PDA

View Full Version : யாருக்குச் சொல்ல ?



ஆதவா
08-10-2007, 01:12 PM
இரவு துளிர்க்க நேரமிருக்கும்
எரியும் பிணங்களின் தகனத்தில்
காய்ந்துகொண்டிருந்தது உடல்

பிணவாடைகளைப் பொறுத்துப் பழகியதால்
காட்டில் நிலவும் நாற்றத்தை
சகித்துக் கொள்ள முடிகிறது.
எத்தனையோ நாற்றத்தைத் தாண்டியும்.

இரவுக்குள் இரு பிணங்கள் வருமாம்
ஒன்று ஆண் ; மற்றொன்று பெண்.
பணக்கார பிணங்கள்.
லாபம் அதிகமிருக்கலாம்.

குடித்துவிட்டு கல்லறையில் கிடக்கும்
அப்பனை எழுப்பினேன்.
காற்று பலமாக அடித்தது.
காற்றோடு மனதும் அடித்தது.
ஆம்
உயிரோடு இல்லை.

யாருக்குச் சொல்ல சேதியை?

சிவா.ஜி
08-10-2007, 02:11 PM
கொடுமை....தினம் பிணம் பார்க்கும் பூமியில் இவன் பார்க்கும் அப்பன் பிணம்....என்ன செய்வான்.....யாருக்குச் சொல்வான்....பிணமென்றால் இவனைப் பொறுத்தவரை பணம்....ஆனால் இது வெறும்பிணம் அல்லவே...அப்பன் பிணம். உடனடியாக வாரிசுரிமையை நிலைநாட்டவேண்டிய நிலை....அதே சமயம் அப்பனின் இறுதிப்பயனத்துக்கு தேவையான காசும் வேண்டும்....வெட்டியான் மனம் என்ன நினைக்கும்...சரி இரவுக்கு வரும் பணக்கார பிணங்கள்....காசுக்குக் கவலையில்லை....குழிவேண்டாம் கட்டையே வாங்கிவிடலாமென்றா....
மிக வித்தியாசமான கருவில் வந்த கவிதைக்கு பாராட்டுக்கள் ஆதவா...

ஜெயாஸ்தா
08-10-2007, 02:14 PM
கவிதையில் ஒரு கதை. வெட்டியானின் நடைமுறை வாழ்க்கையில் யாதார்த்தம்...! யாருக்குச் சொல்ல? விடையில்லாத கேள்விதான்...!s

மயூ
08-10-2007, 02:29 PM
கடைசியில் ஒரு திருப்பம்... நல்ல கேள்வி.....
சுடலைக்காப்பான் வாழ்க்கை...!!!

ஆதவா
12-10-2007, 01:29 PM
கொடுமை....தினம் பிணம் பார்க்கும் பூமியில் இவன் பார்க்கும் அப்பன் பிணம்....என்ன செய்வான்.....யாருக்குச் சொல்வான்....பிணமென்றால் இவனைப் பொறுத்தவரை பணம்....ஆனால் இது வெறும்பிணம் அல்லவே...அப்பன் பிணம். உடனடியாக வாரிசுரிமையை நிலைநாட்டவேண்டிய நிலை....அதே சமயம் அப்பனின் இறுதிப்பயனத்துக்கு தேவையான காசும் வேண்டும்....வெட்டியான் மனம் என்ன நினைக்கும்...சரி இரவுக்கு வரும் பணக்கார பிணங்கள்....காசுக்குக் கவலையில்லை....குழிவேண்டாம் கட்டையே வாங்கிவிடலாமென்றா....
மிக வித்தியாசமான கருவில் வந்த கவிதைக்கு பாராட்டுக்கள் ஆதவா...

மிக்க நன்றி சிவா.ஜி அண்ணே அழகான அருமையான விமர்சனம்... (எதாச்சும் குறை இருந்தா சொல்லங்க அண்ணே!)

ஆதவா
12-10-2007, 01:29 PM
கவிதையில் ஒரு கதை. வெட்டியானின் நடைமுறை வாழ்க்கையில் யாதார்த்தம்...! யாருக்குச் சொல்ல? விடையில்லாத கேள்விதான்...!s


கடைசியில் ஒரு திருப்பம்... நல்ல கேள்வி.....
சுடலைக்காப்பான் வாழ்க்கை...!!!

