PDA

View Full Version : பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல்சுட்டிபையன்
09-10-2007, 09:48 AM
பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தது
ராட்சத விண்கல் பூமியை நோக்கி வருகிறது. 2029-ல் இது பூமியை தாக்கும். ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட இது 1000 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

விண்ணில் சூரியனை மையமாக வைத்து சுற்றி வரும் கிரகங்களை போல சிறு சிறு உலோக கற்களும் சுற்றி வருகிறது. `அஸ்டிராயிட்ஸ்' எனப்படும் இந்த ஏராளமான விண்கற்களில் `அபோபிஸ்' என்ற விண்கல்லும் ஒன்று.

2004-ம் ஆண்டில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ராட்சத விண்கல் 2029-ம் ஆண்டு பூமியின் சுற்றுப் பாதையை கடக்கும். அப்போது அந்த விண்கல் சுற்றுப் பாதையை விட்டு விலகி பூமியை நோக்கி இறங்கும்.

அசுர வேகத்தில் இந்த ராட்சத விண்கல் பூமியில் விழுந்து தாக்கும். பூமியில் மோதும்போது முன்பு உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 1000 மடங்கு அதிக சக்தி வெளிப்படும். பூகம்பம் ஏற்பட்டது போன்ற அதிர்வு ஏற்படும். இந்த தகவலை ரஷிய வான் இயல் நிபுணர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

இருந்தாலும் நவீன தொழில் நுட்பங்களையும் செயற்கை கோள்களையும் பயன்படுத்தி இந்த ராட்சத விண்கல் மோது வதை தடுக்க முடியும். அந்த விண்கல்லின் பாதையை திருப்பி விட முடியும் என்றும் அந்த நிபுணர் தெரிவித்து இருக்கிறார்.

என்னவன் விஜய்
09-10-2007, 10:17 AM
2029 இலா ம்ம்ம் .... நான் தப்பித்துவிடுவேன்(இப்ப 55 வயது)............
அருமையான தகவல் சுட்டிபையன்
அடுத்து
நீங்கள் சொன்னமாதிரி இங்கே வாகனங்களை கண்கானிக்கும் கருவியை கூடுதலாக பாதுகாப்பு வாகனங்களுக்கும், வி ஐ பி னரின் வாகனங்கள் மற்றும் செல்வந்தவ்ர்களின் வாகனங்களுக்கும் பாவிக்கிறார்கள், ஏன் உங்களிடம் பணம் இருந்தால் நீங்களும் உங்களுடைய வாகனத்திற்கு பொருத்திக்கொள்ளலாம்.
கடந்தவருடம் இங்கே(இலண்டன்) ஒர் கருத்து பத்திரிகைகளிள் வந்தது.பிரதான சாலையினை(motorway) பாவிப்பவர்களிடம் இருந்து கட்டணம் அறவிடுவது தொடர்பாக.அதற்கு இந்த தொழில் நுட்பத்தை பொருத்தி அதனை செய்மதி மூலம் கண்கானித்து அதற்குரியகட்டணத்தை மாதந்தம் அறவிடுவது என.பின் ஏனோ அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். இதனையே மலேசியா, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளிள் video camera(தமிழ் சொல் தெரியவில்லை) மூலம் செய்வார்கள்

சுட்டிபையன்
09-10-2007, 10:24 AM

எனக்கு இப்போதான் 6 வயச்ய் 20ம் ஆண்டில 28 வயசு அய்யோ மாட்டிடுவேனே :traurig001::traurig001:

இணைய நண்பன்
09-10-2007, 11:09 AM
தகவலுக்கு நன்றி

மீனாகுமார்
09-10-2007, 11:19 AM
குண்ட தூக்கி போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்... அது இதுதானா... இத மாதிரி ஒண்ணு வந்தா தானய்யா உலகமே ஒரு அணியா திரண்டு நிற்கும்.... ஒரு வகைல இது நல்ல செய்தி தான்.. ஆனாலும் இன்னும் துல்லியமா யூகித்த அந்த கல் வரும் பாதைய பார்த்தா நல்லாதான் இருக்கும். எங்காவது இது பற்றி இன்னும் தகவல் இருந்தா கொடுக்கவும்..

