PDA

View Full Version : ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!! − பாகம் 2.



யவனிகா
07-10-2007, 05:04 PM
இட்டிலி, சட்னி, சாம்பார் காம்பினேசன் மாதிரி பேலன்ஸ்டு டயட்ட அடிச்சுக்க ஆளில்லை. தங்கத் தமிழனின் தன்னிகரற்ற கண்டு பிடிப்பு தான் இந்த இட்லி. இட்லியப்பத்தி பாக்குறதுக்கு முன்னால, சரிவிகிதச் சத்துணவுனா என்னனு பாக்கலாம்.

நம் உடலுக்கு சக்தி அளிக்கும் கார்போஹைட்ரேட்ஸ்
செல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன்ஸ்
ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் விட்டமின்கள்
சக்தியை சேமிக்கும் கொழுப்பு
போன்ற மேற்கூறியவை தேவையான விகிதாச்சாரத்தில் அமைந்த உணவே சரிவிகிதசத்துணவு.

நாம் உண்னும் சாதாரண இட்லி எப்படி இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று பார்ப்போம். அரிசியில் கார்போஹைட்ரேட்ஸும், உளுந்தில் தரமான புரோட்டீனும், சாம்பாரில் இடப்படும் காய்கறிகளில் விட்டமின்களும், தாளித்துக் கொட்டப்படும் எண்ணையில் ஃபேட்டி ஆசிட்ஸும் இட்லியை ஒரு சரிவிகிதச் சத்துணவாக மாற்றுகிறது. அதோடு இட்லிமாவு நொதிக்க வைக்கப்படுவதால் ஜீரணத்திற்குத் தேவையான நுண்ணுயிர்ப் பொருட்களும் கிடைக்கின்றது.

சரி, அதற்காக இட்லி கிடைக்காத அமரன் போன்றவர்கள் என்ன செய்வது? "சீச்சீ, இந்த இட்லி புளிக்கும்" என்று வேற சாய்ஸ் தேட வேண்டியது தான்..�கிட்டாதாயின் வெட்டென மற��

நம்மைக் காத்து ரட்சிக்க இருக்கவே இருக்கு, பிரெட் குடும்பம்�, முட்டையின் வெள்ளைக் கருவில் செய்த ஆம்லெட்டுடன் இரண்டு ஸ்லைஸ் ப்ரவுன் ப்ரெட், பருப்புடன் இரண்டு சப்பாத்தி, ஒரு கப் ரவா உப்புமா, ஒரு கப் தயிர் சேமியா, இரண்டு நான்ஸ்டிக் தோசைகள் என ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கு. நம்ம ஊரில் இருப்பர்களுக்கு ராகி அல்லது சத்து மாவு கஞ்சியும் வரப்பிரசாதம் தான். காலை உணவில் பறப்பவை, நடப்பவைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு தினமும் ப்ரெட்டா?கொடுமைடா சாமி? நாங்க குண்டாவே இருந்துட்டு போரோம்கிறீகளா?

சர்க்கரையில்லாம ஓட்ஸ் கஞ்ஜி நல்லகாலை உணவு. ஓட்ஸை வேகவைத்து மோருடன் உப்பு போட்டும் சாப்பிடலாம், சூப் வடிவிலும் சாப்பிடலாம். காட்டேஜ் சீஸ் உடன் வெஜிடெபிள் பர்கர் சாப்பிடலாம். பிஸ்ஸா பேஸ் வாங்கி அல்லது வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டால் அப்பப்ப அருமையான வெஜிடபிள் பிஸ்ஸா (பாதி அளவு போதுங்க) சாப்பிடலாம். கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ரான் ஃப்ளேக்ஸ் என்று ஏகப்பட்ட ரெடிமேட் உண்வுகள் மார்க்கெட்டில் இருக்கு. இத்தனைக்கும் மேல இருக்கவே இருக்கு சீன உணவுகளின் ராஜா... நூடுல்ஸ்... (ம்ம்மா....நூடுல்ஸ் எங்க? இப்ப நூடுல்ஸ் மேலஆசை வந்தாச்சா?) ஒண்ணுமே பிடிக்கலையா... பாலுடன் ஐந்து ஃபைபர் ரிச் பிஸ்கட்ஸ் சாப்பிடலாம்.

பால் என்றதும் தான் ஞாபகம் வருகிறது."நான் வளர்கிறேனே மம்மி" என்று காம்ப்ளான் அல்லது "சுப்பாங்..., சப்பாங்... ஹுப்பாங்" என்று கோப்பையை சுழற்றிச் சுழற்றி ஹார்லிக்ஸ் குடிப்பவரா? அவற்றிலும் சர்க்கரை அதிகம் உள்ளதால் தவிர்த்தல் நலம் அல்லது அந்தந்த கம்பெனிகளில் வரும் லைட் பிராண்டுக்கு மாறிவிடுங்கள். (ஆங்கில வார்த்தைகளுக்காக மன்னியுங்கள் நிர்வாகிகளே). பாலும் கண்டிப்பாக ஆடை நீக்கியதாக இருக்க வேண்டும்.

