PDA

View Full Version : சில நூற்றாண்டுகள் கழித்து



ஆதவா
12-10-2007, 12:49 PM
மேக விசும்பலால்
கண்ணயற, கடைவானைப் பார்த்தேன்.
துருத்திய மூக்கின் நுனி
குருதி பட்டு சிவந்தது

இடி மீறும் குண்டொலியால்
செவிபிளந்து ஊன் கதறியது
நீல வானக் கதிர்கள் நுழையவொண்ணா
கதிரலைகள் மேவிக் கொண்டிருந்தது.

"ஏ! கடவுளே!
பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும்
அண்ட மீன்களை ஒருமுறை
இவ்வேழை நோக்கவியலாதா?
நாளுமோர் மீன் முளையும்
நானும் போய் நுழையவியலாதா?"

நீட்டிய உயிர்க்கிளை மீதொரு
நாட்டிய விழி புதைய
விண்ணுலகன் நாவில் பிரிந்து
எச்சில் ஊறியது என்னுள்
செவிப் பறைகள் அறைந்து கொண்டது.
செல்க! செல்க! மானிடனே செல்கவே!

புவிக் கோளம் தாண்டி
அக்கினியில்லா மீன்களைத்
துண்டிக்கச் சென்றேன்
என்னில்லப் புறாவின் சிறகெடுத்து.
சாந்தமில்லா மீன்கள் வீணிலெதற்கு?

"மூளை சிறுத்த ஆறறிவுயிர்
ஈங்கில்லை மானிட!
உயிர் முளைத்தால் நாளை வருக,
அன்றி, இன்று போ" வென்றது அது.

பிரபஞ்ச மூலை வரை
நானறிந்தேன் புற்களுமில்லை
மூச்சிறைத்தே உயிர் கொல்லும்
மானிடனுமில்லை யென

இல்லம் திரும்புகையில்,
அதற்குள்
உருக்குலைந்து ஒழுகிக் கொண்டிருந்தது
புவிப்பந்து.

kavitha
15-10-2007, 07:27 AM
கற்பனைக் கவிதை நன்றாக இருக்கிறது


துருத்திய மூக்கின் நுனி
குருதி பட்டு சிவந்தது
உங்களது ஆதங்கம் புரிகிறது.

எனக்கு கவிதைப்புரிந்த வரையில் ....

கலவரம் என்ற பெயரில் ஊன், உயிர் மண்ணில் குலைந்துக்கொண்டிருக்கிறது.
வானுலகிலோ விண்மீன்கள் பல்கிப்பெருகிக்கொண்டிருக்கின்றன.
சாந்தமான மனித உலகினைத்தேடி உங்கள் இல்ல(உள்ள)ச்சிறகினை விரிக்கிறீர்கள். எட்டுமட்டும் அப்படி ஒரு அற்ப ஆறறிவுயிர் இல்லையென வீடுத் திரும்புகையில் மீதி மண்ணில் பாதி உரு குலைந்திருக்கிறது.
நாட்டு நிலவரம் போகிற போக்கில் .... இப்படியெல்லாம் மானுடம் அழியாமல் இருக்கக்கடவது! என வேண்டிக்கொள்ளத்தோன்றுகிறது.

என் புரிதல் சரியா ஆதவன்?

அக்னி
15-10-2007, 07:48 AM
இறந்தோர் விண்மீனாய் ஒளிர்வர்
என்ற நம்பிக்கை எம்முள்ளே...

வானம் மூடிய விண்மீன்கள்
சொல்லும்,
மனித இறப்பின் அதிகரிப்பை...

தினம் தினம்,
ஆறறிவின் அழிவுசார் அதிகரிப்பு,
வானில் சேர்க்கும்
மனித உயிர்களில்,
நானும் ஒருவனாய் ஆகவியலாதோ?

சமாதானப் புறாவின்
சிறகுகளை பிடுங்கிவிட்ட
கொடுமையாளர்,
ஒளி(ர்)ந்து நோக்குகின்றனர்...
தாம் பாழடைத்த,
புவியின் சிதைவை...

கவிதையை எப்போதோ வாசித்த போதிலும்,
என் புரிதல் சரியா தவறா என்ற குழப்பம்...
கவிதா அவர்களின் பின்னூட்டம் கண்டதும், என் மன ஓட்டங்கள் இவை...
சரியா ஆதவரே..?

ஆதவா
05-11-2007, 03:52 PM
கற்பனைக் கவிதை நன்றாக இருக்கிறது

உங்களது ஆதங்கம் புரிகிறது.

எனக்கு கவிதைப்புரிந்த வரையில் ....

