PDA

View Full Version : நான் காயாய் நீ கனியாய்!



lenram80
12-10-2007, 03:46 PM
உன்னைத் தொட்ட சந்தோஷத்தில் புழுதி கிளப்பி ஆடி மகிழும் மோகக் காற்று!
என்னைப் பார்த்த சந்தேகத்தில் என் கண்ணில் மண்ணை வாரிப் போடும் கோபக் காற்று!

நீ எப்படியாவது சாப்பிட வேண்டும் என்பதற்காக
பழத்தை கஷ்டப்பட்டு இனிக்க வைக்கும் உன் வீட்டு வேப்ப மரம்!
நான் சாப்பிடுவேன் என்பதற்காகவே
விதையில் பூச்சி வைக்கும் என் வீட்டு மாமரம்!

உன்னை காலையில் எழுப்பும் அலாரத்தோடு
உன் வீட்டு ஜன்னலில் அமர்ந்து அழகாய் கூவும் குயில்கள்!
அலாரத்தை தள்ளி விட்டு ஜன்னலை உடைத்து விட்டு
காதருகில் அமர்ந்து அலறும் என் வீட்டு காக்கைகள்!

உன் உடைகள் படுவதனால் காற்றோடு கைகுலுக்கி
இல்லாத உடலை உன் பொல்லாத உடைகளால் மறைத்து
கலகலவென்று சிரிக்கும் உன் வீட்டு கொடி கயிறு!
என்னதான் துவைத்தாலும் என் மணம் தாங்காமல்
அதே காற்றோடு சேர்ந்து உடைகளை கீழே தள்ளிவிட்டு
நன்றாக அழுக்கு ஒட்ட மண்ணுக்கும் கொஞ்சம் லஞ்சம் கொடுக்கும்
என் வீட்டு வஞ்சக கொடி கயிறு!

வெயிலில் காய வைத்தாலும் வண்ணம் கறுக்காத உன் ஆடைகள்!
நிழலில் உலர வைத்தாலும் பறவைகளின் எச்சதோடு என் ஆடைகள்!

"தேவதை வாழும் இடம்" - பறவைகள் உனது வீட்டுக்கு வைத்த பெயர்!
"வனவிலங்கு சரணாலயம்" - அதே பறவைகள் எனது வீட்டுக்கு வைத்த பெயர்!

குஷியும் கூத்தும் சேர்ந்து ஒரு கும்மாளக் கூட்டம் நடத்துகிறது உன் முகத்தில்!
பசியும் பட்டிணியும் சேர்ந்து இரங்கல் கூட்டம் நடத்துகிறது உன் தேகத்தில்!

பட்டமாய் பறந்தாலும்,
நூல் கட்டப்பட்ட தலைபகுதியாய் நீ!
வெட்டி ஒட்டி நீட்டப்பட்ட வால் பகுதியாய் நான்!

கறுப்பு புள்ளி கொண்ட வெள்ளை தாளாய் நீ!
வெள்ளை தாளில் கறுப்பு புள்ளியாய் நான்!

இடஞ்சல்களால் இன்னல் பட்டு
தடங்கல்களால் தடுமாறப்பட்டு
நெரிசல்களால் நசுக்கப்பட்டு
சிரமங்களால் ஆளப்பட்டு
தண்டனைகளால் வாழப்பட்டு
பட்டு கொண்டிருக்கிறதே இந்த ஆண் பட்டு!
எப்போது உன்னோடு உடுத்திக் கொள்வாய் எனை தொட்டு?

kavitha
15-10-2007, 08:39 AM
நீ எப்படியாவது சாப்பிட வேண்டும் என்பதற்காக
பழத்தை கஷ்டப்பட்டு இனிக்க வைக்கும் உன் வீட்டு வேப்ப மரம்!
நான் சாப்பிடுவேன் என்பதற்காகவே
விதையில் பூச்சி வைக்கும் என் வீட்டு மாமரம்!
"தேவதை வாழும் இடம்" - பறவைகள் உனது வீட்டுக்கு வைத்த பெயர்!
"வனவிலங்கு சரணாலயம்" - அதே பறவைகள் எனது வீட்டுக்கு வைத்த பெயர்!


கவிதை ரசிக்கும்படி இருக்கிறது லெனின்.

சாம்பவி
15-10-2007, 10:39 AM
முத்தான முரண்பாடுகளின்
மொத்தக் குவியல்... !
தேடல்களின் தேம்பாவணி.. !
இவர் பட்டுப் போகும் முன்
வந்து சேர் நீ... !

.

அமரன்
15-10-2007, 12:23 PM
காய் காயம்படமுன்
கனி நீ கனியாயோ.!

இனிய முரண்கள்-காதல்
அளவீட்டு முட்களாக

lenram80
18-10-2007, 12:56 AM
நன்றி கவிதா, சாம்பவி & அமரன்

பூமகள்
29-10-2007, 03:31 PM
யப்பா...:icon_wacko: :icon_shok: எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்களோ??? உட்காந்து யோசிப்பாய்ங்களோ????!!:icon_hmm:
நமக்கு எப்படி யோசிச்சாலும் எழுத வரலையே இது மாதிரி???!! :medium-smiley-100:

நல்ல கவி முரண்கள்..! :4_1_8:
வாழ்த்துகள் லெனின்...! :icon_clap:

ஆமாம்... நீங்கள் இப்படிப் பாடியுமா காதல் முரண்படும் உங்களிடத்து??!! :sport-smiley-018:

மனோஜ்
29-10-2007, 03:38 PM
அப்பப்பா அசிதீட்டிங்க
கவிதையா கலகமா பாவங்க நீங்க உங்களுக்கு மட்டும் ஒன்னு ஒத்து போகமாட்டிங்கிடு
சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்

அறிஞர்
29-10-2007, 03:42 PM
"தேவதை வாழும் இடம்" - பறவைகள் உனது வீட்டுக்கு வைத்த பெயர்!
"வனவிலங்கு சரணாலயம்" - அதே பறவைகள் எனது வீட்டுக்கு வைத்த பெயர்!



அருமை லெனின்.. நம் மக்கள் அநேகர் கண்ணில் இது படவில்லையா..

வெகு அருமையாக வடிவமைத்து எழுதியுள்ளீர்கள்.. தொடருங்கள்..