PDA

View Full Version : என்ன செய்வது என் மனதை?



யவனிகா
09-10-2007, 05:52 AM
எப்போதும் எதற்காகவேனும் அழும்
இரண்டு வயது குழந்தையாய் − என்மனது!

கிடைத்த சாமான்களையெல்லாம் உடைத்துவிட்டு,
கிடைக்காத ஒன்றுக்காய் கேவி அழுகிறது...

சாதாரண சமாதானமெல்லாம் எடுபடாது
சாதித்தே தீருவேன் நினைத்ததை என்ற அழுகை

இதுவேண்டாம், அதுபிடிக்கவில்லை − இப்போதே
பரணில் உள்ள யானை பொம்மையைத்தா!

அழும்பிள்ளையை அதட்டலாம்... அடக்கலாம்..
முதுகில் இரண்டுவைத்து மூடுடாவாயை எனலாம்

தொட்டதெற்கெல்லாம் சிணுங்கி அழுது,
தொந்தரவு செய்யும் என்மனதை என்ன செய்ய?

எந்த பொம்மையைக் காட்டி
இந்த மனதை வசப்படுத்த?

ஜெயாஸ்தா
09-10-2007, 06:03 AM
மனசு அப்படித்தான்..... ஒரு பொருளின் மேல் ஆசைப்படும். அது கிடைத்துவிட்டால் அதை விடுத்து அடுத்த பொருளுக்கு தாவிவிடும். மனசு என்னும் மாயவனை கட்டுக்குள் வைத்தால் வாழ்வு சிறக்கும். அருமையான கவிதை யவனிகா.

யவனிகா
09-10-2007, 06:15 AM
மனசு அப்படித்தான்..... ஒரு பொருளின் மேல் ஆசைப்படும். அது கிடைத்துவிட்டால் அதை விடுத்து அடுத்த பொருளுக்கு தாவிவிடும். மனசு என்னும் மாயவனை கட்டுக்குள் வைத்தால் வாழ்வு சிறக்கும். அருமையான கவிதை யவனிகா.

நன்றி ஜே.எம் அவர்களே,

எப்படிக் கட்ட என் மனதை?
எந்தக் கயிறிட்டுக் கட்ட?
கயிறுகளுக்கு கட்டுப்படுமா
காட்டாற்று வெள்ளம்?
ஐந்தறிவு ஜீவனெனில்
ஆடாது கட்டி அடக்கலாம்..
ஆர்பரிக்கும் மனதை
அடக்கி வைத்தல் கடினம் தான்...

அல்லிராணி
10-10-2007, 08:33 AM
மனதைக் கட்ட எளிய வழி
கயிறுகளை அவிழ்த்து விட்டு விடுங்கள்..

தியானம் கற்றுக் கொடுக்கும் பொழுது முதல் பாடமே இதுதான்..
எந்த எண்ணங்களையும் தடை செய்யாதீர்கள்..
கண்களை மூடிக் கொண்டு ஒரு பார்வையாளராய் மனதை அதன் போக்கில் விட்டு தூரப்போங்கள்..
சில காலங்களில்
மூன்றே நிமிடங்களில் தூங்கி விடுவீர்கள்..
அதன் பிறகே மனதில் எதையாது எண்ணி தியானம் செய்ய வேண்டும்..

கட்டவிழ்ந்த மனம் கட்டுப்படும்..

ஜெயாஸ்தா
10-10-2007, 09:06 AM
நன்றி ஜே.எம் அவர்களே,

எப்படிக் கட்ட என் மனதை?
எந்தக் கயிறிட்டுக் கட்ட?
கயிறுகளுக்கு கட்டுப்படுமா
காட்டாற்று வெள்ளம்?
ஐந்தறிவு ஜீவனெனில்
ஆடாது கட்டி அடக்கலாம்..
ஆர்பரிக்கும் மனதை
அடக்கி வைத்தல் கடினம் தான்...

மனதைக் கட்ட மனதால் மட்டுமே முடியும் யவனிகா. வேறு எதனாலும் அதை கட்ட முடியாது. விநாடிக்குள் பரந்த வான்வெளிக்கு அப்பாலுள்ள பல்வேறு கிரகங்களுக்கு சென்று வரக்கூடிய மாயவனை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது?

