PDA

View Full Version : திரிகோணம்----03அமரன்
08-10-2007, 01:48 PM
திரிகோணம்...02 (http://tamilmantram.com/vb/showthread.php?t=12683)


சொன்னவனை ஆழமாக பார்த்தேன். எனக்குள் அமிழ்ந்தேன். கிடைத்ததுடன் மிதந்தேன். பகர்ந்தேன்.
"கதிர்...உன் கேள்விக்கு ஆம் இல்லை என்ற ஏதாவது ஒரு ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல விரும்பவில்லை. நீண்ட நாட்களாக ஆவலுடனும் ஆசையுடனும் ஏக்கத்துடனும் தேடிய ஒரு பொருளை கண்டெடுத்த மழலையில் அகமகிழ்வுதான் காதல் என்றால் கலாவை நான் காதலிக்கிறேன். இப்படித்தான் இருக்கவேண்டும் என எண்ணிய ஒருவனுக்கு எண்ணிபடி கிடைத்த கண்ணாடிச் சிலையை அவனே உடைக்கும் மிலேச்சத்தனம்தான் காதல் என்றால் கலாவை நான் காதலிக்கின்றேன். நம்பி கூடி குலாவும் ஒரு உன்னத உறவுக்கு துரோகமிழைப்பதுதான் காதல் என்றால் கலாவை நான் காதலிக்கிறேன்.எல்லாவற்றுக்கும் மேலாக புன்னகை பாலமைத்த நானும் நீயும், ஆற்றில் பயணிக்கும்போது பரிசலில் விரிசல் ஏற்படுத்துவதுதான் காதலாயாயின் அவளை தொடர்ந்தும் காதலிப்பேன்"
சொல்லி முடித்ததும் கதிரின் முகத்தில் பல்கிப் பெருகிய குழப்ப ரேகைகள், அவன் சிந்தனையின் வேகத்தை தெளிவாகக் காட்டியது.

"நீ சொல்வது எதுவுமே புரியவில்லை நரேன். தெளிவான குழப்பத்தில் நானிருகிறேன்"
அதுதான் நிலா ஒளியில் பளிச்சென்று தெரியுதே என சொல்ல எத்தனித்தவன் வார்த்தைகளை மாற்றினேன்.

"கலாவை நான் காதலிக்கவில்லை என்பதில் எந்தவித குழப்பமும் எனக்கில்லை. ஆனால் அவளை என்னுடன் பிணைத்துள்ள இழைக்கு என்ன பெயர் என்பதை திடமாக சொல்ல முடியவில்லை"
ஏதோ புரிந்தது போலும் அவனுக்கு. சந்தோசத்துடன் தலை ஆட்டி விட்டுப்பிரிந்தான் அவன் வீட்டுக்கு. அப்புறம் நடு வீதியில் எனக்கென்ன வேலை.

பண்பலை சுமந்து வரும் அமுதினிலும் இனிய இசைகளும், இதர புற விசைகளும் இதயத்துடிப்பு எண்ணிக்கையை நியம அளவுக்கு மிகையாகாமல் அதிகரிக்க, காலத்தை நான் ஓட்டிய காலத்தில் , கலாவினதும் ஆன்டியினது இதயத்துடிப்புகள் என்னுடன் இணைந்திருந்த காலம் சற்றே அதிகம்தான். அதை விட முக்கியமானது ஒரே ரிதத்தில், ஒத்த லயத்தில் நிகழ்ந்த துடிப்புகள் என்பது. அதனால்தானோ என்னவோ நெருக்கம் அதிகமானது. அந்த நெருக்கம் பலர் கண்னுக்குள் துருவாக உருமாறி உறுத்தத் தொடங்கியது. ஆனாலும் உறுத்தலின்றி எமது உறவு தொடர்ந்தது. உச்சக்கட்டத்தை நெருங்கியது...