மிக்க நன்றி ஜே.எம். மற்றும் மயூ!

மயூ! என்ன திடீர்னு கவிதைப் பக்கமெல்லாம்?

அக்னி
12-10-2007, 01:42 PM
யதார்த்தக் கவிதை...
ஆனால் இன்று...

மின்சார சுடலைகளினால்,
வயிற்றில் தகிக்கும் வெப்பம்...
மரணத்தில்
வாழ்ந்த உயிர்கள்...

பாராட்டுக்கள் ஆதவா...

ஆதவா
12-10-2007, 01:47 PM
யதார்த்தக் கவிதை...
ஆனால் இன்று...

மின்சார சுடலைகளினால்,
வயிற்றில் தகிக்கும் வெப்பம்...
மரணத்தில்
வாழ்ந்த உயிர்கள்...

பாராட்டுக்கள் ஆதவா...

அதே மின்சார சுடுகாட்டினால் உயிர் காயும் உயிர்கள் எத்தனை வரப்போகிறதோ? அதை வைத்து ஒரு கவிதை எழுதுங்கலேன் அக்னி?

அக்னி
12-10-2007, 01:53 PM
அதே மின்சார சுடுகாட்டினால் உயிர் காயும் உயிர்கள் எத்தனை வரப்போகிறதோ? அதை வைத்து ஒரு கவிதை எழுதுங்கலேன் அக்னி?
புரியலயே ஆதவா...

ஆதவா
12-10-2007, 02:05 PM
புரியலயே ஆதவா...

மின்சார சுடுகாட்டின் வளர்ச்சியால் சுடுகாட்டில் பிணம் புதைக்கும் வெட்டியான்கள் கதி?

மாற்றம் மாறாதது என்று உணராதவர்கள்....

அமரன்
12-10-2007, 05:17 PM
ஊரில் பிணம் விழுந்தால் பணவரவுக்கு வழிபிறந்தது என்று துள்ளலிடும் மனது முதன் முதலில் பிணம் என்பதை உணர்ந்த கணம் ஆழமான காயம் ஏற்படுத்திய கவிதை.

தங்கவேல் அவர்களின் கையெழுத்து வாக்கியத்தை நினைவுகூர்கிறேன். இன்றைய பிணங்களுக்கு பக்கத்தில் நாளைய பிணங்கள் அழுதுகொண்டு இருக்கிறன. ஆனால் சுடலை காப்பானுக்கு இருந்த உறவின் பௌதிக உடல் எட்டாத தூரம் போகும் வரை இந்த அழுகை எட்டத்து உறவு.

பண வருகையில் மயில் தோகைபோல சிந்தனையை விரித்து இலயித்து இருந்தவனுக்கு, தகனத்தில் குளிர் காய்ந்தவனுக்கு தேகம் கொடுத்தவனின் சில்லிட்ட தேகம் தொட்டபோது வரும் பணமும் பாரமாகத்தான் தெரிந்திருக்கும். பற்றுமா பணம் என்ற கேள்வியில் கூடவே பிறந்திருக்கும்.

எரிப்பதா, புதைப்பதா என்பதை தாண்டி வாழ்க்கையை அவன் படித்திருப்பான். பிணம் விழும் சேதி சொல்ல பலர் இருந்தும் பிணம் விழுந்த சேதி சொல்ல நாதி இல்லாமல் அவன். கனக்கிறது மனம். கனங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை என்பதை நாமும் படிப்போம்.

பாராட்டுகள் ஆதவா.

சுகந்தப்ரீதன்
14-10-2007, 11:55 AM
இன்பம் ஒரு மடங்கு எனில் துன்பம் இருமடங்கு ஆகும் நிலை.. அவன் எதிர்பார்த்து மகிழ்ந்தது ஒன்று.. எதிர்பாராமல் அவனுக்கு நிகழ்ந்தது மற்றொன்று.. யாரிடம் சொல்ல..? வழக்கம் போல பிணத்தோடு சேர்த்து எரிக்க வேண்டியதுதான் இந்த மன வருத்ததையும்..! பாராட்டுக்கள் ஆதவரே...! நல்ல படப்பு..!

ஷீ-நிசி
14-10-2007, 12:34 PM
சிவாவின் விமர்சனத்தின் உதவியால் இக்கவிதை இன்னும் அதிகமாய் விளங்கிக்கொண்டேன். நிஜமாகவே ஒரு வித்தியாசமான கரு ஆதவா....
வெட்டியானைப் பற்றி....

