PDA

View Full Version : கதை கதையாம் காரணமாம்...



யவனிகா
10-10-2007, 06:37 AM
கமலாவின் மனது உலையில் போட்ட அரிசியென பொங்கிப் புகைந்து கொண்டிருந்தது. புசுபுசுவென மூச்சு விட்டபடி, பேப்பரும் பேனாவுமாக ஹாலின் குறுக்கே நடந்து கொண்டிருந்தாள். எப்படி சொல்லலாம் என்னப் பார்த்து...என்னப் பத்தி என்ன தெரியும் இவளுக்கு ... பேச வந்துட்டா பேச...நாங்கெல்லாம் எட்டையபுரத்தில... பாரதிக்கு பக்கத்து வீடுடி, ஆனானப்பட்ட பாரதியோட பாட்டியே, எங்க பாட்டியப் பார்த்து. என்னமா எழுதறீங்க நீங்கன்னு கேட்டிருக்கா தெரியுமா?அடுப்பில் போட்ட கடுகாய் வெடித்துக் கொண்டிருந்தாள் கமலா.

"என்ன நடந்ததுன்னு சொல்லாம நீயே புலம்பிட்டிருந்தா எப்படி?சொன்னாத்தானே தெரியும்...இந்தா இந்த ஜூஸை வாங்கிக் குடிச்சிட்டு, பொறுமையா சொல்லு" இது கமலாவின் கணவன் பட்டாபி.

அந்த கோடிவீட்டு குமுதாயில்ல...அவள இன்னைக்கு லேடிஸ் கிளப்பில பார்த்தேன்னா...வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சிட்டிருந்தா..என்னன்னு கேட்டா எதோ இவ சமையல் குறிப்பாம்..அது மங்கையர் மலர்ல வந்துடுச்சாம்...என்னமோ கின்னஸ் ரிக்கார்டு பண்ணனாப்ல...இருனூறு மங்கையர்மலர் வாங்கி காலனி முழுக்க இலவசமா படிக்கக் குடுக்கிறான்னா...கேட்டேளா இந்த அக்கிரமத்த? கேக்கிறப்ப எல்லாம் பூம்..பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு காசை எடுத்துக் குடுக்கிறான் அவ ஆம்படையான்...நீங்களும் தான் இருக்கேளே?

"சரிடா செல்லம் இதில நீ கோபப்படற மாதிரி என்ன ஆச்சி?" பட்டாபி


குறுக்கே பேசாதீங்கோன்னா..அப்புறம் எனக்கு கோர்வையா சொல்ல வராது...நானும் குமுதா இந்த அலட்டு அலட்டுறாளேன்னு "இது என்னடியம்மா பெரிய விசயம்?நானெல்லாம் எழுதாத கதையா? ...கட்டுரையா? ஒரு காலத்தில என் பேரு வராத பத்திரிக்கையே இல்லன்னு" ஒரு பிட்டத் தான்னா போட்டேன்.அதுக்கு அவ "டெலிபோன் டைரக்டரி, கல்யாணப் பத்திரிக்கை, பூப்பு நன்னீராட்டு விழாப் பத்திரிக்கை இதெல்லாம் பத்திரிக்கை கணக்கில வராது மாமி " ன்னு சொல்லிட்டு என்ன நக்கலாப் பார்த்தான்னா...சுத்தியிருந்த மூதேவிங்க வேற கொள்ளுன்னு சிரிக்குதுங்கள்..எனக்கு இப்ப நெனைச்சாலும் அவமானம் புடிங்கித் தின்றதுண்ணா...

சரிடா இதெல்லாம் நோக்கு சகஜமான விசயம் தானே...நீயா எதுக்கு துண்டக் குடுத்து துப்பட்டிய வாங்கிக்கிற? இது பட்டாபி.

"அய்யோ,அய்யோ.. நீங்க எப்பவும் என்னத்தாண்ணா குறை சொல்லுவேள்..உலகத்திலிருக்கிற அத்தனை பொம்மனாட்டியும் நல்லவா உங்களுக்கு...நாந்தான் கெட்டவ...வீட்டுக்குள்ளயே எனக்கு எதிரிய வளர்த்து வெச்சிருக்கேனே...அப்பவே சொன்னா எங்க பாட்டி...பட்டாபி.. கொட்டாவின்னுகிட்டு பேரே நல்லாயில்ல..இவனக் கட்டாதேன்னு...கண்ணைத் திறந்திட்டு இருக்கிறப்பவே அந்த ஈஸ்வரன் என்ன குழில தள்ளிட்டானே"சூடு பிடிக்கிறது அழுகை...

