PDA

View Full Version : வேலியே பயிரை மேயப்பார்கிறது



Mano.G.
09-10-2007, 08:40 AM
தமிழ் ஆசிரியனே,
தன்னுயிராக தமிழை காக்க
ஊதியம் கொடுத்து உன்னை அமர்தியதற்கு
நீ கேட்கும் கேள்வி
தமிழ் சோறு போடுமா?

தமிழாலே உயிர்வளர்க்கும் நீ
தமிழை வளர்க்கவில்லையே
ஏன் தமிழால் நீ வாழவில்லையா
இல்லை வசதிகள் தேடவில்லையா?

உன்னை நம்பி தமிழ் தாயை
உன் கையில் ஒப்படைத்தற்கு
நீ காட்டும் விசுவாசமோ
தமிழை இழிவு படுத்தியது?

தமிழ் ஆசிரியனே உனக்கு
கொடுக்கப்படும் மதிப்பு உனக்காக அல்ல
தமிழுக்காக

தமிழை வளர்க்க நீ உதாவாவிட்டாலும்
பரவாயில்லை உபத்திரமாவது கொடுக்காதே
வேலியே பயிரை மேய்ந்த கதையாக்கிவிடாதே
தமிழாசிரியனே



மனோ.ஜி

க.கமலக்கண்ணன்
09-10-2007, 08:45 AM
தமிழை வளர்க்காத ஆசிரியரை

தகுந்த வார்த்தைகளோடு சூடு போட்டு இருப்பது அருமை

தப்பவில்லை உங்களின் அறப்போரில் அருமை அருமை மனோ அவர்களே...

Narathar
09-10-2007, 08:49 AM
தமிழாசிரியர்களே தமிழை இப்படி சொல்லி கற்பிப்பதால் தான் இன்று வேற்று மொழி மோகம் நம்மரிடையே தலைவிரித்தாடுகிறது!!!

அதனால் தான் நம்ம்வர்கள் தமிழை "டமிலாக" பேசுகிறார்கள்

lolluvathiyar
09-10-2007, 08:57 AM
என்ன மனோ யார் மேல இவ்வளவு கோபம். அப்படி எந்த தமிழ் ஆசிரியர் இப்படி செஞ்சாரு. இப்படி திட்டரீங்க. பாவம்

ஆசிரியன் என்பவன் ஒரு கூலி ஆள், சரியான கூலி கொடுத்தால் ஒழுங்காக வேலை செய்வான். குரைவாக தந்தால் எப்படி செய்வான்.

அதே சமயம் தமிழை வளர்கிறேன் என்ற போர்வையில் கூலிகாரனுக்கு தகுதிக்கும் அதிகமாக கூலி தந்து அவனுக்கு பொன்னாடை போர்த்தினாலும் ஒழுங்கா வேலை செய்யமாட்டான்.

ஆசிரியன் ஒரு சாதர்ன மனித பிறவி, அவனுக்கு சதையும் தோலிம் இருக்கு. வயிரு பசிக்கும். அவன் குழந்தைகளுக்கு பசி எடுக்கும். அவர்களுக்கு வேண்டியது சரியான கூலி புனித பட்டமல்ல*

சிவா.ஜி
09-10-2007, 09:01 AM
தமிழ்படித்து பட்டம் வாங்கும்போதே தமிழாசிரியராகத்தான் பணிபுரிய வேண்டியிருக்கும் என்பது தெரிந்துதானே இருக்கும்....பின் வேலை கிடைத்தபின் தமிழ் சோறுபோடுமா என்பது கூறுகெட்ட செயல்.சோறு மட்டும் போடாது...கூடவே விக்கிச் சாகாமல் இருக்கத் தண்ணீரும் கொடுக்கும்.....தமிழை நேசித்து பூசித்தால்.சரியான சாட்டையடி மனோ.ஜி.வாழ்த்துக்கள்.

டாக்டர் அண்ணாதுரை
09-10-2007, 09:22 AM
வணக்கம் அய்யா..
நாம் செய்வது தமிழ்ப்போர் அல்ல.....தமிழுக்காக போர்...தமிழனோடு போர்...!!! தர்மசங்கடமான போர்தான்!
தமிழ் ஆசிரியரிடமே....தமிழை சரியாக போதிக்கக் கோரும் தர்மயுத்தம்!
வேளிகளை மேயும் இந்த 'அசிங்க ஆடுகளின்' கழுத்தை சீவுவோம்!!
மறக்க வேண்டாம்....அந்த வேளிகளை நிற்கவைக்கும் தூண்கள் நாம்தாம்!!
நம்மை மீறியா இந்த ஆடுகள்....????

ஜெயாஸ்தா
09-10-2007, 12:30 PM
என்னுடைய அதிர்ஷ்டமோ என்னமோ தெரியவில்லை இது மாதிரி தழிழாசிரியர்களை சந்தித்ததில்லை. நான் பயின்ற அனைத்து தமிழாசிரியர்களுமே, இதை வேலையாக நினைக்காமல் சேவையாகத்தான் செய்தார்கள். என் போன்ற மாணவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள். பாக்கு போடுதல் போன்ற மோசமான பழக்கத்தை அன்பால் நிறுத்தச் செய்திருக்கிறார்கள். தமிழில் முதல் மதிப்பெண் நான் வாங்கும் போது தங்கள் சொந்த செலவில் நான் கேட்கும் பரிசுகளை வாங்கித்தந்திருக்கிறார்கள். என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வேளை நான் பயின்ற அனைத்துப் பள்ளிகள் அனைத்துமே நகரத்தின் வாசம் படாததால் இப்படி நல்ல ஆசிரியர்களை சந்திக்க முடிந்ததோ என்னவோ....?