கலவரம் என்ற பெயரில் ஊன், உயிர் மண்ணில் குலைந்துக்கொண்டிருக்கிறது.
வானுலகிலோ விண்மீன்கள் பல்கிப்பெருகிக்கொண்டிருக்கின்றன.
சாந்தமான மனித உலகினைத்தேடி உங்கள் இல்ல(உள்ள)ச்சிறகினை விரிக்கிறீர்கள். எட்டுமட்டும் அப்படி ஒரு அற்ப ஆறறிவுயிர் இல்லையென வீடுத் திரும்புகையில் மீதி மண்ணில் பாதி உரு குலைந்திருக்கிறது.
நாட்டு நிலவரம் போகிற போக்கில் .... இப்படியெல்லாம் மானுடம் அழியாமல் இருக்கக்கடவது! என வேண்டிக்கொள்ளத்தோன்றுகிறது.

என் புரிதல் சரியா ஆதவன்?
மிகச் சரியே சகோதரி...

எத்தனையோ அரசாங்க இல்லல்கள்... நான் கண்டிராதவை.. கண்டவை மட்டுமே கணக்கில் கொண்டால் நெஞ்சில் சளியாய்த் தொங்கும் கவிதை புரண்டு வருகிறது.

வானவியல் ஆராய்தல் என் கனவாக இருந்தது. பின் அது கனவாகவே போய்விட்டது. என்றேனும் எனை வான ஊர்திகளில் ஏற்றி உலகம் கடக்கச் சொன்னால் உயிர் மீதுள்ள ஆசையைத் துறந்துவிட்டு பறந்து செல்வேன்... எங்கேனும் உயிர் இருக்கிறதா என்ற சோதிக்க..

மீண்டு வரவியலா ஊர்தி, பிரபஞ்ச மூலைகளுக்குச் செல்லவேண்டும், அங்கிடும் எனது எச்சிலில் பிரபஞ்சம் தொடங்கவேண்டும்...

விஞ்ஞான ரீதியாகவே பிரபஞ்ச முழுமை அறியா நாம், என்றேனும் அறிந்து சென்றுவரக் கண்டால் நிச்சயம் பூமி இருக்காது... புதைந்தொழிந்து போகும்,,, இல்லையேல் பக்கத்து கிரகத்திற்கு அடமானம் வைக்க நேரிடும்... :D

நன்றிங்கள் கோடி சகோதரி.

ஆதவா
05-11-2007, 03:57 PM
இறந்தோர் விண்மீனாய் ஒளிர்வர்
என்ற நம்பிக்கை எம்முள்ளே...

வானம் மூடிய விண்மீன்கள்
சொல்லும்,
மனித இறப்பின் அதிகரிப்பை...

தினம் தினம்,
ஆறறிவின் அழிவுசார் அதிகரிப்பு,
வானில் சேர்க்கும்
மனித உயிர்களில்,
நானும் ஒருவனாய் ஆகவியலாதோ?

சமாதானப் புறாவின்
சிறகுகளை பிடுங்கிவிட்ட
கொடுமையாளர்,
ஒளி(ர்)ந்து நோக்குகின்றனர்...
தாம் பாழடைத்த,
புவியின் சிதைவை...

கவிதையை எப்போதோ வாசித்த போதிலும்,
என் புரிதல் சரியா தவறா என்ற குழப்பம்...
கவிதா அவர்களின் பின்னூட்டம் கண்டதும், என் மன ஓட்டங்கள் இவை...
சரியா ஆதவரே..?
கவிதையாகவே படைக்கும் உமது விமர்சனத்திற்கு எனது வந்தனம்..
அக்னி,,, நீங்கள் சரியாகவே புரிந்துள்ளீர்கள். நான் சரியாக எழுதியதாக எண்ணுகிறேன்.

வானவியலில் இறுதிப் பக்கங்களில் படிக்க நேரிடும், புவியுருக்க பாடம்...

காலசூழல் அவ்விதம்.

மாற்றவேண்டும் நாமெல்லாம்.

நன்றிங்க அக்னி

அக்னி
10-11-2007, 10:29 PM
வானவியலில் இறுதிப் பக்கங்களில் படிக்க நேரிடும், புவியுருக்க பாடம்...

வாழும் காலமே புரியவில்லை...
இதில் எங்கே வானவியலின் இறுதிப்பக்கம் வரை செல்லவது?
கற்பனையில் கூட எண்ணாததை,
கவியாக்கித் தந்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள்...

ஆதவா
12-11-2007, 09:50 AM
வாழும் காலமே புரியவில்லை...
இதில் எங்கே வானவியலின் இறுதிப்பக்கம் வரை செல்லவது?
கற்பனையில் கூட எண்ணாததை,
கவியாக்கித் தந்த உங்களுக்கு மீண்டும் நன்றிகள்...

நன்றிப்பா..:)