அடுத்தநாளுக்கான பால் பொழிவுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தது நிலவு. அவ்விரவில் கலா வீட்டு முற்றத்தில் காய்ந்து கொண்டிருந்தது யப்பான்காரன் வித்த என்னினிய உறவுடன் சேர்த்து நான்கு ஜீவன்கள். கலாவுக்கு பக்கத்து காற்றையும் நிலத்தையும் இணைத்தவாறு, அவளுக்கு பிடித்தமான வறுத்த கச்சான்கள் உடையுடனும், உட்கொண்ட கச்சான்கள் களைந்த உடைகளும் குவியலாக இருந்தன. களைவு நிகழ்வு இறந்தகாலம் ஆக நேரமெடுக்கும் என்பதை குவியலின் பருமன் எடுத்தியம்பியது. ஆன்டிக்கும் எனக்கும் இடையில் இருவருக்கும் பிடித்தமான பொரித்த முந்திரிபருப்பு குடிகொண்டிருந்தது. துணைக்கு அமெரிக்கனின் பெப்சிகோலாவை அழைத்துக்கொண்டது. அவற்றின் இருப்பும் குறந்த பாடில்லை.

மூவர் அளாவளாவலும் பிரதான இசையாக, இரவுக்கே உரித்தான அசைகளின் இசைகளை பக்க இசையாக்கி தேர்ந்த கலைஞனைப் போல கோர்த்து எனது வலப்பக்க காதுக்குள் அனுப்பிக்கொண்டிருந்த மாருதம் மறு காதினினுள் எவ்.எம் குயிகளின் கூவலையும் கோட்டான்களின் கத்தலையும் நிறைத்துக்கொண்டிருந்தது. அப்போது பார்த்து கலாவுக்கு வந்த ஆசை கூட்டத்தை கலைத்தது..

"நரேன்! நிலவொளியில் நறுமணங்கமழும் பூஞ்சோலையின் சுகந்ததை நுகர்ந்தபடி நினைவுகளை அசைபோட்டபடி உலாவருவதின் ரசனையை படிச்சிருக்கேன்.அதை நேரடியாக அனுபவிக்க விரும்புகின்றேன்"
பிறருக்காக தனது பேச்சுபாணியை அடிக்கடி மாற்றினாலும் அவ்வப்போது அவளின் உண்மையான பாணி வந்து அமர்ந்துவிடும்.
சிவாஜி படம் வர முதலே நான் செயல் புயல்தானுங்க. மறு நொடி நடைமுறைப் படுத்தினேன். அவளை பார்க்கமுன் குறிபிட்ட அதே சோலைக்கு அவளை அழைத்துச் சென்றேன். வோக்மென் அது பாட்டுக்கு பாடிக்கொண்டு என்னுடன் வந்தது.

பாலுடன் பழம் கலந்த சுவை தரும் மகிழ்வை விஞ்சியது பழம் தரும் மரத்தில் தளிர்களும் இலைகளும் பால்நிலாவில் குளிப்பதை பார்வையால் பருகுவது என்பதை அன்றுதான் உணர்ந்தேன். தாமததுக்கு வருந்தினேன். மரங்களை சாடியாக வைத்து பலமுறை கேட்க நினைத்த கேள்வியை கலாவிடம் கேட்டேன்.

"என்னைப் பார்த்ததும் நல்லவன் என்று தெரிந்துகொண்டேன் என்பாயே! எப்படித் தெரிந்து கொண்டாய்"
"நீ என்னைப் பார்க்க முன்னர் பலம் மூலமாக உன்னைப் பார்த்திருக்கிறேன். உனது பிரச்சினை என்னவென்று புரிந்துகொண்டேன்" சற்று நிறுத்தியவள் சிங்கீதமாக சொன்னாள்.
"உனக்குள் விழும் விதைகள் மறுகணம் முளைவிடுவதை போல நீ தூவும் விதைகளும் முளைக்க வேண்டும் என நினைப்பதுதான் உனக்கு நீயே போட்டுக்கொண்ட முகமூடியின் காரணம் என்பதை தெரிந்துகொண்டேன்.அம்மாவிடன் சொன்னேன். கெட்டவன் சீரழியலாம். அவன் திருந்தாதவிடத்து வேடிக்கை பார்ப்பது தப்பில்லை. ஆனால் நல்லவன் ஒருவனை சீரழிய விடக்கூடாது என்று முடிவு செய்து உன்னை வீட்டுக்கு அழைத்தோம். உன் அம்மா உன்னை நினைத்து சந்தோசிக்கும் நிலையில் இப்போ நீ."
அவள் கூர்மையான பார்வையை மெச்சியவண்ணம் வண்ணமயமான சூழலில் பொழுதைக் கழித்து களித்துவிட்டு அவரவர் அகம் புகுந்தோம்..