நன்றி சுட்டிபையன்.

lolluvathiyar
09-10-2007, 11:34 AM
ஏதாவது விசேச தொழில் நுட்பம் பயன்படுத்தி அந்த கல்லை சீக்கிரம் பூமியின் சுற்று பாதைக்கு வரவைத்து அதை சரியாக கைட் பன்னி நேராக ராமர் பாலத்தின் மீது விழவைத்து விட்டால், அந்த இடத்தில் நல்ல பள்ளமாகி விடும். செலவில்லாமல் சேது சமுத்திர திட்டம் ரெடியாயிடும். எப்படி என் சோசனை. புல்லரிக்குதா

மீனாகுமார்
09-10-2007, 11:41 AM
ஏன் இந்த கொலை வெறி வாத்தியாரைய்யா... நம்ம ஆளுகல நம்ப முடியாது.. திசைலருந்து லேசா பிசகிருச்சுன்னா Human Error ன்னு சொல்லிடுவாங்க.. அப்புறம் அது தமிழ்நாட்டுலதான் விழும்...

அது சரி... இத இமயமலைல விழ வச்சா.. இந்தியா தனியா பிஞ்சு வந்து இந்தியப் பெருங்கடல்ல நிக்கும். அப்புறம் நமக்கு பாக்கிஸ்தான், சீனா, பங்களாதேஷ் போன்ற எதிரிகள் பக்கத்துல இருக்க மாட்டாங்கள்ல...

Narathar
09-10-2007, 11:43 AM
ஏதாவது விசேச தொழில் நுட்பம் பயன்படுத்தி அந்த கல்லை சீக்கிரம் பூமியின் சுற்று பாதைக்கு வரவைத்து அதை சரியாக கைட் பன்னி நேராக ராமர் பாலத்தின் மீது விழவைத்து விட்டால், அந்த இடத்தில் நல்ல பள்ளமாகி விடும். செலவில்லாமல் சேது சமுத்திர திட்டம் ரெடியாயிடும். எப்படி என் சோசனை. புல்லரிக்குதா

அப்புரம் சுனாமி வந்து இலங்கையும் இந்தியாவும் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்...... அங்கு அமேரிக்கா வந்து தனது கொடியை நாட்டி புதுத்துறைமுகம் கட்டி டொலரில் கட்டணம் வசூலிப்பான்

Narathar
09-10-2007, 11:45 AM
ஏன் இந்த கொலை வெறி வாத்தியாரைய்யா... நம்ம ஆளுகல நம்ப முடியாது.. திசைலருந்து லேசா பிசகிருச்சுன்னா Human Error ன்னு சொல்லிடுவாங்க.. அப்புறம் அது தமிழ்நாட்டுலதான் விழும்...

அது சரி... இத இமயமலைல விழ வச்சா.. இந்தியா தனியா பிஞ்சு வந்து இந்தியப் பெருங்கடல்ல நிக்கும். அப்புறம் நமக்கு பாக்கிஸ்தான், சீனா, பங்களாதேஷ் போன்ற எதிரிகள் பக்கத்துல இருக்க மாட்டாங்கள்ல...

அட! இதுகூட நல்ல யொசனையாக இருக்கே............

அனுராதபுரத்துக்கு அந்த கல்லை நேரா வரவச்சா கத்தியின்றி ரத்தமின்றி ஈழம் கிடைத்துவிடும்

lolluvathiyar
09-10-2007, 11:56 AM
அது சரி... இத இமயமலைல விழ வச்சா.. இந்தியா தனியா பிஞ்சு வந்து இந்தியப் பெருங்கடல்ல நிக்கும். அப்புறம் நமக்கு பாக்கிஸ்தான், சீனா, பங்களாதேஷ் போன்ற எதிரிகள் பக்கத்துல இருக்க மாட்டாங்கள்ல...

