PDA

View Full Version : துரையின் ஹைக்கூ



durai
12-10-2007, 06:52 PM
அவன் காத்திருக்கிறான்
வாழை இலை விருந்திற்காக
குப்பைத் தொட்டியின் அருகில்

durai
12-10-2007, 06:53 PM
மழை வருது
குடையை விரி
கூரையில் ஓட்டை

durai
12-10-2007, 06:57 PM
காதலிக்கிறார்கள்
படகின் மறைவில்
சுண்டலுக்குப் பயந்து

அமரன்
12-10-2007, 08:02 PM
ஏழ்மை குறுங்கவிதைகள்.
தொடருங்கள் துரை.

ஓவியன்
12-10-2007, 08:10 PM
ஹைகூ வரைவிலக்கணக்கள் எனக்கு பூரணமாகத் தெரியவில்லை....
ஆயினும் உங்கள் குறுங்கவிதைகள் நச் ரகம்...
நல்ல விதத்திலே வார்த்தைகளைக் கையாளுகிறீர்கள் பாராட்டுக்கள் நண்பரே..!

aren
13-10-2007, 01:33 AM
நன்றாக இருக்கிறது துரை. பாராட்டுக்கள்.

சுண்டலுக்கு பயந்தா அல்லது சுண்டல் விற்பவனுக்கு பயந்தா?

சுகந்தப்ரீதன்
14-10-2007, 11:31 AM
வாழ்த்துக்கள் துரை... தொடருங்கள் தொடர்ச்சியாய்.. வாழ்த்துக்கள்..!

ஆதவா
14-10-2007, 11:53 AM
அவன் காத்திருக்கிறான்
வாழை இலை விருந்திற்காக
குப்பைத் தொட்டியின் அருகில்


வணக்கம் துரை.

ஹைக்கூ கவிதா ஞானம் அரை குறையாக மட்டுமல்ல முழுவதுமாகக் கூட எனக்குத் தெரியாது... எனினும் என் மனத்தோன்றல் இது ஹைக்கூ இல்லை என்றே தோன்றுகிறது.

ஒரு பிச்சைக் காரனை மட்டுமல்ல; மறைமுகமாய் பொருளாதாரக் குறைவுள்ளவர்களைக் குறிப்பிடுகிறது. முன்பு நான் சொன்ன மாதிரி கவிதையை வேறெப்படியாவது போட்டு மாற்றலாம்னு பார்த்தால், ஞானம் தடுக்கிறது... அது சரி... இருந்தாத்தானே :rolleyes:

இந்தியாவில் இன்னும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் கோடிகளில் இருக்கிறார்கள். கோடிகள் ஆயிரங்களாகும் போது எச்சிலிலை எடுத்து உண்ணும் கூட்டம் அறவே அற்றுப் போகும்...

ஒருமுறை பூ அவர்கள் எழுதிய ஒரு கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது, பொருளாதாரத்தைப் பற்றி மிக அழகாய் எழுதியிருப்பார்... நேரம் அமைந்தால் எடுத்துத் தருகிறேன்.

அக்னி
14-10-2007, 11:59 AM
ஒருமுறை பூ அவர்கள் எழுதிய ஒரு கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது, பொருளாதாரத்தைப் பற்றி மிக அழகாய் எழுதியிருப்பார்... நேரம் அமைந்தால் எடுத்துத் தருகிறேன்.
ஒன்றுமில்லை!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951)
பூ அவர்களின் இந்த கவிதையையா சொல்லுகின்றீர்கள் ஆதவா..?

ஜெயாஸ்தா
14-10-2007, 12:02 PM
ஏழ்மையை குறுங்கவிதைகளுக்குள் படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள். பெருங்கவிதைகள் எழுதினாலும் எழுதி முடியாது. அந்த அளவுக்கு ஏழ்மையின் சோகம் திரையிட்டுள்ளது. என்று நீங்கும் இந்தச சோகம்? தனியொருமனிதனுக்கு உணவில்லையெனில் ....?

