PDA

View Full Version : திரிகோணம்...02அமரன்
08-10-2007, 09:29 AM
திரிகோணம்---01 (http://tamilmantram.com/vb/showthread.php?t=12646)


"நரேன் உன்னைப் பற்றி தெரியாம சொல்லி இருப்பா மனசுல வைச்சுக்காதேப்பா"
டீக்கடையின் அக்கறைக்கு புன்னகையை சீதனமாக்கிவிட்டு யப்பான் குதிரையான எனது மோட்டார் வண்டியில் தாவி ஏறினேன். பின்னால் பட்டுத்தெறித்த சூரியக்கதிர்களால் முன்னார் படர்ந்த நிழலைக் கண்டதும் தன்மீது எசமான் அல்லாத ஒருவன் உட்கார்ந்திருப்பதாக நினைத்த யப்பான் குதிரை கனைத்தது. அவனை வீழ்த்தி கால்களால் மிதிக்கும் வெறியுடன் சினங்கொண்ட சிறுத்தையாக சீறிப்பாய்ந்தது. இதைக்கண்ட நண்பன் ஒருவன் பயந்து பின் இருக்கையில் பாய்ந்து ஏறினான். மற்றவர்கள் தமது குதிரைகளில் பிடிக்க துரத்தினார்கள். வண்டிப் பாதையின் இருமருங்கும் காட்சிகள் கோடுகாளாக தெரிந்தன. கல்லூரி சாலையில் திரும்பியதும் நிழல் பக்கவாட்டுக்கு இடம்பெயர குதிரையின் வெறி ஓரளவு தணிந்தது.

கல்லூரி சாலை புதிதாக தெரிந்தது. வகை வகையான வண்ண மலர்கள் கதம்பம் கதம்பாக இருக்கும்போது உரசுகையில் தென்றலில் கலக்குமே ஒரு இனிய சங்கீதம். அத்துணை காட்சியை நினைவூட்டியபடி பூவைத்த பூவையர்கள் சாலை எங்கும் வியாபித்திருந்தனர். இத்தனை பேரா எனது கல்லூரியில்! இதுவரை பார்க்கவில்லையே! இருக்காது! இவர்கள் புதிதாகப் பிறந்திருப்பார்கள் என என்னை நானே சமாதானம் செய்தேன். கல்லூரிக்குள் நுழைந்தேன்.

முதலாவது விரிவுரை வேளை. பேராசிரியை வந்தார். "ஸ்டுடன்ட்ஸ் இன்று நாம் திரிகோண கணிதம் படிப்போம். அதாவது மூன்று பக்கங்களும் மூன்று கோணங்களாலுமான மூடிய உருவம் திரிகோணம் ஆகும். அடுத்ததாக...." என்று அவர் தொடர எனக்கு அறிமுகப்படுத்தியதுதான் கேட்டது. வழக்கமாக பேராசிரியை அவுட் அஃப் ஃபோகஸில் தெரிய கற்பிக்கும் விடயம் மெயினாக இருக்கும் எனக்கு இன்று தலைகீழாக அவர் மெயினாக தெரிந்தார். இல்லையில்லை..கலா தெரிய வைத்தாள். பக்கத்து இருக்கை என்னை தெளிய வைத்தது. தொடர்ந்து இருந்தாள் கெட்டுவிடும் என்பதால் தலைவலியை துணைக்கு அழைத்துக்கொண்டு அவர் அனுமதியுடன் வெளியேறினேன்.

ஒருநாளில் எத்தனை மாற்றங்கள். அதை செய்த வலிமையான பெண்ணை மென்மையானவள் என்பது எவ்வளவு முட்டாள்தனம். அல்லது மென்மைதான் மிகவும் வலிமையானதோ..என எண்ணியவாறே வோக்மென் ரேடியோவை ஆன் செய்து காதை நிரப்பிக்கொண்டு நண்பன் ஒருவனின் ஹாஸ்டலுக்கு பைக்கில் சென்றேன். அவன் அறைக்குள் நுழைந்ததும் வோக்மனுக்கு ஓய்வு கொடுத்து விட்டு பனசோனிக் பெரியவனுக்கு வேலை கொடுத்தேன். அவன் தன்பாட்டுக்கு பாட நான் என்பாட்டுக்கு மிதக்க பசிப்பதாக வயிறு மெல்லிய சத்தத்தில் சொன்னது. வெளியே போகப் பிடிக்காது அறையிலேயே தேடினேன். பிஸ்கட் இருந்தது. கூடவே சிகரெட் இரண்டும். பிஸ்கட்டை வாயில் போட்டு மென்றேன். சிகரட்டுகளை நெடுக்காக கிழித்து கையால் மென்று குப்பையில் போட்டேன்.ஒருவழியாக கடிகாரத்தின் குருவி வெளியே தலை நீட்டி ஐந்து மணியாச்சு என்று அடித்துச் சொன்னது. நானும் வெளியேறினேன். வழக்கம் போலவே காதில் பாட்டுச்சத்தம்.