அப்புரம் சுனாமி வந்து இலங்கையும் இந்தியாவும் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்...... அங்கு அமேரிக்கா வந்து தனது கொடியை நாட்டி புதுத்துறைமுகம் கட்டி டொலரில் கட்டணம் வசூலிப்பான்

கம்முனு அமெரிக்கா மேல விழவச்சுட்டம்னா உலகத்துல இருக்கர தீவிரவாதம், ஏழ்மை, கொலை, கொள்ளை இப்படி எல்லா பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சுடுமுல்ல

Narathar
09-10-2007, 12:00 PM
கம்முனு அமெரிக்கா மேல விழவச்சுட்டம்னா உலகத்துல இருக்கர தீவிரவாதம், ஏழ்மை, கொலை, கொள்ளை இப்படி எல்லா பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சுடுமுல்ல

மன்றத்தில் முதன் முறையாக உருப்படியான யோசணை சொன்ன வாத்தியாருக்கு ஒரு இ-காசு கொடுத்து கௌரவிக்கின்றேன்

ஜெயாஸ்தா
09-10-2007, 12:18 PM
இப்படித்தான் அடிக்கடி சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு கல் கூடபூமியில் வந்து விழமாட்டேன்கிறது. அப்படியே விழுந்தாலும் கடலில்போய்விழுந்துவிடுகிறது. அதனால் நாம் பயப்படவேண்டியதில்லை.

இலக்கியன்
09-10-2007, 12:34 PM
தகவல் இணைப்புக்கு நன்றி சுட்டிப்பையன்

பூமகள்
09-10-2007, 12:41 PM
நானும் இச்செய்தியை கட்டுரையாக சில மாதங்கள் முன் தினமணியில் படித்தேன்.
2029-ல் வரும் விண்கல் ஒரு வேளை அழிவை ஏற்படுத்தினாலும் அதற்குள் நல்லவற்றை முடிந்தளவு செய்துவிட வேண்டும் என்று முடிவு பண்ணிட்டேன்.
கண்டிப்பா.... நம்ம அறிவியல் அறிஞர்கள் ஏதாச்சும் செய்வாங்க... கடைசில புஸ்னு தான் போகப் போகுது.... அந்த விண்கல் பூமி அருகே வரும் முன்னே திசை மாறி போயிட்டுதுன்னு சொல்லப் போறாங்க.

கம்முனு அமெரிக்கா மேல விழவச்சுட்டம்னா உலகத்துல இருக்கர தீவிரவாதம், ஏழ்மை, கொலை, கொள்ளை இப்படி எல்லா பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சுடுமுல்ல
அற்புதமான யோசனை வாத்தியார் அண்ணா.
அதைச் செய்தால் நிச்சயம் விண்கல் ஆபத்தை விட பெரிய ஆபத்திலிருந்து உலக நாடுகள் தப்பிச்சுக்கும்.

சிவா.ஜி
09-10-2007, 12:55 PM
இந்த மேட்டரை வெச்சே அமெரிக்காவோட ஹாலிவுட்காரன் ரெண்டு படம் எடுத்து காசுபாத்துட்டான்.ரொம்ப வருசம் முன்னால இப்படித்தான் ஸ்கைலாப் விழப்போவுது அதுவும் தமிழ்நாட்டுமேல விழப்போவுதுன்னு கெளப்பி விட்டுட்டு..அவனவன்..ஆடு மாடெல்லாம் வந்த வெலைக்கு வித்துட்டு கறியும் சோறும் தின்னாங்க.அப்புறம் அது தேமேன்னு போய் ஆஸ்திரேலியாவுல விழுந்ததும்..இவங்கல்லாம் குய்யோ முறையோன்னு கத்திகிட்டு கஞ்சிக்கு வழியில்லாம போய்ட்டாங்க.இதெல்லாம் நடக்காது.அப்படியே நடந்தாலும்...அவறது ஆவட்டும்ன்னு விட்டுட வேண்டியதுதான்

தங்கவேல்
10-10-2007, 03:47 AM
வாத்தியார் தலை மீது விழுவது மாதிரி கனவு வந்தது... என்ன ஆகும் என்று தெரியவில்லை.