"சரி,சரி அழாதே..இப்ப என்ன பண்றது? நீயே சொல்லு" பவ்வியமாய் பட்டாபி.

எது எப்படிப் போனாலும் எனக்குக் கவலை இல்லை...நானும் ஒரு கதை எழுதனும். அது அவள் விகடன்ல வரணும். நானூறு அவள் விகடன் வாங்கி நானும் ஊருக்கே இலவசமாக் குடுக்கணும்...குமுதா ஆம்படையான் மாதிரி, அவ எழுதறப்ப எல்லாம் கண்ணு முழிச்சு காபி போட்டி குடுக்காட்டியும் பரவாயிலை...,என்னை டிஸ்கரேஜ் பண்ணாதேள் அது போறும்.

குமுதா வீட்டு வேலைக்காரி மினிம்மா சொன்னா...அந்த சமயல் குறிப்ப எழுதினதே குமுதா ஆம்படையான் தானாம்...ஒரு வாரம் ஆராய்சி பண்ணி நார்த் இண்டியன் சமையலையும்...சவுத் இண்டியன் சமையலையும்...சைனீஸ் கூட மிக்ஸ் பண்ணி புது வெரைட்டி குடுத்தானாம்...நீங்களும் இருக்கேளே...ஒரு ரசம் வெக்கக் கூடத் துப்பில்லை...பொரியல் பண்ணுங்கன்னா உசிலி பண்றேள்...உசிலி பண்ணுங்கண்ணா அவியல் பண்றேள்..ஒரு சாதமாவது வடிக்கத் தெரியறதா...அதையும் குழைச்சு வெக்கறேள்...எல்லாம் உங்கம்மாவைச் சொல்லணும்...வணங்காம வளத்தி விட்டுருக்கா...இப்ப நாந்தான படறேன்...

அது முடிஞ்சு போன கதை...நான் ஒண்ணும் சமையல் குறிப்பு எழுதற ஆள் கிடையாது...நான் எழுதற கதையால ஆஸ்கர் அவார்டு வீடு தேடி வரணும்...

தொடரும்...
இறுதிப்பாகம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=12741)

சிவா.ஜி
10-10-2007, 06:46 AM
ஆஹா கமலா மாமி கதை எழுத ஆரம்பிச்சிட்டாளா..ரொம்ப நன்னா போறது...என்னமா...எழுதியிருக்கேள்....உங்கக்கூட இருக்கறவாகிட்ட சொல்லி சுத்திப் போடச்சொல்லுங்கோ...யாரு கண்ணாவது பட்ற போறது...சும்மாச் சொல்லப்டாது..ஆத்துக்காரியும்,ஆம்படையானும் பேஷிக்கறது அம்சமா இருக்கு.தொடருங்கோ....வாழ்த்துகள்.

யவனிகா
10-10-2007, 07:36 AM
சுத்திப் போடச்சொல்லுங்கோ...யாரு கண்ணாவது பட்ற போறது...சும்மாச் சொல்லப்டாது..ஆத்துக்காரியும்,ஆம்படையானும் பேஷிக்கறது அம்சமா இருக்கு.தொடருங்கோ....வாழ்த்துகள்.

எங்காத்துல ஏற்கனவே பூசணி உடச்சுப் போட்டுட்டா...தெரு வழியா போன ரெண்டு சைக்கிள்காரா அதில வழுக்கி விழுந்து திருஸ்டி எல்லாம் கழிஞ்சே போச்சு...தேங்ஸ்டா அம்பி...உன்னை மாதிரி மனங்குளிர பாராட்டறவா இருக்றதாலே தான் மழையே பெய்யறது தெரியும்மோன்னா...போறச்ச ஆத்துப் பக்கம் வந்துட்டுப் போ...பில்டர் காபி போட்டுத் தரேன்...

