PDA

View Full Version : வேண்டாமென ஆசைப்படு!



கஜினி
12-10-2007, 10:57 AM
கோபம் வேண்டாமென
ஆசைப்படு!
பொறாமை வேணடாமென
ஆசைப்படு!
பணமோகம் வேண்டாமென
ஆசைப்படு
ஆசை வேண்டாமென
ஆசைப்படு!

ஓவியன்
12-10-2007, 11:02 AM
ஆசைப்படு
உன்
ஆசை படும் வரை
ஆசைப்படு....

அமரன்
12-10-2007, 11:03 AM
ஆசைப்படு..
மனம் உன்வசப்பட
ஆசைப்படு......

leomohan
14-10-2007, 03:06 PM
கோபம் வேண்டாமென
ஆசைப்படு!
பொறாமை வேணடாமென
ஆசைப்படு!
பணமோகம் வேண்டாமென
ஆசைப்படு
ஆசை வேண்டாமென
ஆசைப்படு!

ஆசை வேண்டாமென ஆசைப்படு. வித்தியாசமான சிந்தனை கஜினி. வாழ்த்துகள்.

ஜெயாஸ்தா
15-10-2007, 02:21 PM
ஆசை தவிர் என்பதை நல்லமுறையில் சொல்லியிருக்கிறீர்கள் கஜினி. தொடருங்கள்.

சிவா.ஜி
15-10-2007, 02:24 PM
ஆசை வேண்டாமென கஜினியே சொல்லிட்டா அப்பீல் ஏது....நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் கஜினி.