PDA

View Full Version : இன்டர்நெட்டில் பாடநூல்கள்...mgandhi
10-10-2007, 06:34 PM
தமிழக அரசின் தமிழ்நாட்டுப் பாடல் நூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது. அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வழங்குகிறது.

இந்த நிலையில் தற்ேபாது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடநூல்களை காண செல்ல வேண்டிய இணையதளம்

http://www.textbooksonline.tn.nic.in/

aren
11-10-2007, 01:44 AM
நல்ல விஷயம். வெளிநாட்டில் இருக்கும் தமிழ் நண்பர்கள் நிச்சயம் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.

praveen
11-10-2007, 05:47 AM
மிக்க நல்ல செய்தி நண்பரே, சில மாதங்களுக்கு முன் இந்த புத்தகம் (2வது தமிழ்) கிடைக்காமல் சிரமப்பட்டேன்.

நன்றி, தகவலை பகிர்ந்து கொண்டதற்கு.

பின்னர் கூடுதலாக பதிந்தது.
ஆனால் ஒரே புத்தகமாக தராமல் ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு PDF பைலாக தந்து இம்சை தந்திருக்கிறார்கள். சரி இதாவாது செய்தார்களே என்று சந்தோசப்பட்டு கொள்ள வேண்டியது தான்.

சாம்பவி
11-10-2007, 06:10 AM
ஐ ஜாலி....!
மீண்டும் பள்ளிக்கு (online) போகலாம்..
நம்மை நாமங்கே பார்க்கலாம்..
ஒரு நாள் ஒன்றில்...
மறு நாள் பத்தில்
ஒரே நாளில் ஒன்பது
வகுப்புகள் மாறலாம்.. !

ஒரு நிமிடம்
மறுபடியும் குழந்தையாய்
மாற்றியதற்கு நன்றி.. !

.

இதயம்
11-10-2007, 06:23 AM
வெளிநாட்டில் வாழும் நம் மக்களுக்கு மிக பயனுள்ள விஷயம். இதை செயலில் கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றிகள்..!

ஓவியன்
11-10-2007, 06:28 AM
மிக, மிக அருமையான முயற்சி, புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமே....

இந்த முயற்சிக்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்!.

மீனாகுமார்
11-10-2007, 11:58 AM
மிகவும் பாராட்டுதலுக்குரிய சேவை... செய்தி தந்த அண்ணல் காந்திக்கு மிக்க நன்றி.

தமிழ் இலக்கண புத்தகதைத் தேடுவோருக்கு இங்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்..

தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற புத்தகங்களும் இருக்கின்றனவே....

சூப்பர்...

aren
11-10-2007, 12:00 PM
இலக்கணம் சரியாக கற்றுக்கொள்ளவில்லையே என்று நினைத்தேன். இந்தத்தளம் மூலம் கொஞ்சம் கற்றுக்கொள்ளமுடியும்.

மாதவர்
24-10-2007, 04:44 PM
மிக அற்புதமான தகவல்

சூரியன்
24-10-2007, 04:49 PM
நல்ல பயனுள்ள தகவல்..

பூமகள்
24-10-2007, 05:23 PM
மிக நல்ல தகவல். எனக்கு பள்ளி புத்தகங்களை மறுபடி ரெஃபர் பண்ண மிகவும் உதவியாக உள்ளது.
தமிழின் இலக்கணங்களையும் செய்யுள்களையும் இன்னும் நல்லா கற்கபோகிறேன் மீண்டும் பள்ளிக்கு இணையத்தில் சென்று..!!
சுட்டி கொடுத்து உதவிய காந்தி அண்ணாவிற்கு நன்றிகள்.

அக்னி
24-10-2007, 08:17 PM
மிகவும் பயன் தரும், தகவல்...
வரும்காலங்களில் இணையப் பாடசாலைகள் தொடங்கினாலும்,
ஆச்சரியப்படுவதற்கில்லை.
பகிர்தலுக்கு நன்றி...

அமரன்
25-10-2007, 09:15 AM
இலக்கணம் சரியாக கற்றுக்கொள்ளவில்லையே என்று நினைத்தேன். இந்தத்தளம் மூலம் கொஞ்சம் கற்றுக்கொள்ளமுடியும்.
இலக்கணம் மட்டுமில்லை அண்ணா..!
நான் படித்த பாடவிதானம் மகாபாரதம், இராமயணம் போன்றவற்றின் வெளிவட்டத்தைக் கோடு காட்டியதோடு தமிழ் கற்றல் நிறைவு என்ற வகையிலேயே அமைந்து இருந்தது. மன்றத்தில் பலருடன் பரிவர்த்தனை செய்ததில் தமிழக பாடத்திட்டத்தில் கற்றல் எல்லை விஸ்தீரணம் மிக்கது என அறிந்தேன். படிக்க துடித்தேன். கிடைக்க வழி செய்த காந்தி அண்ணாவுக்கும் தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றி.

suraj
25-10-2007, 01:45 PM
இணையதளத்தில் பாட நூல்களை தந்த அரசுக்கும், செய்தி தந்த நண்பருக்கும் பாராட்டுக்கள்.

முதலில் சிந்திக்க வேண்டியது இதை தமிழ்நாட்டில் படிக்கும் வாண்டுகள் பயன்படுத்துவார்ளா!

நன்றி.

யவனிகா
25-10-2007, 07:28 PM
நல்ல முயற்சி,தொகுத்தளித்த மோகனுக்கு நன்றி. அரபு நாடுகள் உள்ள தமிழ் படிக்கும் பிள்ளைகளுக்கு உபயோகமான ஒன்று, என் பிள்ளைக்கு ஒன்றாவது தமிழ் பாடனூல் வேண்டி மூன்று மாதம் காத்திருந்தேன்.நன்றி, மோகன் அவர்களே!

nambi
05-05-2010, 05:55 AM
பிற மாநிலங்களில் உள்ள தமிழ் பாடநூல் இணையதளங்கள்

கேரள மாநில தமிழ் பாடநூல்கள்-சுட்டவும் (http://www.education.kerala.gov.in/tamilmedium.htm)

கர்நாடகா மாநில தமிழ் பாடநூல்கள் (http://dsert.kar.nic.in/textbooksonline/first.asp)

பாரதி
05-05-2010, 07:04 AM
பயன்தரும் கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி நம்பி!

sures
22-05-2010, 11:33 AM
உண்மையில் மிக பயனுள்ள இணையதளம்.......
நன்றி.....

பாலகன்
22-05-2010, 03:42 PM
புத்தகங்கள் ஆன்லைனில் கிடைக்கும் தளம் பற்றிய செய்தி பகிர்ந்த நண்பர் காந்திக்கு நன்றிகள்

சரண்யா
23-05-2010, 03:55 AM
சமசீர் பாடத்திட்ட நூல்கள் கிடைக்கிறதா என்ற தகவல் அறிந்தவர்கள் கூறவும்..நன்றி.

shibly591
24-06-2010, 01:04 PM
முத்தான தகவல்..நான் கூட தமிழில் கணணியியல் நூல் தேடி அலைந்தேன்..உங்கள் உதவியால் பெறுமதியான புத்தகங்கள் கிடைத்துள்ளன..வாழ்த்துக்கள்

urbansaint
22-11-2010, 07:45 AM
நன்றி, தகவலை பகிர்ந்து கொண்டதற்கு.

நாஞ்சில் த.க.ஜெய்
22-11-2010, 05:00 PM
மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

வெப்தமிழன்
29-01-2011, 05:14 AM
மிக்க நன்றி நண்பரே !