PDA

View Full Version : ஏன் இந்த முரண்பாடு?



ஷீ-நிசி
10-10-2007, 11:18 AM
ஒரு பெண்ணின் மனநிலை :
ஜாதியை காட்டி அவளை காதலனுடன் பெற்றோர் இணைய விடமாட்டார்கள்,
அவளும் அவனின்றி வேறு ஒருவரை திருமணம் செய்ய மாட்டாள்,
ஆனால் வீட்டை எதிர்த்து அவனுடன் சென்றிடவும் மாட்டாள்.
அவள் மனநிலையென்ன?


ஓட்டலுக்கு சென்றோம்...

சாப்பிடபோவது நீதானே!
என்ன வேண்டுமோ வாங்கிக்கொள்..
என்றார் தந்தை....

உடையெடுக்க சென்றோம்...

உடுத்தபோவது நீதானே!
என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்..
என்றாள் தாய்....

கல்லூரிக்கு சென்றோம்....

படிக்கப்போவது நீதானே!
என்ன பிடிக்குமோ சேர்ந்துகொள்...
என்றனர் இருவரும்.

ஒரு வேளை உணவை
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்...

ஒரு நாள் உடுத்தும் உடையினை
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்...

மூன்று வருடத்தில்,
முடியப்போகும் படிப்பை
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்...

காலம் முழுதும்
என்னோடு வாழப்போகிறவனை
தேர்ந்தெடுப்பதில் இல்லையா(யே)?!

காதலிப்போம்!
என்கிறோம் நாங்கள்..
தீக்குளிப்போம்!
என்கிறீர்கள் நீங்கள்...

திருமணம் வேண்டும்!
என்கிறோம் நாங்கள்..
இருபிணம் வேண்டுமா?
என்கிறீர்கள் நீங்கள்..

விரும்பிய காதலனுடன்,
ஓடி, ஒளிந்து
வாழவும் விருப்பமில்லை!

விரும்பாத மணமுடித்து
வாடி, நெளிந்து
வாழவும் விருப்பமில்லை!

உயிரை மாய்த்துகொள்ள
நாம் கோழையுமில்லை!

காத்திருப்போம் காதலா.....

ஜாதியற்ற ஜாதியை
உருவாக்கும் காலம்
வரும் வரை!

நம் பெற்றோர்கள்
உளமார ஆசியினை
தரும் வரை!

காத்திருப்போம் காதலா.....

சிவா.ஜி
10-10-2007, 11:45 AM
பிரமாதம்..ஷீ....பின்றீங்க....ரொம்ப ரொம்ப நியாயமான கேள்வி....எந்த பெற்றோரும் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய கேள்வி.மிகப் பக்குவப்பட்ட இருமனங்கள்......தடை மீறினால் இரு பினங்கள்....நல்லதொரு சமுதாய மாற்றம் நிகழும்போது நடைபெறும் மனம் ஒத்த திருமணங்கள்.
வார்த்தைகளில் வசீகரித்திருக்கிறீர்கள் ஷீ..சந்தங்களின் சுவையோடு...தெளிவான கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.

பூமகள்
10-10-2007, 11:57 AM
பெண்ணின் மனதை ஆழமாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்... ஷீ.
பெற்றோரிடம் பெண் கேட்கத் தயங்கும் நல்ல கேள்வி...
திருமணம் X இருபிணம்..... நல்ல வார்த்தை கோர்வை.
அசத்துங்க.
வாழ்த்துகள் ஷீ.

அக்னி
10-10-2007, 12:44 PM
அனைத்திற்கும்
தந்திடும் சுதந்திரம்...
காதலைத்
தடுத்திட தந்திரமா..?

பாராட்டுக்கள் ஷீ-நிசி...

ஷீ-நிசி
10-10-2007, 03:50 PM
நன்றி சிவா, நன்றி பூமகள், நன்றி அக்னி.

ஜெயாஸ்தா
10-10-2007, 03:56 PM
பெற்றோர்கள் தன் பிள்ளைகள் மேலுள்ள அதீத அன்பினால்தானே எதிர்க்கிறார்கள்? பெற்றோர்கள் பக்கமிருந்து பார்த்தால் அது நியாயமாகவே படுகிறது. நல்ல கவிதை ஷீ...!

aren
10-10-2007, 03:56 PM
இருக்காதே பின்னே.

ஓட்டலில் சாப்பாடு சரியில்லையென்றால்
மருந்து சாப்பிட்டால் சரியாகிவிடும்!!!

துணி எடுத்தது சரியில்லையென்றால்
இன்னொரு துணி எடுத்தால் சரியாகிவிடும்!!!

கல்லுரியும் படிப்பும் சரியாக இல்லையென்றால்
இன்னொரு கல்லுரியில் சேர்ந்து வேறுபடிப்பு படித்தால் சரியாகிவிடும்!!!

ஆனால் கல்யாணம் அப்படியில்லையே
சரியில்லையென்றால் அதை மாற்றமுடியாதே
நம் வாழ்க்கையே அஸ்தமாகிவிடுமே!!!