அம்மன் கோவில் கிழக்கு வீதியில் திரும்பும் நேரம் "இலங்கை வானொலியின் மொன்மாலைப் பொழுதில் அடுத்து நீங்கள் கேட்க இருப்பது காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற தொட்டுத்தொட்டு என்னை என்ற பாடல்" என்னும் அறிமுக உரையைத் தொடர்ந்து பாடல் ஒலிபரப்பாக அந்த ரிதத்தில் காட்சிக்கு உயிரூட்டினேன். கோவில் சுவற்றில் உடலை தேய்த்துகொண்டிருந்த மாடுகள் இரண்டு சர்க்கர்ஸ்பார்த்த சந்தோசத்தில் தலை ஆட்டின. கிரிக்கட் விளையாடிய வாண்டுகள் சில நமட்டுச் சிரிப்புடன் கவனித்தும் கவனிக்காத தோரணையில் வேலையை கவனித்தனர். கலா வீட்டு வாசலை அடையாளம் கண்டு வண்டியை நிறுத்தினேன். திறந்திருந்த படலையினூடு சென்று இந்திய வண்டிக்கு எனது யப்பானை துணை ஆக்கிவிட்டு கதை நோக்கினேன்.

திறந்திருந்தது.. உள்ளே போக நினைத்த வேளை நல்ல வேளையாக திறந்த வீட்டுக்குள் நாய் புகுந்தது போல என்னும் பழமொழி நினைவில் வந்தது. தட்டுவதே பெட்டரென முடிவு எடுத்தேன். கையை மடக்கி மொழிபேச விழைந்தபோது கலா முளைத்தாள். மடக்கிய விரல்கள் விரிந்து ஹாய் சொன்னது. "உள்ளே வாங்க" அவள்தான் பேசினாள். கோயில் கோபுரத்தில் குடியிருந்த புறாக்கள் பட பட சங்கீதத்துடன் வெளியே வந்தன. நான் உள்ளே சென்று கதவடைத்துக்கொண்டேன். உள்ளே புன்னைகை மட்டும் பரிமாறிக்கொள்ளும் நண்பன் கதிர் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு கை கொடுத்து விட்டு பக்கத்து இருக்கைக்கு பாரம் கொடுத்தேன்.

"வாங்கப்பு. உங்களைப் பற்றி என்னன்னமோ சொன்னாங்க. வர மாட்டீங்கன்னு இவன் கூட சொன்னான். நீங்க கரெக்டா வந்திருக்கீங்க. நான் நினைத்தது சரிதான் போலும்" சொல்லியவறே வந்தார் 42 வயது மதிக்கத்தக்க கலாவின் அம்மா. (நாற்பது வயது கலாவின் அம்மாவான்னு எடக்கு மடக்கா கேட்கதீங்கப்பு)

"என்ன நினைச்சீங்க ஆன்டி"

"நேற்று கலா தலையில் பூ போட்டாய். இன்றைக்கு அவள் அழைத்ததும் வீட்டுக்கு வந்துள்ளாய். நான் நினைச்சது சரிதான்"
என்ன கொடுமை சரவணா என்பது என்னைக் கேட்காமல் காதில் கேட்டது. வந்தது தப்போ..

"ஏம்பா நீ கலாவை காதலிக்கிறாயா" ஆன்டிதான் கேட்டாள். இப்படி கேட்கிறாளே என்று மலைத்தேன். அதிர்ச்சியுடன் கதிரைப் பார்த்தேன். அவன் ஆடிப்போயிருந்தான்.

"எனக்கு ஒண்ணுமில்லைப்பா. மாப்பிள்ளை தேடும் வேலை மிச்சம், சீதனப் பிரச்சினையும் இல்லை." என்று தொடர்ந்தவள்
"என்னப்பா பேச்சு மூச்சுக் காணலை. மௌனம் சம்மதம் என்று எடுத்துக்கொள்ளலாமா?"
அவள்கேட்ட கேட்ட கணத்தில் காப்பித்தட்டுடன் கலா வந்தாள்.