சிவா.ஜி
09-10-2007, 02:21 PM
மிகச் சரியாக சொன்னீர்கள் ஜே.எம்.அதுதான் முக்கியக்காரணமாக இருக்கவேண்டும்.நகரசூழலில் வசிக்கும் தமிழாசிரியர் தமிழைவிட தன் வாழ்வாதாரங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்.அந்த வகையில் நான் மிக அதிர்ஷ்டம் செய்தவன்.எனக்கு வாய்த்த தமிழாசிரியர்கள் வைரங்கள்.

சுகந்தப்ரீதன்
10-10-2007, 01:23 PM
பாவம் மனோஜ் அண்ணா... அவுங்க தமிழாரியர் சரியா தமிழ் சொல்லிதரவில்லை போலிருக்கு... தமிழ்மீதான பாசத்தில் தமிழாசிரியரின் தலையை உருட்டுகிறார்...! கூலி வாங்குவதற்க்கு முன் அவர் எவ்வளவு குட்டுபட்டிருப்பார் என்று அவருக்குதானே தெரியும்..? அவர் யதார்த்தத்தை சொல்லியிக்கிறார் அவ்வளவுதான்... அவர்மீது கோபப்படுவதை விட தமிழாசிரியரையே தமிழுக்கு எதிராக பேசவைத்த பெருந்தலைகள் மீது கோபம் கொள்வதுதான் சரியாக இருக்குமென்பது எனது கருத்து...! வாழ்த்துக்கள் அண்ணா.. தங்களின் தமிழ்பற்றுக்கு தலை வணங்குகிறேன்..!

Mano.G.
15-10-2007, 01:37 AM
நான் ஏதோ ஒரு ஆதங்கத்தில் எழுதிய இந்த
குறுங்கவிதை சகோதரர் ஆனந் எழுதிய கவிதைக்கும்

http://tamilmantram.com/vb/showthread.php?t=12699

எங்களை அறியாவண்ணம் தொடர்பு இருந்திருக்கிரது.

அவரது கவிதையில் அவரும் ஒரு தமிழாசிரியரையே சாடியுள்ளார்
என்பது அவருடன் உறையாடி பிறகே தெரியவந்தது.

தமிழுக்காக எங்களால் ஏதாவது செய்ய வேண்டும் என்பது எங்களது எண்ணமும் செயலும் கூட.

அதற்கான வேலைகளையும் படிப்படியாக எங்களது வசிப்பிட வட்டாரத்தில்
செய்ய வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.


மனோ.ஜி

aren
15-10-2007, 01:43 AM
மனோஜி, நன்றாகவே சாடியுள்ளீர்கள் தமிழாசிரியர்களை. ஆனால் அனனவரும் அப்படிப் பட்டவர்கள் கிடையாது என்பதற்காக இப்படி பட்டவர்கள் கிடையவே கிடையாது என்று சொல்லமுடியாது. இப்பொழுது கூலிக்கு மாரடிக்கும் காலம் ஆகிவிட்டது. கொடுக்கும் சம்பளம் வழிச்செலவிற்கே போதுமானதாக இல்லை. வீட்டில் சென்றால் இல்லத்தரசியிடம் பேச்சு வாங்கவேண்டும். இதுமாதிரி பல ஆதங்கங்கள் மனிதர்களுக்கு. நீங்கள் குறிப்பிட்ட இந்த தமிழாசிரியரும் இந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும்.

kavitha
15-10-2007, 08:48 AM
எதனால் இத்தனை கோபம் அண்ணா?
அன்றிலிருந்து இன்று வரை புலவர்களின் பாடு தாங்கள் அறியாததா?
திரைப்பாடல்களில் தூய தமிழ் பாடல்கள் எத்தனை? அவையெல்லாம் எந்த அளவிற்கு முக்கல், முனகல் பாடல்களை விட பாராட்டப்பெற்றன?
தமிழாசிரியர்களும் தொழிலாளிகள் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

BPO, software வருமானம் இதில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...
தமிழாசிரியர்களுக்கு வரிவிலக்காவது அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.

ஜெயாஸ்தா
15-10-2007, 02:19 PM
'கற்றது தமிழ்' என்று ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. பார்த்தீர்களா நண்பர்களே...! தமிழ் முதுநிலை படித்த ஒருவனின் மனப்போராட்டத்தை கொஞ்சம் மசாலா கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர். இந்த கவிதையை படிக்கும் போது அந்த படத்தின் கருவும் நினைவுக்கு வருகிறது.

அமரன்
15-10-2007, 02:59 PM
எங்கேங்க... சின்னத்திரையில் வெட்டுத்துண்டுகள் பார்த்து விட்டு வெள்ளித்திரையை நாடினால் கற்ற(து) தமிழைக் காணவில்லை. இணயத்தில் இணைந்து கணினித்திரையில் பார்க்கலாம் என்றால் சுட்டதை சரியாக சுட்டு சுருட்டாமல் சதி செய்துவிட்டார்கள்... நீங்கள் பார்த்திருந்தால் விளக்கமாக ஒரு விமர்சனம் போடுறது.

aren
15-10-2007, 05:24 PM
தமிழாசிரியர்களுக்கு வரிவிலக்காவது அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.



வரிவிலக்கா, அவ்வளவு சம்பளமா அவர்களுக்கு தருகிறார்கள். எந்த கழிவும் எடுத்துக்கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு வரி வராதே, அவ்வளவு குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்கள்.