன்றி.

sifania
15-10-2007, 09:34 PM
அன்பு நெஞ்சங்களே! உண்மையிலேயே நெகிழ்ந்து விட்டேன்!.என்னை போன்ற புதியவர்களுக்கு தாங்களின் விமரிசனம்தான் எனக்கு ஊக்க மருந்து!.என் படைப்பை தனிக்கை செய்து செப்பமிட்டு கூடவே வாழ்த்துரை வழங்கி துவக்கிவைத்த "பொறுப்பாளர் திரு அமரன் அவர்களுக்கு நன்றி!! மற்ற மன்றத்தின் தூண்களுக்கும் நன்றி! நன்றி!நன்றி

இனி மீண்டும் வருவேன்!
சிபானியா!

சாராகுமார்
16-10-2007, 06:08 AM
சிபானியா வாழ்த்துக்கள்.அருமையான நகைச்சுவை.அதில் நீதி வழங்குவது புதுச்சுவை.