PDA

View Full Version : கூகிள், ஜிமெயில்-க்கு ஈரானில் தடை



சுட்டிபையன்
09-10-2007, 09:17 AM
கூகிள், ஜிமெயில்-க்கு ஈரானில் தடை
பிரபல இணைய தேடு பொறியான (search engine) கூகிள் (Google) மற்றும் அதன் மின்னஞ்சல் சேவைத் தளமான ஜிமெயில் (Gmail) ஆகியவை ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய தகவல் நிறுவன செயலாளர் ஹமித் ஷாரியாரி தெரிவித்தார்.

எந்த காரணங்களுக்காக இவை தடைசெய்யப்பட்டன என்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் இணையம் பயன்படுத்துபவர்கள் இந்த தளங்களுக்கு செல்ல முடியவில்லை எனவும், மேலும் பல வெளிநாட்டு இணையதளங்களும் ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் நிலைக்கு எதிராக, ஆபாசமான, பெண் உரிமை கோரும் தகவல்கள் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான இணைய தளங்களை ஈரான் அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"MsN"

அன்புரசிகன்
09-10-2007, 09:27 AM
அண்மையில் பல அரசுகள் அனைத்து மின்னஞ்சல் வழங்குனரிடம் வேண்டுகோள்கள் விடுத்திருந்த செய்திகள் வெளிவந்தன. அதாவது அவர்களது சர்வ வழங்கியை பரவலாக்கி நாட்டின் பாதுகாப்புத்தன்மையை ஊர்ஜிதம் செய்வதற்காக... மற்ற வழங்குனர்கள் அதற்கு சம்மதித்திருந்த பொதிலும் google நிறுவனத்தினர் மறுப்புத்தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.

google முலம் மின்னஞ்சல் அனுப்பினால் அனுப்பியவர்களது வழங்கியாக அது அமெரிக்காவில் உள்ள ஒரு வழங்கியையே காட்டும். இதனை பலர் சாதகமாக பயன்படுத்துவதால் அரசுக்கு பல சர்ச்சைகள் வெளிவந்ததாகவும் google search இல் வெளியாகும் தகவல்களுக்கு அவர்கள் அந்தந்த இணையங்களிடம் எந்த வித உரிமமும் பெறுவதில்லை என்றும் The ecconomic (ஆக இருக்க வேண்டும்.பெயர் சரியாக தெரியவில்லை) எனும் வாராந்த சஞ்சிகை ஒன்று தகவல் வெளிவந்தது.

எது எப்படியோ இதனால் நம்மைப்போல் பலர் பாதிக்கப்படப்போவது தான் கவலையாக உள்ளது.

தங்கவேல்
10-10-2007, 03:51 AM
இந்த தொல்லையே வேண்டாம் என்று தனி மெயில் ஐ டி வாங்கி விட்டேன். அதுவும் முக்கியமான டாக்கு மென்டுகள் திருடு போகின்றன. அதனால் இழந்தது அதிகம்.

ஜெயாஸ்தா
10-10-2007, 07:06 AM
நானும் உங்களைப் போல் தனி மெயில் ஐ.டி. (பி.எஸ்.என்.எல் டேட்டா-ஒன் ப்ராட்பேண்ட்இணைப்பல் இலவசமாக கொடுத்தது ) வைத்திருந்தேன். வேறு ஊருக்கு மாற்றலாகும் அந்த பிராட்பேண்ட் இணைப்பை மீண்டும் சரண்டர் செய்துவிட்டேன். பின் மெயில் பாக்சை திறக்க முயற்சித்தால் முடியவில்லை. அந்த மெயில் ஐ.டியையும் எந்த வித முன்னறிவிப்புமின்றி முடக்கிவிட்டனர். அதனால் இது விசயத்தில் கொஞ்சம் கவனமாகவும் இருக்கவேண்டும்.


பொதுவாகவே ஒரு மெயில் பாக்சில் உள்ளதை குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறு ஒரு மெயில்பாக்சில் நகலெடுத்து வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.