காலை உணவில் பொங்கல், வடை, பூரி, நெய் தோசை, ஆலு பரோட்டா எல்லாம் வேண்டாமே. (அண்னபூர்ணா ஹோட்டல்லுக்குள்ள நுழைந்த மாதிரி இருக்கு பூமகள்)

வேண்டுமானால் நீங்கள் முதல் கட்டமாக ஒரு கிலோ எடை குறையும் நன்னாளில் உங்களுக்கு ஒரு ஊக்க போனசாக இவற்றில் ஒன்றை மட்டும் எனக்கும் வாங்கிக் குடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க! அப்புறம் அந்த ஒரு நாள் தீபாவளி தொடர்வதற்காகவே கண்டிப்பாக நீங்கள் எடை குறைவீர்கள். (என்ன ஒரு ஒளி வெள்ளம் உங்க முகத்தில்) உங்கள் ஒவ்வொரு வேளை உணவையும் ஒரு முழுப் பழத்துடன் முடிப்பது சிறந்தது. முழு பலாப்பழம், முழு தர்பூசணி, முழு அண்ணாச்சிப் பழம் எல்லாம் கணக்கில் வராதுங்க.

பழங்களைப் பற்றிப் பார்ப்போம், பழவகைகள் உடலுக்கு நல்லது என்பது நாம் அறிந்ததே. ஆனால் மா, பலா, வாழை, திராட்சை போன்ற சிலவகைகள் 100கிராம் = 100கிலோ கிலோரிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை அதிகம் உண்ணாமல், வாரம் நான்கு முறை சாப்பிடலாம். ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், பப்பாளி போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
பழங்கள் மேனி அழகைப் பராமரித்து, சருமத்திற்கு புதுப் பொலிவைத் தர வல்லன.

எங்க கிளம்பீட்டீங்க? பழம் வாங்கத்தானே? பழம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஜூசாக அருந்தலாம். ஆனால் பழத்தை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.
சரி, இப்பொழுது சாப்பிடும் முறை பற்றிப் பார்க்கலாம்.

காலை உணவாக இட்லி சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் நான் விட்டாலும் இட்லி என்னை விட மாட்டேங்குதே? நான்கு இட்டிலியையும் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அப்படியே அவசர அவசரமாகச் சாப்பிடாமல், ஒவ்வொன்றாக நிதானமாக ருசித்து சாப்பிடவும். ஒரு இட்லி சாம்பாருடன், ஒரு இட்லி சட்னியுடன்... என்று ருசித்து சாப்பிடும் போது குறைவாகச் சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போல மனம் திருப்தி அடையும்... இல்லை உங்கள் மனம் திருப்தி அடையவில்லையா? சாப்பிட்டு பழகிய வயிறு இன்னும் போடு போடு என்கிறதா? சட்டையே செய்யாமல் இரண்டு டம்ளர் தண்ணி குடிக்கவும். வயிறு, வாயை மூடிக் கொள்ளும்.

ஒரு முக்கியமான விசயத்தை உதாரணத்துடன் விளக்குகிறேன். கோவையில் எனக்கொரு அண்ணா இருக்கார். அவரை எல்லாரும் வாத்தியாரன்ணா என்று கூப்பிடுவோம். .அவர் மனைவிக்கு அவர் மேல் கொள்ளைப் பிரியம்.
காலை உணவை அவர் மனைவிதான் அவருக்குப் பறிமாறுவார். அண்ணன் மூன்று இட்லி போதுமென்று கை கழுவப் போனால், அவ்வளவு தான் "அய்யோ மாமா, என்னக் கல்யாணம் கட்டின நாள்ல இருந்து தினமும் பத்து இட்டிலிக்கு குறையாம சாப்பிடுவீங்களே? யாரு கண்ணுபட்டுதோ தெரியல, மூணோட முடிச்சிட்டீங்களேனு... மூக்கு சிந்த ஆரம்பித்து விடுவார்கள் அண்ணி. அவங்க பன்ற அலம்பல்ல பத்து இட்டிலிய படப்படன்னு உள்ளே தள்ளிடுவாரு வாத்தியாரண்ணா.

காலையிலே இப்படின்னா மத்தியானம் பரிமாறும் செஷன் வாத்தியாரோட அம்மாக்கு. இவரு, போதும்மா, எதுக்கு இத்தனை சோத்த அள்ளிக் கொட்டற என்று கேட்டால் போச்சு.

"பாவிப்பய முப்பது வருசமா மூச்ச குடித்து வளர்த்தேனே... நேத்து வந்தவ முந்தானைல முடிஞ்சிட்டாலே காலைல பத்து இட்டிலி அவ கையால சாப்பிட்டேயேடா... இப்ப பெத்த தாயி குடுத்தா கசக்குதா...ன்னு ஆரம்பிப்பாங்க ஆத்தா..

அன்பு நிலையென்றால் தாய்க்கும் தாரத்திற்கும் பொதுவில் வைப்போம்கிற கொள்கை உடையவர் நம்ம அண்ணாத்த. அம்மா போட்ட அத்தனையும் ஆடாம அசங்காம, அத்திப்பூ வாடாம சாப்பிட்டு எந்திருப்பாரு நம்ம வாத்தி.

