PDA

View Full Version : அந்தநாள் ஞாபகம்

சுகந்தப்ரீதன்
10-10-2007, 05:59 AM
மார்கழி மாதத்தின் பனிவிழும்
ஒரு அதிகாலை பொழுதில்தான்
உன்னை முதன்முதலாய் சந்தித்தேன்!

யாரோ ஒரு இளைஞனுடன்
சாலையோரமாய் சன்னமாய்
வந்து கொண்டிருந்தாய் நீ!

அந்த அதிகாலை குளிரிலும்
அத்தனை உற்சாகமாய் பிரகாசிக்கும்
பிறைபோன்ற முகத்துடன்!

உன்னை பார்த்த கணமே
உன்னை விரும்ப தொடங்கினேன்!
இருந்தும் உன்னிடம் எப்படி
உரைப்பதென்று எனக்கு தெரியவில்லை!

எதிரே ஈரம்சொட்டும் தலையுடன்
கோயிலுக்கு சென்ற அத்தனை
பெண்களையும்விட உன்னைதான்
எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

நீ என்னுடன் இருந்தால்
எத்தனை அழகாய் இருக்குமென
நினைத்து கொண்டேன் எனக்குள்!

நெருக்கத்தில் நீ வந்தவுடன்
உன்னைபற்றி அறியும் ஆவலில்
உடன் வந்தவனிடம் விசாரித்தேன்!
உரையாடியதில் உணர்ந்து கொண்டேன்
நீ அவனுக்கு சொந்தமென்று!

இத்தனைக்கும் இடையில் எனக்கு
எதுவுமே தெரியாது என்பதுபோல்
பவ்யமாக நின்று கொண்டிருந்தாய்
பக்கத்தில் என்னை பார்த்துகொண்டு!

என்னிடம் எதுவும் பேசாமலே
என்னைவிட்டு விலகி போனாய்
உன்னுடன் வந்த இளைஞனுடன்
உனக்கே உரிய உற்சாகத்துடன்!

பிரிய மனமே இல்லாமல்
பிரிந்து வந்தேன் உன்னை
திரும்பிதிரும்பி பார்த்துகொண்டு!

அன்று அந்த இளைஞனுடன்
நீ வாலாட்டி வந்தது போலவே
இன்று என்னுடன் வாலாட்டி வருகிறது
என்வீட்டு நாய்குட்டி...?!

ஜெயாஸ்தா
10-10-2007, 06:14 AM
இதை காதலென்றும் சொல்லமுடியாது. ஏதோ மனதிற்கு பிடித்த ஒரு விசயம்....! இது கானல்நீராய் கலையப்பட வேண்டிய கனவுகள். 'பிறர்மனை நோக்காண்மை பேராண்மை....!' என்பது போல் திரும்பி வந்ததாய், திருந்தி வந்ததாய் எழுதியிருந்தது பராட்டுகுரியது. தொடருங்கள் ப்ரீதன்...!

சுகந்தப்ரீதன்
10-10-2007, 10:06 AM

நண்பரே மன்னிக்கவும்... அந்த இளைஞனுடன் வந்தது பெண் அல்ல... ஒரு சின்ன நாய்குட்டி... மறுபடியும் படியுங்கள் புரியும்..குழப்பத்திற்க்கு மன்னிக்கவும்.... குழப்பதானே இந்த கவிதை...!

ஜெயாஸ்தா
10-10-2007, 10:33 AM
நண்பரே மன்னிக்கவும்... அந்த இளைஞனுடன் வந்தது பெண் அல்ல... ஒரு சின்ன நாய்குட்டி... மறுபடியும் படியுங்கள் புரியும்..குழப்பத்திற்க்கு மன்னிக்கவும்.... குழப்பதானே இந்த கவிதை...!

சற்று அவசராமாக வாசித்து கருத்து பதிந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

நீங்கள் பெண்ணல்ல 'நாய்குட்டி' என்று சொன்னவுடன் மீண்டும் படித்துப்பார்த்தேன் நாண்பா. நீங்கள் சொன்னது சரிதான். இன்னும் கொஞ்சம் கவிதையின் கடைசியில் நாய்க்குட்டி என்று உணர்த்துவதற்காக நாய்குட்டியின் செய்கை சம்பந்தமான ஏதேனும் சில வலிவான வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அன்று அந்த இளைஞனுடன்
நீ நடந்து வந்தது போலவே
இன்று என்னுடன் நடந்து வருகிறது
என்வீட்டு நாய்குட்டி...?!

இந்த வரிகளைப் படித்த உடன் நான் நினைத்த கருத்து. அந்த இளைஞனின் பின்னால் சென்ற பெண்ணின் நினைவு, இந்த கவிதை நாயகனின் பின்னால் நாய்குட்டி போல் தொடர்கிறதோ என்று நினைக்க வைத்துவிட்டது. சற்று குழம்பினாலும் ஒரு நல்ல கவிதையை தந்தற்கு பாராட்டுக்கள்...!

தவறை சுட்டியமைக்கு நன்றி.

சாம்பவி
10-10-2007, 10:37 AM
குறும்பு.... !
.

சிவா.ஜி
10-10-2007, 11:49 AM
கவிதை முழுதும் காதல் வாசம் வீசுவதை மறுக்க முடியவில்லை..கடைசியில் ஒரு திருப்பமாய் நாய்க்குட்டி....குறும்புக்கவிதை.நன்றாக இருக்கிறது சுகந்தப்ரீதன்.வாழ்த்துகள்..

சுகந்தப்ரீதன்
10-10-2007, 01:06 PM
நீங்கள் பெண்ணல்ல 'நாய்குட்டி' என்று சொன்னவுடன் மீண்டும் படித்துப்பார்த்தேன் நாண்பா. நீங்கள் சொன்னது சரிதான். இன்னும் கொஞ்சம் கவிதையின் கடைசியில் நாய்க்குட்டி என்று உணர்த்துவதற்காக நாய்குட்டியின் செய்கை சம்பந்தமான ஏதேனும் சில வலிவான வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

.
உங்களின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன் நண்பரே...! தவறு என்னுடையதுதான் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..!

சுகந்தப்ரீதன்
10-10-2007, 01:08 PM
மிக்க நன்றி சாம்பவி...! அது குரும்பு அல்ல... குசும்பு..?!

மிக்க நன்றி சிவா... எனது வாழ்த்துக்கள்..!

இணைய நண்பன்
10-10-2007, 01:16 PM
உங்களை வாழ்த்துவதா? இல்லை உங்கள் சோகத்துடன் பங்கெடுக்கவா? எப்படி இருந்தாலும் கவிதை நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

தளபதி
10-10-2007, 01:31 PM
இருபொருள் கவிதையாய் நன்றாக எழுதியுள்ளீர்கள். ஜே.எம் நினைத்தது ஒன்றும் தவறில்லை. கவிஞரின் எண்ணமும் இதுதான். அவர் படிப்பவர்கள் அதை ஒரு பெண்ணாகவும் நினக்கவேண்டும் என்றுதான் கவனமாக எழுதியுள்ளார். இது அந்த கவிஞரின் வெற்றியே. கடைசியில் அதை நாய்க்குட்டியாக மாற்றியுள்ளார். நல்ல அழகான ட்விஸ்ட்.

ஒரு மாடர்ன் ஆர்ட்டை கொடுத்து வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு படமும் நன்றாக உற்று கவனித்தால் மற்றொரு படமும் இருக்கும். அது இந்த கவிதை!! ரசித்தேன்.. சுகந்தா.. வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
10-10-2007, 01:41 PM
நன்றி இக்ரம் மற்றும் தளபதியாரே...!

அமரன்
11-10-2007, 08:20 AM
ஒரு மாடர்ன் ஆர்ட்டை கொடுத்து வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு படமும் நன்றாக உற்று கவனித்தால் மற்றொரு படமும் இருக்கும். அது இந்த கவிதை!! ரசித்தேன்.. சுகந்தா.. வாழ்த்துக்கள்.

கவிஞர், மனைவியை நாய்க்குட்டியாக உருவகப்படுத்தி உள்ளார் என்கின்றீர்களா..? உங்களுக்கு ரொம்பக் குசும்புதான் தளபதியாரே?

நாரதர் தூதுவன்,

சுகந்தப்ரீதன்
11-10-2007, 12:21 PM
கவிஞர், மனைவியை நாய்க்குட்டியாக உருவகப்படுத்தி உள்ளார் என்கின்றீர்களா..? உங்களுக்கு ரொம்பக் குசும்புதான் தளபதியாரே?

நாரதர் தூதுவன்,

அண்ணா..குசும்பு உங்களுக்குதான்... நீங்க சொன்ன பிறகுதான் எனக்கே புரிகிறது... இப்படியும் கற்பனை செய்யலாம் என்று... உக்காந்து யோசிப்பிங்களா... இல்ல அனுபவத்துல அப்படியே வருதா,,, எதுவானலும்... வாழ்த்துக்கள் அண்ணா..!

சாம்பவி
15-10-2007, 10:54 AM
மிக்க நன்றி சாம்பவி...! அது குரும்பு அல்ல... குசும்பு..?!

மிக்க நன்றி சிவா... எனது வாழ்த்துக்கள்..!

காதில் இருப்பது குரும்பு... !
தென்னம்பாளையில் இருப்பதும் குரும்பு.. !
கண்ணன் செய்தது குறும்பு... !
கோயம்புத்தூர்காரர்களுக்கு
அதுவே ... குசும்பு.. !

.

சுகந்தப்ரீதன்
15-10-2007, 11:59 AM
காதில் இருப்பது குரும்பு... !
தென்னம்பாளையில் இருப்பதும் குரும்பு.. !
கண்ணன் செய்தது குறும்பு... !
கோயம்புத்தூர்காரர்களுக்கு
அதுவே ... குசும்பு.. !

.
சாம்பவி என்ன சொல்ல வரீங்க... நீங்க கோயமுத்தூருன்னா..?இல்ல நான் கோயமுத்தூருன்னா...? (அவசரத்துல எழுத்துபிழை சிக்கல்ல அடிக்கடி மாட்டறதே பொழப்பா போச்சு எனக்கு..!)

கா.ரமேஷ்
06-01-2009, 05:38 AM
நல்லொதொரு கற்பனை நிறைந்த கவிதை....

செல்வா
19-02-2009, 11:04 PM
உங்கள ஒரு பொண்ணு புடிக்கலனு சொன்னா அதுக்காக இப்படி எல்லாமா திட்டறது... கவலப்படாதீங்க உங்களுக்காக ஒரு பொண்ணு பொறந்து காத்திட்டுருப்பாங்க....

வசீகரன்
24-02-2009, 10:30 AM
சுகந்தன் உண்மையிலேயே நாய்குட்டியதான்
நினைத்து எழுதினானா என்று எனக்கு டவுட்டாவே இருக்கு.....
பய கடைசி வரியில பம்மிட்டான்...
அடே உண்மையசொல்லு..... நீ டாவு கட்டுன பொண்ணுதானே
எதிர்ல வந்தா...!!!

சுகந்தப்ரீதன்
28-02-2009, 09:20 AM
நல்லொதொரு கற்பனை நிறைந்த கவிதை....நன்றி நண்பரே..!!

உங்கள ஒரு பொண்ணு புடிக்கலனு சொன்னா அதுக்காக இப்படி எல்லாமா திட்டறது... கவலப்படாதீங்க உங்களுக்காக ஒரு பொண்ணு பொறந்து காத்திட்டுருப்பாங்க....அப்படியா அண்ணாச்சி..?! அப்ப சரி இனி நான் திட்டல...:wuerg019:

சுகந்தன் உண்மையிலேயே நாய்குட்டியதான்
நினைத்து எழுதினானா என்று எனக்கு டவுட்டாவே இருக்கு.....
பய கடைசி வரியில பம்மிட்டான்...
அடே உண்மையசொல்லு..... நீ டாவு கட்டுன பொண்ணுதானே
எதிர்ல வந்தா...!!!நீ எப்பத்தான் தெளிவா இருந்துருக்க.. உனக்கு டவுட் வராம இருக்க..??
அட உனக்கு உண்மைதானே வேணும்... வீட்டுக்கு வா மாப்பு நீயே தெரிஞ்சுக்குவ..?!:icon_rollout:

வசீகரன்
28-02-2009, 11:51 AM
நீ எப்பத்தான் தெளிவா இருந்துருக்க.. உனக்கு டவுட் வராம இருக்க..??
அட உனக்கு உண்மைதானே வேணும்... வீட்டுக்கு வா மாப்பு நீயே தெரிஞ்சுக்குவ..?!:icon_rollout:

உன் அழைப்புல ஏதும் உள்குத்து இருக்குற மாதிரியே இருக்கே.....
உன் வீட்டுக்கு வந்தா ஊடுகட்டி அடிப்ப போல இருக்கே.................................!!!

சசிதரன்
28-02-2009, 03:06 PM
ஹா ஹா ஹா... உங்களுக்கு ரொம்பதான் குறும்பு சுகந்தன்...:) ரொம்ப நல்லா இருக்கு...:)