PDA

View Full Version : வெற்றி நிச்சயம்!!!

aren
11-10-2007, 10:20 AM
மற்றவர்களிடம்
வேலையைக் கொடுத்துவிட்டு
வேலை முடிந்து இருக்குமா
என்று நினைப்பதை
விட்டு விட்டு
முடித்துவிட்டேன்
என்று சொல்லப் பழகிக்கொள்!!!

உள்நாக்கு தேய்வதைவிட
உள்ளங்கால் தேயலாம்!!!

தன் கையே தனக்குதவி
என்று நினைத்து
நீ களத்தில் இறங்கு
வெற்றி நிச்சயம்!!!

ஜெயாஸ்தா
11-10-2007, 11:50 AM
நல்ல கருத்துக்கள் ஆரென். மற்றவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ இதைப்படிக்கும் நாங்கள்பின்பற்றுவோம். நாளை என்பது நிச்சயமில்லை. கடந்த இந்த நொடி மட்டும்தான் நமக்கு சொந்தம். எனவே விநாடிகளை கூட வீணாக்காமல் வாழ்வதற்கு உபயோகப்படுத்துவோம்.

அமரன்
11-10-2007, 11:57 AM
முடிந்தவரை உன்னை நம்பு
அதுவே உயர்த்தும் நெம்பு..
இதை நீநம்பு...

உச்சந்தலையில் அடித்த உளிக்கவிதை. பாராட்டுகள் அண்ணா..

Narathar
11-10-2007, 12:04 PM
தன்கையே தனக்குதவி
தன்னம்பிக்கையெ உனை ஏற்றும் ஏணி
நல்ல கருத்துக்கள் அரேன்

கஜினி
11-10-2007, 12:09 PM
உன் நிழல்கூட
உனக்குச் சொந்தமில்லை
அது இருளில் அழிந்துவிடும்
உன் மனசாட்சிதான்
எப்பொழுதும் உன்னோடு!
மனசாட்சியோடு வாழப் பழகு
வெற்றி நிச்சயம்!

சுகந்தப்ரீதன்
11-10-2007, 12:27 PM
நல்ல கருத்துக்கள் ஆரென். மற்றவர்கள் பின்பற்றுகிறார்களோ இல்லையோ இதைப்படிக்கும் நாங்கள்பின்பற்றுவோம். நாளை என்பது நிச்சயமில்லை. கடந்த இந்த நொடி மட்டும்தான் நமக்கு சொந்தம். எனவே விநாடிகளை கூட வீணாக்காமல் வாழ்வதற்கு உபயோகப்படுத்துவோம்.
வாழ்த்துக்கள் அரேன்... மற்றும் ஜே.எம்..! இந்த நொடியில் இனிதே வாழ்... நாளை நிச்சயம் நலமாய்தானிருக்கும்... அருமையான வரிகள்..ஜே.எம்!

ஜெயாஸ்தா
11-10-2007, 12:35 PM
வாழ்த்துக்கள் அரேன்... மற்றும் ஜே.எம்..! இந்த நொடியில் இனிதே வாழ்... நாளை நிச்சயம் நலமாய்தானிருக்கும்... அருமையான வரிகள்..ஜே.எம்!

நான் சொன்ன கருத்தான வரிகளை... கவிதையாய் கோர்த்துவிட்டீர்களே ப்ரீதன்.... பாராட்டுக்கள்..!

சிவா.ஜி
11-10-2007, 12:46 PM
வெற்றி உன் கைகளில் இருக்கும்போது நீ வெற்றிடத்தில் அதைத் தேடுவதேன்...?
உன் சரித்திரத்தின் முதல் பக்கத்தை நீ எழுது....முழுவதும் மற்றவரால் எழுதப்படும்.....!
நல்ல கருத்து ஆரென். வாழ்த்துகள்

ஓவியன்
13-10-2007, 03:20 AM
முடியுமா, முடியுமா
என முனகி இருப்பதிலும்
முடித்திட வேண்டுமென
முடிவாய் களத்திலிறங்குவதே
மேலானது........

கருத்தான வரிகளுக்கு நன்றிகள் அண்ணா!.