PDA

View Full Version : ஏன் XP பூட் ஆகமாட்டேங்குது.-compaq

suraj
11-10-2007, 03:42 PM
ஏன் XP பூட் ஆகமாட்டேங்குது.

தீர்வு தருக:
என் சித்தி வீட்டில் compaq கணிப்பொறியுள்ளது.
SATA வன்வட்டு.

தற்போதைய பிரச்சனை:
கணினி XP திரை வந்தவுடன் restart ஆகிறது.
safe mode- ல் சென்றாலும் இதே பிரச்சனை தான்.
கணினி ஆனாகியவுடன்:
your latest hardware changes had made some effets என f8 அழுத்தினால் வருவது தான் வருகிறது.

என்னால் XP புதிதாக இன்ஸ்டால் செய்யவும் முடியவில்லை.
ஏன் ? உதவவும்.
நன்றி

ஜெயாஸ்தா
11-10-2007, 05:02 PM
ஏதேனும் ஹார்டுவேர் இணைத்தீர்களா சுராஜ். என்னுடைய கணிணியில் ஒரு முறை Pinnacle Conversion Card-ஐ இணைத்தேன். அப்போது இது மாதிரி எனக்கு பிரச்சனை வந்தது. பின் சிஸ்டத்தை முற்றிலுமாக பார்மேட் செய்து இன்டால்செய்த பிறகுதான் சரியானது.

s_mohanraju
12-10-2007, 08:09 AM
XP சிடி வழியாக பூட் செய்து பார்த்தீர்களா ?

praveen
12-10-2007, 09:36 AM
அந்த கணினியில் உள்ள நினைவகம் RAM பழுதுபட்டிருக்கிறது, புதியது வாங்கி மாற்றி பாருங்கள், இல்லை அதை மற்றொரு கணினியில் இட்டு சோதித்து பாருங்கள்.

ராம் டெஸ்ட் செய்வதற்கு லினக்ஸ் / விஸ்டா பதிவு செய்யும் பூட்டபிள் CDக்களில் உள்ள மெனுவில் சென்று சோதித்து பாருங்கள்.

suraj
12-10-2007, 01:07 PM
ஏதேனும் ஹார்டுவேர் இணைத்தீர்களா சுராஜ். என்னுடைய கணிணியில் ஒரு முறை Pinnacle Conversion Card-ஐ இணைத்தேன். அப்போது இது மாதிரி எனக்கு பிரச்சனை வந்தது. பின் சிஸ்டத்தை முற்றிலுமாக பார்மேட் செய்து இன்டால்செய்த பிறகுதான் சரியானது.
ஆம் அவர்கள் picview டிவி டியூனர் கார்ர்ட் இணத்த பின் தான் இப்பிரச்சனை.
பார்மேட் ஆக மாட்டேங்குதே.. எப்படி செய்ய.
வேறுவழி...

ராம் டெஸ்ட் செய்வதற்கு லினக்ஸ் / விஸ்டா பதிவு செய்யும் பூட்டபிள் CDக்களில் உள்ள மெனுவில் சென்று சோதித்து பாருங்கள்.
லினக்ஸ் SATA -வில் இயங்காதல்லவா?

praveen
12-10-2007, 01:47 PM
ஆம் அவர்கள் picview டிவி டியூனர் கார்ர்ட் இணத்த பின் தான் இப்பிரச்சனை.
பார்மேட் ஆக மாட்டேங்குதே.. எப்படி செய்ய.
வேறுவழி...

பிரச்சினை எதுவென்று தான் தெரிந்து விட்டதே, முதலில் அந்த டி.வி டுயுனர் கார்டை கழட்டி தலையை சுற்றி எறிந்து, அதற்கு பதில் ஒரு யு.எஸ்.பி எக்ஸ்டேர்னல் டி.வி கார்டு வாங்குங்கள்

லினக்ஸ் SATA -வில் இயங்காதல்லவா?

இப்ப பிரச்சினை ராம் என்றால் அதை மட்டும் (லினக்ஸ், விஸ்டாவில் அந்த ராம் பற்றி சோதனை செய்ய அதை பதிய வேண்டிய அவசியமில்லை, சும்மா DVDயில் ஸிஸ்டத்தை பூட் செய்தாலே முதலில் இந்த மெனு தான் வரும்) செக் செய்தால் போதுமே, ஹார்ட் டிஸ்க் எதுவா இருந்தால் என்ன?.