அன்புரசிகன்
10-10-2007, 07:46 AM
இது ஆத்துக்காரரின் வேதனையை கூறும் கதையா அல்லது பொம்மனாட்டியின் வேதனையை கூறும் கதையா என்று நேக்கு புரியல....
சீக்கிரம் தொடருங்கோ...

அது சரி ஏன் பொம்மனாட்டிங்க பில்டர் காப்பிய விரும்புறாங்க..?

ஆனா பெண்பிள்ளைகள் டீ ஐ தானே விரும்புறாங்க... :D

யவனிகா
10-10-2007, 07:52 AM
அது சரி ஏன் பொம்மனாட்டிங்க பில்டர் காப்பிய விரும்புறாங்க..?

ஆனா பெண்பிள்ளைகள் டீ ஐ தானே விரும்புறாங்க... :D

நோக்கு இப்படியொரு சந்தேகம் வேற வந்துட்டுதா? பொறு..பொறு.. அதுக்கொரு ஆராய்சிக் கட்டுரை ஆரம்பிச்சிட்டப் போச்சு!

அன்புரசிகன்
10-10-2007, 07:53 AM
நோக்கு இப்படியொரு சந்தேகம் வேற வந்துட்டுதா? பொறு..பொறு.. அதுக்கொரு ஆராய்சிக் கட்டுரை ஆரம்பிச்சிட்டப் போச்சு!

அதுக்கு ஆராச்சிக்கட்டுரை வேறு எழுத வேணுமா....?

சிவா.ஜி
10-10-2007, 07:57 AM
..போறச்ச ஆத்துப் பக்கம் வந்துட்டுப் போ...பில்டர் காபி போட்டுத் தரேன்...

ஆஹா..பேஷ்..பேஷ்..காஃபின்னா அது யவனிகா மாமி போட்டுத்தர்ற ஃபில்டர் காஃபிதான்..ரொம்ப நன்னாருக்கும்.

பூமகள்
10-10-2007, 11:33 AM
அஹா.... கமலா மாமி.... உங்க கதைய படிச்சி.. அப்படியே புல்லரிச்சி போச்சு..... என்னமா எழுதறேள்......!!! அசத்துங்க மாமி....!!
கோடி வீட்டு குமுதா உங்கள என்ன பேச்சு பேசிட்டா? நேக்கு ஒரு வார்த்த சொல்லி அனுப்பிருந்தேழ்னா.. நா ஒரு கை பார்த்திருப்பேனே மாமி அவாள....!!
மாமி.... நம்ம மன்றத்துல இருக்கற அண்ணாக்கள சமாளிக்கறத்துக்குள்ள... உசிரு போயிருது மாமி...வித விதமா மாட்டிவிடுறாள் மாமி...
உங்க கிட்ட சொல்றதுக்கென்ன... அமர்ன்னு ஒரு பிள்ளையாண்டா மாமி... வந்து உச்சியிலயே குட்டுறாரு மாமி...... நானும் பொறுமையா 3 அவர்ஸ் பார்த்தேன்... நிறுத்தவே இல்ல மாமி,... கடைசில எஸ்கேப் ஆயி உங்க வீட்டுக்குள்ள வந்து விழுந்திட்டேன்...
பேசி நாக்கு வறண்டு போச்சி..... கொஞ்சம் ஃப்ல்டர் காபி கிடைக்குமா மாமி??

யவனிகா
10-10-2007, 01:02 PM
சமாளிக்கறத்துக்குள்ள... உசிரு போயிருது மாமி...வித விதமா மாட்டிவிடுறாள் மாமி...
உங்க கிட்ட சொல்றதுக்கென்ன... அமர்ன்னு ஒரு பிள்ளையாண்டா மாமி... வந்து உச்சியிலயே குட்டுறாரு மாமி...... நானும் பொறுமையா 3 அவர்ஸ் பார்த்தேன்... நிறுத்தவே இல்ல மாமி,... கடைசில எஸ்கேப் ஆயி உங்க வீட்டுக்குள்ள வந்து விழுந்திட்டேன்...
பேசி நாக்கு வறண்டு போச்சி..... கொஞ்சம் ஃப்ல்டம் காபி கிடைக்குமா மாமி??