பூமகள்
14-10-2007, 12:04 PM
அழகான கைக்கூக்கள்..!
எழுதுங்கள் துரை இன்னும்..!!
பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்..!!

praveen
14-10-2007, 12:11 PM
மூன்றோடு நிறுத்தி விட்டீர்களே, இன்னும் தாருங்கள்.. நண்பரே,

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, என்பது போல எல்லோரின் கவிதையையும் ஆராய்ந்தால் அதில் ஒரு குற்றமாவது இருக்க வரலாம். (இறைவனாரின் கவிதையிலே நக்கீரர் குற்றம் கண்டு பிடிக்கவில்லையா). இங்கே நம் நண்பர்கள் சுட்டி காட்டியவற்றை நட்புடன் (உண்மையான நண்பன் தான் நன்றாக இடித்துரைப்பான்) எடுத்து கொண்டு இன்னும் அடுத்தடுத்து தாருங்கள்.

ஆதவா
14-10-2007, 12:11 PM
ஒன்றுமில்லை!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5951)
பூ அவர்களின் இந்த கவிதையையா சொல்லுகின்றீர்கள் ஆதவா..?

ஆம்... நன்றி அக்னி... மிக்க நன்றி.

ஆதவா
14-10-2007, 12:16 PM
மூன்றோடு நிறுத்தி விட்டீர்களே, இன்னும் தாருங்கள்.. நண்பரே,

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, என்பது போல எல்லோரின் கவிதையையும் ஆராய்ந்தால் அதில் ஒரு குற்றமாவது இருக்க வரலாம். (இறைவனாரின் கவிதையிலே நக்கீரர் குற்றம் கண்டு பிடிக்கவில்லையா). இங்கே நம் நண்பர்கள் சுட்டி காட்டியவற்றை நட்புடன் (உண்மையான நண்பன் தான் நன்றாக இடித்துரைப்பான்) எடுத்து கொண்டு இன்னும் அடுத்தடுத்து தாருங்கள்.

குறை என்று ஒன்று இருந்தால் தான் நிறைவு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளமுடியும்.

துரை நண்பர் எழுதிய கவிதைகளில் குறை ஏதுமில்லை.... அப்படியே இருப்பினும் அவர் பக்குவமாய் ஏற்றுக் கொள்பவர் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏனெனில் அவர் வந்திருக்கும் இடம் அப்படிப்பட்டது..

அக்னி
14-10-2007, 12:27 PM
துரையின் வரிகள் சூடாகவும் சுவையாகவும் உள்ளன.
ஆதவா சொல்வது போல், மன்ற மணிகள் கருத்துகளை குறை சொல்வதாக கொள்ள மாட்டார்கள். இன்னும் நிறைவாக மாறிட உந்துதலாகவே கொள்வார்கள்...

பாராட்டுக்கள் துரை... தொடருங்கள்...

leomohan
14-10-2007, 03:03 PM
அவன் காத்திருக்கிறான்
வாழை இலை விருந்திற்காக
குப்பைத் தொட்டியின் அருகில்

நெஞ்சை நெருடிய குறுங்கவிதை துரை. அருமை. தொடருங்கள்.

durai
15-10-2007, 05:17 PM
நன்றி நண்பர்களே.
ஏதோ நான் பொழுது போகாமல் எழுதிய மன்னிக்கவும் கிறுக்கியவற்றுக்கு இவ்வளவு வரவேற்பா
உங்கள் அன்புக்கு எவ்வாறு நன்றி கூறுவது என்றே அறியவில்லை
இது ஹைகூவா இல்லையா என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. ஆனால் என் கருத்து அனைவரையும் கவர்ந்ததில் திருப்தி
குறைகளை மனதார வரவேற்கிறேன் தயவு செய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.
என் வேலை சுமை காரணமாக அடிக்கடி வர இயலவில்லை
உங்கள் அன்புக்கு நன்றி

பாரி கொடுக்கவிடினும் தேரை
பாரினில் வாழ்ந்திருக்கும் அந்த முல்லை
ஓரறிவுபடைத்த உயிர் அது
உலகினில் வாழ போராடி
வெற்றியும் பெற்றிருக்கும்
போராடி பெற்ற
வெற்றியிலும் தோல்வியிலும்
என்றும் இன்பம் இருக்கும்
அன்பர்களே
தேர் தேவையில்லை எங்களுக்கு
தேரினும் இனிய
ஆர்வத்தை ஊக்குவிக்கும்
அன்பு மொழிகள் தேவை
தாருங்களேன்



என்றோ எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது
அன்பு மொழிகள் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:29 AM
தொடர்ந்து எழுதுங்கள்.

அறிஞர்
31-03-2008, 12:54 PM
வாவ் அருமையான வரிகள் இன்று தான் படித்தேன்...

ஆமாம் துரை எங்கே காணோம்.