PDA

View Full Version : நினைத்தாலே இனிக்கும்!!!



aren
10-10-2007, 03:36 PM
இன்று நடந்தது போலுள்ளது
அது ஒரு விபத்தா அல்லது
அது ஒரு விளையாட்டா அல்லது
பதின் வயதின் திணறலா அல்லது
பைங்கிளியின் குழந்தைத்தனமான சிரிப்பா
காரணம் தெரிந்தும் தெரியாமல் இன்றும் நான்!!!

அந்த நிகழ்ச்சியை
இன்று நினைத்தாலும்
நேற்று நடந்ததுபோல் நினைவில்!!!

அந்த சிரிப்பை பார்த்து மயங்கி
அன்று அவளுக்கு கொடுத்த
காதல் கடிதத்தால்
என் வாழ்க்கை திசைமாறி
படிப்புகள் தடுமாறி
உடன்பிறப்புகள் உதறித்தள்ளி
இன்று தனியாளாக மும்பையில்
அன்றுவிட்ட சென்னை
இன்றும் எனக்கு வெகு தொலைவில்!!!

அந்த கள்ளங்கபடமற்ற சிரிப்பு
என் நினைவில் இன்றும் மறக்காமல்
அவளின் அந்த சிரிப்பிலேயே
இன்றும் காலத்தை ஓட்டும் நான்!!!

அவள் எங்கேயிருக்கிறாள்
என்ன செய்துகொண்டு இருக்கிறாள்
யாரை மணந்திருக்கிறாள்
ஒன்றும் தெரியாமல் நான்!!!

ஒன்றுமட்டும் நினைவில் இன்றும்
அவள் என்னை காதலித்தாள்
அதை அவள் கண்கள் சொல்லியது
என்னை வலிய கடிதம் எழுதச் சொல்லியது!!!

எங்கிருந்தாலும் அவள்
சிறப்பாக வாழட்டும்
வாழவேண்டும்
நான் அனைத்தையும்
இழந்தாலும்
அவள் எதையும்
இழக்கக்கூடாது
என்னைத் தவிற!!!

அவளின் அந்த நினைவுகள்
இன்று நினைத்தாலும்
இனிக்கிறது!!!

அல்லிராணி
10-10-2007, 03:41 PM
இதை அங்கே போட்டுக் கொடுக்கவா?

http://tamilmantram.com/vb/showthread.php?t=12250

aren
10-10-2007, 03:44 PM
இதை அங்கே போட்டுக் கொடுக்கவா?

http://tamilmantram.com/vb/showthread.php?t=12250


ஏதோ படித்தோமா, போனோமா என்று இல்லாமல் இப்படியா செய்வது. நாங்களெல்லாம் எதுவும் எழுதக்கூடாது என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. அப்புறம் நான் காய்விட்டு இங்கே வரவேமாட்டேன் (இதுதான் உங்கள் எண்ணமாகவும் இருக்கலாம்).

நன்றி வணக்கம்
ஆரென்

அல்லிராணி
10-10-2007, 03:46 PM
நான் காய விடறேங்கறதுக்காக
நீங்க காய் விடறது நல்லா இல்லியே!
இப்படியெல்லாமா அழுவது??

aren
10-10-2007, 03:51 PM
நான் காய விடறேங்கறதுக்காக
நீங்க காய் விடறது நல்லா இல்லியே!
இப்படியெல்லாமா அழுவது??

பின்னே, நம்மளை இங்கேயிருந்து துரத்துவதற்காகவே சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள். நீங்களும் அந்த கும்பலில் இருக்கிறீர்களோ என்று தெரியவில்லை.

ஒருத்தரும் ஒன்னுமே எழுதவிட மாட்டேங்கறாங்கப்பா!!!

அல்லிராணி
10-10-2007, 03:52 PM
ஒண்ணு எழுதினா பரவாயில்லையே! நீங்க ஒவ்வொண்ணா எழுதறீங்களே! (அனுபவங்களைத் தான் சொல்றேன்)

ஷீ-நிசி
10-10-2007, 03:56 PM
நினைத்தாலே இனிக்கும் என்று இழுத்து பாடும் அந்த பாடலின் வரிகள் நினைவில் வருகிறது.