ஃபில்டர் காபி என்னடி பொண்ணே ஜில்லுனு நீர் மோர் தர்றேன்...கதவை மட்டும் சாத்திடு...இல்லன்ன அமரு அம்பி உன்னை தேடி இங்கயும் வந்திரப் போகுது...

அன்புரசிகன்
10-10-2007, 01:12 PM
பேசி நாக்கு வறண்டு போச்சி..... கொஞ்சம் ஃப்ல்டம் காபி கிடைக்குமா மாமி??

:sprachlos020:இன்னாதிது.... நாக்கு வறண்டதுக்காக ....:rolleyes: ஓ.. எனக்குத்தான் தெரியாது போலிருக்கே.... :eek:

தளபதி
10-10-2007, 01:22 PM
பட படன்னு பொரிந்து கொட்டும் மாமி, அவகிட்ட மாட்டிடுன்னு முழிக்கும் கொட்டாவி, (ஸாரி!!) பட்டாபி, உங்களுக்கு நல்லாவே நகைச்சுவையாய் எழுத வருகிறது, அடுத்த பகுதி எப்போது வரும் என்று ஆவலாக உல்ளது.

முதலில் சிவாஜிதான் இந்த நகைச்சுவை கலந்து கதைகள் கூறி கலக்குவார். இப்போது அவருக்கு இணையாக இன்னும் ஒரு எழுத்தாளர். மிகவும் சந்தோசம்.

நகைச்சுவையாய் எழுதுவது ஒன்றும் சாதாரண சமாச்சாரம் இல்லை. பெரிய விசயம். மன்றத்தில் இனி சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அசத்திவிட்டீர்கள்!!!!!!!.

மலர்
10-10-2007, 02:04 PM
ஆத்துல ஆத்துக்காரியும்,ஆம்படையானும் நன்னா பேசுரா...
வாழ்த்துக்கள் யவனிகா அக்கா

நேக்கு டீ காபி எல்லாம் கிடையாதா

யவனிகா
10-10-2007, 03:02 PM
[COLOR="DarkRed"]
நேக்கு டீ காபி எல்லாம் கிடையாதா

என்னடி கொழந்த இப்படி கேட்டுட்டே?இப்பத்தான் மாமா காப்பிபொடி அரைக்க மில்லுக்கு போயிருக்கார்....மாமா போட்ட காப்பிய நீ குடிச்சதில்லை இல்லை...கள்ளிச்சொட்டு மாதிரி பாலை விட்டு...சக்கரைய தூக்கலாப் போட்டு...அவரு கையால ஆத்திக் குடுத்தாருன்னா...இன்னைகெல்லாம் நாக்கில காப்பி தான் நிக்கும்...அடித் தொண்டையில காப்பி கசப்போட அவரு நெனப்பு இனிச்சிட்டே இருக்கும்..உனக்கு நான் என் கையால காப்பி போட்டுத் தரன்...உன் படை பட்டாளத்தோட வாடி அம்மா...

மலர்
10-10-2007, 07:26 PM
என்னடி கொழந்த இப்படி கேட்டுட்டே?உனக்கு நான் என் கையால காப்பி போட்டுத் தரன்...உன் படை பட்டாளத்தோட வாடி அம்மா...

ஹீ..ஹீ....உங்க கையாலேவா....அப்படின்னா நான் உடனே வாரேன்....

ம்..ம்...அக்கா என்னோட படை கொஞ்சம் மரத்திலும் இருக்காங்க..
அவங்களையும் அழைச்சிட்டு வரலாமா.........???

ஜெயாஸ்தா
11-10-2007, 06:33 AM
உரையாடலிலேயே கதையை உருவகப்படுத்திவிட்டீர்களே....பாட்டாபியை பார்த்தால் மிகவும் பாவமாக தெரிகிறார். அடுத்தப் பாகத்தில் நீங்களும், அந்த மாமியும் சேர்ந்து அவள்விகடனில் மாமியின் கதையை வரவழைக்க பட்டாபியை என்னபாடு படுத்தப்போகிறீர்களோ.... தெரியவில்லை...!

யவனிகா
11-10-2007, 06:43 AM
ம்..ம்...அக்கா என்னோட படை கொஞ்சம் மரத்திலும் இருக்காங்க..
அவங்களையும் அழைச்சிட்டு வரலாமா.........???