இது தான் முருங்கக்காய் போல இருந்த எங்க வாத்தியாரண்ணா பரங்கிக்காயாப் பருத்த கதை. உடலைக் குறைக்க காலை, மாலை இரண்டு வேளை அண்ணன் நடப்பாரு .ரோட்டுல நடந்து விட்ட கலோரிய எல்லாம் வீட்ல அம்மாவும், மனைவியும் போட்டி போட்டுட்டு அண்ணன் உடம்பில நிரப்பி விடுவாங்க.

அதாகப்பட்டது குழந்தைகளே இந்த கதையால் அறியும் நீதி என்ன? சாப்பிடும் விசயத்தில சென்டிமென்டுக்கு இடம் கொடுக்காதீங்க.

தொடர்ந்து இளைக்கலாம் வாங்க...

ஜெயாஸ்தா
07-10-2007, 05:21 PM
இளைக்கலாம் வாங்க கட்டுரையில் நம்ம வாத்தியார் பத்தின ரகசியத்தை இப்படி பொதுவில் போட்டு உடைத்துவிட்டீர்களே....! கட்டுரையை படித்து உணவு பதார்த்த வகையெல்லாம் படித்ததும் எல்லாத்தையும் அப்படியே சாப்பிடணும்போல இருக்கு...!

பூமகள்
07-10-2007, 05:39 PM
சூப்பர் யவனி அக்கா.. நான் தான் கொஞ்சம் சம்பந்தமில்லாத இடத்துக்கு வந்துட்டேன் போல...!! மன்னிக்கவும்... ஆர்வக் கோளாறுல தான் வந்துட்டேன்...!! (பின்னாடி என்னிக்காச்சும் உபயோகமாகுமோன்னு ஒரு சின்ன பயம் தான்...!! ஆகாது கண்டிப்பான்னு நீங்க சொல்றது தெரியுது அக்கா...)
என்னை அன்னபூர்ணாவுக்கு கூப்பிட்ட உங்க நல்ல மனசை எப்படி பாராட்டுவேன்..
ரொம்ப சந்தோசம்... :D:D:D:D
அப்படியே அந்த மெனு அதான் வாசிச்சீங்களே....

காலை உணவில் பொங்கல், வடை, பூரி, நெய் தோசை, ஆலு பரோட்டா எல்லாம் வேண்டாமே. (அண்னபூர்ணா ஹோட்டல்லுக்குள்ள நுழைந்த மாதிரி இருக்கு பூமகள்)
இந்த எல்லாத்தியும் வாங்கிக் கொடுப்பீங்க தானே.....???!!! ;) :) :D

மனோஜ்
07-10-2007, 05:57 PM
வாத்தியார் கதை அருமை
ஆலோசனைகள் மிகவும் நகைசுவையாகவும் இருந்தது
இது தான் உங்கள் தொழுல் ரகசியமா நன்றி

யவனிகா
07-10-2007, 07:01 PM
காலை உணவில் பொங்கல், வடை, பூரி, நெய் தோசை, ஆலு பரோட்டா எல்லாம் வேண்டாமே. (அண்னபூர்ணா ஹோட்டலுக்குள்ள நுழைந்த மாதிரி இருக்கு பூமகள்)
இந்த எல்லாத்தியும் வாங்கிக் கொடுப்பீங்க தானே.....???!!!


கண்டிப்பா கூட்டிட்டுப்போறேன், என்ன வேணா சாப்பிட்டுக்கோ, ஆனா எனக்கும் சேத்து பில்ல நீ கட்டிரு

பூமகள்
08-10-2007, 08:05 AM
கண்டிப்பா கூட்டிட்டுப்போறேன், என்ன வேணா சாப்பிட்டுக்கோ, ஆனா எனக்கும் சேத்து பில்ல நீ கட்டிரு
நான் சொன்னது புரியலையாக்கா உங்களுக்கு....?? :smilie_abcfra:
எனக்கு வாங்கி கொடுங்க என்றால் நீங்க பில் கட்டி வாங்கி கொடுங்க என்று அர்த்தம்..:cool:
சரி... அன்னபூர்ணாவிற்கு பதில் இன்னும் சுவையான ஒரு அசைவ உணவகம் வந்திருக்கு.:icon_ush: அங்க கூட்டி போனீங்கன்னா... நான் இன்னும் சந்தோசப்படுவேன்..:rolleyes: :icon_rollout:

அமரன்
08-10-2007, 10:02 AM
குளிர்பிரதேசத்தில் நிறைவில் இட்லிக்கு இணையான சுவையில் குறைவான (தமிழனின் கண்டுபிடிப்பு அல்லவா) பிரதிகளை தந்து என் போன்றோர் வயிற்றில் ஆடை நீக்கிய பாலை வார்த்தீர்கள். மிக்க நன்றி. வாத்தியாரை விட நான் உணவு முறையில் அதிஸ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும். ஆக்குவோர் இருந்தாலும் பரிமாற யாரும் இல்லை. துரித கதியில் உயரத்தை எட்ட அதை விட துரிதமாக உணவை வாயினூடு வயிற்றுக்குள் எறிந்து விட்டு பலரும் போய் விட ஆற அமர இருந்து ஆறாத உணவை ரசித்து ருசிக்க வகை செய்த என் வேலைக்கு நன்றி சொல்ல வைத்துவிட்டது யவனிகாவின் இளைக்கலாம வாங்க என்று அழைத்து இளையவராக வழி சொல்லும் இத்தொடர்..

