PDA

View Full Version : 'செல்'லச்சிணுங்கல்சிவா.ஜி
09-10-2007, 01:07 PM
'செல்'லின் சிணுங்கல்
செல்லச் சிணுங்கல்
பாதுகாப்பாய் அதை
பயண்படுத்தும்வரை.....

வாகனமோட்டும் வேளையில்
வா என்னைகவனி என
அலைபேசி அழைத்தால்...
அப்போதைக்கு அலட்சியம்
அவசியம் வேண்டும்,
வாரி எடுத்து வார்த்தையாடினால்
வாய்க்கரிசி வாங்க வேண்டும்!

பூமகள்
09-10-2007, 02:52 PM
செல்ல கவி மொழியாய் 'செல்' மொழி பேசிய சிவா அண்ணாவிற்கு வாழ்த்துகள்.
இப்போது பலர் திருந்திவிட்டனர் என்று உணர்கிறேன். படித்த இளைஞர்கள் யாரும் அதிகம் வாகனப் பயணத்தினிடை 'செல்'லிடை தொடுவதில்லை.

நல்ல கருத்து மறுபடியும்....ஏனுங்க சிவா அண்ணா...
"கருத்து கந்தசாமி" ஆயிட்டே வரீங்க...
வாழ்த்துகள் சிவா அண்ணா. அசத்துங்க...!!

யவனிகா
09-10-2007, 02:59 PM
நிஜமான வார்த்தைகள்...நல்ல கருத்து...சேர்வோரைச் சேரட்டும்.

சிவா.ஜி
09-10-2007, 02:59 PM
ஆஹா போறபோக்குல ஒரு வாரு வாரிட்டியேம்மா....அப்புறம் நானும் மெகா சைஸ்ல ஒரு பென்சிலுக்கு பதிலா மௌஸ்தான் வெச்சுக்கனும்.
இங்க சவுதியில படுத்துறாங்க...செல் இல்லாமல் செல்வதேயில்லை.அவனுங்க பேசி நம்மள கொன்றுவானுங்களோன்னு பயமா இருக்கு.அதான்...ஹி..ஹி..இப்புடி ஒண்ணு...

பூமகள்
09-10-2007, 03:04 PM
சிவா அண்ணா....அப்போ..
" 'செல்'லோடு எதிர்ப்பட்டால் தூர விலகு..!!" என்று தான் புதுமொழி சொல்லனும்.
பார்த்து இருங்க அண்ணா...!!
அவங்களுக்கு தமிழ் தெரியுமா??? இதைப் படிச்சி புரிஞ்சி.. திருந்தி, எங்கண்ணனை படுத்தாம இருந்தா சரி தான்.

ஜெயாஸ்தா
10-10-2007, 06:31 AM
நல்ல கவிதை சிவா. சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் கைப்பேசி பேசிக்கொண்டே இருசக்கரவாகனம் ஓட்டிய இரண்டு பேருக்கு முதன் முதலில் அபதாரம் விதிக்கப்பட்டதாக நாளிதழில் செய்தி வந்தது. இனி இந்த மாதிரி செயல்கள் கொஞ்சம் கட்டுக்குள் வரும் என நினைக்கிறேன்.

சிவா.ஜி
10-10-2007, 06:35 AM
ஆம் ஜே.எம்.நான் ஊரிலிருக்கும்போதும் பார்த்திருக்கிறேன் கர்ணனின் கவசக் குண்டலங்களைப்போல அலைபேசியை காதில் வைத்து தோளில் அழுத்திக்கொண்டு தலையை ஒரு பக்கமாகவே சாய்த்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் போவார்கள்.அவர்களுடைய கவனக்குறைவால் மற்றவருக்கும் உயிர் பிரச்சனை.

தளபதி
10-10-2007, 08:00 AM
'செல்'லின் சிணுங்கல்
வாகனமோட்டும் வேளையில்
வாரி எடுத்து வார்த்தையாடினால்
வாய்க்கரிசி வாங்க வேண்டும்!