மறுநாள் கல்லூரிக்கு விடுமுறை என்பதால் தாமதமாகவே தட்டி எழுப்பினான் ஆதவன். வழக்கமான வேலைகளை முடித்து வெளிஉஏ போனபோது சூரியத் தீக்கு முன்னரே வதந்தீ பரவி கொளுந்து விட்டுக்கொண்டு இருந்தது. நானும் கலாவும் யதார்த்தமாக சோலையில் உலவியதை தப்பான கண்ணொட்டம் கொண்ட யாரோ ஒருவன் பார்த்து தப்பாக வத்தி வைத்த தீ அனலாக கொதிக்க வைத்தாலும் புனலாக அடக்கியது சமீப சகவாசத்தல் ஏற்பட்ட சுவாசம். வழக்கமோலவே கலாவீடு ஏகினேன். பழக்கம் மாற்றாமல் பழகினேன். ஒன்றிமில்லாததை பெரிதாக்குவோரை நினைந்து உருகுவதற்கு ஒன்றுமில்லை என்பது எனது திண்ணமான எண்ணம். பொழுது விழுந்தது..முழு நிலவு எழுந்தது. வான்நிலா பாடலை பார்வையால் சுகித்து பண்பலை பாடல்களைகாதுகளால் பருகிகொண்டிருந்தேன்.. அபோது பக்கத்தில் வந்தமர்ந்தாள் அம்மா.

வாஞ்சையுடனான அழைப்பின் பின் அமிலத்தை பாய்ச்சினாள்.
"ஊரில் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். அவற்றை விட்டு விடு. ஆனால் உனக்கு பொருத்தமான துணை அவள் என நான் நினைக்கின்றேன். அவளுடன் இது தொடர்பாக நாளை பேசப்போகின்றேன்" சொல்லி விட்டு என்னையே பார்த்தாள்.பயம் கலந்து பேசிப்பழகிய அம்மா தைரியமாக பேசுவது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுருக்கமாக ஆனால் உறுதியாக சொன்னேன் வேண்டாம். "உங்கள் ஆசைகளை கிடப்பில் போடுக்ங்கள்."
அத்துடன் முடிவுக்கு வந்த உரையாடல் தூக்கத்தை தந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் கலாவின் நடத்தையில் மாற்றம் தென்பட்டது. ஒரு விதமான எச்சரிக்கை உணர்வுடன் என்னுடன் பழகுவதாக தோன்றியது. காரணம் கேட்டேன். பதில் கதிர் மூலம் கிடைத்தது.
"உன்னிடம் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை நரேன். அவளுக்கு நான் எனக்கு அவள் என்பது உனக்குத் தெரியும். இந்த பிரச்சினைகளால் நான் ஏதாவது தப்பாக நினைபேனோ என்று பயப்படுகிறாள். அப்டி எல்லாம் நினைக்கமாட்டேன்னு சொல்லியும் அவளை சமாதானப்படுத்துவது சாத்தியமாக தெரியவில்லை."

குழப்பம் என்னுள் உத்தரவின்றி உட்பிரவேசித்தது. சிந்தனையை சிறகொடித்தது..சில நாட்கள் கடந்து லண்டன் யுனிவசிட்டியில் மேல்படிப்புக்கு செய்த விண்ணப்பத்திற்கு சாதமாக பதில் வர புறப்பட்டேன். புறப்படும்போது கலாவிடம் சொன்னது
"ஊருக்கோ உலகுக்கோ பயந்து எதையும் செய்யாதே. உனக்குப் பயம் தரும் எந்தக் காரியத்தையும் நினைத்தே பார்க்காதே. நன்றாக யோசி..லண்டன் போனதும் உனக்கு அனுப்பும் மடலில் எனது முகவரி இருக்கும். கடிதம் மூலமான எமது தொடர் உனக்கு பயம் தருமானால் அத்துடன் முடித்துக் கொள்வோம்"

அவளிடம் பேசியபடி கடிதம் அனுப்பினேன். பதிலுக்கு ஏதுமில்லை. அத்துடன் முடித்துவிட்டாள் என்று நினைத்தேன். "முடிவு எடுப்பது நீ..முடிவின் நாளையை தீர்மானிப்பது யாரோ" என காலம் ஏளனம் செய்தது அப்போது எனக்குத் தெரியவில்லை...