யவனிகா
08-10-2007, 11:12 AM
[I][COLOR="Blue"]சரி... அன்னபூர்ணாவிற்கு பதில் இன்னும் சுவையான ஒரு அசைவ உணவகம் வந்திருக்கு.:icon_ush: அங்க கூட்டி போனீங்கன்னா... நான் இன்னும் சந்தோசப்படுவேன்..:rolleyes: :icon_rollout:

நீ கண்டிப்பா சந்தோசப் படுவே, நான் வருத்தப்படும் படி ஆயிடுமே...சரி வேணா ஒண்ணு பண்ணலாம்,எங்கே வாத்தியார் அண்ணன்?என் பேரைச் சொல்லு...அண்ணன் கண்டிப்பா வாங்கிக் கொடுப்பாரு.

நன்றி அமரன்.என் பதிப்பை விட உங்கள் பின்னூட்டம் மிகவும் சுவையாக இருக்கிறது.சீக்கிரமே பரிமாறவும் ஒரு வளைகரத்தை ஏற்பாடு செய்ய வேண்டியது தானே!

ஜே.எம் ,மனோஜ் உங்களின் பின்னூட்டத்திற்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

சிவா.ஜி
09-10-2007, 09:54 AM
ஆஹா யவனிகா...பின்னிட்டீங்க...இட்லியின் பெருமையச் சொன்ன நீங்கள்...அது கிடைக்காத எங்களைப் போன்றோருக்கு(சவுதியில கிடைக்கிற இட்லியை நான் கணக்குலயே சேக்கறதில்ல)நல்ல சமாச்சாரம் சொல்லியிருக்கீங்க.ஆனா நடுவுல அண்ணபூர்னாவைச் சொல்லி நாக்குல ஜொள்ளு வரவெச்சிட்டீங்களே. பாசக்கார அம்மாவுக்கும்,நேசக்கார மனைவிக்குமிடையில் மாட்டிக்கொண்டு வாத்தியார் பரங்கிக்காயாய் ஆனதை சொல்லி அசத்திட்டீங்க...அருமையான நடை.பாராட்டுக்கள்..தங்கையே.

யவனிகா
11-10-2007, 03:11 AM
அன்புச் சகோதரர் சிவா...உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...விமர்சனங்ளை எதிர்பார்க்கும்
யவனிகா.

lolluvathiyar
11-10-2007, 08:34 AM
யப்பா சாமி இளைக்கலாம் வாங்க என்று சொல்லி இங்க ஒரு கூட்டத்த வரவச்சு, இட்லி, ப்ரெட், பிசா எல்லாத்தையும் விளக்கி நாக்கில எச்சிலை ஊறவைத்து தொப்பகடீர்னு தள்ளிவிட்ட மாதிரி 4 இட்லி மட்டும் சாப்பிடுங்கனு முடிக்கராரு. அன்னபூர்னாவாவை நினைவு படுத்தி அப்புரம் தடை போட்டா அடுக்குமா? அன்னபூர்னா வேண்டாம் என்றால் பின்ன என்ன சம்பூர்னாவுக்கா போறது. (அங்கயும் வேண்டாம் தானே)

மெதுவா சாப்பிடனும் என்று நீங்க சொன்னது மிகவும் அவசியமானது, அதை காந்தியடிகள் பலமுரை தனது சுயசரிதையில் வலியுருத்துவார்.

கடைசியல நம்மளை வம்புக்கு இழுத்து, சம்சாரத்துக்கும் அம்மாவுக்கு இடையே சிக்க வச்சுட்டியே. எல்லாருக்கு என் தொந்தி வியிரின் மேல பொறாமை போல இருக்கு அதான் அந்த அழகான வயிரை குரைக்க படாத பாடு படராங்க. (அது சரி என் உணவு பழக்கவழக்கங்களை பத்தி நான் நீண்ட நாட்களுக்கு முன் வாழ்க சாப்பாடு என்று ஒரு தனி கட்டுரையே எழுதி இருந்தேன் அதை படித்து எனக்கு என் டைட்டில் மாற்றம் ஏதாவது இருந்தால் சொல்லவும். இதோ அதன் லிங்)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11470

இளைப்பதுக்கு முன்னாடி வரும் முன் காப்போம் என்பதற்க்கு கூட ஒரு டிப்ஸ் வச்சிருக்கேன். அதாவது கல்யானம் ஆன பசங்க அடிகடி மாமனார் வீட்டுக்கு போனால் கட்டாயம் குண்டாயிடுவாங்க. அதனால் கட்டாயம் மாமனார் வீட்டுக்கு போறத குரைச்சுக்குங்க.

அமரன்
17-03-2008, 01:45 PM
என்னைத் தவிர எல்லாரும் மெலிந்து விட்டார்களோ.. :confused:
ஏங்க இந்தபக்கம் கடைக்கண் பார்வையை திருப்பாமல் ஏங்க வைக்கிறீங்களே.