அவளை சந்திக்கும்பொழுது
ஒன்று மட்டும்
நான் கேட்கவேண்டும்.

நீயும் என்னை காதலித்தாயா என்று......

வாழ்த்துக்கள் ஆரெனாரே!

சூரியன்
10-10-2007, 03:57 PM
நினவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர் போலும்..

aren
10-10-2007, 03:58 PM
ஒண்ணு எழுதினா பரவாயில்லையே! நீங்க ஒவ்வொண்ணா எழுதறீங்களே! (அனுபவங்களைத் தான் சொல்றேன்)


உங்க பேரே கொஞ்சம் பயப்பட வைக்கிறது. அதுமாதிரியே நிங்கள் பயமுறுத்துகிறீகளே.

நம் அனைவருக்கும் இந்த மாதிரி பல விஷயங்கள் நடந்திருக்கும், அதுதானே இங்கே பதிப்பாக வெளிவருகிறது. இப்படி பயமுறுத்தினால் இங்கே மக்கள் யாரும் வரமாட்டார்கள்.

கொஞ்சம் தயவுகாட்டுங்கள்.

aren
10-10-2007, 03:59 PM
நினைத்தாலே இனிக்கும் என்று இழுத்து பாடும் அந்த பாடலின் வரிகள் நினைவில் வருகிறது.

அவளை சந்திக்கும்பொழுது
ஒன்று மட்டும்
நான் கேட்கவேண்டும்.

நீயும் என்னை காதலித்தாயா என்று......

வாழ்த்துக்கள் ஆரெனாரே!

நிங்க கேட்கவேண்டாம் ஷீ. நானே கேட்டுவிட்டு சொல்கிறேன்.

aren
10-10-2007, 04:00 PM
நினவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர் போலும்..


எல்லோருமே அப்படித்தானே சூரியன். நினைவுகள்தான் நம்மை இன்னும் இழுத்துக்கொண்டிருக்கின்றன.

அல்லிராணி
10-10-2007, 04:03 PM
நீங்க கற்பனையா எழுதறீஈங்கன்னுதானே நினைச்சேன். அப்ப அத்தனையும் உண்மையா? உண்மையை உளறிட்டீங்களா? சொல்லவே இல்லை.

6600 பதிவு போட்ட ஆரென்னுக்கு பயமா?
என்னப்பா இது பென்ஸூ கூட தைரியமா சண்டை போடறாரு..??

aren
10-10-2007, 04:06 PM
நீங்க கற்பனையா எழுதறீஈங்கன்னுதானே நினைச்சேன். அப்ப அத்தனையும் உண்மையா? உண்மையை உளறிட்டீங்களா? சொல்லவே இல்லை.

6600 பதிவு போட்ட ஆரென்னுக்கு பயமா?
என்னப்பா இது பென்ஸூ கூட தைரியமா சண்டை போடறாரு..??

வார்த்தைகள் கற்பனை கலந்து இருக்கலாம் இல்லையா.

ஆமாம் எதுக்கு நீங்க பென்ஸை இங்கே சண்டைக்கு இழுக்கிறீங்க. பாவம் அவர் பயந்தே இங்கே அவ்வளவாக வருவதில்லை.

6600 பதிவுகள் செய்தால் என்ன, 11000 பதிவுகள் செய்த அறிஞரிடம் கேட்டுப்பாருங்கள், அவர் எவ்வளவு பயப்படுகிறார் என்று சொல்வார்.

ஷீ-நிசி
10-10-2007, 04:15 PM
நிங்க கேட்கவேண்டாம் ஷீ. நானே கேட்டுவிட்டு சொல்கிறேன்.

என் காதலிகிட்டயுமா....

நன்றிங்க.....

மன்மதன்
10-10-2007, 04:16 PM
அடடா.. இப்படி முடிந்துவிட்டதா??

ஜெயாஸ்தா
10-10-2007, 04:18 PM
அடடா.. இப்படி முடிந்துவிட்டதா??

முடியலீங்க.... இவங்கெல்லாம் பேசுவதைப் பார்த்தால் இப்போதான் ஆரம்பிக்கிறார்கள் என நினைக்கிறேன்...!

அமரன்
11-10-2007, 09:29 AM
நல்ல மனசுக்காரருக்கு வாழ்த்துக்கள்.