அல்லிராணி சொன்னது போல் தியானம், ஆன்மீகம் போன்ற பாதைகளில் கவனத்தை செலுத்தலாம். அப்படியும் நாம் மனதை கட்டுப்படுத்த இயலாது. அதன் போக்கை திருப்பி விடுகிறோம். அவ்வளவுதான். நான் கூட அப்படித்தான். ஆனால் தியானத்தை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. கேள்விப்பட்தோடு சரி. ஆனால் இறைவழிபாட்டை கடைபிடிப்பதால் ஓரளவுக்கு மனதை கட்டுப்பாட்டுக்கள் வைக்கமுடிகிறது.

நேசம்
10-10-2007, 09:53 AM
அலைப்பாயும் மனசை பற்றி அழகான கவிதை. ஜே.ம் சொல்வது போல் இறைவழிபாட்டின் முலம் மனசை கட்டுபடுத்தலாம். தியானம் கூட இறைவழிபாடுதான்

பூமகள்
10-10-2007, 10:01 AM
அழகு கவி..யவனி அக்கா..!!
வார்த்தைகள் அழகு. செதுக்கிவைத்திருக்கிறீர்கள்... மனதை மட்டுமல்ல கவியையும்...!!
அலைபாயும் மனம் எல்லாருக்கும் உண்டு.
கட்டுப்படுத்துவது என்பதை விட, சரியான வழியில் மனதை வழி நடத்துவது சாத்தியமே..!!
பிடித்த ஒன்றைப் பற்றி அடம்பிடிக்கும் ஒரு மனதை வேறொரு பிடித்த விசயத்தில் செலுத்தி சாதிக்கத் தூண்டினால் அழகான பலனை எளிதில் காணலாம்.
நாம் செய்யும் வேலையையே தியானமாகக் கருதினால் கட்டுப்படாத மனதும் கட்டுப்படும்.
முயற்சியுங்களேன்.

சுகந்தப்ரீதன்
10-10-2007, 10:17 AM
உங்களுக்கும் அதே பிரச்சனைதானா யவனிகா...இனிமே எனக்கு பிரச்சனையில்லப்பா... என்னமாதிரி நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்...உங்க கவிதைய பார்த்து...வாழ்த்துக்கள்...!

ஷீ-நிசி
10-10-2007, 10:44 AM
மிக நன்றாக உள்ளது யவனிகா... வாழ்த்துக்கள்!

யவனிகா
10-10-2007, 10:52 AM
தியானம் கற்றுக் கொடுக்கும் பொழுது முதல் பாடமே இதுதான்..
எந்த எண்ணங்களையும் தடை செய்யாதீர்கள்..
கண்களை மூடிக் கொண்டு ஒரு பார்வையாளராய் மனதை அதன் போக்கில் விட்டு தூரப்போங்கள்..
..

அன்புத் தோழியே,
அறிவுரைக்கு நன்றி...
ஒருமுறை விவேகானந்தர் உலக வாழ்வில் வெறுத்து, சமுதாயப் பிரச்சனைகள் தனக்கு வேண்டாமென்று பாறை மேல் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தாராம்...எப்போதும் கூப்பிட்ட குரலுக்கு நாய் குட்டியாய் ஓடி வந்து மண்டியிடும் மனது...அன்று மட்டும் அலை பாய்கிறது..அடங்காமல் திமிருகிறது...

உள்ளே ஒரு குரல்
அனாதைகளின் அவலக் குரல்...
ஏழைகளின் ஈனஸ்வரம்...
குறையுள்ளவரின் கூக்குரல்...
எங்களுக்கு தேவை உங்கள் சேவை என்று ஒரு சேர ஒலிக்கிறது. தியானத்தில் ஒன்றாமல் திரும்புகிறார் அவர்..அன்று மட்டும் அவர் மனம் ஒன்றியிருந்தால் இந்தியாவிற்கு ஒரு விவேகானந்தர் கிடைத்திருக்க மாட்டார். சில நேரங்களில் அடங்காத மனங்கள் கூட அதிசயங்கள் நடக்க வித்திடுகின்றன.