"இதோ பொண்ணு வந்திருக்காள். ஒரு தடவை சரியாகப் பார்த்து விட்டு முடிவை இப்பவே சொல்லி விடு. போய்விட்டு கடிதம் போடுகிறேன் என்பதெல்லாம் வேண்டாம்"
என்ன நடக்குதுன்னே புரியாத நிலையில் குண்டு மேல் குண்டு விழுகிறதே என எண்ணியபோது கலாவும் சேர்ந்தாள்.

"அம்மா எனக்கு பிடிக்கவில்லை. ஒரு பொறுக்கியை யாராவது கட்டிப்பாங்களா?"என்றாள். ஏன்டி கூப்பிட்டு வச்சு ஆத்தாவும் மகளும் கரகமா ஆடிறீங்க..இருங்கடி உங்களை பார்த்துக்கிறேன் என்று மனதுக்குள் கருவிக்கொண்டேன்.

அபோது கலா க்ளுக்கென்று சிரித்தாள். "ஹேய் ஏன் பேயறைஞ்ச மாதிரி இருக்கே. அம்மாவும் நானும் விளையாட்டுக்கு கலாய்ச்சோம்"என்றாள். போன உசிரு மறுபடி வந்த மாதி இருந்துச்சு..

"பேய்கள் அடித்தால் பேயறைஞ்ச மாதிரித்தானே இருக்கணும்" என பதிலுக்கு கலாய்த்தேன்.கலாய்ப்புகளுடனே பொழுதை ஓட்டினோம். பொழுது போனதை ஒட்டி புறப்பட தயாரானேன். என்னுடன் கூடவே கதிரும்..

"கதிர்.... நல்ல ஃபமிலிடா. தோழிகளாக தாயும் மகளும் பழகுவது, மாற்றானுடன் நட்பாக பழகும் பாங்கு..குடும்பம்ன்னா இப்படி இருக்க வேண்டும். பொண்ணு என்றால் கலாவை மாதிரி இருக்க வேண்டும். பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென நான் வரிந்தேனோ அப்படியே இருக்காள்டா. எனக்குள் புகுந்து என்னை முழுவதும் தெரிந்தவளாக இருக்கிறாள். அவள் எல்லோருடன் இப்படித்தானா?"


"இல்லைடா...சில ஆண்களைக் கண்டால் ஒதுங்கிப் போய்விடுவாள்"


"அது..அப்படி இருக்க வேண்டும். மனிதர்களை சரியாகப் புரிந்து அவர்களுக்கேற்றார்போல் பழக வேண்டும். ஆண்களை விட பெண்களுக் புரியும் தன்மை அதிகம். அதை சரியாக பயன்படுத்தாது எல்லாரையும் நம்புவது என ஒருசாராரும் எல்லாரையும் சந்தேகத்துடன் பார்ப்பது என இன்னொரு சாராரும் இருப்பது வேதனை....கோபம் கலந்து தருகிறது. இவளை மாதிரி அனைத்து மகளிரும் இருக்க வேண்டும்டா..."
சொல்லி முடித்ததும் என்னையே நான் அறிந்து கொண்டேன். பெண்களை வெறுப்பதன் காரணம் தெரிந்து கொண்டேன்..

"நரேன்...நீ கலாவை காதலிக்கிறாயா" தயக்கத்துடன் கேட்டான் கதிர். ஏன் கேட்கிறாய் என்பது போலப் பார்த்தேன்.

"இல்லை..அவள் என் மாமன் மகள். சின்ன வயசுலேயே அவளுக்கு நான். எனக்கு அவள் என்று முடிவாக்கிவிட்டார்கள்" என்றான்..

தொடரும்...

திரிகோணம்----03 (http://tamilmantram.com/vb/showthread.php?t=12687)

பூமகள்
08-10-2007, 09:58 AM
ஆசையாய் கலா வீட்டிற்கு வந்த எனக்கு, வெளியில் வந்தவுடன் இப்படி ஒரு மாமன் பையன் செண்டிமெட் வச்சி கவுத்துப்புட்டீங்களே அமர் அண்ணா.
நரேனின் மனத்தில் கலா வந்து குடித்தனம் பண்ணி வெகுநேரமாச்சே... பின் எப்படி இப்படி ஆகலாம்..
எதற்கும் காத்திருந்து பார்ப்போம்.... நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வது மருத்துவ ரீதியில் சரியில்லை என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆகையால் இதிலும் திருப்பம் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
கலா யாருக்கு...??
கதிருக்கா?? நரேனுக்கா??
பொறுத்திருந்து பார்ப்போமே...!!
ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறீர்கள்..!!
எதார்த்தமான உரையாடல் அமர் அண்ணா..
கதையில் கதாப்பாத்திரங்களிலூடே நல்லாவே பேசுறீங்க.....
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அமர் அண்ணா..!!
அசத்துங்க....!!

