PDA

View Full Version : இயற்கையே எனது ஆசான்...



ஜெயாஸ்தா
13-10-2007, 01:58 PM
சுற்றும் பூமி சுழலும் கிரகங்கள்
காலைச்சூரியன் மாலைச் சந்திரன்
கற்றுக்கொடுத்தது எனக்கு
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே...!

கரை கடக்க நினைக்கும் அலை
நுரை எழுப்பி விழும் அருவி
கற்றுக்கொடுத்தது எனக்கு
தோல்வி கண்டு துவளாதே...!

வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம்
இறைக்க இறைக்க சுரக்கும் நீருற்று
கற்றுக்கொடுத்தது எனக்கு
துன்பத்தில் கலங்காதே...!

இரை இழுத்துச் செல்லும் எறும்பு
கூரை கம்பில் கூடுகட்டும் சிறுகுருவி
கற்றுக்கொடுத்தது எனக்கு
முயற்சி செய் முன்னேறலாம்...!


பாறைக்குள் வாழும் தேரை
மாம்பழத்தினுள் வாழும் வண்டு
கற்றுக்கொடுத்தது எனக்கு
இறைவனின் அரும்பெரும் அன்பை..!

புயல்காற்றில் வளையும் நாணல்
புனர்வாழ்விற்கு நிறம் மாறும் பச்சோந்தி...
கற்றுக்கொடுத்தது எனக்கு
சூழ்நிலைக்கேற்ப சுகமாய் வாழ....

வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
இயற்கை ஆசான் எனக்கு கற்பிக்கிறான்...
வாழ்வை நலமாய் வாழ.....!

யவனிகா
13-10-2007, 02:23 PM
கவிதை அருமை...ஜே.எம் அண்ணா...

நீ கற்றுக் கொடுத்த படி தானே
வாழ்கின்றோம் நாங்கள்...

ஆனாலும் அவ்வப்போது
ஏன் எங்கள் மீது
எரிந்து விழுகிறாய் நீ... இயற்கையே..!

சுனாமியாய் வந்தாய்,
சுருட்டி இழுத்துப் போனாய்..

பூகம்பமாய் வந்து,
புதைத்துப் வைத்தாய்..

மழையெனப் பெய்தாய்,
மாய்த்து...இடியெனச் சிரித்தாய்..

சிரித்தபடி வரமளிக்கும்
தேவ*தையாய் நினைத்திருந்தோம் உன்னை...

தேவதைக்கும் கோபம் வரும்
என்பதை ம*றந்தோம் நாங்கள்,
இயற்கைப் பெண்ணே!

ஜெயாஸ்தா
13-10-2007, 03:03 PM
கவிச்சமரில் அடிக்கடி பங்கெடுப்பதால் பொசுக் பொசுக்கென்று எதிர்கவிதை பாடிவிடிகிறீர்கள். இருந்தாலும் உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது யவனிகா. நன்றி...!

யாழ்_அகத்தியன்
13-10-2007, 06:22 PM
கவிதை அருமை

யவனிகா
13-10-2007, 06:34 PM
எதிக்கவிதை யவனிகா என்று பட்டம் குடுத்திறாதீங்க..அண்ணா...அப்புறம் பாடி புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்...எதிக் கவிதை பாடியே புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்று பேரே டேமேஜ் செஞ்சுருவாங்க..

ஜெயாஸ்தா
14-10-2007, 12:53 AM
எதிக்கவிதை யவனிகா என்று பட்டம் குடுத்திறாதீங்க..அண்ணா...அப்புறம் பாடி புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்...எதிக் கவிதை பாடியே புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள் என்று பேரே டேமேஜ் செஞ்சுருவாங்க..

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

இலக்கியன்
14-10-2007, 05:31 PM
மிகவும் சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் ஜே.எம்
250 இ பணம் அன்பளிப்பு

நேசம்
14-10-2007, 06:46 PM
வாழ்க்கை எப்படி எதிர்கொண்டு வாழவேண்டும் என்றும் சொல்லும் நல்ல கவிதை ஜே.ம்

ஜெயாஸ்தா
15-10-2007, 05:45 AM
இணையக்காசுகள் பரிசளித்தற்கு நன்றி இலக்கியன்...!

பசத்துடன் விமர்ச்சனம் செய்தமைக்கு நன்றி நேசம்.

அமரன்
15-10-2007, 08:45 AM
ஜேம்..இயற்கையிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது. அண்மையில் ஒரு சுற்றுலாப் போனபோது அழகான மலைச்சாரலை ரசிக்க நேர்ந்தது. அதில் ஏற வேண்டும் என்ற ஆசை பொங்கியது. ஏறும்போது தலை தானாகவே குனிந்தது. இறங்கும் போது நெஞ்சு தானாகவே நிமிர்ந்தது. வாழ்வியல் ஏற்ற இறக்கத்தின்போது எப்படி நடந்துகொள்ள்வேண்டும் என்பதை கற்றுந்தந்தது போல இருந்தது... இப்படி இன்னும் பல உண்டு. இயற்கை அவ்வப்போதூ சீற்றம் கொள்ள்கிறதுதான். ஆனால் அது வாடிக்கை ஆவதற்கு எமது பங்கு அதிகம் என்பது எனது கருத்து.