தியானம் குறித்த எனது சந்தேகங்களைக் கேட்க நல்ல தோழி ஒருவர் கிடத்து விட்டார்.

பின்னூட்டமிட்ட பூமகள்,சுகந்த ப்ரீதன்,ஷி நிசி அனைவருக்கும்,

நன்றியுடன்
யவனிகா.

சிவா.ஜி
10-10-2007, 11:03 AM
கட்டமுடியாத மனது,கட்டுப்படாத மனது,கட்டுப்பட மறுக்கும் மனது...கஷ்டப்பட்டு எதுக்கு அதை கட்டவேண்டும்...?போகிறபோக்கில் விட்டுப் பிடிக்கலாமே....கட்டுப்படாத இப்படிப்பட்ட மனங்கள்தான் மிகப்பெரிய சாம்ராஜியங்களைக் கட்டியிருக்கிறது, சில அழித்துமிருக்கிறது.
அவ்வப்போது நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்...அவிழ்த்துவிட்ட மனது எந்த நிலையில் இப்போது உள்ளதென்று.பிறகு நிலைமைக்குத்தக்கவாறு கயிறைக் கட்டலாம்....பக்குவத்தின் சதவீதத்தை பொறுத்து கயிறின் நீளத்தைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.
சிந்திக்க வைத்த சிறந்த வரிகளால் ஆக்கப்பட்ட நல் கவிதை.பாராட்டுக்கள் தங்கையே.

அமரன்
11-10-2007, 08:11 AM
கட்டறுத்த மாடு
பட்டுத்தெளிந்து கட்டுக்கு வரும்
கட்டுக்குள் இருக்கும்.

தெளிவதற்குமுன்
இழப்புகள் அதிகமாகலாம்
பலருக்கு....

இழப்பின்றி தெளியும்
கட்டுமான வித்தகம் புரிகிறது
தியானம்..

பாராட்டுடன்,

kavitha
12-10-2007, 11:20 AM
கிடைத்த சாமான்களையெல்லாம் உடைத்துவிட்டு,
கிடைக்காத ஒன்றுக்காய் கேவி அழுகிறது...
நல்ல வரிகள்... யவனிகா..

ஓவியன்
12-10-2007, 11:24 AM
நல்ல வரிகள்... யவனிகா..

அக்கா!

மீண்டும் உங்கள் வரிகள், மன்றத்திலே உலா வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி!. :)

leomohan
14-10-2007, 03:05 PM
தொட்டதெற்கெல்லாம் சிணுங்கி அழுது,
தொந்தரவு செய்யும் என்மனதை என்ன செய்ய?



நல்ல கவி யவனிகா. ஆம் மனதை சமாதானம் செய்வது தான் மிகவும் கடினமான காரியம்.

யவனிகா
06-11-2007, 08:37 AM
பின்னூட்டமிட்ட கவிதா, மோகன், அமர் அனைவருக்கும் நன்றி.

இளசு
07-11-2007, 07:20 PM
மிகச் சிக்கலான நுட்பமான கருவை
அழகாய்ச் செதுக்கி சிற்பமான கவி சமைத்த
யவனிகா-வுக்கு பாராட்டுகள்!

நெருப்பிலும் உறங்கலாம்
புலியுடன் பழகலாம்
ஆனால் மனதை நிலைநிறுத்தி
நிர்ச்சலனமாக்கும் மார்க்கம் அறியேன் என
திருமூலரே புலம்பிய பெரு விஷயம் இது..
நமக்கு வசப்படுமென்பது...???!!

நண்பர்களின் அலசல்கள் தரமாய் உள்ளன. பாராட்டுகள்!

gans5001
08-11-2007, 10:53 AM
மனதைக் கட்டாமல் விடுதலே நன்று.
பறவையாய் பறக்கட்டும் சிறகுகளை விரித்து..
இயந்திரமாய் மாறாதிருக்க மனம் மனமாகவே இருக்கட்டும்.