இன்பா
10-10-2007, 08:03 AM
இப்படித்தான் அடிக்கடி சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு கல் கூடபூமியில் வந்து விழமாட்டேன்கிறது. அப்படியே விழுந்தாலும் கடலில்போய்விழுந்துவிடுகிறது. அதனால் நாம் பயப்படவேண்டியதில்லை.

ஏன் இந்த ஆதங்கம்...?.

விழப்போவது தங்க விண்கல்லாம்...
கொடுக்குற சாமி கூறைய பிச்சிகிட்டு கொடுக்கும் என்பார்களே...!
யார் வீட்டு கூறைய பிச்சிகிட்டு கொடுக்கப்போகுதோ...?

s_mohanraju
10-10-2007, 08:32 AM
ஏதாவது விசேச தொழில் நுட்பம் பயன்படுத்தி அந்த கல்லை சீக்கிரம் பூமியின் சுற்று பாதைக்கு வரவைத்து அதை சரியாக கைட் பன்னி நேராக ராமர் பாலத்தின் மீது விழவைத்து விட்டால், அந்த இடத்தில் நல்ல பள்ளமாகி விடும். செலவில்லாமல் சேது சமுத்திர திட்டம் ரெடியாயிடும். எப்படி என் சோசனை. புல்லரிக்குதா

வடிவேல் பானியில் படிக்கவும்

எப்படி இதெல்லாம் ?
என்னா எகத்தாலம் ?
என்னா குசும்பு ?
ஒன்ன்னும் சரிபட்டுவராது !!!!
இப்படியே பேசிகிட்டிருந்தா !!!
வேதாந்த்திகிட்டே சொல்லிபுடுவென் ஆமா !!
!
உங்கலோட இந்த பதிப்பை பட்த்துவிட்டு விழுந்து விழுந்து
சிரித்தேன் நல்ல வேலை எங்கும் அடிப்டவில்லை

Narathar
10-10-2007, 10:46 AM
வடிவேல் பானியில் படிக்கவும்

எப்படி இதெல்லாம் ?
என்னா எகத்தாலம் ?
என்னா குசும்பு ?
ஒன்ன்னும் சரிபட்டுவராது !!!!
இப்படியே பேசிகிட்டிருந்தா !!!
வேதாந்த்திகிட்டே சொல்லிபுடுவென் ஆமா !!
!
உங்கலோட இந்த பதிப்பை பட்த்துவிட்டு விழுந்து விழுந்து
சிரித்தேன் நல்ல வேலை எங்கும் அடிப்டவில்லை

உங்களின் இந்த பதிப்பை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது விழுந்து விழுந்து சிரித்தேன் நல்ல வேலை எங்கும் அடிப்டவில்லை

ஜெயாஸ்தா
10-10-2007, 11:02 AM
விழப்போவது தங்க விண்கல்லாம்...கொடுக்குற சாமி கூறைய பிச்சிகிட்டு கொடுக்கும் என்பார்களே...!
யார் வீட்டு கூறைய பிச்சிகிட்டு கொடுக்கப்போகுதோ...?

ஆஹா.... சும்மாயிருந்த சனங்களை இப்படி கிளப்பி விட இன்னும் எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க வரிப்புலி...?

எண்ணம்
19-04-2008, 09:06 AM
அது வரும் போது வரட்டும், இப்போதைக்கு யோசிக்க வேணாம்னு தோணுது.............