PDA

View Full Version : மன்றம் என் தமிழ்மன்றம்!!!



aren
11-10-2007, 02:46 PM
மன்றம்
என் மனமஞ்சம்
என் சோர்வை நீக்கும் மருந்து
என் வாழ்க்கையை நேர்த்தி செய்யும் வழிநெறி
என் நண்பர்களை சந்திக்கும் ஒரு நிலயம்
என் மூளையை வளர்க்கும் பள்ளிக்கூடம்
என் நேரத்தை சரியாக உபயோகிக்கும் அளவுகோல்
தமிழ்மன்றம் என் வாழ்க்கையின் சொர்கம்!!!

அறிஞர்
11-10-2007, 02:56 PM
வாழும் உலகில் சொர்க்கத்தை காண*
மன்றம் நாடி வந்தோம்....

உம் வரிகள் அருமை ஆரென்.

அமரன்
11-10-2007, 03:02 PM
எப்போதோ எதிர்பார்த்தேன்
இப்போது வந்திருக்கு..
எதிர்பார்த்த ஒன்று எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த பூரிப்பு என்னுள்...

ஓவியன்
11-10-2007, 03:05 PM
அண்ணா எங்கெங்கோ சுற்றித் திரிந்து கொண்டு கட்டுப்பாடின்றி திரிந்த என்னைப் போன்ற பலரைக் கட்டிப் போட்டு, உறவுகளின் அன்பு மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கின்றதே இந்த மன்றம்...

உங்கள் வரிகள் நிதர்சனமானவை, அந்த நிதர்சன வாழ்க்கைக்கு உரித்தானவன் என்பதில் எனக்கும் கொள்ளை மகிழ்சி!. :)

மீனாகுமார்
11-10-2007, 03:05 PM
ஒவ்வொரு வரியிலும் உங்களின் தேடலும், மன்றம் தீர்க்கும் தாகமும் தெரிகிறது. சுருங்கச் சொல்லி விளக்கியது அருமை ஆரன். சபாஷ்.

அக்னி
12-10-2007, 01:49 PM
மரத்துக் கொண்டிருந்த
என் உணர்வுகளைத்
துளிர்க்க வைத்த
தமிழ் மன்றம்...

உங்கள் உணர்வுகள் என்னிடமும்...
பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

மயூ
12-10-2007, 03:19 PM
அத்தனையும் நிசம் உண்மையான வரிகள் ஆரென் அண்ணா...!!!