PDA

View Full Version : டாட்டா இன்டிகாம் பிராட்பேண்ட் இணைப்பு உததங்கவேல்
10-10-2007, 03:49 AM
எனக்கு டாட்டா பிராட்பேண்ட் அகலகற்றை இணைப்பின் குயிக் பவர் 360 இணைப்பின் கேட்டலாக் வேண்டும். இந்த இணைப்புக்கு இரவு முழுதும் இலவச சர்ப்பிங் வசதி கொடுத்தார்கள். தற்போது அதை நிறுத்தி விட்டார்கள். நண்பர்கள் உதவவும்.

சாம்பவி
10-10-2007, 04:06 AM
http://www.tataindicombroadband.com/nightunlimitedplan_faqs.html

volume based plans எதுவாக இருந்தாலும் அத்துடன் இதையும் இனைத்துக் கொள்ளாலாம்.

தங்கவேல்
10-10-2007, 04:22 AM
சாம்பவி நான் நைட் டைம் அன் லிமிட்டட் பிளான் எடுத்துள்ளேன். ரூபாய் 3650 கட்டினேன். பிளானின் பெயர் குயிக் பவர் 360. நான் இந்த பிளானை எடுக்கும் போது நைட் அன் லிமிட்டட் என்று கேட்டலாக் கொடுத்தார்கள். இணய தளத்திலும் வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் நைட் டைம் அன்லிமிட்டட் ஆக்டிவேட் செய்ய வில்லை. இணய தளத்தில் அந்த பிளானை எடுத்து விட்டார்கள். அதனால் தான் பழைய கேட்டலாக் கிடைத்தால் கன்சூமர் கோர்ட்டில் வழக்கு தொடர ஏதுவாக இருக்கும் என்பதால் கேட்டேன். கிடைக்குமா ?

சூரியன்
10-10-2007, 05:03 PM
நண்பர்கள் விரைவில் உங்களுக்கு உதவுவார்கள்.காத்திருங்கள்.

பிச்சி
11-10-2007, 10:06 AM
நான் கூட டாட்டா இன்டிகாமுக்கு வாழ்த்து சொல்லறீங்கன்னு நினச்சேன்,.

:ட்
பிச்சி

praveen
11-10-2007, 10:20 AM
எனக்குத்தெரிந்து ஏர்டெல் தவிர மற்ற சேவைகள் எல்லாம் குப்பை, (எல்லாம் பயன்படுத்தி பார்த்து விட்டேன்).

ஏர்டெல்லில் சில குறை இருந்தாலும், பேசி சரி செய்து விடலாம், நாம் சொல்வதை காது கொடுத்து கேட்டு, ஒழுங்காக பாலோஅப் செய்கிறார்கள் மற்றவர்கள் சும்மா?. நாம் ஒரு சேவை குறை என்று சொன்னால், அதை சரி செய்வது விட்டு நம்மளை தான் குறை சொல்கிறார்கள். (நீங்கள் P4 வாங்குங்கள், XP மாறுங்கள், ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் மாற்றுங்கள் என்று)

மீனாகுமார்
11-10-2007, 04:08 PM
நான் இன்றைக்கு தான் டாடா இன்டிகாம் போஸ்ட் பெய்டு வாங்கியிருக்கேன்... எப்படி இருக்குன்னு பார்ப்போம்...

தங்கவேல்
11-10-2007, 06:39 PM
பாவம் மீனா குமார்...

அக்னி
12-10-2007, 11:59 AM
தங்கவேல் அவர்களே இந்தத் திரியை
கணினி சந்தேகங்கள், விவாதங்கள் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=54)
பகுதிக்கு நகர்த்துகின்றேன்...

பொறுப்பாளர்
~அக்னி

suraj
12-10-2007, 04:12 PM
எனக்குத்தெரிந்து ஏர்டெல் தவிர மற்ற சேவைகள் எல்லாம் குப்பை, (எல்லாம் பயன்படுத்தி பார்த்து விட்டேன்).


அது உங்க ஊரில நண்பா .எங்க ஊரில கன்சூமர் கேர்ல ஆளே காணாது.:traurig001:

BSNL -தற்போது உபயோகப்ப்டுத்துகிறேன். பிரச்சனையில்ல ஆபிஸ் பக்கத்தில இருப்பதினால்.

பட்டாம்பூச்சி
12-10-2007, 05:30 PM
என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் நான் கண்ட குறை/நிறைகள்:-
(பயன்படுத்திய கால வரிசையில்)

1. பி.எஸ்.என்.எல் டயல் அப் : ஆரம்பத்தில் கிடைத்த ஒரே சர்வீஸ். அடிக்கடி கட் ஆகும். கம்ப்ளெயிண்ட் செய்தாலும் சரியாவதற்கு நேரம் எடுக்கும். இணைப்பு வேகம் குறைவு.

2. ஏர்டெல் ப்ராட்பேண்ட் : பி.எஸ்.என்.எல் ஐ விட பெட்டர். வேகம் கூடியது. அடிக்கடி கட் ஆவது இல்லை. கஸ்டமர் கேர் கொஞ்சம் வீக் (எங்கள் பகுதியில் ஆரம்பித்த புதிது என்பது காரணமோ). பில்லில் பெரிய குண்டு வரும். ஓவ்வொரு பில்லிற்க்கும் பணம் செலுத்தும்போது ஒரு பெரிய போராட்டம் செய்து வைவர் கேட்டு சரி செய்யணும். இணைப்பைத் துண்டித்த பின்னரும் ஒருவருடத்திற்கு பில் வந்துகொண்டிருந்தது 15,000/- வரைக்கும். என்ன சொல்லியும் சின்சியராக பில்லடித்து அனுப்பினார்கள்.

3. டிஷ்நெட் ப்ராட் பேண்ட் : அதிவேக இணைப்பு. நல்ல கஸ்டமர் சேவை என்று ஆரம்பித்தார்கள். ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் மற்றும் இன்ஸ்டலேஷன் தொகையாகக் கொடுத்தேன். பின்னர் நிறுவனம் கைமாறியது. வி.எஸ்.என்.எல். டாடா இண்டிகாம் ப்ராட் பேண்ட் சேவை. ஆரம்பித்தது பிரச்சினை. நீண்ட நாட்களுக்குக் கூட இணைப்பு இல்லாமல் அவதி. போன் செய்தால் பி.பி.ஓ. சர்வீஸிற்கு இணைப்பு போகும். நேரடியாக டாட்டா இண்டிகாம் ஆட்களைத் தொடர்பு கொள்ளவே முடியாது. முதலில் 4 மணி நேரத்தில் சரி செய்வதாகச் சொல்லி பின்னர் 6 8 24 என்று மணித்துளிகளை ஏற்றிக் கொண்டே போனார்கள். ஆனாலும் வேலை செய்யாது. கம்ப்ளைண்ட் பண்ணினால் பழைய புகார் சரி செய்யப்பட்டுவிட்டது புதிதாக பதிவு செய்யுங்கள் என்பார்கள். இங்கே சரியாகாமல் எப்படி அந்த கம்ப்ளைண்டை மூடினீர்கள் என்றால் சரியான பதில் இருக்காது. எப்படியோ டாடா இண்டிகாமைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு "எங்களுக்குத் தெரியும் சரியானதா இல்லையா என்பது" என்று முகத்திலடித்தமாதிரி பதில் வரும் 1 மாதத்திற்கு கூட இப்படியே அலைக்கழித்து சரியான தீர்வே இல்லாமல் பில் மட்டும் முழுசாக தருவார்கள். புகாரை மூடாமல் வைத்திருந்தால் டவுண்டைம் ரீபண்ட் தரவேண்டியிருக்கும் என்பதால். பிரச்சினை சரியானதை சரிபார்க்காமலேயே புகாரை மூடுவதற்கான காரணம் இந்த டவுண்டைம் ரீபண்ட் தரவேண்டியிருக்குமே. எத்தனை ஈமெயில் அனுப்பினாலும் ஒன்றிற்கும் பதில் வராது. மிகுந்த அலட்சியம். ஒரு வழியாக கனெக்ஷனை கேன்சல் செய்தேன். ஒரு வருடத்திற்குப் பிறகு பாக்கிப் பணம் செலுத்தாத காரணத்திற்காக என்மீது 420 க்ரிமினல் கேஸ் போடப்போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள்.இந்த நோட்டீஸைத் தவிர எந்தவித கம்யூனிகேஷனும் அவர்களிடமிருந்து வரவே இல்லை. 5 வருடங்களாக சின்சியராக பணம் கட்டி வந்த எனக்கு ஒரு அல்பத்தொகையை (அது கூட தவறான பில் கணக்கிட்ட தொகை) கட்டவில்லை என்று மிகக்கீழ்த்தரமான அணுகுமுறை. நான் முதலில் கட்டியதற்கு எந்தக் கணக்கும் தரவில்லல. அதை குறிப்பிட்டு நானும் ஒரு லயரைக் கொண்டு பதில் கொடுத்தால் அதற்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை ஆனால் திரும்பவும் ஆறுமாதம் கழித்து முந்தைய நோட்டீஸின் இன்னொரு காப்பி வருகிறது. இதுதான் இவர்களின் கஸ்டமர் சப்போர்ட்டும் மரியாதையும். மிக மிக மோசமான சேவை.

3. ரிலையன்ஸ் சேவை : செல்போன் மூலம் இணைப்பு. சாதாரணமாக மொபைல் போனாகவும் தேவையான நேரத்தில் இண்டெர்நெட் இணைக்கவும் பயன்படும். வேகம் மிதமான வேகம். பில் குழப்பமில்லை. ஆனாலும் கட்டணம் கொஞ்சம் கூடுதல்தான். இண்டெர்நெட் பயன்படுத்தும்போது போனைப் பயன்படுத்தமுடியாது. அவசரத்திற்கு பயன்படலாம். ஆனால் நிரந்தரமாகப் பயன்படுத்துவது கொஞ்சம் சிரமம்.

4. தற்போது பி.எஸ்.என்.எல். பிராட் பாண்டு : திருப்தியான சேவை. வேகமும் அற்புதம். பில்லில் சிக்கல் இல்லை. புகாருக்கு சில மணி நேரத்துக்குள் நடவடிக்கை. கிட்டத்தட்ட டவுண்டைம் இல்லவே இல்லை அப்படியே இருந்தாலும் சில நிமிடங்களில் சரியாகிறது. கட்டணம் மற்ற எல்லா சேவைகளையும் விடக் குறைவு.

மீனாகுமார்
12-10-2007, 05:37 PM
அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பட்டாம்பூச்சி. என்னோட இன்னொரு நண்பரும் பி.எஸ்.என்.எல் பற்றி நல்ல சேவை என்றே தகவல் தந்தார்.

நான் பெங்களூருவில் ஏர்டெல் 1.5 ஆண்டு பயன்படுத்தினேன்.. எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனைகளும் கிட்டதிட்ட உடனுக்குடன் சரி செய்தார்கள். மேலும் அவ்வப்போது அழைத்து சேவை பற்றி தெரிந்து கொண்டார்கள்.

premkumar.asogan
26-10-2007, 08:16 AM
வணக்கம் நண்பர்களே,
நானும் டாட்டா, ஏர்டெல் உள்பட ஏறக்குறைய அனைத்து இணைப்புகளையும் பயன்படுத்திப் பார்த்து விட்டேன். ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் இங்கே (எனது அனுபவம்)...

ஏர்டெல்: நல்ல சேவை. அழைத்தவுடன் உடனே வந்து சிக்கல்களை சரி செய்து விடுகின்றனர். அலாதியாக இணைப்பு வேகம். ஆனால் அவர்கள் கட்டணங்களில் மட்டும் சமரசம் செய்து கொள்வதில்லை.

டாட்டா: இணைப்பு பெறும் போது அளிக்கும் சேவை, அதன்பின் தொடர்வதில்லை. சிக்கல்கள் ஏற்பட்டால் அவ்வளவு தான். அவர்களை அழைப்பதற்குள் பாதி ஆயுள் கழிந்து விடும். இணைப்பு வேகமும் சுமார் தான். ஆனால் சலுகைகள் மற்றும் கட்டண குறைப்புகளில் கலக்குவர்.

ரிலையன்ஸ்: விண்ணப்பித்தவுடனே மிக வேகமாக இணைப்பு அளிப்பது இவர்களது சிறப்பு. அகலக் கற்றை இணைப்பு செவையுடன் இலவசமாக தொலைபேசியும் அளிக்கின்றனர். சிறப்பான வேகம். குறைந்த கட்டணம். ஆனால் அவர்கள் மாநகரங்களில் உள்ள பிரதான பகுதிகளில் மட்டும் சேவையளிக்க முன் வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் அளிக்க தயக்கம் காட்டுகின்றனர். அதே போல, அவசர நேரத்தில் வாடிக்கையாளர் சேவையை அழைத்தால், 75% ஹிந்தியில் பதில் கிடைக்கும், 25% ஆங்கிலத்தில் பதில் கிடைக்கும். டாமில் அவர்களுக்கு தெரியாது....இப்போது பல்வேறு மொழிகளில் வாடிக்கையாளர் சேவையை நிறுவி வருகிறார்களாம்....

சிஃபி : நோ கமெண்ட்ஸ்

Sendhilkumaar
26-10-2007, 08:22 AM
அது என்னங்னா...
சிஃபி நோ கமெண்ட்ஸ் நாங்க என்ன புரிஞ்சுக்கிறது.....
சுத்தமா நல்லா இல்லைனா???

praveen
26-10-2007, 08:50 AM
அது என்னங்னா...
சிஃபி நோ கமெண்ட்ஸ் நாங்க என்ன புரிஞ்சுக்கிறது.....
சுத்தமா நல்லா இல்லைனா???

கடுமையாக பொருட்/மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அமரன்
26-10-2007, 09:00 AM
அது என்னங்னா...
சிஃபி நோ கமெண்ட்ஸ் நாங்க என்ன புரிஞ்சுக்கிறது.....
சுத்தமா நல்லா இல்லைனா???
அது என்னங்கண்ணா நீங்களும் அவர் போகும் இடமெல்லாம் போய் கலாய்ப்பான பதில் கொடுக்கின்றீர்கள். ரொம்ப நெருக்கமோ இருவரும்.

ஜெயாஸ்தா
26-10-2007, 05:41 PM
நான் உபயோகித்த வரையில் பி.எஸ்.என்.எல் அருமையாக இருக்கிறது. என்ன ஒரு சிறுபிரச்சனை என்றால் தற்போதைய நவீன தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் இதில் மிக குறைந்த அளவே உள்ளனர். அதனால் சில சமயம் சிறுசிறு பிரச்சனைகள் கூட சரிசெய்ய கொஞ்சம் அதிகம் நேரம் எடுக்கின்றனர். ஆனால் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துகின்றனர்.