செல்வா
17-03-2008, 05:23 PM
அதானே... கேக்குறதுக்கு ஆள் இல்லணு நெனச்சுட்டாங்களா? நல்லா கேளுங்க குருவே..

அனுராகவன்
18-03-2008, 01:48 AM
ஆஹா யவனிகா...
அசத்தல் பகுதியும் கூட..
அனைத்தையும் இப்படி புட்டு வைக்கிறிங்களே!!
என் நன்றி

mukilan
31-07-2008, 06:27 PM
என்ன சகோதரி நீங்கள் தோடர்ந்து இந்தப்பகுதியை கொடுப்பீர்கள்தானே?

அதோடு எனக்கு மற்றுமொரு சந்தேகம். நான் இந்த ஊருக்கு(கனடா) வரும்முன்னர் பொன்னுசாமி, அஞ்சப்பர்களில் வீடு கட்டி அடித்திருக்கிறேன். இங்கோ உண்ண உணவில்லாத ஏழை போலத்தான் உண்கிறேன். அப்பொழுது ஏறாத உடல் இப்பொழுது அநியாயத்திற்கு ஏறுகிறது. அதனால் எடை குறைக்க மாத்திரைகள் வாங்கி உண்ணலாம் என தோன்றியது. இருந்தாலும் அது உடலுக்கு உகந்ததா எனத் தெரியாததால் நீங்கள் விளக்க முடிந்தால் விளக்குங்களேன்

யவனிகா
06-08-2008, 05:58 PM
அன்புள்ள முகிலன்...

எடை குறைக்கும் மாத்திரைகளை ஒபீஸ் என்ற நிலையில் இருக்கும் ஆட்களுக்கும், எடையைக் குறைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே அறிவுறுத்துகிறோம்.

தங்களது நிலை அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்...,அடடா போன மாசம் வரை பாத்திட்டிருந்த பக்கத்து ஃப்ளாட் பொண்ணு திடீருன்னு பாக்கிறதை நிறுத்திருச்சேன்னு யோசிச்சிருப்பீங்க அல்லது ஏதாவது குட்டி வாண்டு,குண்டு அங்கிள் சாக்கிலேட் வாங்கி குடுங்கன்னு கேக்க ஆரம்பிச்சிருக்கும்,இல்லை வேகமா நடக்கும் போது மூக்கோட வாயும் சேர்ந்து வேலை செய்திருக்கும்....இதுக்கெல்லாம் எதுக்கு மாத்திரையை நாடிப் போறீங்க....என்னங்க முகிலன் லேகியம் விக்கிறவங்க மாதிரி ஆயிருச்சு என் நிலை?

என்ன சொல்ல வர்றேன்னா...மாத்திரை எடுக்கிறதால பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது...பசி குறையும்...தேவையான சத்துக்கள் கிடைக்காததால் உடல் சோர்வு ஏற்படும்...அதெல்லாம் எதுக்குங்க...மருந்து மாத்திரை இல்லாமயே உடம்பைக் குறைக்கலாம்.

1.தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பான வாக்கிங், அல்லது ஜிம்முக்கு செலவழிங்க.

2.இரவு உணவை மட்டும் தீவிரமாக கண்காணியுங்கள்...அதாவது எண்ணைப் பதார்த்தம் இல்லாமல், அரிசி, கிழங்கு,போன்றவை தவிர்த்து பிரௌன் பிரெட் ட்டோஸ்ட்,ஓட்ஸ் வித் மில்க்,ஃபைபர் பிஸ்கெட் என்று இறங்கி விடுங்கள்.7 நாட்கள் மட்டும் உங்கள் இரவு உணவை கவனித்து குறைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக 1லிருந்து 2 கிலோ எடை குறையும்.இரவு 7மணிக்கெல்லாம் சாப்பாட்டுக்கடையை மூடிருங்க...

3.முக்கியமாக வயிற்றுப்பகுதியை குறைக்கத்தான் மெனெக்கெடுவோம்.அதற்கு முக்கியமாக செய்ய வேண்டியது மூச்சுப்பயிற்சி.எந்தவிதமான மூச்சுப்பயிற்சி தெரிந்தாலும் 10 நிமிடங்களாவது செய்யுங்கள்.வீட்டில் செய்ய நேரமில்லை என்றால் கூட...காரில் போகும் போது செய்யலாம்.நன்கு மூச்சை இழுத்து விடுவது தான்...மூச்சை உள்ளிழுக்கும் போது வயிறு விரிவடைய வேண்டும்...பலூன் போல...வெளிவிடும் போது சுருங்க வேண்டும்.இது மனதுக்கு கூட நல்லது.முடிந்தவரை ஆழமாக மூச்சிழுக்க வேண்டும்.மிக நிதானமாக வெளிவிட வேண்டும்.

4.அடிக்கடி உணவில் கேபேஜ் சூப் சேர்த்து கொள்ளுங்கள்.பச்சைக்காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..வெந்நீரில் தேன் கலந்து சாப்பிடுங்கள்...