கலக்கிட்டீங்க சிவா!! வாழ்த்துக்கள். நல்ல விசயங்கள் கலந்து கவிதைகள் படைக்கும்போது கவிஞரின் சமுதாய ஈடுபாடு வெளிப்படும். இந்த கவிதையில் உங்களின் கவனம் சின்ன (செல் − இது ரொம்ப பெரியவிசயம்) சின்ன விசயங்களில் கூட புகுந்து அதில் சில விசயங்களைச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்வது பளிச்சிடுகிறது.

உங்கள் சொல்லாடல் அருமையாக உள்ளது. நண்பரே!! தொடருங்கள்.

சிவா.ஜி
10-10-2007, 10:36 AM
நன்றி தளபதியாரே...ஒரு வழியா மன்றத்துக்குள்ள புகுந்திட்டீங்களா...வாழ்த்துக்கள்

தளபதி
10-10-2007, 12:47 PM
நான் இன்று கிளிக் செய்தவுடன் என்னை உள்ளே அனுமதித்துவிட்டது. மன்றத் தலைவர்கள் ஏதேனும் செய்திருக்கக்கூடும் என்று நம்புகிறேன்.

இணைய நண்பன்
10-10-2007, 12:56 PM
கவிமூலம் நல்ல கருத்துச்சொன்ன தோழருக்கு நன்றிகள்

சிவா.ஜி
10-10-2007, 12:58 PM
சொன்னதோடு பின்பற்றவும் செய்வோம் தோழரே...மிக்க நன்றி.

சுகந்தப்ரீதன்
10-10-2007, 01:14 PM
அலட்சியத்தின் அவசியத்தை அற்புதமா சொல்லி இருக்கீங்க சிவா அண்ணா... வாழ்த்துக்கள்..! இன்னும் நிறைய கருத்துள்ள கவிதைகளை எதிர்பார்க்கிறேன் தங்களிடம்..!

சிவா.ஜி
10-10-2007, 01:17 PM
நன்றி சுகந்தப்ரீதன்...கண்டிப்பாக அளிக்கிறேன்...ஆனால் நான் பின்பற்றாததை எழுத மனம் வரவில்லை.இன்னும் என்னையே திருத்திக்கொள்ள நிறைய இருக்கிறது...திருந்தத் திருந்த...திருத்தவும் எழுதுகிறேன்.

அக்னி
10-10-2007, 01:26 PM
தொலைபேசியை காதிற்குக் கொண்டுபோகலாம்...
காதைத் தொலைபேசிக்குக் கொண்டு சென்றால்தான் பிரச்சினையே...

நான் எனது பயணங்களுக்கு பயன்படுத்துவது BMW...
ஆனால், பயணத்தின்போது செல்லிடப்பேசியை பயன்படுத்தப் பின்நிற்பதேயில்லை.

பி.கு:
எனது BMW என்றால்,
Bus
Metro
Walk

சிவா.ஜி
10-10-2007, 01:28 PM
அடடா..அக்னி உங்கள் 'வெள்ளை BMW ' அசத்தல்.

தளபதி
10-10-2007, 01:33 PM
நான் எனது பயணங்களுக்கு பயன்படுத்துவது BMW...
ஆனால், பயணத்தின்போது செல்லிடப்பேசியை பயன்படுத்தப் பின்னிற்பதேயில்லை.

பி.கு:
எனது BMW என்றால்,
Bus
Metro
Walk

அஹ்கஹ்க!! மறுபடியும் கிளம்பிட்டாங்கையா!! எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்.

அமரன்
11-10-2007, 07:58 AM
வாகனத்தை செலுத்தும்போது
எடுத்துச்செல்லும் செல்லிடப் பேசி
செல்லமாக சிணுங்கி
வானத்திற்கு இட்டுச்செல்லும்
உள்ளேயும் வெளியேயும்
ஓடிக்கொண்டு இருப்போரை...!

எதற்காக இந்த ஓட்டம்
முடிவை எட்டத்தானே?
எட்டிவிட்டார்கள் பாதியிலேயே..

வாழ்த்துகள்
ஓட்டிகளுக்கு அல்ல
ஒட்டிவந்த கவிதைக்கு