PDA

View Full Version : நாளை நமதே!!!



aren
14-10-2007, 12:37 AM
மனதில் எப்பொழுதும்
இழந்ததையே
நினைத்துக்கொண்டிருக்கிறோம்

இழந்ததை மறந்துவிட்டு
வருங்காலத்தை
நினைத்துப் பார்க்கலாமே!!!

ஏன் மனது இப்படி
நினைக்க மறுக்கிறது!!!

இழந்ததின்
அளவுகோல்
மனதிற்கு தெரிவதாலா!!!

எதிர்காலத்தில்
கிடைக்கப்போகும்
அளவு தெரியாததாலா!!!

இழந்ததை நினைத்து
அதையே முதன்மைபடுத்தி
முன்னேற இந்த நினைப்பை
ஊந்துகோலாக பயன்படுத்தி
நம்மை வளர்த்துக்கொள்வோமே!!!

முடியும் தானே
முயற்சிக்கலாமா
முயன்றால்
நாளை நமதே!!!

அமரன்
14-10-2007, 08:56 AM
ஆம் அண்ணா..இழப்புகளை நினைக்க வேண்டும். இழப்பின் காரணம் அறியவேண்டும். எதிர்காலத்தில் காரணங்களை இயன்றளவு களையவேண்டும். அதை விட்டு விட்டு இழப்பை நினைத்து உருகக் கூடாது. இறந்தகாலம் என்பது நாளை நாம் படைக்கப்போகும் சரித்திரத்திற்கான பாடம் என நினைத்துக்கொண்டால் எந்நாளும் நமதே....எளிமையான வரிகளில் ஆழமான கருத்து. பாராட்டுகள். தொடருங்கள்.

சூரியன்
14-10-2007, 09:03 AM
அந்த இழப்புகளை மறந்து நாளை கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால் அந்த நினைவுகள் நம்மை வருத்தாது.

கவிதையை சரியாக தந்துள்ளீர் வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா.