PDA

View Full Version : வலிக்காமல் வாழ்க்கை இல்லை



யாழ்_அகத்தியன்
09-10-2007, 03:16 PM
வாருங்கள் பக்த கோடிகளே
உங்கள் வேண்டுதல்களை
என் மேல் உடைத்து

எனக்கும் சேர்த்து
வேண்டிக் கொள்ளுங்கள்.

என்றாவது நான் இதே
கோயிலில் சிலையாக
வேண்டும் என்று

நீங்களே கூறுங்கள்
எத்தனை நாள் மட்டும்தான்
நான் வாசல் கல்லாய்
இருப்பது.

எதிலும் இறைவன்
இருப்பான் என்பதை
நம்பும் நீங்கள்

ஏன்?
என்னை மட்டும் கல்லாய்
எண்ணி எண்ணுக்கணக்கின்றி
உங்கள் நேத்திக்காய்....

என் மேல் தேங்காய்களால்
எறிந்து என்னைக் காயப்படுதுகிறீர்கள்.

உண்மையைச்
சொல்லப் போனால்

இதே கோயிலுக்கு நானும்
சிலையாக வேண்டும்
என்றுதான் வந்தேன்.

நான் சிற்பியின் உளிக்கு
பயந்ததால் என்னை வாசலிலே
விட்டுவிட்டார்கள்

தேங்காய்களால் சிலையானால்
வணங்க வைப்பதாகக்கூறி.

பார்த்தீர்களா....
பக்தர்களே.....

நான் உளிக்கு பயந்ததால்தான்
என்னை ஊரே சேர்ந்து குட்டுகிறது.

எனவே
என் நிலையைப் பார்த்தாவது
புரிந்து கொள்ளுங்கள்.

பயந்தால் வாழமுடியாது என்பதை.

பரவாயில்லை எனக்குப் பழகிப்போச்சுகொண்டு
வந்த தேங்காயை என் மேல் உடைத்துவிட்டு
தெரிந்து கொள்ளூங்கள்.

வலிதாங்கும் இதயத்தைத்தான்
வாழ்க்கை வணங்கும்

குட்டு வாங்கும் தலையென்றால்
குட்ட மட்டுமே செய்யும் இந்த
உலகம் என்பதை.

-யாழ்_அகத்தியன்

சூரியன்
09-10-2007, 04:04 PM
கவிதையின் கருத்தை அழகாக சொல்லியுள்ளீர்..
பாராட்டுக்கள் நண்பரே..