பெரியவர்களின் எதிர்ப்பார்பே இதுதானே
அவர்கள் வாழ்க்கையே வாழ்கிறார்கள் நமக்குத்தானே!!!

கேட்போமே
அவர்களின் பேச்சைக்
கேட்போமே!!!

வாழ்க்கை சிறக்கும்
வாழ்வு கிடைக்கும்
அனைவருக்கும்!!!


கவிதை நன்றாக வந்திருக்கிறது ஷீ.

இப்பொழுது சினிமாவில்தான் முன்னே வந்த டைட்டிலை வைத்து மறுபடியும் படம் எடுப்பார்கள். இப்பொழுது கவிதைகளிலும் அது ஆரம்பித்துவிட்டதோ. நான் ஏற்கெனவே இந்த தலைப்பை உபயோகித்துவிட்டேன் ஷீ. கவலைவேண்டாம், நான் எதுவும் ராயல்டி கேட்கமாட்டேன்.

கவிதை நன்றாக வந்திருக்கிறது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
10-10-2007, 03:59 PM
ராயல்டி எவ்ளோ இ.கேஸ் னு சொல்லுங்க... கொடுத்துடலாம்.... :)

நன்றி ஆரெனாரே!

aren
10-10-2007, 04:02 PM
ராயல்டி எவ்ளோ இ.கேஸ் னு சொல்லுங்க... கொடுத்துடலாம்.... :)

நன்றி ஆரெனாரே!

நினைச்சேன், நீங்கள் இப்படித்தான் ஏதாவது சொல்வீர்கள் என்று. எனக்கு வேண்டாம், எனக்கு நிஜமான இந்திய ரூபாய் வேண்டும். அடுத்தமுறை சென்னை வரும்பொழுது வாங்கிக்கொள்கிறேன்.

ஷீ-நிசி
10-10-2007, 04:11 PM
நினைச்சேன், நீங்கள் இப்படித்தான் ஏதாவது சொல்வீர்கள் என்று. எனக்கு வேண்டாம், எனக்கு நிஜமான இந்திய ரூபாய் வேண்டும். அடுத்தமுறை சென்னை வரும்பொழுது வாங்கிக்கொள்கிறேன்.

ஆரெனாரா.. எப்படி இருப்பாரு... ஒல்லியா இருப்பாரே அவரா.... :confused:

ஜெயாஸ்தா
10-10-2007, 04:16 PM
ஆரெனாரா.. எப்படி இருப்பாரு... ஒல்லியா இருப்பாரே அவரா.... :confused:

நல்வேளை ஆரெனா....யார் அது? கேள்விப்பட்ட பெயர்மாதிரியில்லையேன்னு சொல்லாமல் இருந்தீங்களே....!

ஷீ-நிசி
11-10-2007, 05:04 AM
நன்றி நண்பர்களே!

சுகந்தப்ரீதன்
11-10-2007, 05:19 AM
நண்பரே..அருமையான கவிதை வாழ்த்துக்கள்...!

இந்த முரணுக்கு காரணம் காதலியை கழ்ட்டிவிடும் காதலர்களால் ஏற்பட்டிருக்கலாமல்லவா..? இங்கே சேர்ந்து வாழும் காதல்ர்களை காரணம் காட்டாமல் பிரிந்துபோன காதலர்களை காரணம் காட்டியே காதலை பிரித்துவிடுகிறார்கள்..பெற்றோர்கள்..! தங்கள் பெண்ணும் பின்னால் காதலனை பிரிந்து அவஸ்தைபடக்கூடாதே என்ற ஆதங்கம்தான்..!

அன்புரசிகன்
11-10-2007, 05:37 AM
காதலில் தவறு காணமுடியாது. காதலர்களில் தான் காணமுடியும்... காரணம் காதல் என்றால் இதுதான் என்று ஒரு வரையறை இல்லாமல் இதுவும் காதல் என்று சொல்லும் படி காதலாகிவிட்டது.... இதில் முரண்கள்களும் அதற்கான அரண்களும் வருவதை தவிர்த்தல் இலகுவல்ல.

நன்றாக உள்ளது நிஷியாரே...

யவனிகா
11-10-2007, 05:52 AM
திருமணம் வேண்டும்!
என்கிறோம் நாங்கள்..
இருபிணம் வேண்டுமா?
என்கிறீர்கள் நீங்கள்..

...

நல்ல வரிகள்...அருமையான கவிதை.இதோ பெற்றோரின் சார்பில் நான்...


ஒருநாள் உணவு
மறுநாள் க*ழிவு...

இன்றைய உடையை
இருபது நாள் கழித்தே
மீண்டும் நீ அணிவாய்..

படிப்பு இல்லையென்றாலும்
பரவாயில்லை...
பலதுறையுண்டு வாழ..

இத்தனையும் உன் இஷ்டப்படி...

ஒருநாள் கூத்தல்ல
உன் திருமணம்...
மனம் வாடி நீ திரும்பினால்..
பிணமாகி விடுவோம் நாங்கள்...

பதினெட்டு வருடங்கள்
பக்குவமாய் வளர்த்தெடுத்து..
நீ தும்மினாலும் துடித்துப் போய்..
தடுக்கினாலும் தவித்துப் போய்
கண்களுக்குள் உன்னை வைத்து
காத்தோம்....
கண்மணியே..

திருமணம் ஒன்றை மட்டுமாவது
தீர்மானிக்கும் உரிமை
தந்திடடி மகளே எங்களுக்கு!

பென்ஸ்
11-10-2007, 08:24 AM
ஷீ..
ஏனோ உங்களோடு முழுவதுமாக ஒத்து போக முடியவில்லை...
ஆரென் சொல்லுவதில் நீயாயம் இருப்பதாக உணர்கிறேன்...
யவனிகா... இது யதார்த்தமற்ற வேண்டுகோளோ????

உணவு வாங்குவதில் தனக்கு பிடித்த, ஒத்து போககூடிய உணவை தேடும் மனம்... பார்க்க பிடித்திருந்தாலும், ஒரு நாள் ருசிக்காகா மட்டும் சாப்பிடலாம்... சைட் அடிப்பது போல்...

பிடித்த உடையை எடுத்தாலும், போட்டு பார்த்து பொருத்தி வாங்க முடியும், துணியை...
ஆனால் துணையை...????

முகத்தில் படம் வரைந்து விட அனுமதிக்கும் வீட்டார், பச்சை குத்தி கொள்ள அனுமதிப்பதில்லை...
சில வாழ்வில் மீழவோ, மீறவோ முடியாது என்பதால்.... இப்படிபட்ட முடிவுகளை எடுக்கும் போது பெரியவர்கள் உணர்ச்சிபூர்வமான முடிவை எடுக்காமல்.... யதார்த்தமான முடிவை எடுக்கிறர்கள்... புரிந்து கொள்ளாதவர்களிடம் திணிக்க நினைக்கிறார்கள்...
ஏற்று கொண்டவன் சில நேரம் பிழைத்து கொள்ளுவான்...
ஏற்று கொள்ளாதவன் சில நேரம் கஷ்டபடுகிறான்...

ஒருவனது வாழ்வில் மனங்கள் ஒத்து போக கூட நடவடிக்கைகளும், வாழ்க்கை முறையும், குடும்ப பின்பலமும், வளர்ப்புமுறையும் காரணமாகின்றன... அது வேறு கலாசாரத்தில் இருக்கும் போது வேறுபட வாய்ப்பிருக்கிறது.... நமது கலாச்சாரத்தில் இரண்டு ஜாதியில் இருப்பவர்கள் இரண்டு வாழ்க்கைமுறையை கையாளும் போது அவர்கள் ஒத்து வாழ பல தியாகங்கள், அனுசரிப்பு தேவைபடுகிறது....
உதாரணமாக என் கலாசாரத்தில் மது அருந்துவது தவறு, ஆனால் நான் கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அவள் கலாசாரத்தில் அது தவறில்லை.. இதனால் எது சரி, தவறு என்பதில் கூட கருத்து வேறுபாடு வரும்... பிரச்சினைகள் வரும்....

இன்னும் ... இன்னும்...

இந்த உலகில் எதுவும் 100% சரியானது அல்ல... ஜாதி என்ற பெயரில் நமது கலாசாரம் சீரளிந்து இருக்கிறது...நமது கட்டுபாடுகள் நமக்கு நல்லதை கொடுக்கவே வரையறுக்கபட்டது... அதில் தவறுகளும் இருக்கு....அதில் நல்லதை இன்னும் தேடலாம்

பிச்சி
11-10-2007, 08:55 AM
ஷீ அண்ணாவின் கவிதையும் பென்ஸ் அண்ணாவின் விமர்சனமும் தூள்.

ஷீ-நிசி
11-10-2007, 09:00 AM
நன்றி நண்பர்களே....

இந்த கவிதைக்கு வந்த அனைத்து பின்னூட்டங்களும் அருமை...

இந்த முரண் சரியா தவறா என்று என்னால் தீர்மானிக்கமுடியாது. ஆனால் இந்த கவிதை அந்த சூழ்நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை மட்டுமே பறைசாற்றுகிறது.

அந்த பெண்ணின் மனதில் ஏற்படுகின்ற கேள்விகள் இவை.. முடிவு கூட பெற்றோரின் ஆசியை எதிர்பார்த்துதான் முடித்திருக்கிறாள்.

ஆயினும் மனதில் ஏற்படுகின்ற சில நியாயமான கேள்விகள்.

அவை மட்டுமே, அப்பெண்ணின் மனநிலை மட்டுமே கவிதையாய்....

ஷீ-நிசி
11-10-2007, 09:05 AM
நன்றி பிச்சி.. (மின்னல் மாதிரி வர்றீங்க போறீங்க....)

பிச்சி
11-10-2007, 09:21 AM
நன்றி பிச்சி.. (மின்னல் மாதிரி வர்றீங்க போறீங்க....)

ஆமாம் அண்ணா என்ன பண்றது. முதல்ல மாதிரி வரமுடியலை. நீங்க நல்லா இருக்கீங்களா? மன்றம் ஒரே கலகலன்னு போகுது போல இருக்கே!