உங்கள் அன்புத் தங்கை மற்றும் ரசிகை,
பூமகள்.

ஜெயாஸ்தா
08-10-2007, 12:12 PM
வீட்டிற்கு வந்தவுடன் நரேனை, காலாவும் அவள் தாயாரும் காலாய்த்ததும் நான் நரேன் மட்டுமல்ல நானும்தான் சிறிது அதிர்ந்துபோய்விட்டேன். ஆமாம் நரேனை என்ன காரணத்திற்காக கலாவின் வீட்டிற்கு வரச்சொன்னார்கள்?

அமரன்
08-10-2007, 12:35 PM
மிக்க நன்றி பூமகள். மற்றும் ஜேம்.
ஜேம் உங்கள் கேள்விக்கான பதில் எழுதி முடித்து தயாராக உள்ள பாகத்தில் உள்ளது..

மலர்
08-10-2007, 08:10 PM
ம்..ம்.நடுவில் யாரு இந்த கதிர்

ஜேஎம் க்கு வந்த அதே சந்தேகம் தான் எனக்கும்..
நரேனை மட்டும் என்ன காரணத்திற்காக கலாவின் வீட்டிற்கு வரச்சொன்னார்கள்?

ம்.ம்.. எங்கேயோ இடிக்க்குதே...


"இல்லை..அவள் என் மாமன் மகள். சின்ன வயசுலேயே அவளுக்கு நான். எனக்கு அவள் என்று முடிவாக்கிவிட்டார்கள்"

இந்த பெரியவர்களுக்கு வேற வேலையே இல்ல...
இப்படித்தான் எதையாவது பண்ணி வச்சிருவாங்க...ம்...

lolluvathiyar
09-10-2007, 05:13 AM
பொருமை பொருமை பொருமை அமரன்
என்னாச்சு, ஏன் கதையில் இந்த அவசரம்
யாரோ சிகரெட்ட பிடுங்கி வீசினா ஒரு பரபரப்பு வருமே, அ ந்த மாதிரி திடீர் பரபரப்பா கதை ஜெட் வேகத்துல கொண்டு போரீங்க.
சரி கலா பாஸ்ட் யாருக்கும் வராது போல

வார்த்தையால விளையாடரதுல உங்கள மாதிரி வராது அமரன்


[COLOR=#0000ff][SIZE=2]அதை செய்த வலிமையான பெண்ணை மென்மையானவள் என்பது எவ்வளவு முட்டாள்தனம். அல்லது மென்மைதான் மிகவும் வலிமையானதோ.

எத்தனை அர்த்தங்கள் மென்மைதான் மிகவும் வலிமையானது மிக சரியான வார்த்தை எடுத்துகாட்டு காந்தி அடிகள். இன்னொரு வரி பென்கள் மென்மையானவர்கள் அல்ல. இதுவும் சரியான வார்த்தை
பொருத்தி பார்த்தால் மென்மை இல்லாததால் தான் பென்கள் வலிமை இல்லாதவர்களா இருகிறார்களோ என்று நீங்கள் சொல்லவில்லை. நான் கட்டி விட்டேன்

அமரன்
09-10-2007, 08:16 AM
[quote=மலர்;282980]ம்.ம்.. எங்கேயோ இடிக்க்குதே...
quote]
உங்களுக்கும் ஜேம்முக்கு சொன்ன அதே பதில்...நன்றி மலர்.

அமரன்
09-10-2007, 08:18 AM
வாத்தியாரே...கதை ஆழமால படித்து ஒவ்வொரு வரிகளையும் கூர்ந்து நோக்கி பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்..மிக்க நன்றி..அவசரம் நானே புகுத்தியது...அப்படி இல்லாத பட்சத்தில் கதை சீரியலாகிவிடும்..(இப்போதே கொஞ்சம் அப்படித்தான் இருக்கு)

சுட்டிபையன்
09-10-2007, 08:24 AM
அடடா நானும் ஏதோ Sinθ, Cosθ, Tanθ எண்டு எருக்கும் எண்டு ஓடி வந்தேன், பார்த்தால் கதையா...........? :D:D