உன்னோட தமிழ் மன்ற சினேகிதாளத் தான சொல்லற...வாலைச் சுருட்டி வெச்சுண்டு வரச்சொல்லு பொண்ணே..வானரத்தைப் பார்த்தாலே மாமாக்கு பயம்...ஓடி ஒளிஞ்சுண்டுவார்...

அமரன்
11-10-2007, 06:54 AM
தெளிவான நீரோடை போன்ற கதை ஓட்டம். நகைச்சுவை, நெளிவுநளினம் என ஆங்காங்கே துள்ளிகுதிக்கும் வண்ணமீன்கள். அசத்தி விட்டீர்கள். பல வீடுகளில் கணவனின் முக்கியமான வேலைகளை திறம்பட செய்யும் குமுதாவின் கணவன், சொதப்பும் பட்டாபி என நிகழ்கால எதார்த்த பாத்திரங்கள். பட்டாபியின் அம்மாவின் வளர்ப்பை அக்னிப்பார்வை பார்க்கும் எதிர்கால (!) பாத்திரமாக கமலா மாமி... கலக்கல் கதையை பொருத்தமான களமாகத் தேர்ந்தெடுத்து அழகிய கதம்பமாக்க விழையும் நீங்கள் தேர்ந்த எழுத்தாளராக தெரிகிறீர்கள்..பாராட்டுகள் யவனிகா.

மலர்
11-10-2007, 07:52 AM
உன்னோட தமிழ் மன்ற சினேகிதாளத் தான சொல்லற...வாலைச் சுருட்டி வெச்சுண்டு வரச்சொல்லு பொண்ணே..வானரத்தைப் பார்த்தாலே மாமாக்கு பயம்...ஓடி ஒளிஞ்சுண்டுவார்...

எப்படிக்கா இப்படி கரெக்டா கண்டுபிடிச்ச.....சபாஷ்...
எல்லாருமே வாலை நன்னா சுருட்டிட்டா.....
இப்போ வரலாமா......

lolluvathiyar
11-10-2007, 09:10 AM
எப்படியோ கமலா மாமி கதை எழுத போறாங்க. பட்டாபிய வச்சு நிரைய காமடி கதை எழுதலாம் போல இருக்கு.



ம்..ம்...அக்கா என்னோட படை கொஞ்சம் மரத்திலும் இருக்காங்க..


இது ஓவரா தெரியல. ஓவியன் ஆதவா எல்லாம் நல்ல பசங்க அவுங்கள இப்படியா பேசரது


வானரத்தைப் பார்த்தாலே மாமாக்கு பயம்...ஓடி ஒளிஞ்சுண்டுவார்...

அப்ப எப்படி இத்த நாளா கொரிலாவ பாத்தும் பயமில்லாம இருந்தாராம்

மாமி எனக்கு வடகறி டப்பாவுல போட்டு தாங்க

யவனிகா
11-10-2007, 09:16 AM
வாத்தியார்வாள் நீங்க இன்னும் அடுத்த பாகத்தைப் படிக்கல்லேன்னு நினைக்கிறேன்...என்னதான் எள்ளுப் பாட்டி மாதிரி இருகேன்னாலும் இப்படியா பாக்கிறது மாமிய? பாட்டு வேற படிச்சேளாமா?உண்மையா?அண்ணிக்கு தெரியுமா இந்த மேட்டரு?

அக்னி
16-10-2007, 09:22 PM
இயல்பான நகைச்சுவை நடையில், அழகாய் இருக்கிறது கதை...
அடுத்த பாகத்தில் சந்திக்கின்றேன்...

ஓவியன்
21-10-2007, 06:54 AM
இயல்பான நகைச்சுவை இழையோடும் அசத்தல் கதையோட்டம், பாராட்டுக்கள் யவனிகா...!
:)
கதை கதையாம் காரணத்தின், காரணம் புரிந்து விட்டது (குமுதா தான்:)). இனி உங்கள் கதையையும் படித்து முடித்துவிட்டு பூரண பின்னூட்டம் தருகிறேன்.

ஆதவா
06-11-2007, 06:22 AM
இதற்கான எனது விமர்சனம் அடுத்த பகுதித் திரியில்......

ஆதவன்