அடுத்த பாகத்தில் முற்றும் திரிகோணம்...இறுதி (http://tamilmantram.com/vb/showthread.php?t=12700)

ஜெயாஸ்தா
08-10-2007, 02:11 PM
வெப்பத்தால் தகித்துகிடந்த நாயகனின் வாழ்வில் தென்றலாய் வந்து, இதம்கொடுத்து பின் திசைமாறி போனவளோ.......

முந்தைய பாகத்தில் நான் கேட்ட கேள்விக்கு இப்பாகத்தில் விடை கிடைத்துவிட்டது. கிட்டத்தட்ட முடிவும் நான் யூகித்தபடிதான் இருக்குமெனறு நினைக்கிறேன். கதையில் உரையாடல்களின் வடிவம் சற்று கடினமாக இருந்தாலும் உற்று கவனித்து வாசித்தபோது, மனக்கண்முன் காட்சிகள் திரைப்படமாய் ஓடியது. அடுத்த பாகத்திற்கும் காத்திருக்கிறேன்.

அமரன்
08-10-2007, 02:16 PM
நன்றி ஜேம். உரையாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும் என கவனமாக இருந்தேன். கவனத்தை ஏதோ ஒன்று சிதறடித்து விட்டது. இக்கதையின் முடிவு இன்னமும் முடிவு செய்யவில்லை. உடிவை ஊகித்துவிட்டேன் என்று நீங்கள் சொல்லும் போது மூளையைக் கசக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது..ஏதாவது எட்டினால் வெற்றி எனக்கு..இல்லை உங்களுக்கு..

பூமகள்
08-10-2007, 04:13 PM
"ஊருக்கோ உலகுக்கோ பயந்து எதையும் செய்யாதே. உனக்குப் பயம் தரும் எந்தக் காரியத்தையும் நினைத்தே பார்க்காதே."

"முடிவு எடுப்பது நீ..முடிவின் நாளையை தீர்மானிப்பது யாரோ"
அழகான வரிகள் அண்ணா. மிகவும் ரசித்தேன். வர்ணனைகள் அற்புதம்.
என் வேண்டுகோளை ஏற்று படைத்தளித்ததற்கு மிகுந்த நன்றிகள்.

பெண்ணின் நட்பு எப்படி பரிணாமம் மாறுகிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அமர் அண்ணா.

அமரன்
08-10-2007, 06:13 PM
மிக்க நன்றி பூமகள். உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய துணையாக இருந்த தமிழுக்கும் மன்றத்திற்குமே எல்லாப் பெருமையும்..

மலர்
08-10-2007, 08:16 PM
வாவ் அமரன் சும்மா பின்னி பெடல் எடுக்குறீங்க....


முடிவு எடுப்பது நீ..
முடிவின் நாளையை தீர்மானிப்பது யாரோ

அழகான வரிகள்
உங்களின் கைதான்....அமர்
முடிவு எப்படி வரும்....
கலா நரேனுக்கா இல்லை கதிருக்கா.......??


அடுத்த பாகத்தில் முற்றும்
உண்மையில் அடுத்த பாகத்தையும் இப்போதே படிக்க ஆவல்....
சீக்கிரம் தந்து விடுங்கள்...

lolluvathiyar
09-10-2007, 05:27 AM
ஆகா கதையின் இறுதிகட்டம் நெருங்கி விட்டதா. கடைசியில் ஊகிக்க முடியாத சஸ்பன்ஸில் நிறுத்தி பரபரப்பு ஏற்படுத்தி விட்டு போய்விட்டாரே நம்ம அமரன். காத்திருகிறோம் கலாவுக்காக மன்னிக்கவும் கலாவின் பதிலுக்காக

அமரன்
09-10-2007, 09:00 AM
மிக்க நன்றி...மலர் மற்றும் வாத்தியார்..உங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவுதான் எழுத தூண்டுகிறது..

சிவா.ஜி
09-10-2007, 09:06 AM
கவிஞன் கதை எழுதும்போது தித்திப்பு இரட்டிப்பு ஆகிறது.உரையாடல்கள்...அத்தனையும் தேன்.செதுக்கிய வார்த்தைகள்.
முடிவை அறிய ஆவலானவர்களில் நானும் ஒருவன்.கலா யாருக்கு...?