லேட்டஸ்ட் லினக்ஸ் (எல்லோரும் அதிகம் பாவிப்பது பெடோரா கோர்) அனைத்து வகை ஹார்டு டிஸ்குகளையும் ஒத்திசையும்.

அன்புரசிகன்
12-10-2007, 01:52 PM
நான் நினைப்பதில் பிரவீன் கூறுவது போல் இது RAM பிரச்சனைதான்.... எதற்கும் உங்களின் அந்த சந்தேக picview டிவி டியூனர் கார்ர்ட் ஐ கழற்றிவிட்டு பரிசோதித்துப்பாருங்கள். Startup window வரை சென்று மக்கர் பண்ணுவது அநேகமாக RAM ன் தகராறு தான்.

suraj
12-10-2007, 02:32 PM
பிரச்சினை எதுவென்று தான் தெரிந்து விட்டதே, முதலில் அந்த டி.வி டுயுனர் கார்டை கழட்டி தலையை சுற்றி எறிந்து, அதற்கு பதில் ஒரு யு.எஸ்.பி எக்ஸ்டேர்னல் டி.வி கார்டு வாங்குங்கள்

லேட்டஸ்ட் லினக்ஸ் (எல்லோரும் அதிகம் பாவிப்பது பெடோரா கோர்) அனைத்து வகை ஹார்டு டிஸ்குகளையும் ஒத்திசையும்.

நன்றி,
அதை :mini023:தலை சுற்றி எறிந்த பிறகும் பிரச்சனைதான்.

பேடோரா கோர் ஒத்திசைக்குமா... இவ்வளவு வளர்ந்து மக்காகவே இருக்கிறேன். நன்றி.

நான் நினைப்பதில் பிரவீன் கூறுவது போல் இது RAM பிரச்சனைதான்.... எதற்கும் உங்களின் அந்த சந்தேக picview டிவி டியூனர் கார்ர்ட் ஐ கழற்றிவிட்டு பரிசோதித்துப்பாருங்கள். Startup window வரை சென்று மக்கர் பண்ணுவது அநேகமாக RAM ன் தகராறு தான்.

startup - வரமாட்டேங்குது.
http://themes.belchfire.net/screenshots/%5B6097%5DGoW_preview.jpg
இவ்வளவு தான்.. பிறகு ரீஸ்டார்ட்.

praveen
12-10-2007, 02:40 PM
நீங்கள் f8 அழுத்தி அதில் வரும் அனைத்து மெனுவும் போய் பாருங்கள், குறிப்பாக அதில் வரும் last known good working configuration என்பது மாதிரி ஒரு மெனு வரும். அதில் முயற்சியுங்கள்

praveen
12-10-2007, 02:45 PM
startup - வரமாட்டேங்குது.
http://themes.belchfire.net/screenshots/%5B6097%5DGoW_preview.jpg
இவ்வளவு தான்.. பிறகு ரீஸ்டார்ட்.
உங்கள் ஸ்கிரீன் சாட் பார்த்த பிறகு தான் தெரிகிறது, நீங்கள் எக்ஸ்பியை
எவ்வளவு துண்பப்படுத்தியிருப்பீர்கள் என்று அது தான் அது முரண்டு பிடிக்கிறது போல :lachen001:

suraj
12-10-2007, 02:49 PM
நண்பரே இது என் கணினி ஸ்கிரீன் சாட் அல்ல.
கூகிளில் சுட்டது.,...(கொஞ்சம் அதன் பிராப்படீஸை பாருங்க)
உங்களுக்கு புரியவைக்க.

நீங்கள் f8 அழுத்தி அதில் வரும் அனைத்து மெனுவும் போய் பாருங்கள், குறிப்பாக அதில் வரும் last known good working configuration என்பது மாதிரி ஒரு மெனு வரும். அதில் முயற்சியுங்கள்

F8 அழுத்த தேவையே இல்ல தானாகவே வருகிறது.
last known good working configuration - போனாலும் அது அந்த ஸ்கிரீன் சாட் வரை தான்.

நன்றி

suraj
13-10-2007, 02:14 PM
பிரச்சனை தீர்க்கப் பட்டது.

BIOS -ல UDMA என்று செட் செய்தேன் பிரச்சனை தீர்ந்தது.
உதவிய அனைவருக்கும் நன்றி.