PDA

View Full Version : கஜினியின் கற்பனைகள்

கஜினி
11-10-2007, 11:08 AM
வாழ்க்கை வாழும் வரைதான்...

வாசம் நிரம்பிய பூக்களின்
வாழ்க்கை அந்தப்பூவில்
வாசம் இருக்கும் வரைதான்
பின்பு அது வாழுமிடம்
குப்பைத்தொட்டி

இன்பம் நிறைந்த மனிதனின்
வாழ்க்கை அவன் மனதில்
நல்லெண்ணம் இருக்கும் வரைதான்
பின்பு அவன் வாழுமிடம்
நரகம்.

கருமை நிறைந்த மேகத்தின்
அழகு அது
மழையாய் பொழியும் வரைதான்
பின்பு அது வாழுமிடம்
குட்டை.

Narathar
11-10-2007, 11:11 AM
வாழ்க்கை வாழும் வரைதான்............

மண்ணரைக்கு போகிறோம் அல்லது
நெருப்பில் வேகப்போகிறோம் என்று தெரிந்தும்
நம்மவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே??

வாழ்க்கை வாழும் வரைதான்............

aren
11-10-2007, 11:11 AM
அருமையான தொடங்கம் கஜினி. பாராடுக்கள். தொடருங்கள்.

கஜினி
11-10-2007, 11:13 AM
வாழ்க்கை வாழும் வரைதான்............

மண்ணரைக்கு போகிறோம் அல்லது
நெருப்பில் வேகப்போகிறோம் என்று தெரிந்தும்
நம்மவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே??

வாழ்க்கை வாழும் வரைதான்............

மிக்க நன்றி நாரதர் ஐயா.

கஜினி
11-10-2007, 11:13 AM
அருமையான தொடங்கம் கஜினி. பாராடுக்கள். தொடருங்கள்.

மிக்க நன்றி அரேன் ஐயா.

இலக்கியன்
11-10-2007, 11:16 AM
நல்ல சிந்தனைக்கவிதையோடு வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் கஜனி தொடருங்கள்

Narathar
11-10-2007, 11:18 AM
மிக்க நன்றி நாரதர் ஐயா.

அது என்ன ஐயா?
நாங்கள் இங்கு பழையவர்களாக இருக்கலாம்
அதற்காக நாங்கள் ஐயாக்கள் :lachen001::lachen001: இல்லை ஹா ஹா :D:D
பெயர் சொல்லியே அழையுங்கள் அன்பு சொந்தமே

ஜெயாஸ்தா
11-10-2007, 11:18 AM
நல்ல கருத்துக்களை கவிதையாய் தந்திருக்கிறீர்கள் கஜினி. வாசம் இருந்தபோது பயன் படுத்தியவர்கள் வாசமிழந்த உடன் அதை குப்பை தொட்டியில் தூக்கி வீசி விடுகிறார்கள். இங்கே அந்த பூக்கள் என்ன குற்றம் செய்தன? எல்லாம் மனிதனின் சுயநலம். தொடருங்கள் கஜினி உங்கள் கருத்தாழமிக்க கவிதைகளை...!

கஜினி
11-10-2007, 11:24 AM
அது என்ன ஐயா?
நாங்கள் இங்கு பழையவர்களாக இருக்கலாம்
அதற்காக நாங்கள் ஐயாக்கள் :lachen001::lachen001: இல்லை ஹா ஹா :D:D
பெயர் சொல்லியே அழையுங்கள் அன்பு சொந்தமே

அப்படியே செய்கிறேன் நாரதரே.

கஜினி
11-10-2007, 11:24 AM
நல்ல கருத்துக்களை கவிதையாய் தந்திருக்கிறீர்கள் கஜினி. வாசம் இருந்தபோது பயன் படுத்தியவர்கள் வாசமிழந்த உடன் அதை குப்பை தொட்டியில் தூக்கி வீசி விடுகிறார்கள். இங்கே அந்த பூக்கள் என்ன குற்றம் செய்தன? எல்லாம் மனிதனின் சுயநலம். தொடருங்கள் கஜினி உங்கள் கருத்தாழமிக்க கவிதைகளை...!

உங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ஜே.எம் அவர்களே

அமரன்
11-10-2007, 11:48 AM
பிறப்புக்கும் இறப்புக்கும்
நடுவில்
சந்தோசிக்க வைக்கும்
நிறைவான வாழ்க்கை
வாசம் நிரம்பிய பூவுக்கு..

வீழும் மழை, ஓடும் நதி
இரண்டும் மட்டுமல்ல
தேக்கமும் சுகமானது
நாற்றம் எடுக்காதவரை...

வாழக் கற்றுக்கொடுக்கும்
இயற்கையாலான உலகில்
தமக்குத்தாமே
உலைவைக்கும் மனிதர்க்கு
நல்லது சொல்லும் கவிதை..

பெயருக்கேற்றார் போல
விடாமுயற்சியுடன் தூவுங்கள்
இத்தகைய கவி விதைகளை..
கூடவர இங்குண்டு பலர்.

கஜினி
11-10-2007, 11:54 AM
மிக்க நன்றி அமரன் அவர்களே. உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதை போல இருக்கிறது.