PDA

View Full Version : இந்தியாவில் 11ஜி மென்பொருள்: ஆரக்கிள் அறிம



சுட்டிபையன்
09-10-2007, 09:19 AM
இந்தியாவில் 11ஜி மென்பொருள்: ஆரக்கிள் அறிமுகம்
சர்வதேச அளவில் தரவுக்காப்பக மென்பொருள் (database software) சேவை வழங்கி வரும் ஆரக்கிள் நிறுவனம், இந்தியாவில் 11ஜி என்ற புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது.

வர்த்தக சேவை, தகவல்தொடர்பு, அரசு அமைப்புகள் என அதிகளவு தகவல்களை கையாளும் நிறுவனங்கள் இந்த 11ஜி மென்பொருள் மூலம் பயனடையும் என ஆரக்கிள் இந்தியா துணைத்தலைவர் (தொழில்நுட்ப விற்பனை) கிரோவெர் தெரிவித்தார்.

இந்த புதிய மென்பொருளை பயன்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்களுக்கு அதிநவீன முறையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் 11ஜி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், சத்யம், டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகிய கணினி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து 11ஜி மென்பொருளை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளதாகவும் கிரோவெர் தெரிவித்தார்.

உலகளவில் கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 11ஜி, லின்க்ஸ் இயக்கு தளத்திலும் (operating system) செயல்படும் என ஆரக்கிள் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"MsN"

சுட்டிபையன்
09-10-2007, 09:42 AM
கால நிலை மாற்றம் குறித்து சர்வதேசத் தலைவர்கள் கவலை
பூமியை பாதிக்கும் சீதோஷ்ணநிலை மாற்றத்தை கையாளும் விதம் பற்றி, உலக நாட்டுத் தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று, ஐநா மன்றத்தின் தலைமை செயலர் பான்கிமூன் அவர்கள் கூறியிருக்கிறார்.

நியூயார்க்கில் குழுமியிருக்கும் பன்னாட்டுத்தலைவர்கள் மத்தியில் பேசும்போது, புவியை வெப்பமடையச்செய்யும் கிரீன் ஹவுஸ் காஸ் எனப்படும் போர்வை வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பிலான ஒப்பந்தத்தை, உலக நாடுகள் ஐ நா மன்றத்தின் மூலமே எட்ட வேண்டும் என்று பான்கிமூன் அவர்கள் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

பூமியை பாதிக்கும் சீதோஷ்ண நிலை மாற்றம் குறித்து புஷ் அவர்கள் முன்னின்று நடத்தும் கூட்டம் ஒன்று இந்த வார இறுதியில், அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகையில் நடக்க இருக்கிறது.

BBC

சுட்டிபையன்
09-10-2007, 09:44 AM
யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது
இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

BBC

சுட்டிபையன்
09-10-2007, 09:46 AM
விண்வெளியில் வெடித்து சிதறிய கதிர்கள் மிதக்கும் ஆய்வு கூடத்துக்கு ஆபத்தா?
விண்வெளியில் அபூர்வ ரேடியோ கதிர்கள் வெடித்து சிதறியதாக வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இத னால் மிதக்கும் ஆய்வு கூடத்துக்கு ஆபத்து ஏற் படுமா என்ற கேள்வி எழுந் துள்ளது.

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா பல்கலை கழகத்தை சேர்ந்த வானவியல் நிபுணர்கள் நிட்ரான் நட் சத்திரம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.

தங்கள் ஆய்வு அறிக்கையில் அவர்கள் வான்வெளியில் மிகப்பெரிய ரேடியோ கதிர் வெடித்து சிதறியதாகவும் அதில் இருந்து சிக்னல் வெளிபட்டிருப்பதாகவும் தெரி வித்துள்ளனர்.

சக்திவாய்ந்த இந்த ரேடியோ கதிர் சிக்னல் 300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.

2 நட்சத்திரங்கள் மோதிக்கொண்டதால் இந்த கதிர் வெளிப்பட்டு இருக்க லாம் என்றும் 5மில்லி வினாடிகள் மட்டுமே இது நீடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரேடியோ கதிர் மூலம் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆய்வுக் கூடத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் தொலை தொடர்பு, டெலிவிஷன் ஒளிபரப்பு செயற்கை கோளுக்கு எந்த பாதிப்பும்இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்