PDA

View Full Version : குறைந்த கட்டணத்தில் செல்பேசியில் இருந்த



சூரியன்
08-10-2007, 03:55 PM
குறைந்த கட்டணத்தில் செல்பேசியில் இருந்து அயல்நாடுகளுக்கு பேசும் புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல். விரையில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு 'கால் நவ்' என்ற புதிய சலுகை திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி.டி. குறைந்த கட்டணத்தில் இனி பேசலாம்.

உள்நாடு மற்றும் அய*ல் நாடுகளுக்கு பேச ரூ.100, ரூ.300, ரூ.500, ரூ.1000, ரூ.2000 ஆ*கிய கார்டுகளை பயன்படுத்தலாம்.

இந்தியாவிற்குள் பேச ரூ.100, ரூ.300 கார்டுகளுக்கு நிமிடத்துக்கு ரூ.2-ம், ரூ.500, ரூ.1000, ரூ.2000 கார்டுகளுக்கு ரூ.1.50 கட்டணமும் அமெரிக்காவிற்கு பேச ரூ.100, ரூ.300 மதிப்பிலான கார்டுகளுக்கு ரூ.4-ம், ரூ.500, ரூ.1000-க்கு ரூ.3.75ம், ரூ.2000க்கு ரூ. 1.75ம் கட்டணம்.

இங்கிலாந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள், பிரான்ஸ், ரஷியா போன்ற நாடுகளுக்கு தொடர்பு கொள்ள ரூ.100, ரூ.300 கார்டுக்கு ரூ.4-ம், ரூ. 500-கார்டுக்கு ரூ.3.75-ம், ரூ.1000, ரூ.2000 கார்டுகளுக்கு ரூ.3.25 என குறைந்த கட்டணத்தில் பேசலாம். ஐரோப்பா, இலங்கைக்கு பேச ரூ. 100, ரூ.300க்கு நிமிடத்துக்கு ரூ.6-ம் ரூ. 500க்கு ரூ.5.75ம், ரூ.1000, ரூ.2000-ம் கார்டுகளுக்கு ரூ.5.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீனாகுமார்
08-10-2007, 04:17 PM
நல்ல தகவல். நன்றி அன்பரே !

அமரன்
08-10-2007, 06:20 PM
நல்ல விடயம்...ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைக்கும் செலவை விட குறைவானது. தகவல் பகிர்வுக்கு நன்றி சூரியன்.

இலக்கியன்
08-10-2007, 06:34 PM
இது போன்ற வசதிகள் இங்கு இப்போது நடை முறையில் உள்ளது இந்தியாவிலும்
இது போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுவதில் மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி சூரியன்

மனோஜ்
08-10-2007, 06:37 PM
சூரியன் சவுதிக்கு எவ்வளவு ?

ஜெயாஸ்தா
09-10-2007, 02:30 AM
சூரியன் சவுதிக்கு எவ்வளவு ?

இது காலிங்க கார்டு என்பதால் துல்லியமான தரமான 'வாய்ஸ்குவாலிட்டி'யை எதிர்பார்க்க முடியாது.
இது பற்றி கட்டண விபரங்களை கீழ்கண்ட சுட்டியை சுட்டி பார்த்துக்கொள்ளுங்கள். சவூதி அரேபியாவிற்கு நிமிடத்திற்கு 8 ரூபாய் என நினைக்கிறேன்.

http://www.bsnl.co.in/newsdetailed.php?news_id=371