வெட்டியானைப்பற்றி நான் ஒரு ஹைக்கூ எழுதியது நினைவுக்கு வந்தது..

வெட்டியான் புதைத்தான்!
மண் கர்ப்பமானாள்...
'வெட்டி' ஆண் விதைத்தான்!
பெண் கர்ப்பமானாள்!..

வாழ்த்துக்கள் ஆதவா...

யவனிகா
14-10-2007, 01:47 PM
நல்ல கவிதை...நிஜத்தின் நிதர்சனம் முகத்தில் அறைகிறது...ஆயிரம் குழிகள் வெட்டியிருந்தாலும்...ஆயிரம் சிதை எரித்திருந்தாலும்...உறவென்று வரும் போது உயிர் உதறும் தானே..

"வெட்டியான் புதைத்தான்!
மண் கர்ப்பமானாள்...
'வெட்டி' ஆண் விதைத்தான்!
பெண் கர்ப்பமானாள்!.."
ஷீ−நிசி யின் கவிதை அருமை.

சிவா.ஜி
14-10-2007, 02:57 PM
வெட்டியானைப்பற்றி நான் ஒரு ஹைக்கூ எழுதியது நினைவுக்கு வந்தது..

வெட்டியான் புதைத்தான்!
மண் கர்ப்பமானாள்...
'வெட்டி' ஆண் விதைத்தான்!
பெண் கர்ப்பமானாள்!..

...


அருமையான* வ*ரிக*ள் ஷீ...பிர*மாத*ம்.பாராட்டுக்க*ள்.

leomohan
14-10-2007, 03:00 PM
பிதாமகன் ரீமேக் சூப்பர் ஆதவா.

இலக்கியன்
14-10-2007, 05:02 PM
வாழ்க்கை எனபது நீர் குமிழி போனறது அதில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொருவிதமான சோதனை வேதனைகள் ஒரு வெட்டியானின் நிலை சொன்ன கவிதை மிகவும் சிறப்பு

lolluvathiyar
18-10-2007, 08:19 AM
அற்புதமான சிந்தனை, வெட்டியானின் வாழ்கையை படம் பிடித்து காட்டிய வரிகள்.
கடைசி வரி
யாருக்கு சொல்ல சேதியை
மிகவும் நெகிழ வைத்து விட்டது

நேசம்
18-10-2007, 09:27 AM
வெட்டியானின் மறுப்பக்கத்தை காட்டியது ஆதவா அவர்களே. அருமையான் வரிகள் − வாழ்த்துக்கள் ஜி

பென்ஸ்
18-10-2007, 10:24 AM
ஆதவா...

உன்னை பாராட்டி ரொம்ப நாளாயிடுச்சே...
என்னை பாதிக்கும் படி நல்ல கவிதை நீ எழுதலையோ (??!!!) அப்படின்னு ஒரு சந்தேகம் வந்தது, மவனே நீ மன்றம் வந்து கவிதை படித்து எவ்வளவு நாளாச்சு என்று என்னை கேட்டேன்....
உடனே ஓடி போயி கவிதைகள் பக்கத்தையும் பார்த்தேன்.... எல்லாம் புதிதாய்... நான் தேவையில்லாம ஓவரா வேலை பாக்குறேனோ????

சரி கவிதையை வாசிப்போம்...
அட புரிஞ்சிடுச்சு...
விமர்சனம்... "சரி அப்புறம் எழுதலாம்" என்று மூடியாச்சு..
ஆனா மனசு ஒரு குடச்சல்...
பாவன் அந்த வெட்டியான் என்ன செய்து இருப்பான்...

சிறிது நாட்களுக்கு முன் "தானாக வரும் சிந்தனைகள்" குறித்து ஒரு கட்டுரை வாசித்தேன்... அதில் இடம், பொருளாதாரம், சூழ்நிலையை குறித்து எவ்வாறு சிந்தனைகள் எழலாம் என்று அழகாக சொல்லி இருந்தார்கள்... சிவாவின் பின்னூட்டத்தில் அதே போன்ற வரிகள்...

நல்ல கவி.. தேவையில்லாத வரிகள் இல்லாமல்... சிக்கனமாக... உள்லம் கவர் கவி