சுகந்தப்ரீதன்
15-10-2007, 08:58 AM
அருமையான கவிதை தந்த ஜெ.எம் அண்ணாவிற்க்கு எனது வாழ்த்துக்கள்... எத்தனைதான் இயற்கை கற்றுதந்தாலும் அடிபட்டு அனுபவத்தால் கற்பவைதான் நினைவில் நிற்கின்றன... மற்றவையெல்லாம் மறந்துதான் போகின்றன..அடுத்த பாடத்தை இயற்கை கற்றுதரும் வரை...!

மீனாகுமார்
15-10-2007, 10:07 AM
மிக அற்புதமான கவிதை ஜே.எம். மனிதன் இந்த பூமியில் தானே வாழ்கிறான். இங்கிருந்து, இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று முதலில் கற்று கொள்கிறான். இயற்கையைப் பார்த்து கற்று தானே இன்று அறிவியல் என்ற பெயரில் அனைத்தையும் உருவாக்கியிருக்கிறான்..

உன்னதமான உண்மைகளைக் கொண்டுள்ளது இந்த கவிதை.. வாழ்த்துகள்.

ஜெயாஸ்தா
15-10-2007, 12:28 PM
இயற்கை அவ்வப்போதூ சீற்றம் கொள்ள்கிறதுதான். ஆனால் அது வாடிக்கை ஆவதற்கு எமது பங்கு அதிகம் என்பது எனது கருத்து.
உண்மைதான் அமரன். இயற்கையை நாம் தான் சீண்டிவிடுகிறோம். பின் அதன் பலனை அனுபவிக்கிறோம். ஓசோன் படலத்தில் நாம் ஓட்டை போட்டதால் இன்று தோல்புற்றுநோய்க்கு வழிவகுத்துவிட்டோம். மேலும் பூமியை இப்போது அதிகமாக வெப்பமயமாக்கலுக்கு உட்படுத்திவருகிறோம். அதற்குரிய விளைவுகளையும் இன்னும் சில வருடங்களில் நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.

மீனாகுமார்
15-10-2007, 12:55 PM
உண்மைதான் அமரன். இயற்கையை நாம் தான் சீண்டிவிடுகிறோம். பின் அதன் பலனை அனுபவிக்கிறோம். ஓசோன் படலத்தில் நாம் ஓட்டை போட்டதால் இன்று தோல்புற்றுநோய்க்கு வழிவகுத்துவிட்டோம். மேலும் பூமியை இப்போது அதிகமாக வெப்பமயமாக்கலுக்கு உட்படுத்திவருகிறோம். அதற்குரிய விளைவுகளையும் இன்னும் சில வருடங்களில் நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.

மிகவும் உண்மையான கருத்து. நம் முன்னோர்கள் இயற்கையோடு இசைந்த வாழ்கை வாழ கற்றிருந்தனர். இயற்கையை அழிக்காமல் நமக்கு நாமே கட்டுபாடுகள் விதித்து அதே சமயத்தில் இயற்கையை உபயோகித்தும் வாழ பல வழிகள் உண்டு. இப்போது அந்த வழிமுறைகள் எல்லாம் 'உலகமயமாக்கல்' என்ற அரக்கனிடம் இழந்து நாமும் சேர்ந்து தவிக்கிறோம். நம் பழைய உத்திகள் எல்லாம் நமக்கே மீண்டும் கற்றுக் கொடுப்பார்கள். அப்புறம் தான் நாமும் பின்பற்றுவோம் அதையே... வேறொரு லேபிளோடு...

ஜெயாஸ்தா
15-10-2007, 02:12 PM
நம் பழைய உத்திகள் எல்லாம் நமக்கே மீண்டும் கற்றுக் கொடுப்பார்கள். அப்புறம் தான் நாமும் பின்பற்றுவோம் அதையே... வேறொரு லேபிளோடு...
உண்மைதான் நண்பரே மனிதர்களின் விஞ்ஞான வளர்ச்சி அவனே தனக்குத்தானே புதைகுழி தோண்டவது போல்.... ஆனால் தவிர்க்கவும் முடியவில்லையே நண்பரே.....

அக்னி
17-10-2007, 01:11 AM
அற்புதமான கவிதை ஜே.எம்...

இயற்கையின் அசைவுகள்,
மனிதனுக்கு சொல்லிக்கொடுக்கின்றன...
ஆனால்,
மனிதனின் அசைவுகளோ,
இயற்கையை கொல்லத்துடிக்கின்றன...

பாராட்டுக்கள் ஜெயாஸ்தா...
யவனிகாவின் பின்னூட்டக் கவியும், அமரனின் வாழ்வியல் ஏற்ற இறக்கத் தத்துவமும் முத்துக்கள்...
இருவருக்கும் கூட பாராட்டுக்கள்...

சிவா.ஜி
17-10-2007, 04:51 AM
இயற்கை நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம்...ஆனால் எப்போதும் போல சிலரே தேர்வில் தேறுகிறார்கள்.பலர், ஒன்று...புரிந்துகொள்ளமுடியாமல்
வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்,அல்லது அலட்சியம் செய்து இயற்கையிடம் தோற்றுப்போகிறார்கள்.இயற்கையோடு இயைந்து வாழ் என்பது சத்தியமான வார்த்தை. அற்புதமான வாழ்வியலை வார்த்தைகளில் கொண்டு வந்த ஜே.எம்(நீங்க பெயர் மாற்றியதே தெரியாது ஜே.எம்.)அவர்களுக்கு வாழ்துகளும்,பாராட்டுக்களும்.