5.மாத்திரைகளை தவிர்ப்பதே நலம்,என்பதே என் கருத்து...குறைந்த உணவு, நிறைய உடற்பயிற்சி...இதை முயற்சியுங்கள் சகோதரா..!!

shibly591
06-08-2008, 06:25 PM
பலருக்கு பயனுள்ள திரி (சத்தியமா எனக்கில்ல)

தொடருங்க..

அப்படியே ஜாலியா கொழுக்கலாம் வாங்க என்று ஒரு திரி கொளுத்துங்க..(சத்தியமா எனக்கும்தான்..)

தொடர்க

வாழ்த்துக்கள்

பூமகள்
06-08-2008, 06:47 PM
அப்படி எனில் ஷிப்லி அவர்களே...
குறும்பா குண்டாகலாம் வாங்க... (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=281222#post281222) திரியை பார்க்கனும் நீங்க...!!

படிச்சிட்டு குண்டாக வாழ்த்துகள்..!! :D:D

mukilan
06-08-2008, 07:08 PM
நன்றி சகோதரி!

இன்று இரவில் இருந்தே ஓட்ஸ் மட்டும் பாலுடனான என் பரிசோதனை ஆரம்பம்.

ஒபீஸ் எல்லாம் ஆகலை ஆனா தேவையில்லாத ஒரு 15 கிலோ இருக்குங்க. இப்போ எதில சேர்ப்பீங்க.

மாத்திரைக்கு நோ சொல்லிட்டு மனதிற்கு திரை போட்டு இந்த முயற்சியைத் தொடர்கிறேன்.

என் சந்தேகத்திற்கு விளக்கம் கூறிய அன்பு சகோதரிக்கு என் மனம்கனிந்த நன்றி!

இளந்தமிழ்ச்செல்வன்
06-08-2008, 07:18 PM
அன்பு தோழி யவனிகாவுக்கு வணக்கம்.

தற்காலத்திற்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

பொதுவாக உணவு முறைகள் அந்தந்த நாட்டு தட்பவெப்ப முறைகளுக்கேற்ப்ப இருக்கும்.

ஆனால் நமது உணவு முறையே தற்காலத்தின் வேலை முறைக்கு சற்றே கடினமாகிவிட்டது போல் உள்ளது. காரணம் முன்காலத்தில் உடல் உழைப்பு அதிகம். ஆனால் இன்று உடல் உழைப்பு குறைவு.

அதனால் இட்லியே சாப்பிட்டாலும் சற்றே நீங்கள் கூறியதை போல உடற்பயிற்ச்சியோ அல்லது நடையோ மிகவும் அவசியம். அதேபோல் பழங்கள், இரவு உணவை விரைவில் முடித்துக்கொள்ளுதலும் அவசியம்.

நொறுங்க தின்றால் நூறு வயது என்பது மிகவும் முக்கியம். அரிசி உணவிற்க்கு வாயிலேயே நன்கு உமிழ் நீருடன் சேர்த்து அரைத்து உள்ளே அனுப்பினால் தான் முழுமையாக் செரிமானம் ஆகும். இல்லையென்றால் சிறு தொப்பையில் ஆரம்பித்து தொந்தியில் தொடரும்.

மேலும் நேரம் கடந்து உண்பது அல்லது உண்ணாமல் இருப்பது ஆகியவையும் இதே இடருக்கு இட்டுச்செல்லும்.

நீங்கள் கூறியவற்றில் ராகி, ஓட்ஸ், பழங்கள் ஆகியவை சரி. ஆனால் நூடுல்ஸ், பிட்சா மற்றும் பிரட்டும் நமது சூழலுக்கு சரிவராது என்றே நினைக்கிறேன்.

சமீபத்தில் இத்தாலி சென்றிருந்த போது ஒரு விசயம் கவனித்தேன். நான் சைவமாக இருந்த போதும், மற்றவர்கள் சாப்பிட்ட காய்கறிகளைவிட நான் நான் சாப்பிட்டது மிக மிக குறைவு. நமது பழக்கத்தின் படி வேக வைத்து வறுத்த உணவையே தேடினேன். ஆனால் அவர்களோ சிறுது மாமிசம் உடன் காய்கறிகள், ஆலிவ் எஎண்ணெயில் ஊறிய காய்கள் (சிறிய வெங்காயம் உட்பட)என சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள்.

அந்த பகுதியில் அதிகம் பேர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள. ள் பிரட் மற்றும் வெண்ணையை தேடியபோது அவர்கள் கூறியது வெண்ணெய் அதிகம் உண்டால் கொழுப்பு ஏறி பின்னால் கஸ்டப்பட வேண்டும். அதற்க்கு பதில் ஆலிவ் எண்ணெயில் இட்ட காய்கறிகள் மிகவும் ஆரோக்கியம் எ என்று அவர்களின் இரகசியத்தை கூறினார்கள்.

முகிலன் அவர்களுக்கு நீங்கள் அளித்த ஆலோசனையும் மிக பயனுள்ளவை.

வாத்தியாரின் நிலை போன்றே எனது மாமாவும் இன்று அவஸ்தை படுகிறார். அவர் கூறிய மாமனார் வீட்டு விஜயம் அனுபவ உண்மை.

மேலும் தொடருங்கள். நன்றி

இளசு
06-08-2008, 07:27 PM
வாங்க இ.த.செ..

நலமா?

வாழ்க்கை, தொழில் எல்லாம் சுகமா?

இனி உங்களை உ.சு.வா ( உலகம் சுற்றும் வாலிபன்)னுதான்
அழைக்கணும் போல...

shibly591
07-08-2008, 08:23 AM
அப்படி எனில் ஷிப்லி அவர்களே...
குறும்பா குண்டாகலாம் வாங்க... (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=281222#post281222) திரியை பார்க்கனும் நீங்க...!!

படிச்சிட்டு குண்டாக வாழ்த்துகள்..!! :D:D

தகவலுக்கு நன்றி பூமகள்...

பார்த்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் திரியை...

முயற்சிக்கிறேனே....

இளந்தமிழ்ச்செல்வன்
07-08-2008, 06:28 PM
வாங்க இ.த.செ..

நலமா?

வாழ்க்கை, தொழில் எல்லாம் சுகமா?

இனி உங்களை உ.சு.வா ( உலகம் சுற்றும் வாலிபன்)னுதான்
அழைக்கணும் போல...

இளசு அவர்களே என்ன வேகம்? உடனடி பதில்.

நலமே, அனைத்ஹும் சுகம். தாங்கள் அனைவரும் நலமாய் சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்

shibly591
07-08-2008, 07:10 PM
உடல் மெலிய காலை உணவை தவறாமல் சாப்பிடவேண்டும்.அப்போதுதான் உடல் சுறுசுறுப்பாக இருக்குமாம்.உடல் குண்டாக ஆகாதாம்.சிலர் காலை உணவை சப்பிட்டால் உடலில் கொழுப்பு சேரும் ,குண்டாகி விடுவோம் என எண்ணுகிறார்கள்.அது தவறுஎன ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது.காலை சாப்பிடாதவர்கள் உடல் பருமனும்,மந்தமுமாய், இருப்பார்களாம்.தவிர வயதான காலத்தில் உடல் ரீதியாக பல சிக்கல்கள் ஏற்படுமாம்.

தங்க கம்பி
21-08-2008, 02:27 PM
மிகவும் பனுள்ள குறிப்புகள். மிக்க நன்றி.

Tamilmagal
28-05-2009, 11:05 AM
யுவனிகா அக்கா சும்ம அசதிப்புட்டீங்க.

என்ன இருந்தாளும் நம்ம இட்லி இட்லி தான்.
இப்படி முக்கனிகளை போட்டுகுடுதிட்டீங்களே, இவைகளை விரும்பிசாப்பிடுபவர்கள்...
இங்கு (ஐரோப்பாவில்/ஜேர்மனியில்) இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை என நினைகிறேன், காரணம் மா, பலா எல்லாம் இங்கு கிடைப்பது குறைவு. முக்கனிகளில் இங்கு அதிகமாக கிடைப்பது வாழை மட்டும் தான், இதை தினமும் சாப்பிடமுடியாது தானே.அதனால் ஆரஞ்சு, ஆப்பிள்... தான் அதிகம் சாப்பிடவேண்டும்.

தொடர்ந்து அசதுங்க.

வாழ்த்துக்கள்

ஓவியா
28-05-2009, 11:27 PM
ஒரு 10 கிலோ அதிகமாக இருக்கு, குறைக்க ஆலோசனை சொல்லுங்க, உடற்பயிற்ச்சி எனக்கு பலனை தரவே இல்லை, நான் மூச்சு வாங்க 6 மாதம் நடந்து லண்டன் ரோடு தேய்ந்ததுதான் உண்மை.

எனக்கு சாப்பாடுனா ரொம்ப விருப்பம், சாப்பாடு மட்டும்தன் விருப்பம், சாப்பாடே என் உயிர் வாழும் பலன். இதாங்க அன்மைய கால ஓவியா.

உண்மையிலே நான் இளைக்கனும், என்ன செய்ய!! பசி வராமல் இருக்க என்ன செய்ய????
பசி இல்லையென்றாலும் சரியான நேரம் வந்ததுமே சாப்பிடும் ஆசை வருதே அதை எப்படி கட்டுப்படுத்த???? :D:D

ப்லீஸ் யாராவது உதவுங்கள்.

அன்புரசிகன்
29-05-2009, 06:37 AM
உண்மையிலே நான் இளைக்கனும், என்ன செய்ய!! பசி வராமல் இருக்க என்ன செய்ய????
பசி இல்லையென்றாலும் சரியான நேரம் வந்ததுமே சாப்பிடும் ஆசை வருதே அதை எப்படி கட்டுப்படுத்த???? :D:D

ப்லீஸ் யாராவது உதவுங்கள்.

