PDA

View Full Version : வாழ்வதற்கே வாழ்க்கை



யாழ்_அகத்தியன்
13-10-2007, 03:02 PM
இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்

*

நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது

*
வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது

*

தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மரதன் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஒட்டாமே

*
பெருமை
என்பது உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல

அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்

*

இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்

*
உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்

ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்

*
யாரு உன்னை உறிஞ்சி
எறிந்தாலும் முளைத்து வா
பனங்கொட்டையாய்
அதில்தான் உள்ளது
தனித்தன்மை

*
யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே

*
உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும் வெட்ட
மறப்பதில்லை நீ

ஆனால்..
நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்

*
வாழ்க்கையில் மிதக்க
கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்

நீந்தக் கற்றுக்கொள்
அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்

*
தோல்விகள்
என்பது உன்னை தூங்க
வைக்க பாடும் தாலாட்டு அல்ல

நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்

*
குட்டக் குட்ட
கல்லாகாதே
குட்டக் குட்ட
சிலையாகு

*
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல

ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை

*
உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட

நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்

-யாழ்_அகத்தியன்

lolluvathiyar
18-10-2007, 08:04 AM
ஆகா இந்த பாடலின் அத்தனை வரிகளும் என்னை மிகவு கவர்ந்தன.
அனைத்தும் எதார்த்தம் உன்மை, அதனால் வலிகிறது. சுடுகிறது.


[COLOR="DarkRed"]யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே


மிகவும் கவர்ந்த வரி

பாராட்டுகளுடன் 25 இபணம்

சிவா.ஜி
18-10-2007, 08:15 AM
ஒவ்வொரு வரிகளும் அசத்தலான...ஆணித்தரமான கருத்துக் கொண்டவை.சுயமுன்னேற்றமென்பது..ஒவ்வொருவருக்கும் லட்சியமாக இருக்கவேண்டும்.சார்ந்திருக்க நினைத்தால் சோர்ந்து போக நேரிடும்.
அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள் யாழ்-அகத்தியன்.

ஜெயாஸ்தா
18-10-2007, 08:46 AM
ஒவவொருவருக்கும் தன்னம்பிக்கையூட்டம் அற்புதமான கருத்துக்களை அள்ளித்ததந்ததற்கு பராட்டுக்கள் யாழ்....! (பிடியுங்கள் என்னுடைய 100 இணையகாசுகள் பரிசை...!)

யாழ்_அகத்தியன்
18-10-2007, 05:42 PM
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்

யவனிகா
18-10-2007, 06:17 PM
அருமையான கவிதைகள்..குட்டிக் குட்டி கவிதை தொகுப்புகள் என்றாலும் அவை மனதை முட்டி மோதி சிந்திக்க வைக்கின்றன்.தீக்குச்சியின் தலையில் அமைதியாக தவமிருக்கும் கந்தகம் போலவே உங்கள் கவிதையூடே மனதின் கொதிப்புகளை சிறை வைத்திருப்பது புரிகிறது...வாழ்த்துகள்.

நேசம்
18-10-2007, 06:29 PM
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள் யாழ் அகத்தியன்