உங்கள் கடிகார மின்கலத்தினை அகற்றிவிடுங்கள். அப்போ சரியான நேரம் 12 மணிநேரத்திற்கு ஒருமுறை தான் கடிகாரம் காட்டும்.. நீங்களும் இளைத்திடலாம்.:D

தாமரை
29-05-2009, 07:06 AM
உங்கள் கடிகார மின்கலத்தினை அகற்றிவிடுங்கள். அப்போ சரியான நேரம் 12 மணிநேரத்திற்கு ஒருமுறை தான் கடிகாரம் காட்டும்.. நீங்களும் இளைத்திடலாம்.:D

கடிகாரம் ஒழுங்கா இருந்தாலாவது சாப்பிட்டு ஒருமணி நேரம்தான் ஆகுது கொஞ்சம் பொறுக்கலாம் அப்படின்னு நினைப்பாங்க..

இப்படி இருந்தா அரைமணிக்கொரு முறை அரைக்கிற மணியாயிடுவாங்களே...

அன்புரசிகன்
29-05-2009, 07:20 AM
நீங்கள் சொல்றது பொதுவா அண்ணா.. ஆனா ஓவியா அக்கா நேரம் வந்ததுமே தான் பசிக்குதாம். அதால பிரச்சனை இல்லை. :D :D :D

பசி இல்லையென்றாலும் சரியான நேரம் வந்ததுமே சாப்பிடும் ஆசை வருதே

samuthraselvam
29-05-2009, 08:40 AM
ஓவியா அக்கா கேட்ட மாதிரியே எனக்கும் ஒரு சந்தேகம்.

ஏதாவது யோசனையை சொல்லுங்க...

சாப்பிடுவதிலும் குறைவைக்காமல், உடற்பயிற்சியும் செய்யாமல் எப்படி உடல் எடையை குறைப்பது?

தாமரை
29-05-2009, 08:49 AM
சிபிச் சக்ரவர்த்தி கதையைப் படிங்க சமுத்ராசெல்வம். :D

தாமரை
29-05-2009, 08:50 AM
நீங்கள் சொல்றது பொதுவா அண்ணா.. ஆனா ஓவியா அக்கா நேரம் வந்ததுமே தான் பசிக்குதாம். அதால பிரச்சனை இல்லை. :D :D :D

அட நீங்க ஒண்ணு.. இன்னும் ஒரு நிமிஷம் கூட சாப்பிடலையேன்னு சாப்டுகிட்டே இருந்தாங்கன்னா? :eek::eek:

samuthraselvam
29-05-2009, 09:04 AM
சிபி சக்கரவர்த்தி கதையா? என்ன கதை அது?

தாமரை
29-05-2009, 09:07 AM
அதாங்க புறாவுக்காக கழுகுக்கு சதை அறுத்துக் கொடுத்த கதை

சிவா.ஜி
31-05-2009, 09:37 AM
அதாங்க புறாவுக்காக கழுகுக்கு சதை அறுத்துக் கொடுத்த கதை

என்னா ஒரு வில்லத்தனம்...?

பா.ராஜேஷ்
02-06-2009, 06:26 PM
மிகவும் பயனுள்ள தொகுப்பு. மிக்க நன்றி!

ஓவியா
03-06-2009, 12:36 AM
உங்கள் கடிகார மின்கலத்தினை அகற்றிவிடுங்கள். அப்போ சரியான நேரம் 12 மணிநேரத்திற்கு ஒருமுறை தான் கடிகாரம் காட்டும்.. நீங்களும் இளைத்திடலாம்.:D

அடடே!! :mini023:



கடிகாரம் ஒழுங்கா இருந்தாலாவது சாப்பிட்டு ஒருமணி நேரம்தான் ஆகுது கொஞ்சம் பொறுக்கலாம் அப்படின்னு நினைப்பாங்க..

இப்படி இருந்தா அரைமணிக்கொரு முறை அரைக்கிற மணியாயிடுவாங்களே...

இது இதேதான் :icon_b:



நீங்கள் சொல்றது பொதுவா அண்ணா.. ஆனா ஓவியா அக்கா நேரம் வந்ததுமே தான் பசிக்குதாம். அதால பிரச்சனை இல்லை. :D :D :D

ஆமாஞ்சாமி :aetsch013:



ஓவியா அக்கா கேட்ட மாதிரியே எனக்கும் ஒரு சந்தேகம்.

ஏதாவது யோசனையை சொல்லுங்க...

சாப்பிடுவதிலும் குறைவைக்காமல், உடற்பயிற்சியும் செய்யாமல் எப்படி உடல் எடையை குறைப்பது?

நான் இப்படியா சொல்லியிருக்கே, அடப்பாவமே :sauer028:

ஓவியன்
04-06-2009, 04:47 AM
ஓவியா அக்கா கேட்ட மாதிரியே எனக்கும் ஒரு சந்தேகம்.

ஏதாவது யோசனையை சொல்லுங்க...

சாப்பிடுவதிலும் குறைவைக்காமல், உடற்பயிற்சியும் செய்யாமல் எப்படி உடல் எடையை குறைப்பது?

பேசாம சந்திர மண்டலத்துக்கு ஒரு ட்ரைக்ட் பிளைட் எடுத்து சென்றிடுங்க உங்க எடை ஆறில் ஒரு பகுதியாக குறைந்திடும்...!! :icon_rollout::icon_rollout::icon_rollout:

rajarajacholan
08-01-2010, 07:02 AM
இதன் அடுத்த பாகம் எங்கே இருக்கிறது?